இதுவும் அங்கே எடுத்த புகைப்படங்கள் தான்.
நாங்கள் தங்கியிருந்த அறையின் பால்கனியில் குரங்குகளின் ஆட்டம்.
சரி கந்தலாமாவிற்கு எதற்காக 7 முறை விருது வழங்கப்பட்டது அப்படிங்கறது இந்த ஹாலைப் பாத்து தெரிஞ்சுகிட்டு டிருபீங்களே!!!
உயர்ந்த தரமான உணவு மற்றும் சிறந்த சேவைக்கான "சாகா" விருது 7 முறை தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது.
பிரெட்டில் எத்தனை வகை பாருங்கள்......
இலங்கை ஸ்பெஷல் உணவுவகைகள், பாராம்பரிய மண்பானையில் அழகாய் வைத்திருக்கிறார்கள்.
இளநீர்,விளாம்பழஜூஸ்.
வேறு எங்கும் கிடைத்திடாத வகையில் ஒவ்வொன்றும் அவ்வளவு ருசி. தரமோ தரம். வயிற்றுக்கும் ஊரு விளைவிக்காத உணவு.
சரி ஹோட்டலில் சொந்தமா யானை வெச்சிருக்காங்கன்னு சொன்னேனே...அது அடுத்த பதிவுல...
தொடரும்.................
9 comments:
திரும்ப தொடருமாஆஆஆஆஆ?
(அதுலயும் ரெண்டு , மூனு போட்டோ போட்டுட்டு திரும்ப தொடரும் போடுவீங்களான்னு நான் கேக்கலை)
சரி தொடருங்க
போட்டோ போட்டு..
சுவையா சாப்பாடைக்காட்டி
லந்து பண்றீங்க...!
தொடருமா போட்டு !
கலகலகலக்குங்க!
ம் நமக்கு தான் அங்கன எல்லாம் போய் பாக்க கொடுப்பினை இல்ல. நீங்க படமா போடுங்க. அதையாவது பார்த்துக்கிறேன். இந்த பதிவையும் நான் தான் பிங் பண்ணினேன்.
அதானே பார்த்தேன். சாப்பாடு பத்தி ஏதும் சொல்லி எங்களை பெருமூச்சு விட வைக்கலைன்னா உங்களுக்கு தூக்கமே வராதே:P
:))))))
வாங்க சிவா, நீங்க கேக்காட்டியும் அதுலையும் படங்கள்தான்.
வாங்க சுரேகா, வருகைக்கு நன்றி.
வாங்க நிஜமா நல்லவன். எல்லோருக்கும் அறியத்தருவதற்காகத்தானே இப்படி ஒரு பதிவு.
ரசிகன், இதுக்கு முன்னாடி பதிவுக்கெல்லாம் ஆஜர் ஆகாம, கரீக்கிட்டா சாப்பாடு பத்தின பதிவுக்கு வந்திட்டீங்களே அது எப்படி??? :)))))
நல்லாருக்கு
Post a Comment