சொல்றேன்னு சொன்னேன். இதோ...
மொத்தமா பொட்டி கட்டிகிட்டு
இருக்கும்போதே, பிள்ளைங்க நடுவுல
சின்னதா ஒரு பொட்டி கட்ட வெச்சுப் புட்டாங்கள்ல..
சரின்னு கிளம்பிட்டோம்.
Desamanya Geoffrey Bawa: (1919-)
இவர் ஒரு மிகச்சிறந்த கட்டிடக் கலை வல்லுனர்.
கட்டிடத்திற்கும் உயிர் கொடுப்பவர்.
இலங்கையின் பிரசித்திப் பெற்ற
கட்டிடக்கலை வல்லுனர் இவர்.
உலகிலேயே கட்டிடக்கலைகன
"ஆகா கான்" விருது பெற்ற 3 ஆவது நபர் இவர்தான்.
இவரின் கைவண்ணத்தில் உருவானதுதான்
கீழ்காணும் ஹோட்டல்கள்.
1. பெந்தோட்ட வில் இருக்கும் "லுனுகங்கா"
2. கோடே வில் இருக்கும் பாராளுமன்றம்.
3. கந்தலாமாவில் இருக்கும் "கந்தலாமா ஹோட்டல்",
4. பெருவல வில் இருக்கும் "நெப்ட்யுன் ஹோட்டல்"
5. அஹுங்கல - Triton Hotel
6. வாதுவையில் இருக்கும் - Blue waters
7. காலி யில் இருகும் - Light house.
8. ருஹுனு பல்கலைக்கழ்கம்
இவை தவிர இந்தியாவில் "மதுரை கிளப்" ம்
இவர் கைவண்ணம் தான்.
என்ன இவரைப் பத்தி சொல்லியிருக்கேன்னு
பாக்கரீங்களா? இவர் கை வண்ண்த்தில்
உருவான ஒரு ஹோட்டல் தான் நான் போனது.
தொலை தூரப் பயணம் என்பதால்,
வழியில் சாப்பிடுக்கலாம்னு, சாப்பாடு
கட்டிஎடுத்துகிட்டு கிளம்பியாச்சு.
இளையராஜாவின் இன்னிசை மழையுடன்
தொடங்கியது பயணம். சும்மா...ஜாலியா..
பச்சைப்பட்டு கட்டிக்கொண்டு பளபளக்கும்
பூமிப் பெண்ணின் அழகை ரசிக்க இரு கண்
போதாதுன்னு ரசிசுகிட்டு, (வேணும் மட்டுக்கும்
கண்ணுல படம் பிடிச்சிகிட வேண்டியதுதான்னு
பெருமூச்சு விட்டு கிட்டு) போய்கினு இருந்தோம்.
மதியம் 1.30. பசி வைத்தக் கிள்ளுது.
அருமையான இடம் பாத்து
அயித்தான்வண்டியை நிப்பாட்டினாரு.
(பக்கத்துல ஓடுற நதியைப் பாருங்க.)
சாப்பிட்டு முடிஞ்சு திரும்ப பயணம்.
ஆஹா...சின்னதா போட ஆரம்பிச்ச
தூறல் பெரிசாகி எதுத்தாப்புல வர்ற
வண்டி தெரியல.ஆனாலும் வாகனம்
அதிகம் இல்லாததால மழையில்
ஒரு பயண ரொம்ப அருமைய இருந்துச்சு.
வேணும்னா கொஞ்சம் கஷ்டப்படனும்ல...
பயணம் தொடருது........
10 comments:
அங்கயும் மழையா???
மழையில் பயணம் தனி சுகம்.
தொடருங்கள்
அட..அதுக்குள்ள ஒரு குட்டி சுற்றுலாவா...!
ம்...சீமாட்டி! கலக்குங்க!
அக்கா எந்த ஊர்ல இது... நான் தான் புரியாம இருக்கனா... கொஞ்சம் விளக்கவும்
மறுபடியும் தொடரும் போட்டுட்டீங்களா?
ஆமாம் சிவா,
இப்ப நல்ல மழை.
வாங்க சுரேகா,
இனி இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதே!!!!!
ஆஹா, வாங்க இம்சை,
ரொம்ப நாளைக்கப்புறம்..
கேரளா மாதிரி இருக்கேன்னு பாக்கறீங்களா? இனிய இலங்கைதான்.
நண்பர் சுரேகா எங்க ஊர்காரர்.
அதனால் அவரை மாதிரியே தொடரும் போடறது பழக்கமாயிடுச்சு.....
பேஷ் பேஷ் நனனாயிருக்கு.
தனியா இலங்கைப்பயணம் எழுதாம இப்படி பிட் பிட்டா எழுதறீங்களா? நல்ல ஐடியாதான்.
Post a Comment