Thursday, February 21, 2008

மெழுகுவர்த்திகள்

"அவனுக்கென்ன? வெளிநாட்டில் வேலை பார்க்கிற மகன்,
கை நிறைய காசு" எனும் அங்கலாயப்புக்கள்.



"வெளிநாட்டில் வேலை. டாலர் டாலராக சம்பளம்"
என்ற பெருமூச்சுகள்.



ஆனால் வெளிநாட்டில் அவர்கள் படும் துயரம்!!!!!!!!!!!
யாரும் அறியாத ஒன்று.



தூக்கம் விற்ற காசு எனும் இக்கவிதையப்
பாருங்கள்.



எப்போதோ படித்த கதை ஒன்று ஞாபகம் வருகிறது.
குடும்பத்துடன் அமூயூஸ்மெண்ட் பார்க்கிற்கு போகின்ற
பொழுது, அங்கே மிக்கியாக, டொனால்டாக உடை
அணிந்து மக்களை மகிழ்விப்பவரிடம் சென்று
ஒரு தந்தை,"ஏன்ப்பா! உனக்கு இந்த உடை
கஷ்டமாக இருக்கிறதா? வேர்த்தால் என்ன
செய்வாய்? என்றெல்லாம் கேட்கிறார்.




"இந்த அப்பா எப்பவுமே இப்படித்தான்! எல்லோர்
கிட்டையும் பேசுவார்" என்று தாயிடம் சலித்துக்
கொள்ளும் மகளுக்கு பதிலுறுக்காது,
வெளிநாட்டில் பெரிய கம்பெனியில் வேலை,
என்று பொய்சொல்லி, இதே மாதிரி வேடம் கட்டி,
பணம் அனுப்பும் தன் மகனை நினைத்து
மனம் வருந்துவார் தந்தை.



மனதை கணமாக்கிய கதை. இதே போன்றதொரு
கதையை வலைப்பூவில் படித்தேன். என் தூக்கத்தை
தொலைத்தேன்.



மெழுகுவர்த்திகளாக தன்னை உருக்கிக்கொண்டு
வாழ்கிறார்கள். இதை உணராத குடும்பம் இருந்தால்
எவ்வளவு கொடுமை?!



என் மனதை பாரமாக்கிய அந்தக் கதையைப்
படிக்க இங்கே சொடுக்கி படித்துப் பார்த்துச்
சொல்லுங்கள்.

12 comments:

குசும்பன் said...

தூக்கம் விற்ற காசு முன்பே படித்தது அதன் உண்மை வெளிநாட்டில் இருப்பவர்களுக்குதான் தெரியும்.

கடைசி லிங் கதை மிக அருமை மனதை பாரமாக்கும் கதை.

pudugaithendral said...

வாங்க குசும்பன்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மங்களூர் சிவா said...

அருமையான இரண்டு சுட்டிகள்.

பாச மலர் / Paasa Malar said...

உண்மைதான்..வெளியே இருப்பவர்கள் பணம் மட்டுமே பிறர்க்குத் தெரியும்..அவர் படும் துயரம் அவர்க்கு மட்டுமே தெரியும்..

pudugaithendral said...

நன்றி சிவா,

pudugaithendral said...

ஆமாம் பாசமலர்,

வெளியே சொன்னாலும் விளங்கிக்கொள்ள முடியாத வகைத் துயரம் அது............

நிஜமா நல்லவன் said...

மனசு ரொம்ப பாரமாயிடுச்சி.

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,

என்னால் தூங்கவே முடியவில்லை.
2 நாளாக மனது மிகப் பாரமாகத்தான் இருக்கு. நானும் கணவரும் மாய்ந்து மாய்ந்து இந்த டாபிக்கிள் பேசிக்கொண்டிருக்கிறோம்.

நிஜமா நல்லவன் said...

புதுகைத் தென்றல் said...
வாங்க நிஜமா நல்லவன்,

என்னால் தூங்கவே முடியவில்லை.
2 நாளாக மனது மிகப் பாரமாகத்தான் இருக்கு. நானும் கணவரும் மாய்ந்து மாய்ந்து இந்த டாபிக்கிள் பேசிக்கொண்டிருக்கிறோம்



தெரிந்த கதைகள் சில. தெரியாதவை? எல்லோரும் நல்லா இருக்கணும்ன்னு எல்லோருக்கும் பொதுவான தெய்வத்திடம் தினமும் ஒரு தடவையேனும் வேண்டிக்கொள்வோம்.

pudugaithendral said...

தெரிந்த கதைகள் சில. தெரியாதவை? எல்லோரும் நல்லா இருக்கணும்ன்னு எல்லோருக்கும் பொதுவான தெய்வத்திடம் தினமும் ஒரு தடவையேனும் வேண்டிக்கொள்வோம்.

சரியா சொன்னீங்க நிஜமா நல்லவன்,
இதைப் படித்த அனைவரிடமும் என் வேண்டுகோள் அதான்.

கீழை ராஸா said...

மதிப்பிற்குரிய சகோதரிக்கு,
நான் எழுத்துலகத்திற்கு புதியவனில்லை என்றாலும், வலைப்பூங்காவிற்கு புதியவன்...என் படைப்புக்களை இங்கு பதிந்து விட்டு, தமிழ்மணத்தில் இணைய மிக்க சிரமப்பட்டபோது நண்பர் வசந்தம் ரவியின் வழிகாட்டுதாலால் இணையத்துள் இணைந்தேன்..இனி எல்லோரும் நம் படைப்பை கவனிப்பார்கள் என்ற எனக்கு ஏமாற்றம் தான் எஞ்சியது...இருந்தாலும் எழுதிக்கொண்டிருந்தேன்...ஒரு நாள்(நேற்று) பார்த்தால் என் வளைப்பூங்காவின் வருகைப் பதிவேட்டின் எண்கள் அதிரடியாக உயர்ந்திருந்தது...வளைப்பூங்காவில் அனுபசாலிகளான பலர் பின்னூட்டங்களும் விட்டிருந்தனர்...எதார்த்தமாக நடந்தது என்று தான் எண்ணினேன்...ஆனால் இப்போது எதார்த்தமாக "மெழுகுவர்த்திகள்" பார்க்க நேர்ந்த போது இன்ப அதிர்ச்சி...என் வளைப்பூங்காவின் திடீர் பிரபலத்திற்கு காரணம் புரிந்தது...எதோ படித்தோம் ரசித்தோமென்று மட்டுமில்லாது மற்றவர்களுக்கும் அதை எத்திவைத்து
என் எழுத்தை வெளிச்சமிட்டு காட்டிய தங்களின் பெருந்தன்மையின் ஆழம் புரிந்தது...மிக்க நன்றி சகோதரி, உங்களால் இன்னும் பல புதிய நண்பர்கள் எனக்கு அறிமுகமாவதோடு ...உங்கள் நண்பர்கள் வட்டத்துள் என்னையும் இணைத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன்

pudugaithendral said...

வாங்க கீழை ராசா,

முதலில் உங்களின் எழுத்துக்கு என் பாராட்டுக்கள்.

பெருந்தனமையும் இல்லை புடலங்காயும் இல்லை. உங்கள் எழுத்தின் தாக்கத்தில் என் தூக்கம் தொலைந்தது. எனது தம்பியும் வெளிநாட்டில் வேலைப் பார்க்கிறான்.

நாங்களும் இந்தியாவை விட்டு இங்கே வந்திருக்கிறோம். அதனால் உங்கள் எழுத்தில் இருந்த வலி நான் உணர்ந்த ஒன்று.

அதனால் தான் என்னைப் பாதித்த அந்தக் கதையை சுட்டிக்கொடுத்து பதிவு போட்டேன். (உங்களிடம் அனுமதி கேக்கலை. தப்பா எடுத்துக்க மாட்டீங்கங்கற நம்பிக்கை தான்.)

நான் வலைப்பூ ஆரம்பித்து 4 மாதம் தான் ஆகிறது. இங்கு கிடைத்த நண்பர்கள் என்னை ஊக்குவித்து, எனக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தார்கள்.

நண்பர்கள் வட்டத்தில் நீங்க எப்போதும் இருக்கிறீர்கள்.