

குளத்தூர் பாலா ! குணக் கொழுந்தே!
எங்கள் குற்றங்கள் பொருத்தருள்வாய்!
ஆரியங்காவினில் ஆனந்த ரூபா!
அபயம்! அபயம்! ஐயப்பா!
எரிமேலியில் வளர் ஏழைப் பங்காளா!
எங்களைக் காத்தருள்வாய்!
ஐந்து மலைக்கதிபா ஐங்கர சோதரா
ஐயப்பனே சரணம்
கலியுக வரதா! கலிமல நாசனா!
கருணாகர தேவா!
சத்யபரிபாலகா! சத்குண சீலா!
சபரிமாமலை வாசா!
வீரமணி கண்டா! விஜய குமாரா!
விஷ்ணு மோகினி பாலா!
சாந்த தயாபர! சத்குரு நாதா!
சரணம்! சரணம்! ஐயப்பா!
ஆறுவயதில் நானும்அப்பாவோடு மலைக்கு போனது,
பம்பையில் குளிக்கும் போது யேசுதாஸ் அவர்களைக் கண்டது,
மணி கட்டி தம்பி வேண்டும் என்று கேட்டது மனதில் பசுமையாய்
இருக்கிறது.
நாளை அப்பா 28வது முறையாக சபரிமலைக்குச் செல்கிறார்.
அவரோடு தம்பியும், கன்னிச் சாமியாக அம்மாவும் மலைக்குச்
செல்கிறார்.
தேகம் பலம் தா! பாத பலம் தா!
No comments:
Post a Comment