Wednesday, December 05, 2007

பினாத்தலாரின் பதிவுக்கு பின்னூட்டம் பதிவாக

தங்களின் முந்தைய பாடங்களில் நல்லா ஜொள்ளூங்கப்பா என்றும், வேலை செய்யாதீங்க என்று ஆணீய புயல் வீச எழுதி இருந்தாலும் அதற்கு பின்னூட்டம் இடத்தேவையென நினைக்கவில்லை. புதுப்பாடத்திற்கு பதில் போட்டே ஆகவேண்டிய கட்டாயம்.


பொண்ட்டாட்டியத்தான் மாத்த முடியாது, (இப்படி டயலாக் சொல்லி)
அதனால 6 மாதத்துக்கு ஒரு முறை ஆண்கள் மாத்தும் cellphone, tv, handycam,
car இவற்றை குறித்து சொல்ல ஆரம்பிச்சா அவ்வளவுதான்.

போர்டபிள் டீவி வேண்டாம், சாதரணமான டீவீ போதுமே. LCD ல் பாத்தாத்தான் சரியா தெரியுமா?

ஹோம் தியேட்டர் சிஸ்டம், இந்த மாசம் N- 73 music version னா அடுத்த 6ஆவது மாசம் N-90, அப்புறம் சின்ன கணிணியாக இருக்கும் மொபைல்னு
நீங்க இருக்கறத கொடுத்துட்டு மாத்திகிட்டே இருக்கீங்களே இதை எங்க போய் சொல்றது. உங்களுக்கு மாத்திரம் எல்லாம் latest model லா இருக்கணும்.
பெண்கள் நகை, பட்டுப்புடவை வாங்கினா தப்பு.

ஆமாம் எந்த யுகத்தில் இருக்கீங்க? பட்டுப்புடவைக்கும், நகைக்கும் பெண்கள் ஆசைப்படறாங்கன்னே சொல்லிகிட்டு இருக்கீங்களே.

இப்போ மாப்பிள்ளைங்க NRI ஸா இருகறதனால கல்யாணத்துக்கு வாங்கின பட்டும், நகையும் அம்மாவீட்டிலோ/மாமியார்கிட்டையோத்தான் இருக்கு. அதனால granda ஒரு பட்டுபுடவை கல்யாண்த்திற்கு, மத்ததெல்லாம் லைட் வெயிட் சில்க் காட்டன்னு வாங்கிக்கிட்டு, தேவையான நகைத்தவிர மிச்ச பண்த்தை பேங்கல தான் போட்டு வைக்கிறாங்க. இது உங்களுகு தெரியாம போச்சே!

இந்தியாவில் இருக்கும் பெண்கள் செலவு பண்றாங்கன்னா சொல்லிக்கொடுங்க. நானும் செலவு பண்னல, நீயும் பண்னாத. வருமானவரி கட்டறதுலேர்ந்து தப்பிக்க இன்வெஸ்ட் பண்ணலாம்னு பேசி பட்ஜெட் போட்டு காட்டி சேமியுங்களேன். முடிஞ்ச போது ஒருமுறை மனைவியின் விருப்பத்திற்கு என்றால், அடுத்தமுறை கணவன் ஆசைப்படும் லேட்டஸ்ட் எலக்ட்ரானிக் சாமான் வாங்குங்களேன்.

கிராமத்தில இருக்குற முனியம்மா கூட சிறுவாடு காசு சேர்த்து வைக்கும்போது, நகரத்தில் வசிக்கும் கண்ணம்மாக்களுக்கு தெரியாதா? அப்படித் தெரியவில்லை என்றால் அது ஆணின் தவறு.

இதெல்லாம் விட்டுப்புட்டு காமெடி பண்ணாதீங்க. சும்மா பொண்டாட்டிங்களைப் பத்தி தப்பா சொல்லி கல்யாணம் ஆக வேண்டிய வயசு பசங்களை பயமுறுத்தாதீங்க.

18 comments:

துளசி கோபால் said...

ஓடோடிவந்த என்னை ஏமாற்றவில்லை நீங்க:-))))

வெளிநாட்டுலே இன்னொரு வசதி இருக்கே.. அதுதான் pay split.

சம்பளம் ஐயாவுக்கு வரும்போதே அம்மாவுக்குத் தனி அக்கவுண்ட்லே அதுக்குப் போயிரும்.

ஜாயிண்ட் அக்கவுண்டு வச்சுக்கரதைவிட இது வசதி:-))))

புதுகைத் தென்றல் said...

கரெக்ட்,

இதெல்லாம் தெரியாம் சும்மா பினாத்தராரேன்னு இருக்கு.

பினாத்தல் சுரேஷ் said...

இந்த கொடுத்து மாத்தறதுன்றதை நாங்க எல்லாம் எங்க கத்துகிட்டோம் தெரியுங்களா?

வீடு புல்லா பழைய புடவையாச் சேந்துகிடக்கு.. போட்டுட்டு, நாலு ப்ளாஸ்டிக் வாளி வாங்கலாமா?

பட்டுப்புடவை பழசாப்போச்சு (3 முறை உபயோகப்படுத்தியாச்சு) அதோட சரிகைய மாத்திக்கலாமா?

இந்த பேட்டர்ன் பழசாப்போச்சு, இதைப் போட்டுட்டு புதுசா வாங்கிக்க்கலாமா?

எங்கேயோ கேட்டது மாதிரி இருக்கா? தங்கமணிகளோட குரல்தான்!

எங்களுக்கு கத்துக்கொடுத்த குருவே, சிஷ்யனைக் கண்டிப்பது என்ன நியாயம்?

LCD ல் பாத்தாதான் சரியா தெரியுமா? நல்ல கேள்வி.. தங்கநகை போடாட்டா பொடாவில போடுவாங்களா? விசேஷத்துக்கு பட்டுப்புடவை கட்டாட்டி தடாவில தண்டனையா போன்ற கேள்விகள் போலவே..

//அப்படித் தெரியவில்லை என்றால் அது ஆணின் தவறு.//

அப்படிப்போடுங்க! இப்படியா சொ செ சூ வச்சுக்கறது? சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாப் போச்சு... நாங்க சொல்லித்தர லெவல்லேதான் இருக்காங்க இந்தக் கால பொண்ணுங்கன்னு ஒத்துக்கறீங்களா?

புதுகைத் தென்றல் said...

பினாத்தலாரே ஒன்னே ஒன்னு சொல்ரேன்

இப்படி பொய் பொய்யா சொன்னா நாக்கு அழுகிடும் (விசு சொல்ற மாதிரி படிங்க. அப்பதான் எஃப்க்டா இருக்கும்)

தங்க நகை போடாம வந்தா உங்க மதிப்புதான் குறையப்போவுது.

சொல்லிக்கொடுக்கத்தெரியாவிட்டால் நாங்க என்னங்க செய்ய முடியும்?

நல்லா மழுப்பரீங்க.

ரசிகன் said...

// கண்ணம்மாக்களுக்கு தெரியாதா? அப்படித் தெரியவில்லை என்றால் அது ஆணின் தவறு.//

அதானே பார்த்தேன்..நீங்க செய்யர தவருக்கெல்லாம் ஆண்கள் மேல பழியா?..இதை வன்மையாக எதிர்க்கிறேன்.....

மங்களூர் சிவா said...

//
தங்கநகை போடாட்டா பொடாவில போடுவாங்களா? விசேஷத்துக்கு பட்டுப்புடவை கட்டாட்டி தடாவில தண்டனையா போன்ற கேள்விகள் போலவே..
//
சபாஷ் பெனாத்ஸ் சரியான கேள்விகள் சாட்டையடி போல

"மைண்ட்ல வெச்சிக்கறேன் பின்னால யூஸ் பன்னிக்கிறேன்"

//
//அப்படித் தெரியவில்லை என்றால் அது ஆணின் தவறு.//

அப்படிப்போடுங்க! இப்படியா சொ செ சூ வச்சுக்கறது? சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாப் போச்சு... நாங்க சொல்லித்தர லெவல்லேதான் இருக்காங்க இந்தக் கால பொண்ணுங்கன்னு ஒத்துக்கறீங்களா?
//
ரிப்பீட்டேய்

புதுகைத் தென்றல் said...

ரசிகன் said,
// கண்ணம்மாக்களுக்கு தெரியாதா? அப்படித் தெரியவில்லை என்றால் அது ஆணின் தவறு.//

அதானே பார்த்தேன்..நீங்க செய்யர தவருக்கெல்லாம் ஆண்கள் மேல பழியா?..இதை வன்மையாக எதிர்க்கிறேன்.....//

சொன்னதை சரியாக புரிந்து கொள்ளுங்கள் ஐயா.
பல வீட்டுக்களில் பெண்கள் எந்த வித பொறுப்பும் கொடுக்க படாமல், பெண்ணுக்கு என்ன தெர்யும் என்ற ரீதியில் நடத்த படுகிறார்கள்.

அதனாலேயே பெண்கள் எக்ஸ்போஷர் இல்லாமல் இருக்கிறார்கள். இது ஆணின் தவறு தானே?

நடமுறை தெரியாமல் பேசக்கூடாது.
பெண் என்பதாலேயே நசுக்கப்படுகிறார்கள்

புதுகைத் தென்றல் said...

மங்களூர் சிவா said
//நாங்க சொல்லித்தர லெவல்லேதான் இருக்காங்க இந்தக் கால பொண்ணுங்கன்னு ஒத்துக்கறீங்களா//

ஆண்கள் சொல்லித்தரத் தேவையில்லை. தடைகற்களாக இருக்கிறீர்களே? அது தான் ஆண் வர்க்கம் செய்யும் தவறு.

மங்களூர் சிவா said...

//
ஆண்கள் சொல்லித்தரத் தேவையில்லை. தடைகற்களாக இருக்கிறீர்களே? அது தான் ஆண் வர்க்கம் செய்யும் தவறு.
//
காமாலை பிடித்தவன் கண்ணுக்கு எல்லாமே மஞ்சளாக தெரியுமாம் அப்டின்னு எங்க ஊர்ல சொல்லுவாங்க!!

புதுகைத் தென்றல் said...

mangalore shiva said
//காமாலை பிடித்தவன் கண்ணுக்கு எல்லாமே மஞ்சளாக தெரியுமாம் அப்டின்னு எங்க ஊர்ல சொல்லுவாங்க!!//

அந்த பழமொழி எல்லா ஊரிலும் உண்டு. ஆண்களுக்கு அது மிகப் பொருத்தமாக இருக்கும்.

சாமான்யன் Siva said...

<==
கிராமத்தில இருக்குற முனியம்மா கூட சிறுவாடு காசு சேர்த்து வைக்கும்போது, நகரத்தில் வசிக்கும் கண்ணம்மாக்களுக்கு தெரியாதா? அப்படித் தெரியவில்லை என்றால் அது ஆணின் தவறு.

அப்படித் தெரியவில்லை என்றால் அது ஆணின் தவறு ==>
அப்படிப்போடுங்க. எல்லாத்துக்கும் ஆண்கள்தான் காரணம்னு =))))
பட்டுபுடவை,நகை எல்லாம் யார் சொல்லிக்கொடுத்தா? அது மட்டும் எப்படி தான வந்திச்சு?

சாமான்யன் Siva said...

<==
தங்க நகை போடாம வந்தா உங்க மதிப்புதான் குறையப்போவுது. ==>
அடடா,அடடா

சாமான்யன் Siva said...

பெனாத்தலாரே,சரியாச் சொன்னீங்க.

புதுகைத் தென்றல் said...

saamanyan siva
//பட்டுபுடவை,நகை எல்லாம் யார் சொல்லிக்கொடுத்தா? அது மட்டும் எப்படி தான வந்திச்சு?//

உங்களுக்கு செல்போன், லேப்டாப்,
lcd tv, home theatre சொல்லிக்கொடுத்து யாரோ அவங்க தான்.

சாமான்யன் Siva said...

<===
உங்களுக்கு செல்போன், லேப்டாப்,
lcd tv, home theatre சொல்லிக்கொடுத்து யாரோ அவங்க தான்.==>
நல்ல பதிலடி கொடுக்கிறிங்க =)))
பெண்ணுக்கு சேமிக்கத்தெரியலேன்னா அதுக்கு ஆண்தான் காரணம்னு நீங்கதான் சொல்றிங்க.அதுக்குப் பதில்சொன்னா அதையே திருப்பிச்சொல்றீங்க.ஆண்களுக்கு சேமிக்கத்தெரியலேன்னு நாங்க யாராவது சொன்னொமா?

புதுகைத் தென்றல் said...

அப்புறம் என் அய்யா பொண்டாட்டிங்க, நகை வாங்கறாங்க, புடவை வாங்கறாங்கன்னு புலம்பரீங்க.

நீங்களும் புலம்பறதை நிப்பாட்டுங்க.

பெண்கள் மட்டும் சேமிக்கணும் நீங்க செலவு செய்யனும். நியாயம் நல்லா இருக்கு.

சாமான்யன் Siva said...

நான் ஏற்க்கனவே பதில் சொல்லிட்டேன்.
ஒரு மாறுதலுக்கு இந்தப் பின்னூட்டம்.
<==
பெண்கள் மட்டும் சேமிக்கணும் நீங்க செலவு செய்யனும். நியாயம் நல்லா இருக்கு.==>
அப்பதாங்க வாழ்க்கை சுவாரஸ்யமாய் இருக்கும் =))).
2 பேருமே செலவு பண்ணாக்க,அப்புறம் எதிர்காலத்துக்கு என்ன மிஞ்ஞும்?
2 பேருமே சேமிசசாலும் நல்லா இருக்காது. அப்புறம் எப்படி அனுபவிக்கிறதாம்?

புதுகைத் தென்றல் said...

சாமான்யன் சிவா,
// பேருமே செலவு பண்ணாக்க,அப்புறம் எதிர்காலத்துக்கு என்ன மிஞ்ஞும்?
2 பேருமே சேமிசசாலும் நல்லா இருக்காது. அப்புறம் எப்படி அனுபவிக்கிறதாம்?//

நாங்களும் அதைத்தான் சொல்றோம்.