அழகாக அமைந்திருக்கும் திருக்கோயில்தான்
ஸ்ரீசைலம். இங்கு உறையும் ஆண்டவர்
மல்லிகார்ஜுன சுவாமி. தாயார் ப்ரம்மரம்பா.
நந்திதேவர் மலையாக இருக்க அங்கு
அம்மையும் அப்பனும் அமர்ந்து
அருள் பாளிக்கிறார்கள்.
இது ஒரு ஜோயோதிர் லிங்க ஸ்தலம்.
ஆதிசங்கரர் இந்தக் கோயிலை தரிசித்த போதுதான்
"சிவானந்த லஹரி" எனும் ஸ்லோகத்தை
இயற்றினாராம்.
ஸ்கந்த புராணத்தில் இத்தலம் இடம்பெற்றுள்ளது.
"ஸ்ரீசைல காண்டம்". இதுதான் இந்த ஸ்தல புராணம்.
செய்வது என நிச்சயத்தினர். உலகை யார் முதலில்
சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கு முதலில்
திருமணம் என்று முடிவு செய்ய. தம்பி முருகன்
மயிலில் பறக்க, அண்ணண் ஆனை முகனோ
பெற்றோரை 7 முறை சுற்றி வந்து (பெற்றோரைச்
ஒருமுறைச் சுற்றுவது 1 முறை பூமியை
வலம் வந்ததற்குச் சமம்) விஸ்வரூபனின்
இருமகள்களான சித்தி, புத்தியை மணக்கிறார்.
திரும்பி வந்த முருகன் கோபம் கொண்டு
கிரவுங்ச மலையில் தங்குகிறார். தந்தைக்
கேட்டும் திரும்ப வராமல், வேரு இடத்திற்குச்
செல்ல முட்பட, தேவர்களின் வேண்டுதலினால்
அங்கேயே இருக்கச் சம்மதிக்கிறார்.
சிவனும், பார்வதியும் ஸ்ரீசைலத்திலேயே
தங்கி அருள் பாலிக்கிறார்கள்.
அன்னனயைப் பொளர்ணமியிலும்,
தந்தையை அமாவாசையிலும்
தரிசிக்க வருவதாக ஸ்தலபுராணம் கூறுதிறது.
இந்த ஸ்ரீசைலத்தில் "மகா சிவராத்திரி" விழா
வெகு சிறப்பாக நடைபெறும்.
எழில் கொஞ்சும் ஸ்ரீசைல அணை.
தென்னாடுடைய சிவனே போற்றி!
என்னாட்டவர்க்கும் இறைவாப் போற்றி!
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
12 comments:
ஓம் நமச்சிவாய
சிவாய நம ஓம்.
என்ன ஒரே பக்தி ரசமா இருக்கு பதிவுகள்..
வாங்க சிவா,
இன்னைக்கு முழுக்க இப்படியே சொல்லுங்க.
நல்ல புண்ணியம்.
வாங்க பாசமலர்,
பரமபதம் விளையாட்டு தெரியுமா?
"பழம்" எடுப்பதற்கு முன் ஒரே
தெய்வமங்களாக இருக்கும் அதைத்
தாண்டினால்தான் பழம்.
நானும் அதுபோல் 100ஆவது பதிவை எட்டிக்கொண்டிருக்கிறேன்.
:)
சில தகவல்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக சிவராத்திரி அனுட்டிக்கப்படும் விசேட தலங்களை இணையத்தில் தேடி எடுத்துக்கொண்டிருந்தேன். உண்மையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள தலம் பற்றிய தகவல் புதியது. தகவலுக்கு நன்றி.
இலங்கையிலிருந்தா பதிவிடுகிறீர்கள்?
ஆந்திராவுக்கும் இவங்களுக்கும் அபப்டி என்ன தான் ராசியோ.. மாசத்துக்கு 2 பதிவுல ஆந்திரா வந்துடுது. :))
ஆஹா ஒரே தல புராணமா இருக்கு. படங்கள் எல்லாம் மிக அருமை. வழக்கம் போல மங்களூர் சிவா முதல்லயே துண்டை போட்டு இடம் பிடிச்சுட்டார். ஆனந்த விகடன்ல ஆலயம் ஆயிரம் தொடர் எழுதும் காஷ்யபன் அளவுக்கு எழுத ஆரம்பிச்சுட்டீங்க. வாழ்த்துக்கள்.
வாங்க நிர்ஷான்,
ஆமாம் இலங்கையிலிருந்துதான்.
ஆனால் இன்னும் 15 நாள்தான் :)
வாங்க சஞ்சய்,
ஆந்திராவுக்கும் எனக்கும் தொடர்பு இருக்குங்க.
என் தாய்மொழி தெலுங்கு, நம்ம ஃபூயூச்சர் ஊரு அக்கட.
ஆஹா
இது நியாயமா நிஜமா நல்லவன்?
காஷ்யபன் எங்கே நானெங்கே?
இங்கேயும் சில கோயில்கள் இருக்குன்னு
காட்டத்தான் இந்தப் பதிவு.
பள்ளியில் படிக்கும் போது சுற்றுலாவிற்காக இந்தத் தலத்திற்குச் சென்றது நினைவிருக்கிறது. கோவிலுக்கு முன்புறத்தில் இருக்கும் ஒரு குளத்தில் மாணவர்கள் எல்லோரும் குளித்து கும்மாளம் இட்டதும் நன்றாக நினைவிருக்கிறது. :-)
வாங்க குமரன்,
நான் இன்னும் இந்தக் கோயிலை பார்க்கவில்லை.
பார்க்கணும்.
Post a Comment