Saturday, January 26, 2008

SEN-SAAL


எங்க வீட்டுகிட்ட ஒரு புது பிரட் கடை திறந்தாங்க. சரி இதுவும் ஒரு பெஸ்ட்ரி ஷாப் அப்படீன்னு தான் நினைச்சேன். ஒரு முறை போய்த்தான் பார்ப்போமேன்னு போனா ஆச்சரியம்!!!!




பிரட்டில் இத்தனை விதங்களா? கேக் மற்றும் பன்களிலும் அத்தனை வகைகள்.







சுவையோ, சுவை. அது தான் "sen-saal". இவங்க பிரட் தயாரிப்புல் ரொம்ப சிறந்தவர்கள். எத்தனை வகை பிரட் உண்டோ அத்தனையும் அங்கே கிடைக்கும்.



பேஸ்ட்ரீவகைகளும் உண்டு.















இங்கு என் தோழிகள் எல்லோரும் என்னைப் பார்த்து பொறாமைபட்டு என்னிடம் சொல்வார்கள்,"உனக்கென்ன! வீட்டுக்கு பக்கத்திலேயே சென்சால். வேணுங்கறப்ப வாங்கிக்கலாம்".
5 நிமிஷ நடையில் இந்தக் கடை.
போட்டது உடனே விற்று தீர்ந்துவிடும். அங்கேயே
ஸ்ரீலங்கன் மீல்ஸ்இருக்கு. உட்கார்ந்து சாப்பிட
இடமும் இருக்கு. டேக் அவேயும் இருக்கு.
sen-saal இங்கு அனைவராலும் மிகவும் விரும்பப்படும் ஒரு இடம்.
இந்த இடத்தை பற்றி சொல்லும் போது என் ஞாபகத்தில்
வரும் இன்னொரு விஷயம் நம்ம
முத்தையா முரளீதரன் அவர்களை இங்கு பார்த்தது.
தாஜ் சமுத்ரா ஹோட்டலில் முன்பு அவரைப் பார்த்தது
கூட கிரிக்கெட் உடையில்தான். பக்கத்தில் இருக்கும்
சூபர் மார்கெட்டில் சாமான் வாங்கிக் கொண்டு,
பிரட் வாங்க சென்சாலில் நுழைகிறேன்,
திரு.முரளி ஏதோ வாங்கிக்கொண்டு
படிகளில் இறங்கிக் கொண்டிருந்தார்.
கேஷுவல் உடையில், கேஷுவலாக, எந்த பந்தாவும் இல்லாமல்
சாதாரண குடும்பத்தலைவன் போல் தன் குடும்பத்திற்கு
தானே வாங்கிச் செல்லும் அவரைக் கண்டு
அன்று நான் வியந்துதான் போனேன்.





6 comments:

MyFriend said...

சூப்பரா இருக்கு ஒவ்வொரு ப்ரெட்டும் கேக்களும்..
:-)

pudugaithendral said...

வாங்க மைஃபிரண்ட்,

டேஸ்டும் நல்லா இருக்கும்.

சுரேகா.. said...

நல்லா இருக்குங்க...!

நல்லா எஞ்சாய் பண்ணுங்க.!

(ஒரு புகையற வாடை வரல?) :-)

pudugaithendral said...

வாங்க சுரேகா,

புகையற வாடை நல்லாவே வருது! வருது!

cheena (சீனா) said...

ஏங்க, ஒரு பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் பிளீஸ்

pudugaithendral said...

வாங்க சீனா,

பார்சலா? அனுப்பிட்டா போச்சு.