Wednesday, March 12, 2008

பாக்யராஜ் படம் பார்க்ககூடாது!

பார்த்திபன் கனவு திரைப்படத்தில் ஒரு காட்சி.
"உனக்கு யாரோட படம் பிடிக்கும்?" என்று கணவன்
கேட்க, மனைவி தனக்கு பாக்யராஜ் படம் பிடிக்கும்
என்று கூர, தலையில் அடித்துக் கொள்வார் கணவன்.

இது என்னக் கொடுமை சரவணன்????

எங்கள் வீட்டில் பெற்றோர் சினிமா செல்லும்போது,
பாக்யராஜ் அவர்களின் திரைப்படம் என்றால்
அழைத்துச் செல்ல மாட்டார்கள். (டிக்கெட்டுக்கு
உண்டான காசை கொடுத்து உண்டியலில்
போட்டுக்கொள்ளச் சொல்லுவார்கள்.)

எங்கள் வீட்டில் மட்டுமல்லாது,முக்கால்
வாசிப்பேர் வீட்டிலும் இதுதான் நிலமை!

வளர்ந்து டீவியில் பாக்யராஜ் திரைப்படங்களைப்
பார்த்தபோது, எதற்கு இந்தப் படங்களைப்
பார்க்ககூடாது என்று தடுத்தார்கள் என்று
குழம்பித்தான் போனேன்.

என்னனப் பொறுத்தவரை பாக்யராஜ்
ஒரு சிறந்த கதாசிரியர். அவரது
ஒவ்வொரு திரைப்படமும் பெண்ணின்
மனதை சுற்றி இருக்கும்.

"சின்ன வீடு" திரைப்படம் என்னனக் கவர்ந்த
திரைப்படம். மனைவி குண்டாக இருப்பதால்,
வழி தடுமாறி சென்று கஷ்டப்பட்டு
அவளது நல்ல மனத்தை இறுதியில் புரிந்து
கொள்ளும் கணவன். மிக அருமையான
வசங்கள்.

"முந்தானன முடிச்சு"- கணவனின்
முதல் சம்சாரத்தின் குழந்தைக்காக
தன் கர்ப்ப வாயிலை அடைக்கத்
துணிந்த பெண்ணின் கதை.

"சின்னஞ்சிறுகிளியே! சித்திரப்பூவிழியே!
என்ன ஒரு அருமையானப் பாடல்!

"பவுனு பவுனுதான்" கூட நல்ல கதை.

"ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி",
'டார்லிங்.. டார்லிங்..டார்லிங்..."
"அந்த 7 நாட்கள்" (இந்தப் படம்
ஹிந்தியில் சக்கைப்போடு போட்டது.)"
"சுந்தரக் காண்டம்', "இது நம்ம ஆளு"
இப்படி எத்தனனயோ.

பாக்யராஜ் அவர்களின் திரைப்படங்கள்
தெலுங்கிலும், ஹிந்தியிலும்
படமாக்கப்பட்டிருக்கின்றன்.

ஹிந்தியில் அனில் கபூர், தெலுங்கில்
வெங்கடஷ். இவர்கள் பெரும்பாலும்
பாக்யராஜ் அவர்களின் படத்தின்
ஹிந்தி பதிப்புக்களில் நடித்திருப்பார்கள்.

பாக்யராஜ் அவர்களின் திரைப்படத்தில்
கண்டிப்பாக நல்ல கதையம்சம் இருக்கும்.
பாடல்களும் நினைவில் நிற்கும். காமெடிகளுக்கும்
குறைவிருக்காது.

தூறல் நின்னு போச்சு- திரைப்படம் என
நினைக்கிறேன். பெண்பார்க்க வருவார்
பாக்யராஜ்." மாப்பிள்ளை பெரிய படிப்பு
படிச்சிருக்காராம்! 10ஆவது 10 தடவை
படிச்சிருக்கார்" என்று ஆத்தாக்கள்
பேசுவது சரி காமெடி.

"தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
தானே துஞ்சியதோ"

"என் சோகக் கதையைக் கேளு
தாய்குலமே'

"அழகிய விழிகளில் அறுபது
கலைகளும் எழுதிய திருமகளே'

இப்படிப் பலப்பாடல்கள்....


"சொக்கத்தங்கத்தில்" ரீ எண்ட்ரி ஆன
போது மிக சந்தோஷமாக இருந்தது.

"பாரிஜாதம்" வீசிய மணம் மிக அருமை.

"தாம்பத்ய வாழ்க்கை குறித்து பாக்யராஜின்
படங்கள் மீது சில குற்றச் சாட்டுக்கள்
வீச்ப்பட்டாலும், இன்றைய திரைப்படங்களைப்
பார்க்கும்போது அவை எல்லாம் ஒன்றுமே
இல்லை.

பாக்யராஜ் தன் "தாவணிக் கனவுகள்"
திரைப்படத்தில் ஒரு காட்சி வைத்திருப்பார்.
தங்கைகளை அழைத்துக்கொண்டு
திரைப்படம் பார்க்கச் செல்வார்.
ஒரு மாதிரியான காட்சிகள் வரும்போது
பாக்கெட்டில் இருந்து சில்லறையைக்
கீழே போட்டு தங்கைகளைக் குனிந்து
எடுக்கச் சொல்வார். (அந்தப் படத்தில்
நடித்த குட்டிப்பெண்தான் ஜோடி நம்பர்
1 புகழ் டி.டியின் அக்கா.)

இப்போது திரைப்படங்களுக்குச் சென்றால்
கைநிறைய சில்லறைக் காசைக் கொண்டு
போய் கீழே போட்டு, பிள்ளைகளை
எடுக்கச்சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.

:)

29 comments:

மங்களூர் சிவா said...

பாக்யராஜ் படம் கதை நல்லா இருக்கும் டயலாக் எல்லாம் வில்லங்கமா இருக்கும்.

புதுகைத் தென்றல் said...

//டயலாக் எல்லாம் வில்லங்கமா இருக்கும்//

எல்லா டயலாக்க்கும் இல்ல சிவா.

இப்ப படங்கள் நிலமை எப்படி?

TBCD said...

பாக்யராஜின் படங்கள் திரைக்கதையின் பலத்தில் ஓடும்..

அவருடைய நடிப்பும், காமெடியும் நல்ல வொர்கவுட் ஆகும்...

ஆக்ரி ராஸ்தா படம் மூலம், இந்தியில் பெரும் புகழ் பெற்றார்..

பாக்யராஜ் நல்லா தானே இருக்கார்... :P

திடிரென்று ஒரு நினைவுக்கூறல் போட்டிங்களே..அதுனாலே கேட்டேன்..

கிருத்திகா said...

அவருடைய ஆரம்ப காலப்படங்களை விட்டு விட்டீர்களே... விடியும் வரை காத்திரு, ஒரு கை ஓசை, இன்று போய் நாளை வா, கன்னிப்பருவத்திலே.. போன்ற படங்களில் பார்த்த பாக்கியராஜ் வேறு அதில் ஒரு சிறந்த கலைஞனைக்கண்டிருப்பீர்கள். அதற்குப்பின் வந்த பாக்கியராஜின் இயக்கங்கள் வேறு. கடைசில வந்தது பாருங்க ஒரு படம் வேட்டி மடிச்சு கட்டு அபத்தத்தின் உச்சக்கட்டம்.

கீழை ராஸா said...

புதுகை அக்கா, முடிவா என்ன சொல்றீங்க பாக்யராஜ் படம் பார்க்கனுமா...கூடாதா...?

Sridhar Narayanan said...

//10ஆவது 10 தடவை
படிச்சிருக்கார்//

கிராமத்து பெரிசு1: PUC 5 வருசம் படிச்சிருக்கார்.

கிராமத்த்டு பெரிசு2: 5 வருசம்னா பெரிய படிப்புதான்வே... :-)

அருமையான படங்கள். அவரளவுக்கு திறமையான திரைக்கதை / வசனகர்த்தா யாருமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

"இன்று போய் நாளை வா" என்ற படத்தை விட்டுவிட்டீர்களே... இதுவும் ஹிந்தியில் 2-3 வருடங்கள் முன்னர் வெளிவந்தது.

"ஒரு கைதியின் டைரி" படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதினார். அதன் ஹிந்தி பதிப்பான "ஆக்ரி ராஸ்தா"வின் இயக்குநரும் அவரே.

"இது நம்ம ஆளு" என்ற படத்தை பாலகுமாரன் இயக்க, 'மேற்பார்வை' பாக்யராஜ் என்று வரும். படம் என்னவோ டிபிக்கல் பாக்யராஜ் படம்தான்.

அவரால் இன்னும் பெரிய சிகரங்களை தொட்டிருக்க முடியும் என்பது எனது கணிப்பு.

SanJai said...

பாக்கியராஜ் படம் எனக்கு ரொம்ப புடிக்கும். அவர் மாதிரி திரைக்கதை எழுத இன்னும் எவனும் பொறக்கல. அவ்ளோ இயல்பா ரசிக்கும்படியா இருக்கும்.
.... அவர் நிதி நெருக்கடியில் தவித்த போது ஒரு பேட்டியில் சொன்னது: சினிமாவில் நல்லா திரைக் கதை எழுத தெரிஞ்ச எனக்கு நிஜ வாழ்க்கையில் சரியா எழுத தெரியலைங்க....

காட்டாறு said...

//வளர்ந்து டீவியில் பாக்யராஜ் திரைப்படங்களைப்
பார்த்தபோது, எதற்கு இந்தப் படங்களைப்
பார்க்ககூடாது என்று தடுத்தார்கள் என்று
குழம்பித்தான் போனேன்.
//
அப்போதைய படங்களை கம்பேர் செய்திருப்ப்பாங்க. இப்போதைய படங்களையும் அப்போதைய பாக்யராஜ் படங்களையும் கம்பேர் செய்ய முடியாதில்லையா? அது தான் தென்றல். நீங்க தான் சொல்லிட்டீங்களே. "வளர்ந்து" பின் பார்த்தீங்கன்னு. :-)

அவர் நடத்திய பாக்யா நாளிதழ் எனக்கு மிகப் பிடிக்கும்.

நிஜமா நல்லவன் said...

///இப்போது திரைப்படங்களுக்குச் சென்றால்
கைநிறைய சில்லறைக் காசைக் கொண்டு
போய் கீழே போட்டு, பிள்ளைகளை
எடுக்கச்சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.///


'நச்'...'நச்'...'நச்'...

நிஜமா நல்லவன் said...

///இது என்னக் கொடுமை சரவணன்????///
அவர நிம்மதியா இருக்க விடுங்க.

புதுகைத் தென்றல் said...

வாங்க டி.பி.சி.டி,

பாக்யராஜ் நல்லாத்தான் இருக்காரு.

பாக்யராஜ் அவர்களினி திரைப்படம் மீதான் என் பார்வை இது.

தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

புதுகைத் தென்றல் said...

வாங்க கிருத்திகா,

சில படங்கள் சறுக்குவது இயல்பு.

மொத்தத்தில் அவர் ஒரு நல்ல கலைஞன்.

புதுகைத் தென்றல் said...

வாங்க கீழை ராசா,

பாக்யராஜ் படங்கள் பார்க்கலாம்னு
தீர்ப்பு சொல்லிட்டேன். :))))

புதுகைத் தென்றல் said...

அவரால் இன்னும் பெரிய சிகரங்களை தொட்டிருக்க முடியும் என்பது எனது கணிப்பு.

வாங்க ஸ்ரீதர் நாராயணன்,

மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

புதுகைத் தென்றல் said...

வாங்க சஞ்சய்,

பாக்கியராஜ் படம் எனக்கு ரொம்ப புடிக்கும். அவர் மாதிரி திரைக்கதை எழுத இன்னும் எவனும் பொறக்கல. அவ்ளோ இயல்பா ரசிக்கும்படியா இருக்கும்.
.... அவர் நிதி நெருக்கடியில் தவித்த போது ஒரு பேட்டியில் சொன்னது: சினிமாவில் நல்லா திரைக் கதை எழுத தெரிஞ்ச எனக்கு நிஜ வாழ்க்கையில் சரியா எழுத தெரியலைங்க//

நல்ல பின்னூட்டம்

புதுகைத் தென்றல் said...

வாங்க காட்டாறு,

அப்பல்லாம் டிவிடி, சிடி கிடையாதே.
டீவிலையும் நல்ல படங்கள் போட
தவம் கிடக்கணும்.

அதனாலதான் "வளர்ந்து" என்று சொன்னேன். இந்த வளர்ந்து நான் வளர்ந்து மட்டுமல்ல விஞ்ஞானம் வளர்ந்ததையும் சேர்த்துதான்.

இப்ப நினைச்சா சிடி கொண்டுவந்து வீட்டுல பாக்கலாமே! அந்த நிலை அப்ப கிடையாது.

புதுகைத் தென்றல் said...

வாங்க நிஜமா நல்லவன்,

நான் குசும்பனை ஒண்ணும் சொல்லலை. :))))

கல்யாண மாப்பிள்ளை அவர். இப்பத்தைக்கு நிம்மதியா இருக்கட்டும்.
:))))))))))))))))

கருப்பன்/Karuppan said...

எல்லாரும் பாக்கியராஜை பற்றி எல்லாத்தையும் சொல்லியாச்சு, இருந்தாலும் பாக்கியராஜோட பரம ரசிகன் நான் அவரு பத்தின பதிவுல பின்னூட்டம் இடாமல் போனால் நல்லா இருக்காது இல்லையா??

முருங்கை காய்க்கும், "அந்த" மேட்டருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, ஆனா நம்மாளு புண்ணியத்துல தான் தமிழ்நாட்டுல பாதிபேர் முருங்காய் பின்னாடி அலைஞ்சுகிட்டிருக்காய்ங்க...!!

பாச மலர் said...

ஒரு காலத்துல கொடி கட்டிப் பறந்தவர்தான்..பல வெற்றிப் படங்களைத் தந்தவர்..

பார்த்திபன் கனவு டைரக்டருக்குப் பிடிக்காமப் போயிருக்கு..ரசனை மாற்றம்தான்..

அதே பார்த்திபன் கனவு இயக்கியவர் பிரிவோம் சந்திப்போம்...நிறைய பேருக்குப் புடிச்சுது...என்னைப் போல சிலருக்குப் பிடிக்கலை இல்லையா..

மனதுக்கு மனம் உள்ள ரசனை மாற்றம்தான் காரணம்..

நிஜமா நல்லவன் said...

/////புதுகைத் தென்றல் said...
வாங்க நிஜமா நல்லவன்,

நான் குசும்பனை ஒண்ணும் சொல்லலை. :))))

கல்யாண மாப்பிள்ளை அவர். இப்பத்தைக்கு நிம்மதியா இருக்கட்டும்.
:))))))))))))))))//////

என்ன கொடுமை சரவணன் இது?!?!

எந்த ப்ளாக் பக்கம் போனாலும் நீங்க இப்போதைக்கு நிம்மதியா இருக்கட்டும்னே சொல்லுறாங்க.

புதுகைத் தென்றல் said...

வாங்க கருப்பன்,

முதல் வருகைக்கு நன்றி.

தங்களின் கருத்துக்கும்தான்.

புதுகைத் தென்றல் said...

வாங்க பாசமலர்,

நான் பார்த்திபன் கனவு படச் சீன் பத்தி
சொன்னது பாக்யராஜ் படம்னா அடுத்தவங்க ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும் என்பதற்காகத்தான்.

ரசனைகள் மாறுவது இயல்பு

இறக்குவானை நிர்ஷன் said...

காலம் மாற எல்லாம் மாறுமாம்... யாரோ சொன்னாங்க..!

புதுகைத் தென்றல் said...

வாங்க நிர்ஷான்,

வருகைக்கு நன்றி.

nagoreismail said...

பாக்யராஜ் அற்புதமான திரைப்பட சிற்பி ஆச்சே, இடைவேளைக்கு பிறகு வரும் காட்சிகள் "screenplay treatment"ஆகத்தான் இருக்கும்,உதாரணத்திற்கு, மௌன கீதங்களை மறக்க முடியுமா? பாக்யராஜ் தனது மனைவியின் தோழியான விதவை பெண் ஒருவரை சந்தர்ப்ப வசத்தால் கெடுத்து விட்டு -அந்த சந்தர்ப்பமும் சரிதாவால் தான் வரும்- அவரே உளறி விட, சரிதா விவாகரத்து வாங்கி விட்டு பெற்றோரையும் விட்டு விட்டு தனியாக போய் விடுவார். இடைவேளைக்கு பிறகு சரிதா வேலை செய்யும் அலுவலகத்திலேயே மேலாளராக வந்து சேர்வார், சரிதா அப்போதும் பாக்யராஜ் மேல் கோபமாக இருப்பதோடு அவமானப் படுத்தியும் விடுவார். அப்போது ஒரு அற்புதமான காட்சி உண்டு, சரிதாவின் அப்பா அலுவலகம் வருவார், சரிதா அப்பாவிடம், 'இத்தனை நாள் விட்டுட்டு இப்ப தான் பாக்கணும்னு தோணுச்சா?' என்று கேக்கும் போது, அப்பா சொல்வார், 'இப்பவும் நான் உன்னை பாக்க வரலை, என் மாப்பிள்ளைய பார்க்க வந்தேன் இத்தனை நாளா வயசான அப்பா இருக்காரா செத்துட்டாரான்னு கூட பார்க்க நீ வரலை, ஆனா நீ போன நாளைலேந்து இன்ன வரைக்கும் குடும்பத்த பாக்குறது, உன் கூட பொறந்தவங்கள கவனிக்கறது எல்லாமே என் மாப்பிள்ள தான், எனக்கு என் மக எப்பவோ செத்து போயிட்டா' என்றவாறு பேசுவார் பாருங்கள், damn it, பாக்யராஜ் சார், உங்கள் படங்களை நேசிக்கிறேன், மூக்குத்தி பூ மேலே, டாடி டாடி, மாசமோ மார்கழி மாசம் போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள் (இசை - கங்கை அமரன், டைட்டிலில் இளையராஜாவிடமிருந்து திருடுவது போல் காண்பிப்பார்கள்) - நாகூர் இஸ்மாயில்

புதுகைத் தென்றல் said...

வாங்க நாஹூர் இஸ்மாயில்,
முதல் வருகைக்கு நன்றி.

தங்களின் பின்னூட்டத்துக்கும் நன்றி.

என்னைப்போல உங்கள் அனைவருக்கும் அவரது திரைப்படம் பிடித்திருப்பது மகிழ்ச்சி.

பாக்யராஜ் இன்னமும் திரைப்படங்கள் இயக்க வேண்டும் என்பது என் கோரிக்கை.

சுரேகா.. said...

ஆமாங்க..என்னமோ தெரியலை..
சின்ன வயசுலேருந்தே பாக்யராஜ் படங்கள் விரும்பி பாப்பேன். அதில் இருக்கும் காமெடிக்காக..

நல்ல வசனங்களும் வரும்

பவுனு பவுனுதானில்...

'அவ பத்து மணிக்கு வரலைன்னாலே நான் செத்துருவேன். செத்த நாயை எத்தனி நாய் அடிச்சா என்ன? '

நல்ல பதிவு..

நாடோடி இலக்கியன் said...

பாக்யராஜ் படம்னாலே காமடியும்,திரைக்கதையும்தான் சட்டுன்னு ஞாபகத்துக்கு வரும்.அதே மாதிரி சில வசனங்களும் நன்றாக இருக்கும்.
குறிப்பா சொல்லனும்னா ராசுக்குட்டி படத்துல ஒரு காட்சி,ஒருத்தர் மரம்வெட்டி கொண்டிருப்பார்,அவரது வயதான தாய் அவரிடம் ,
"ஏன்டா சாப்பிட்டு விட்டு போயி வேல செய்யக்கூடாதா?" என்று கேட்பார்,
அதை காதில் வாங்கிகொள்ளாமல் மரத்தை வெட்டிக்கொண்டிருப்பார்,
உடனே அந்தத் தாய் வீட்டிற்குள் சென்று ஒரு கைக்குழந்தையைத் தூக்கிவந்து வெளியில் வெயிலில் கிடத்துவார்,வெயில் தாங்காமல் குழந்தை வீறிட்டு அழும்,
குழந்தையின் அழுகைக் குரல் கேட்டு மரம்வெட்டுவதை நிறுத்திவிட்டு ஓடிவந்து குழந்தையை தூக்கிகொண்ட அவர் தன் தாயிடம் கேட்பார்,
"ஏ கிழவி உனக்கு அறிவில்ல பச்சக் குழந்தய இப்படி வெயில்ல போடுற" என்பார்,
அதற்கு அந்த தாய்,
"உன் புள்ளய செத்த நேரம் வெயில்ல போட்டதுக்கே உன்னால தாங்க முடியலயே,நீ நான் பெத்த புள்ளடா இப்படி காலையிலேர்ந்து சோறு தண்ணி உங்காம வெயில்ல நின்னு வேலை செய்றியே எம்மனசு தாங்குமா? என்பார்,
அப்போதுதான் கதை,திரைக்கதை,வசனம் பாக்யராஜ் என்று திரையில் எழுத்துத் தோன்றும்.
இது மாதிரி அவர் படங்களில் நிறைய சொல்லிட்டெ பொகலாம்.

புதுகைத் தென்றல் said...

nandri nadodi ilakiyan