Friday, March 14, 2008

நன்றி! நன்றி!

நமக்கு உதவி செய்றவங்களுக்கு நன்றி சொல்ல

மறக்க கூடாது. அதனால் தானே உழவர் திருநாள்

மாதிரி பண்டிகைகள் எல்லாம் கொண்டாடறோம்.



எனது நன்றி நவிலல் தான் இந்தப் பதிவு.



இந்த ஊருக்கு வந்த உடன் வீட்டு வேலைக்கு

ஆள் வேண்டுமென தெரிந்தவர்களிடம் சொல்லி

வைத்தோம். அடுத்த நாள் காலை 7 மணிக்கு

வந்தார் ஒரு இளவயதுப் பெண்.



ஹை ஹீல்ஸ். கையில் ஹேண்ட் பேக்,

இஸ்திரி போட்ட உடையில் வந்திருந்தார்.

யாருன்னு கேக்க," I am shanthi! servant"

என்றார். ஷாக் ஆனேன்.



உள்ளே வந்தார். கைப்பையில் கொண்டு

வந்திருந்த வேறு உடைக்கு மாறினார்

பாத்திரங்களை மிக நேர்த்தியாக

கழுவி கவுத்திவிட்டு, துடைப்பத்தைக்

கையில் எடுக்கையில் துணி வேண்டும்

என்று கேட்டார். (முதலில் அறிமுகப்

படுத்திக்கொண்டதைத் தவிர ஆங்கிலம்

சரியாகத் தெரியாது. சிங்களம் மாத்திரம் தான்.)

நமக்கு சிங்களம் தெரியாது. ஒன்லி

சைகை பாஷைதான்.



துடப்பத்துடன் துணியை எடுத்துக்கொண்டு

டேபிள், சோஃபா, டீவி எல்லாம்

துடைத்தார். சுத்தம் என்றால் அப்படி ஒரு

சுத்தம். கழுவி காய வைத்த பாத்திரங்களை

எடுத்து திரும்ப அடுக்குதல் எல்லாம்

அவங்களே. வேலை முடித்த பிறகு

தலை சீவி நீட்டாக ட்ரெஸ் செய்து



அவர்கள் வேலை செய்யும் பாங்கு

எல்லாம் அருமை.அவரின் வீடு வெகு தொலைவில்

இருந்ததால் வந்து செல்ல முடியாமல்

சரோஜா அம்மா வந்தார். மிகத்திறமையாக

வேலைசெய்பவர். நம்பி வீட்டையே

விட்டுச் செல்லாம். என் நன்றிகள்

அவருக்கு. அவருக்கு உடல்நிலை

சரியில்லாமல் போக வந்தார் இந்திரா.



எனக்கு மிகவும் உடல் நிலை சரியில்லாமல்

இருந்த போது வந்ததர். வேலையில் எந்தக்

கள்ளமும் இல்லை.மிகவும் நம்பிக்கை

ஆனவர். எழும்பக் கூட முடியாம

15 நாள் கிடந்த போது ஹோட்டலில் சாப்பாடு

வேண்டாம் என்று சமைத்து,

பிள்ளைகளுக்கும் போட்டுவிட்டு போவார்.

இரவுக்கும் ஏதாவது சமைத்து வைத்துவிடுவார்.



"எனக்காக இவ்வளவு செய்கிறீர்களே"?, என்று

கேட்டதற்கு, "நீங்கள் கணக்கு பார்ப்பதில்லை.

நான் மட்டும் ஏன் கணக்கு பார்த்து செய்ய

வேண்டும்", என்று தன் நல்ல குணத்தை

காட்டியவர். குடிகாரக் கணவன், அடி இவைகளால்

தொடரமுடியாமல் வேலையை விட்டார்.



இப்போது வரை என்னுடன் இருப்பவர்

மேரி. மிக நல்ல பெண்மணி. என் கணவர்

ஊருக்கு போகும்போது, கிளாஸ்கள்

முடிந்து நான் வீடு திரும்பிய உடன்

போன் செய்து ,"பத்திரமாக வீடு

சேர்ந்தேனா? என்று கேட்பார்.

என் மகளின் பிறந்த நாளும் அவரின்

பிறந்த நாளும் ஒரே நாள். நான்

அவருக்கு டிரெஸ் வாங்கி கொடுப்பேன்.

தானும் ஒரு கிஃப்ட் வாங்கி என் மகளுக்கு

கொடுப்பார். வீட்டு வேலை செய்பவர்

என்ற நினைப்பே இருக்காது. ஒரு

நல்ல தோழியாக எல்லாம் பேசிக்கொண்டே

இருப்போம்.



காலை 9.30 மணிக்கு டீவியில் தேன் கிண்ணம்

பார்த்துக்கொண்டே தேநீர் அருந்தும் நேரம்

எங்கள் இருவருக்கும் மிகவும் பிடித்த மான

நேரம்.(மேரி அப்போதுதான் காலை உணவுடன்,

தேநீர் சாப்பிடுவார்.). இதோ நான் கிளம்ப்ப்

போகிறேன் என்று தெரிந்ததும் அவரின் கண்ணில்

நீர். தினமும் காலல 9.30 மணி என்னால் மறக்க

முடியாது. உடம்பு சரியில்லாட்டிக்கூட நான்

இங்க வர்றது கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டாவது

வேலையை பார்க்கலாம் என்கிற சுதந்திரம்

இருப்பதால்தான்." என்று நெகிழ்கிறார்.



எனக்கும் வருத்தம் தான். என்ன செய்ய?

சில சமயம் பிரிவு தவிர்க்க இயலாத ஒன்று.



ரவி- இவருக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும்

போதாது. என் ஆஸ்தான் ஆட்டோ டிரைவர்

அண்ணாத்தே. என் பிள்ளைகளை பள்ளியில்

விட்டு, கூட்டி வருவது இவர்தான்.

ஆட்டோவை ஒரு நல்ல இடத்தில்

நிப்பாட்டி விட்டு, உள்ளே போய் கைப்பிடித்து

அழைத்துவருகிறார்.

தனியாக பிள்ளைகள் போய்வரும் அளவுக்கு

பாதுகாப்பாக வண்டி ஓட்டுவார்.

கூப்பிட குரலுக்கு உடன் வந்து

உதவசெய்யும் நல்ல உள்ளம்.

நன்றியை வார்த்தையால் சொல்வது போதாது.





இவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

இவர்கள் இல்லாவிட்டால் நான் இங்கே

திண்டாடியிருக்கக்கூடும்.



அன்பு இதயங்களே! எனக்கு நீங்கள் செய்த

உதவிக்கு என் இதயம் கனிந்த நன்றி.

9 comments:

நிஜமா நல்லவன் said...

வாழ்க்கைபயணத்தின் வழி நெடுகிலும் முகம் தெரிந்தும் தெரியாமலும் பலபேர் நமக்கு உதவி செய்து கொண்டேதான் இருக்கிறார்கள். உங்கள் பதிவை படித்தபின் எனக்கு பல்வேறு சூழ்நிலைகளில் உதவியவர்கள் மனத்திரையில் நிழலாடுகிறார்கள். நாம் பலரின் உதவியை நினைத்து நெகிழும் நேரத்தில் நம்மையும் பலர் நினைத்திட வாழ்ந்திடவேண்டும்.

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,

//நம்மையும் பலர் நினைத்திட வாழ்ந்திடவேண்டும்//

மிகச் சரியாக சொன்னீர்கள்.
வருகைக்கும் பின்னூடத்திற்கும் நன்றி.

நிஜமா நல்லவன் said...

மீ த பர்ஸ்ட்?!?!?!

சிவா எங்க போனீங்க?

பாச மலர் / Paasa Malar said...

உண்மையில் நெகிழ வைக்கும் தருணங்கள்..என்ன செய்வது..

ரசிகன் said...

//வாழ்க்கைபயணத்தின் வழி நெடுகிலும் முகம் தெரிந்தும் தெரியாமலும் பலபேர் நமக்கு உதவி செய்து கொண்டேதான் இருக்கிறார்கள். உங்கள் பதிவை படித்தபின் எனக்கு பல்வேறு சூழ்நிலைகளில் உதவியவர்கள் மனத்திரையில் நிழலாடுகிறார்கள். நாம் பலரின் உதவியை நினைத்து நெகிழும் நேரத்தில் நம்மையும் பலர் நினைத்திட வாழ்ந்திடவேண்டும்.//

வழி மொழிகிறேன்:)

pudugaithendral said...

vaanga pasa maalr,

varugaikum pinnutathukum nandri

pudugaithendral said...

aaha rasigan,

vaanga vaanga.

நிஜமா நல்லவன் said...

//புதுகைத் தென்றல் said...
aaha rasigan,

vaanga vaanga.///



ரசிகன் எப்ப ஆஹா ரசிகன் ஆனார்?
ஆஹா FM -ல வேலைக்கு சேர்ந்துட்டாரா?

சுரேகா.. said...

நன்றியை மட்டும் இல்லை..அவர்களையும் பதிவுலகத்துக்கு அறிமுகப்படுத்தி..

கலக்கிட்டீங்க..!

வாழ்த்துக்கள்..

இந்தியா காத்திருக்கிறது.!