ஐயோ பாவம்!
9 - 5 வேலை மாதிரி இல்ல இவங்க வேலை.
அமெரிக்கா நேரத்திற்கு தகுந்த மாதிரி வேலை.........
அவனவன் வெளில "இடத்துக்கு' அடிச்சிக்கிறான்,
இவங்க வாழ்க்கை ஒரு 4 அடி கியூபுக்குள்தான்!
உட்கார்ந்த இடத்தை விட்டு எந்திரிக்காம
சாப்பாடு கூட அதே கூட்டுக்குள்ள
பிட்சா, பர்கர், தாகத்துக்கு "கோக்".
சொந்தபந்தமெல்லாம் கணிணிப் பொட்டிதான்னு ஆயிடிச்சு.!
நல்லநாளோ, பண்டிகையோ "இமெயில்" " சாட்டிங்" "SMS",
இதுலதான் வாழ்த்துப் பதிவும், வாழ்க்கையுமாகிப்போச்சு.
சமீபத்தில் ஒரு புத்தகத்தில் படிச்சேன்,
ஏதோ ஒரு அலுவகத்தில் இவர்கள் ஷாப்பிங்
செய்வதற்காக அலுவல வளாகத்திலேயே துணிக்கடையை
துவங்கி இருக்காங்களாம்!!!!!!!!!!!!
பூச்சிப் பிடிக்கிறதுல இப்ப எக்ஸ்பர்ட் ஆகிட்டாங்க.
(அட இந்த BUG யைச் சொன்னேன்.)
எப்பப்பாரு கணிணிக்குள்ளேயே தலையைவிட்டுக்
கிடக்குறதுனால எதுத்தாப்பல மனுசங்களைக் கண்டா
"பேசும் பாஷையே புரியலையேன்னு" பாடவேண்டியதுதான்.
இப்ப பூச்சி டென்ஷனோட லே-ஆஃப் டென்சனுமுல்ல
சேர்ந்துகிச்சாம்.
என்னவோ போங்க, மனுஷன் வேலைக்காகவும், பணத்துக்காகவும்
நிறைய இழக்கறாங்க. இவங்க இழப்பது நிறைய.
பொட்டிதட்டறவங்க எல்லாம் பாவம்!!!!!!!!!!
18 comments:
பாவம் இவன்னே போட்டிருக்கலாம்!!
யார்னு தெரிஞ்சி போச்சு.
//
அவனவன் வெளில "இடத்துக்கு' அடிச்சிக்கிறான்,
இவங்க வாழ்க்கை ஒரு 4 அடி கியூபுக்குள்தான்!
//
அப்பதான் வேகமா அப்பிடி இப்பிடி திரும்பீட்டு சாரி டார்லிங்னு சைனாகாரிகிட்ட சொல்ல முடியுமாம்.
(இதை நான் சொல்லவில்லை)
//
உட்கார்ந்த இடத்தை விட்டு எந்திரிக்காம
சாப்பாடு கூட அதே கூட்டுக்குள்ள
//
ஆன்லைன்ல கடலை வறுக்கறதுன்னா சும்மாவா?
(இதையும் நான் சொல்லலை)
//
நல்லநாளோ, பண்டிகையோ "இமெயில்" " சாட்டிங்" "SMS",
இதுலதான் வாழ்த்துப் பதிவும், வாழ்க்கையுமாகிப்போச்சு
//
ம்
வாஸ்தவம்தான்.
தாயி,எங்க வாழ்க்கைய அப்டியே சொல்றீங்க. அழுதுருவேன்.
--- ஒரு பொட்டி தட்ரவன்
வாங்க சிவா
நான் எல்லாரையும் தான் சொன்னேன்.
பொதுவா பொட்டித்தட்டுறவங்க பாடு இதுன்னு.
வாங்க சிவா,
அழுவக்கூடாது. கண்ணத்தொடைச்சுக்கோங்க..........
//
என்னவோ போங்க, மனுஷன் வேலைக்காகவும், பணத்துக்காகவும்
நிறைய இழக்கறாங்க. இவங்க இழப்பது நிறைய.
பொட்டிதட்டறவங்க எல்லாம் பாவம்!!!!!!!!!!
//
ஆமாங்க நான் கூட தட்டி தட்டி ரிப்பேராகுற பொட்டிய சரிபண்ணி இணைச்சி குடுக்கிறவந்தான்.
//
அவனவன் வெளில "இடத்துக்கு' அடிச்சிக்கிறான்,
இவங்க வாழ்க்கை ஒரு 4 அடி கியூபுக்குள்தான்!
//
அப்பதான் வேகமா அப்பிடி இப்பிடி திரும்பீட்டு சாரி டார்லிங்னு சைனாகாரிகிட்ட சொல்ல முடியுமாம்.
(இதை நான் சொல்லவில்லை)
நல்ல வேளை அதெல்லாம் எனக்கு கடந்த காலம் ஆகிவிட்டது. இப்பவெல்லாம் சரியா 9 - 6 வேளை 6:45 வீடு. சனி, ஞாயிறு லீவு, வருடத்துக்கு 12 நாள் கட்டாய விடுப்பு. எண்ணற்ற Sick லீவ், 18 நாள் இதர விடுமுறைகள் என வாழ்கை படு ஜாலியாக உள்ளது!!! இப்போதெல்லாம் பூச்சி நசுக்குவது சிரமமான வேலையே இல்லை.
வாங்க கருப்பன்,
தங்கள் முதல் வருகைக்கும் பின்னுட்டதுக்கும் நன்றி.
அதான் பூச்சி நசுக்கறதுல எக்ஸ்பர்ட் ஆகீட்டீங்கன்னு பதிவுல சொல்லியிருகேனே.
தங்கள் வாழ்க்கை அவ்வாறு இல்லாததற்கு மனது ஆனந்தப்படுகிறது.
<==
மங்களூர் சிவா said...
ஆமாங்க நான் கூட தட்டி தட்டி ரிப்பேராகுற பொட்டிய சரிபண்ணி இணைச்சி குடுக்கிறவந்தான். ==>
ஏன், அப்பத்தான், மொத்தமா ரிப்பேராயி, புது பொட்டி வாங்குவாஙன்னா? =)
//
சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...
<==
மங்களூர் சிவா said...
ஆமாங்க நான் கூட தட்டி தட்டி ரிப்பேராகுற பொட்டிய சரிபண்ணி இணைச்சி குடுக்கிறவந்தான். ==>
ஏன், அப்பத்தான், மொத்தமா ரிப்பேராயி, புது பொட்டி வாங்குவாஙன்னா? =)
//
ஹலோ சாமான்யன் இதெல்லாம் சத்தமா வெளியே சொல்லப்பிடாது. நாங்கெல்லாம் பெரிய வல்லுனர்கள்னு பில்டப் குடுத்து நம்ப வெச்சிருக்கோம்.
நீங்க ஒருத்தராவது பொட்டிதட்டுறவங்கள நினைச்சி கவலைபடுறீங்களே!
வாங்க நிஜமா நல்லவன்,
இப்பல்லாம் குடும்பத்துல ஒருத்தறாவது பொட்டி தட்டறதுன்னு ஆயிடிச்சு. என் உடன்பிறப்பு கூட
சிங்கப்பூர்ல பொட்டிதட்டிகிட்டு இருக்கு.
//என்னவோ போங்க, மனுஷன் வேலைக்காகவும், பணத்துக்காகவும்
நிறைய இழக்கறாங்க. இவங்க இழப்பது நிறைய..//
இதுவும் சரிதான்னு தோனுது...:)
சிலபேரு,வீட்டுக்கு வந்தாக்கூட பொட்டிய கட்டிக்கிட்டு அழறாங்கலாம்ல்ல..:)))))ஹிஹி...
ஆமா ரசிகன்,
பழக்க தோஷம்.
புதுகைத் தென்றல் said...
வாங்க நிஜமா நல்லவன்,
இப்பல்லாம் குடும்பத்துல ஒருத்தறாவது பொட்டி தட்டறதுன்னு ஆயிடிச்சு. என் உடன்பிறப்பு கூட
சிங்கப்பூர்ல பொட்டிதட்டிகிட்டு இருக்கு.
.
.
.
அப்படியா? நானும் இங்க தான் இருக்கேன். ஆனா பொட்டி தட்டுற வேலை இல்லைங்க.
Post a Comment