Thursday, December 13, 2007

கருத்தும்! கானமும்!

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத் ஸ்தாபனம்,

வணக்கம். அன்பு நெஞ்சங்களே! நமது இன்றைய கருத்தும் கானமும் நிகழ்ச்சியில் வளமைப்போல் நேயர் ஒருவரின் பாடல் தெரிவு இடம்பெறுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், வடக்கு வீதி, இலக்கம் 2037 ஐ சேர்ந்த நேயர்
"தென்றல்" அவர்களின் விருப்பப் பாடல் தெரிவுகள் இடம்பெறுகின்றன.
நிகழ்ச்சிக்கு போகலாமா?


1.இறைவனை வழிபடுதலில் பலவகை உண்டு. தாயாக, தந்தையாக, பிள்ளையாக, நண்பனாக என்று நினைத்து வழிபடுவார்கள். "சரணாகதி" என்ற நிலைமிகவும் உன்னதமானது. களத்தூர் கண்ணம்மா படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடல் தனக்கு மிகவும் பிடித்ததாக கூறுகிறார் நேயர்.

அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே!
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே!
முருகா! முருகா! முருகா!


2. அள்ளக் குறையாதது இயற்கையின் அழகு. அப்படிப்பட்ட அழகை ரசிக்கும்போது மனம் சிறகடித்து பறக்கிறது. இலங்கையின் பசுமை மிகு
அழகை பார்க்கும்போதெல்லாம் "பட்டம் தரத் தேடுகிறாரரம் அந்த நாயகனை".
முள்ளும் மலரும் படத்தில் இடம் பெற்றுள்ள அப்பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா!

3. நேயரின் அடுத்த தெரிவு "சிட்டுக்குருவி" படத்திலிருந்து. பேருந்தில் பயணம் செய்யும் அனுபவத்துடன் அழகான் காதலையும் படம்பிடித்து காட்டுவதாலேயே இந்த பாடல் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக கூறுகிறார்.
நம் நேயரை கவர்ந்த அந்தப் பாடல்:

என் மன்னவன் உன் காதலன்
எனனப் பார்ததும் ஓராயிரம் கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ?
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ!

4. இருமணம் இனைவது திருமணம். அந்தத் திருமண உறவை குறித்து அழகாக விளக்குவது இந்தப்பாடல். பாடலின் இடையே இருக்கும் "விகடம்" வெண்பொங்கலின் நடுவே கடிபடும் மிளகைப் போல "நச்".
அந்த அருமையான பாடல் இடம்பெற்றுள்ள திரைப்படம்
"அவள் ஒரு தொடர்கதை".

கடவுள் அமைத்து வைத்த மேடை
கிடைக்கும் கல்யாண மாலை.
இன்னார்க்கு இன்னாரென்று
எழுதி வைத்தானே தேவன் அன்று.

5.இன்றைய "கருத்தும் கானமும்" நிகழ்ச்சியில் புதுகையைச் சேர்ந்த நேயர் தென்றல் அவர்களின் விருப்பப் பாடல் தெரிவுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.

உறவிலேயே சிறந்தது கணவன் - மனைவி உறவு. இடையிலே ஏற்பட்டு இறுதி வரைத் தொடர்வது. மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள பாடலாக நேயரி கூறும் அப்பாடப் பாடல் "புதிய முகம்"
படத்தில் இடம் பெற்றுள்ளது.

கண்ணுக்கு மெய்யழகு
கவிதைக்கு பொய்யழகு
அவரைக்கு பூ அழகு
அவருக்கு நான் அழகு.


6. தாய்மை பெண்ணை முழுதாக்குகிறது. வெட்கமும், சந்தோஷமும் பூசியது
அந்த 10 மாதத் தவக்காலம். தாய்மையை கொண்டாடும் இந்தப் பாடல் தனக்கு
மிகவும் பிடிக்க காரணமாக கூறுகிறார் நேயர். "பூந்தோட்ட காவல்காரன்"
திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் இதோ :

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு.


7. குழ்ந்தையின் முதல் பாட்டு தாலாட்டு தான். தாயின் தாலாட்டைமறக்கமுடியுமா?
கானக் கந்தர்வன் யேசுதாஸின் குரலில் இந்தப் பாடலை கேட்கும்
பொழுதெல்லாம் தூக்கம் கண்களை தழுவும் என்கிறார் நேயர்,
"நினைத்ததை முடிப்பவன்" படப் பாடலை நேயரோடு சேர்ந்து நாமும் ரசிக்கலாம்.

இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவினில்
தொட்டிலைக் கட்டி வைத்தேன்.- அதில்
பட்டுச்சிறகுடன் அன்னச் சிறகினை மெல்லன
இட்டு வைத்தேன். நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யார் யாரோ வந்து பாராட்ட.


8. ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதை படம் பிடித்துக்
காட்டும் இந்தப் பாடல் தனக்கு மிகவும் பிடித்ததாக நேயர் கூறுகிறார்.

செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகமே! கோலம் போடு

தோள்கள் ரண்டில் கையோடு ஊஞ்சல் கட்டி
ஆடச்சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி.

என்று துவங்கும் பாடலில் கீழ்காணும் வரிகளை
வைர வரிகளாக கூறுகிறார்.

ஒரு கிளி உறங்குது தோளோடு
ஒரு கிளி உறங்குது மார்போடு
குடும்பமே ஆன்ந்தக் கிளிக்கூடு

காற்றடித்து இந்தக் கூடு கலையாது
வெந்நிலவு தண்ணி பட்டு
அழியாது.......


என்ன நேயர்களே! பாடல்களை ரசித்தீர்களா? நானும் ரசித்தேன்.
மீண்டும் இதுபோன்றதொரு நிகழ்ச்சியில் தங்களை சந்திக்கும்
வரை வணக்கம் கூறி விடை பெறுவது தங்கள் அபிமான

கே... எஸ்.. ராஜா.


(இது என் 25 ஆவது பதிவு. புதியவளாகிய எனக்கு ஊக்கமளித்து,
உதவி செய்து, தட்டிக் கொடுத்து, தட்டிக் கேட்ட வலையுலக நண்பர்களுக்கு இந்த பதிவை சமர்பிக்கின்றேன். என் நண்பர்களாகிய உங்கள் அனைவருக்கும் தான் இப்பதிவு. நன்றி! அன்பு நெஞ்சங்களே!

25 comments:

மங்களூர் சிவா said...

மீ த பர்ஸ்ட்டு

மங்களூர் சிவா said...

25 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!

மங்களூர் சிவா said...

நவம்பர்-ல் ப்ளாக் ஆரம்பித்து டிசம்பர் 14ம் தேதிக்குள் 25 பதிவு போட்டுவிட்டு ரங்கமணிகள் தான் கம்பியூட்டரில் மூழ்கி கிடக்கிறார்கள் என ஹஸ்பண்டாலஜி பாடம்!!

என்ன ஒரு வில்லத்தனம்

(பின்னூட்டம் பப்ளிஸ் ஆகும் என நம்புகிறேன்)

pudugaithendral said...

வாழ்த்துக்கு நன்றி சிவா,
25 பதிவு போட கணினி முன் நான் செலவிட்ட நேரம் குறைவு தான்.

ரங்கமணிகளைப்போல உட்கார எங்களால் எப்படி முடியும். வேற வேலையையும் பார்கணும்ல.

எங்களுக்கு என்ன வேற வேல வெட்டி இல்லன்னு நினைச்சீங்களா?

seethag said...

தங்கமணிகளின் நலம் மனதில் வைத்து ப்ளாகை தொடன்ங்கி எத்தனை இடற் வந்தாலும்துணிந்து போராடும் புதுகை வாழ்க வளமுடன்...

நெஜம்மாலுமே புதுகை இன்னும் பல பதிவுகள் போட வாழ்த்துகிறேன்.

pudugaithendral said...

வாழ்த்துக்கு நன்றி சீதா.

மங்களூர் சிவா said...

//
Seetha said...
தங்கமணிகளின் நலம் மனதில் வைத்து ப்ளாகை தொடன்ங்கி எத்தனை இடற் வந்தாலும்துணிந்து போராடும் புதுகை வாழ்க வளமுடன்...

நெஜம்மாலுமே புதுகை இன்னும் பல பதிவுகள் போட வாழ்த்துகிறேன்.
//

தப்பு செய்யறவங்களை விட தப்பு செய்ய தூண்டுறவங்களுக்குதான் தண்டனை அதிகம் இ.பி.கோ 420 ன் படி

pudugaithendral said...

உங்களுக்கு பதில் சீதா சொல்வாங்க.

seethag said...

சிவா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு..

சக்தி இல்லையேல் சிவனில்லை..

இறைவா..ற்ற்னூங்க் ற்றின்ங்க்...

அடுத்த வருஷம் கல்யாணம்..

அப்புறம் தாக்ஷ்யாயணி வரட்டும்ன்னு நான் ஆசீர்வாதம் செய்திடுவேன்..

பார்த்து இருன்ங்க..

மெளலி (மதுரையம்பதி) said...

ஒரே மாசத்தில் 25..கலக்குங்க தென்றல்.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<=எங்களுக்கு என்ன வேற வேல வெட்டி இல்லன்னு நினைச்சீங்களா?
=>
-))))

ஆமாமா.ரொம்ப வேலை.
ரொம்ப கஷ்டப்பட்டு ஆட்டுரலில் கை வலிக்க மாவாட்டுவது,கை வலிக்க துணிதுவைப்பது......
(தானியங்கி அரைப்பான்கள்,துணிதுவைக்கும் இயந்திரம்லாம் கேள்வியே பட்டிருக்கமாட்டீங்களே)

=)))))

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

புதுகை வடக்கு மூன்றாம் வீதியில் த.சு.லு.ச(TELC) பள்ளி இன்னும் இருக்கிறதா?

pudugaithendral said...

saamanyan said
//ஆமாமா.ரொம்ப வேலை.
ரொம்ப கஷ்டப்பட்டு ஆட்டுரலில் கை வலிக்க மாவாட்டுவது,கை வலிக்க துணிதுவைப்பது......
(தானியங்கி அரைப்பான்கள்,துணிதுவைக்கும் இயந்திரம்லாம் கேள்வியே பட்டிருக்கமாட்டீங்களே)//

ஆணாதிக்கத்தின் அறைகூவல்களுக்கெல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்க மாட்டேன்

pudugaithendral said...

த ச லு ச இருக்கு, இருக்கு.

நாங்க அதுக்கு வெச்சிருக்க பேரே வேற

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
(தானியங்கி அரைப்பான்கள்,துணிதுவைக்கும் இயந்திரம்லாம் கேள்வியே பட்டிருக்கமாட்டீங்களே)//

ஆணாதிக்கத்தின் அறைகூவல்களுக்கெல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்க மாட்டேன்
//
நியாயமா ஒருத்தர் ஒன்னு சொல்லிடப்பிடாதே உடனே ஆணாதிக்க அறைக்கூவல் முக்கால் கூவல்னு என்ன இது!!!!!!!!!
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

மங்களூர் சிவா said...

//
Seetha said...
சிவா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு..

சக்தி இல்லையேல் சிவனில்லை..

இறைவா..ற்ற்னூங்க் ற்றின்ங்க்...

அடுத்த வருஷம் கல்யாணம்..

அப்புறம் தாக்ஷ்யாயணி வரட்டும்ன்னு நான் ஆசீர்வாதம் செய்திடுவேன்..

பார்த்து இருன்ங்க..

//
அது யாருங்க தாக்ஷ்யாயணி ஆஸ்திரேலியாவில ரூம் மேட்டா பாக்க சுமாராவாவது இருப்பாங்களா இல்ல சப்பை பிகரா
அவ்வ்வ்வ்

இதுக்கெல்லாம் நான் மிரள மாட்டேன் என்பதை (நடுக்கத்துடன்) சொல்லிக்'கொல்ல' கடமைப்பட்டிருக்கிறேன்

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
உங்களுக்கு பதில் சீதா சொல்வாங்க.

//
எக்கோவ் சூப்பரா ஜகா வாங்குறீங்க!!!!
:-))))

நந்தா said...

25 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் புதுகைத் தென்றல்....

பாடல்கள் எல்லாமே எனக்கும் பிடித்த பாடல்கள்தான்.....

pudugaithendral said...

mangalore siva said

//நியாயமா ஒருத்தர் ஒன்னு சொல்லிடப்பிடாதே உடனே ஆணாதிக்க அறைக்கூவல் முக்கால் கூவல்னு என்ன இது!!!!!!!!!
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//
ஒருதலைப் பட்சமாகவே ஆண்வர்க்கம் பேசும்போது இப்படித்தான் கமெண்ட முடியும்.

தனியா ஒரு பதிவு போட்டு திட்டிடலாம்னு பார்க்கறேன்.

pudugaithendral said...

வாருங்கள் நந்தா, நன்றி தங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்.

பாடல்கள் உங்களுக்கு பிடித்திருந்ததாக சொல்லியிருந்தீர்கள். நன்றி.

முதல்ல ஒருத்தரு பாட்டை பாராட்டி சொல்லியிருக்காரு.

இனியாவது டாபிக் மாறும்னு நம்பறேன்.

சுரேகா.. said...

இறைவழிபாடு
இயற்கை நேசம்
இளமைக் காதல்
இன்பத்திருமணம்
இடரில்லா இல்லறம்
இனிய தாய்மை
இகபர சுகம்தரும் குழந்தை
இதமான குடும்பம்
என
இத்தனையும்
இருபத்தைந்தாவது பதிவில், இசைதரும் பாட்டில் கேட்டோம்.


நன்றி...

(அடேயப்பா..எவ்ளோ இ.....)

pudugaithendral said...

நன்றி சுரேகா,

பதிவை சரியாக புரிந்துகொண்டீர்கள்.

அதற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

சுரேகா.. said...

அப்புறம்
ஊர்க்காரன்
புரிஞ்சுக்காம
யார் புரிஞ்சுக்குவா..?

pudugaithendral said...

சரியா சொன்னீங்க.

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
நன்றி சுரேகா,

பதிவை சரியாக புரிந்துகொண்டீர்கள்.

அதற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

//
சுரேகா.. said...
அப்புறம்
ஊர்க்காரன்
புரிஞ்சுக்காம
யார் புரிஞ்சுக்குவா..?
//

புதுகைத் தென்றல் said...
சரியா சொன்னீங்க.
//

திட்டனும்னு முடிவெடுத்துட்டா டைரக்டா திட்டனும்!!
அவ்வ்வ்வ்வ்வ்