Wednesday, December 26, 2007

அப்பரே... அப்பரே.......

ஹலோ இது அப்பரைப் பத்திய பதிவு இல்ல.


அப்பர் பர்த் பற்றியது. நான் மும்பையில் இருந்த போது பெற்றோர்களைப் பார்க்கபுதுகை வருவேன். தனியாகத்தான். அந்த பயணத்தை நினைக்கும் போது ஆஹா! ஆஹா!


டிக்கெட் புக் செய்யும் போதே அப்பர் பர்த் தான் வேண்டும் என்று புக் செய்து விடுவேன். பெரும்பாலும் சென்னை எக்ஸ்பிரஸ்தான். (அலுவலகத்திலிருந்து நேராக தாதர் போய்விடலாமே) அது என்றைக்கு சரியான் நேரத்தில் சென்னை போயிருக்கிறது.


டிரெயினில் ஏறி வண்டி ஸ்டார்ட் ஆகும் வரைதான் சீட்டில் இருப்பேன். அதற்குள் சாப்பிட்டு முடித்து அப்பர் பர்த்தில் ஏறினால் சென்னை வரும் வரை அங்கேதான்.


படிக்க கொஞ்சம் புக், அம்மம்மா கட்டிக்கொடுத்த சாப்பாடு, பெட் ஸ்பிரட் இவைகளுடன் அப்பரில் ஏறி விடுவேன். நல்ல தூக்கம், அடுத்த நாள் காலையில் சும்மா ஒரு 9 மணிக்கு எழுந்து பல் தேச்சு, கையில் இருக்கும் டிபனை சாப்பிட்டுவிட்டு அடுத்த கட்ட தூக்கம் ஆரம்பம். அப்புறம் மதியம் சாப்பாட்டிற்கு எழுந்து சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம், புக் படிச்சு, படம் வரைந்து (எல்லாம் அப்பர் பர்த்தில் தான். கீழே இறங்கறதா? நோ.நோ. அது ரொம்ப தப்பு)திரும்ப தூக்கம்.


இப்படி ரொம்ப அனுபவதித்து பயணம். 24 மணி நேரம் தான் பயணமா என்று இருக்கும். டிரெயின் லேட்டானால் இன்னும் கொண்டாட்டம் தான்.


சென்னைக்கும் மும்பைக்கும் சீசன் டிக்கெட் வாங்கியது போல பயணிக்கும் என் தாத்தா வழியில் என்னென்ன என்ஙெங்கே சாப்பிடலாம் என்று சொல்லி கொடுத்திருந்தார்.
மந்திராலயம் என்றால் ராகவேந்திரர் ஞாபகம் வரும் தானே? அங்கே மசால்வடை ரொம்ப பேமஸ். வாடி ஸ்டேஷனில் தேநீர் அருமை. பயனத்தின் ஒவ்வொரு நொடியையும் அனுபவிப்பேன். அப்புறம் இருக்கவே இருக்கிறது ரயில் சிநேகம்.



தனியாக பயணிப்பதை போன்றே இருக்காது. என் உடன் வேலை பார்ப்பவர்கள் கூட கேட்பார்கள், தனியாக எப்படி பயணம் செய்கிறாய்? பயமாக இருக்காதா? போரடிக்காதா? நான் இல்லை என்று சொல்வதை ஆச்சரியமாக பார்ப்பார்கள்.


24 மணிநேரம் பயணம் செய்து, உறவினர் வீட்டில் தங்கி விட்டு, அடுத்தநாள் வைகை பிடித்து திருச்சியில் இறங்கி, பஸ்பிடித்து புதுகை போனால், பழநியப்பா தியேட்டர் ஸ்டாப்பில் தம்பி காத்திருப்பான்.



மறக்கவே முடியாத அப்பர் பர்த்தில் பயணம். தனிமை சில சமயங்களில் இனிமை.

24 comments:

மங்களூர் சிவா said...

//
அப்பரில் ஏறி விடுவேன். நல்ல தூக்கம், அடுத்த நாள் காலையில் சும்மா ஒரு 9 மணிக்கு எழுந்து பல் தேச்சு, கையில் இருக்கும் டிபனை சாப்பிட்டுவிட்டு அடுத்த கட்ட தூக்கம்
//
//
திரும்ப தூக்கம்.
//
எப்பவும் வீட்டுல இருக்க மாதிரியே இல்லிங்களா!!!!

:-)))))))))))

மங்களூர் சிவா said...

//
24 மணிநேரம் பயணம் செய்து, உறவினர் வீட்டில் தங்கி விட்டு,
//
கண்ணு முழிச்சி சாப்பிட்ட டைம் எல்லாம் தூங்கி கணக்கு தீக்க வேணாமா அதுக்குதானே!!!!

//
அடுத்தநாள் வைகை பிடித்து திருச்சியில் இறங்கி, பஸ்பிடித்து புதுகை போனால், பழநியப்பா தியேட்டர் ஸ்டாப்பில் தம்பி காத்திருப்பான்.
//
:-))))))))

cheena (சீனா) said...

சரியாகச் சொன்னீர்கள் நண்பரே !!

தனியாக வரும் போது அப்பர் பெர்த் தான் சாலச் சிறந்தது. சென்னையில் இருந்து புதுகை போக திருச்சி வரை வைகை - அங்கிருந்து பஸ் - பழனியப்பா தியேட்டர் - அருமையான பயணம். அனுபவிக்க வேண்டும்

Agathiyan John Benedict said...

புதுகைத் தென்றல் என்ற பெயருக்கு ஏற்ற மாதிரியே உங்க எழுத்திலும் தென்றல் தவழ்கிறது.
ஆமா, உங்களுக்கு ஊரு புதுக்கோட்டையே தானா? எனக்கும் அங்கிட்டுத்தான் ஊரு. ஒரே ஊருன்னு நினைக்கிறப்ப சந்தோஷமா இருக்கு. கலக்குங்க.

சுரேகா.. said...

அட...ஆமாங்க.அப்பர் பர்த்துக்கு எப்பவும் ஒரு சிறப்பு உண்டு..

கீழ் நடமாட்டங்கள் எதுவும் நம்மை பாதிக்காது.

எல்லோருடைய முகமும் நமக்குக்கீழ்தான் தெரியும். (அதில் ஒரு மகிழ்ச்சி)

புத்தகங்களை இரவில் விளக்குக்கு அருகில் நல்ல வெளிச்சத்தில் படிக்கலாம்..

இப்படி எத்தனையோ...!

நல்லா அப்பருங்க..!

துளசி கோபால் said...

//மந்திராலயம் என்றால் ராகவேந்திரர் ஞாபகம் வரும் தானே? அங்கே மசால்வடை ரொம்ப பேமஸ். //



அட!!! மசால் வடை!!!!!

Thanks for the info.

pudugaithendral said...

சிவா நீங்கள் சொல்வது சரி. ஆனால் அது திருமணத்திற்க்கு முன். ஆனால் மும்பை லோக்கல் டிரெயினில் பயணம் செய்த அலுப்பு தீர அப்பர் பர்த்தில் அப்படி தூங்கி எழுந்தால் தான் முடியும். வீட்டில் மிஞ்சிப்போனால் ஞாயிறு காலை 9 அல்லது 10 மணி வரைதான் தூங்க முடியும்.

நானும் பெரிய மாமாவும் போட்டி போட்டுக்கொண்டு தூங்கி ஞாயிறை அனுபவித்துக் கொண்டிருக்க, சின்ன மாமா கராத்தே பாடம் எடுக்க போயிடுவார். பாவம். (சின்னா மாமா கராத்தே பிளாக் பெல்ட்)

pudugaithendral said...

உறவினர் வீட்டிற்க்கு போவது தூங்கவா? அதான் வேணுங்கிற அளவுக்கு வண்டியிலேயே தூங்கியாச்சே.

pudugaithendral said...

வாங்க சீனா,

முதல் வருகைக்கு நன்றி.

pudugaithendral said...

வாங்க ஜான்,

நான் பிறந்து வள்ர்ந்து எல்லாம் புதுகைத் தான். நீங்க எந்த பக்கம்?

pudugaithendral said...

வாங்க சுரேகா

சரியா சொன்னீங்க. இப்பவும் அப்பர் பர்த்தில் போறவ்ங்கள பார்க்கும் போது பொறாமையா இருக்கும், அத்தோட என் பழைய நினைவுகள் வந்து போகும்.

என்னோட அப்பர் பர்த்தை இப்ப என் மகன் எடுத்துகிட்டான்:((

pudugaithendral said...

வாங்க துளஸி அக்கா,

வருகைக்கு நன்றி.

cheena (சீனா) said...

துளசி தளம் - துளசி கோபால் தான் மறு மொழிகளுக்குப் பதிலளிக்கும் போது வாய் நிறைய வாங்க வாங்க ன்னு சொல்வார் - நல்ல பழக்கம் - நீங்களும் நல்லபடியா வாங்க வாங்கன்னு சொல்றீங்க - வாழ்க - வாழ்த்துகள்

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

ஒரு வாரம் கழித்து வாரேன். வர்ட்டா

நிஜமா நல்லவன் said...

அப்பர் பெர்த்தாவது லோயர் பெர்த்தாவது நான் இன்னமும் ரயில்ல போனதே இல்ல. நீங்க எழுதுனத படிக்கிற போது ரயில்ல போகணும்ன்னு போல இருக்கு.ஆனா எங்க இருந்து எங்க போறதுன்னு தான் தெரியல!!

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,

இன்னும் டிரெயினில் போகலியா? காமடி பண்ணாதீங்க.

pudugaithendral said...

சாமான்யன் சிவா,

மெல்ல நிதானமா வாங்க. தப்பில்ல.
காற்புள்ளி, முக்கால் புள்ளி எல்லாம் வேண்டாம். கணிமை கோடிங்கில் திட்டுற மாதிரி இருக்கு.

pudugaithendral said...

நம்ம வீட்டிற்க்கு வர்றவங்களை வரவேற்கனுமில்ல சீனா, அதான் வாங்க, வாங்கன்னு சொல்றேன்.

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
நம்ம வீட்டிற்க்கு வர்றவங்களை வரவேற்கனுமில்ல சீனா, அதான் வாங்க, வாங்கன்னு சொல்றேன்.
//
தெகிரியமா சொல்லுறீங்க
ஹைதராபாத்கு வேற வரப்போறீங்க நாங்க பொட்டிகட்டிகிட்டு வந்துருவோம்!!!

அப்புறம் ப்ளாக்கெல்லாம் லீவ் விட்டுட்டு எங்களுக்கு ஆக்கி போடறா மாதிரி ஆயிடும் எதுக்கும் ரோசிச்சி சொல்லுங்க!!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

கால் மணி நேரம் போராட்டத்துக்குப் பின் உங்க ப்ளாக்கை கண்டுபிடுச்சுட்டேன்.
அதில் ஒரு எழுத்தை(d) நீக்கிவிட்டால் உங்க பேருக்குத்தகுந்த மாதிரி இருக்கும்னு என் அபிப்ராயம்.
pudugaithenral.blogspot.com

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<== (சின்னா மாமா கராத்தே பிளாக் பெல்ட்) ==>
இது ஏதோ எங்களையெல்லாம் மிரட்டர மாதிரி இல்ல இருக்கு =)) இனிமே அனானி பேர்லதான் நாங்கெல்லாம் வரணும்போல =))

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<== அப்புறம் ப்ளாக்கெல்லாம் லீவ் விட்டுட்டு எங்களுக்கு ஆக்கி போடறா மாதிரி ஆயிடும் எதுக்கும் ரோசிச்சி சொல்லுங்க!! ==>
ஏங்க ம.சிவா,புதுகை தென்றலோட ரங்கமணி அவ்ளோ நல்லாவா சமைப்பார்? பின்னே இவர் இப்படி ப்ளாக்லே உட்கார்ந்துட்டா அவர்தானே சமைக்கணும்.போதாக்குறைக்கு இவர் பெண்ணீய பதிவு வேற போடறார்.

pudugaithendral said...

பின்னே இவர் இப்படி ப்ளாக்லே உட்கார்ந்துட்டா அவர்தானே சமைக்கணும்.போதாக்குறைக்கு இவர் பெண்ணீய பதிவு வேற போடறார்

பிளாக்கில உட்கார்ந்தா வீட்டுல அடுப்பே பத்த வெக்கிரதில்லைன்னு நினைப்பா? அப்ப ரங்கமணிகள் இவ்வள்வு எழுதறீங்க்ளே, அலுவலக வேலையை விட்டுவிட்டு (அதாவது அலுவலக வேலையை செய்யாமல்) எழுதுவது என்று அர்த்தமா? சும்மா ஏதாவது ஆணியமா எழுதனுமேன்னு பரபரப்பை உண்டு பண்ண எழுதக் கூடாது.

இத்தனை நாட்களாக பெண்கள் அப்படி இருக்காங்க, இப்படி இருக்காங்கன்னு சொல்லிகிட்டு இருக்கீங்க. ஆண்கள் செய்யும் தவற்றை சுட்டிக் காட்டினால் தாங்க முடியலையா????????????

பாச மலர் / Paasa Malar said...

அப்பர் பர்த் சுகமே அலாதிதான்..