Wednesday, March 05, 2008

தொடர் விளையாட்டு

இது ஸ்கூல்ல படிச்ச பாட்டுக்கள்.நெறைய
இருந்தாலும் இது சாம்பிள் மட்டும்தான்.
இது மாதிரி ஸ்கூல்ல படிச்ச பாட்டுக்கள்
[கதைகள் இப்ப வேனாம் அடுத்த டேக் குக்கு]
எழுதி தொடருங்கள்.இதையே கொசு வர்த்தியா
நெனச்சு 'தொடர் விளையாட்டு' ஆரம்பிப்போமா'?

அப்படின்னு கேட்டு கண்மணி என்னையும்
தொடர் விளையாட்டுல கூப்பிட்டுடாங்க.

ஒரு மாண்டிசோரி டீச்சரா இருந்துகிட்டு
இதுக்கு பதிவு போடாட்டி எப்படி?

போட்டுட்டோம்ல............. :)

காட்டுப்பாக்கம் தாத்தா:

காட்டுப்பாக்கம் தாத்தாவுக்கு
காடு போல தாடியாம்,
மாடி மேலே நிக்கும் போது
தாடி மண்ணில் புரளுமாம்,

ஆந்தை இரண்டு, கோழி மைனா,
அண்டங்காக்கை, குருவிகள்
பாந்தமாக தாடியுள்ளே பதுங்கிக் கொண்டிருந்தன.

உச்சி மேலே நின்ற தாத்தா
உடல் குலுங்கத் தும்மினார்
அச்சு! அச்சு! என்ற போது
அவை அனைத்தும் பறந்தன.

நம்பர் ரைம்ஸ்:

ஒன் டூ பக்கிள் மை ஷூ
த்ரீ ஃபோர் ஷட் தி டோர்
ஃபைவ் சிக்ஸ் பிக் அப்ஸ்டிக்ஸ்
செவன் எயிட் லே தெம் ஸ்டிரைட்
நைன் டென் எ பிக் ஃப்பேட் ஹென்.

இது நான் பிள்ளைகளிடமிருந்து
கற்றுக்கொண்ட பாடல்.

அதோ பாரு காரு
காருக்குள்ள யாரு
நம்ம நாட்டு நேரு
நேரு என்னச் சொன்னாரு?
எழுதப் படிக்கச் சொன்னாரு.

இதைச் சொல்லும்போது


டெடி பியர் டெடி பியர்
ட்ர்ன் அரவுண்ட்

டெடி பியர் டெடி பியர்
டச் த கிரவுண்ட்

டெடி பியர் டெடி பியர்
பாலிஷ் யுவர் ஷூஷ்

டெடி பியர் டெடி பியர்
ஆஃப் டு ஸ்கூல்.


சரி இதைத் தொடர நான் அழைப்பது:

ஆஷிஷ் அம்ருதா

சுரேகா

நிஜமா நல்லவன்

மங்களூர் சிவா


:))))))))))

12 comments:

மங்களூர் சிவா said...

இந்த தொடர் விளையாட்டுக்கு ரூல்ஸ் ரெகுலேஷனெல்லாம் எங்க போய் படிச்சிக்கணும்???

pudugaithendral said...

கண்மணி டீச்சரின் பிளாக்கில் பாருங்க
ரெகுலேஷன்ஸ் ஏதும் இல்ல..

பாச மலர் / Paasa Malar said...

பாட்டு எல்லாம் நல்லாருக்கு..

pudugaithendral said...

வாங்க பாசமலர்,

நன்றி

நிஜமா நல்லவன் said...

ஆஹா இதென்ன வம்பா போச்சு. எனக்கு அனா ஆவன்னா கூட சரியா தெரியாது. இதுல தொடர் பதிவா? சரி முயற்சி பண்ணி பார்க்கிறேன்.

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்

சீக்கிரம் பதிவு போட்டுட்டு லிங்க் கொடுங்க.

இம்சை said...

நல்லாஇருக்கு... கொஞ்சம் பிச்சி அதான் பதிவு பக்கம் வர முடியல

pudugaithendral said...

தெரியும் இம்சை,

பொறுமையா வாங்க

கண்மணி/kanmani said...

நன்றி [புதுகை]தென்றல்.இன்னும் நிறைய தமிழ் பாடல்கள் இருந்தாத் தாருங்கள்.

தனி அழைப்பு அனுப்ப முயன்று நெட் சொதப்பலால்முடியலை.இருந்தும் உடனடியா பங்களித்ததற்கு நன்றிகள் பல.[அதேன் டீச்சர் என்பது;)]

கோபிநாத் said...

ஆகா..சூப்பரு ;)))

தாத்தா நானும் படிச்சிருக்கேன்..ஆனா இந்த மாதிரி இல்லமால் வேற மாதிரி இருந்தாக ஞாபகம்.

டெடி பியர் டெடி பியர் ரொம்ப நல்லாயிருக்குங்க ;)

pudugaithendral said...

வாங்க கண்மணி,

அம்மாவிடம் புத்தகமே வாங்கி வைக்க்ச சொல்லிவிட்டேன்.

கண்டிப்பாய தருகிறேன்.

pudugaithendral said...

வாங்க கோபிநாத்,

பெரிய தாடியுடன் தாத்தா நிற்பது போலவும், அந்த தாடிக்குள்
பறவைகள் இருப்பது போலவும்
போட்டிருந்த படத்தால் தான் இந்தப்
பாட்டு இன்னமும் ஞாபகம் இருக்கு.