Tuesday, January 15, 2008

3 மனமே 3 ! இன்பத்தின் கட்டளை 3!!

பிரபல டாக்டர் ஒருவர் கீழ்கன்டவாறு சொல்லியிருக்கிரார்," உங்கள் வாழ்வில்
ஒரு 3 மணிநேரம், 3 நாட்கள், 3 வாரங்கள்
உங்களுக்கென ஒதுக்கிக்கொண்டு, உங்களை இளைப்பாற்றிக் கொள்ளுங்கள்,
3 மணிநேரம் உடற்பயிற்ச்சிக்கும்,
3 நாட்களை படிக்க மற்றும் நண்பர்களுடன் மகிழவும்,
3 வாரம் குடும்பதாருடன் இன்பச் சுற்றுலா செல்லவும்,
உபயோகிப்பது போல் திட்டமிடுங்கள்".
3 F's எனப்படும் "Fitness, Frendship and Family " இவை உங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கான் மிக
முக்கிய காரணிகள்.ஆகையால் இந்த மூன்றிற்கும் உங்கள் நேரத்தை திட்டமிட்டு செலவு
செய்வது மிக முக்கியம்.
ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான
வாழ்க்கையை தொலைத்துவிட்டு, பணத்தையும், உயர்பதவிகளையும் மாத்திரம் சம்பாரிப்பது
வாழ்க்கையைஅர்த்தமற்றதாக ஆக்கிவிடும் எனும் அவரின் கூற்று சத்தியமான உண்மை.
எனவே இனிமையான வாழ்வை விரும்புபவர்கள் இந்த 3 கட்டளையையும் மனதில் நிறுத்தினால் ஆனந்தமான வாழ்க்கையை அடைவார்கள் என்பதில் ஐயமில்லை.

7 comments:

மங்களூர் சிவா said...

//
வாழ்வில்
ஒரு 3 மணிநேரம், 3 நாட்கள், 3 வாரங்கள்
உங்களுக்கென ஒதுக்கிக்கொண்டு, உங்களை இளைப்பாற்றிக் கொள்ளுங்கள்
//
ஒவ்வொரு மாசத்துலயுமா???

மங்களூர் சிவா said...

//
வாழ்க்கையை தொலைத்துவிட்டு, பணத்தையும், உயர்பதவிகளையும் மாத்திரம் சம்பாரிப்பது
வாழ்க்கையைஅர்த்தமற்றதாக ஆக்கிவிடும்
//
கண்டிப்பா!!

pudugaithendral said...

vaanga siva

வாழ்வில்
ஒரு 3 மணிநேரம், 3 நாட்கள், 3 வாரங்கள்
உங்களுக்கென ஒதுக்கிக்கொண்டு, உங்களை இளைப்பாற்றிக் கொள்ளுங்கள்
//
ஒவ்வொரு மாசத்துலயுமா???//


மாசத்துக்கா வருஷத்துக்கா அது உங்க விருப்பம் சிவா.

பாச மலர் / Paasa Malar said...

வாழ்க்கைக்கு வேண்டிய 3...உண்மைதான்..

pudugaithendral said...

வாங்க பாசமலர்

வருகைக்கு நன்றி.

cheena (சீனா) said...

மணி நாள் வாரம் - எப்க்கோ கணக்கு இடிக்கிறதே - மாசத்துக்கு எனில் 3 மணி நேர உடற் பயிற்சி போதாது. 3 வார குடும்பச் சுற்றுலா சற்றே அதிகம்.
ஆண்டுக்கு என்றாலும் சரியாய் வர வில்லை. மூலத்தை சற்றே ஆராயலாமே!!

இப்படி வைத்துக் கொள்ளலாமா ?

3 மணீ நேரம் - வாரத்துக்கு
3 நாட்கள் - மாதத்துக்கு
3 வாரங்கள் - ஆண்டுக்கு

கடைப்பிடிக்கலாமே

pudugaithendral said...

வாங்க சீனா,
3 மணிநேரம், 3 நாள், 3 வாரம் வருடத்திற்குத்தான்.