Saturday, April 05, 2008

பிரிவு உபசாரமும், வரவேற்பும்!!!!!!!!!!!!!!!!!

விடாது கருப்பு!! அப்படித்தான் சொல்லனும். :))))
நான் இலங்கயையை விட்டு விட்டு வர
மனது வருத்தப்பட்ட மாதிரி
இலங்கைக்கும்ஆயிருக்கும் போல...

காலையில் 7 மணிக்கு புறப்பட வேண்டிய
விமானம்தாமதமாகி பதினொரு மணிக்கு
விமானத்தில் ஏறினோம்.
விமானம் பழுதாகி இருந்ததாகச்
சொன்னார்கள்.
(நாங்கள் விமானத்தில் உட்கார்ந்த
பிறகும் கையடக்க குறிப்பு புத்தகத்தை
வைத்துக்கொண்டு பழுது பார்த்துக்
கொண்டிருந்தது தனிக் காமெடி....)

அயித்தானுக்கு தெரிந்தவர்கள் முலமாக
பேசி Rest room ஒன்று எடுத்துக்கொண்டு
கொஞ்சம் இளைப்பாறி,
ஒருவழியாகமதியம் முன்று
மணிவாக்கில் ஹைதராபாத்தில்
தரை இறங்கியது எங்கள் விமானம்.
புத்தம்புது ஷ்ம்ஷாபத் விமான நிலையம்.
வெளியே வந்து பார்த்தப்போதுமயக்கம் வராத குறைதான்.


எங்களை வரவேற்க ஹைதராபாத்தே
திரண்டு வந்தது மாதிரி மக்கள் வெள்ளம்.
ஒண்ணுமில்லே புது விமான நிலையத்தைப்
பார்க்க வந்த ஜனத்திரள் தான் அது.
அக்கம் பக்கத்து உஉர்காரர்கள் எல்லாம்
சோறு கட்டி எடுத்துக்கொண்டு,
வண்டிகளில் வந்து விமான நிலையத்தை பார்த்து
கொண்டிருந்தனர்.

சாவி அவர்கள் தனது "வாஷிங்கடனில் திருமணம்"
என்ற நாவலில் அப்பளம் தயாரிப்பதை
அமெரிக்க மக்கள் வாரதிமேல்
வாரதியாக கவிழ்ந்து கொண்டு
பார்ப்பதாக சொல்லியிருப்பார் .
விமான நிலையத்தில் மக்களை

பார்த்தபோது
அது நினைவுக்கு வந்தது.

தினம் 1 / 1.50 லட்சம் மக்கள் வந்து செல்கின்றனராம்.
அவர்களை கட்டுப்படுத்த முடியாமல்போலிஸ்
தவிக்கிறார்கள். ( நல்லவேளை இப்போது
மக்களின் வருகை தடை செய்யப்பட்டு
விட்டதாம்.) மெயின் ரோட்டிலிருந்து
நான்கு கிலோ மீட்டர் நடந்துவந்து
மக்கள் விமான நிலையத்தை
பார்த்ததை அதிசயமாக பார்த்தேன் நான்.

என்னக் கொடுமை இது சரவணன்?

14 comments:

நிஜமா நல்லவன் said...

நல்வரவு. வாழ்த்துக்கள்.

மங்களூர் சிவா said...

/
மெயின் ரோட்டிலிருந்து
நான்கு கிலோ மீட்டர் நடந்துவந்து
மக்கள் விமான நிலையத்தை
பார்த்ததை அதிசயமாக பார்த்தேன் நான்.
/

ஆந்திரால மக்கள் இன்னுமா இப்பிடி இருக்காய்ங்க???

என்ன கொடுமை ஆஷிஷ் இது!!!!

மங்களூர் சிவா said...

வெல்கம் டு இந்தியா!!

நிஜமா நல்லவன் said...

ஹை நாந்தான் பர்ஸ்ட்டா??

கானா பிரபா said...

//உஉர்காரர்கள் //

யாருங்க இது?

ரசிகன் said...

//தினம் 1 / 1.50 லட்சம் மக்கள் வந்து செல்கின்றனராம்.
அவர்களை கட்டுப்படுத்த முடியாமல்போலிஸ்
தவிக்கிறார்கள். ( நல்லவேளை இப்போது
மக்களின் வருகை தடை செய்யப்பட்டு
விட்டதாம்.) மெயின் ரோட்டிலிருந்து
நான்கு கிலோ மீட்டர் நடந்துவந்து
மக்கள் விமான நிலையத்தை
பார்த்ததை அதிசயமாக பார்த்தேன் நான்.//

ஆச்சர்யமா இருக்கு:)

ரசிகன் said...

ஆனா ஒரு டவுட்டு ,அந்த காலத்தில் குளிக்கும் பழக்கமே இல்லாத வெள்ளைக்கார துரை ஒருத்தன். நம்ம நாட்டுல மக்கள் ஆற்றில் குளிப்பதை பார்த்து ,இந்திய மக்கள் தினமும் பசியோடு நீர்கிழங்குகளை தேடி அலைகிறார்கள்.என்றும்

மக்கள் கல்லில் துணியை அடித்து துவைத்ததை பார்த்து ,மூட்டாள் மக்கள்.ஈரத்துணியால் பாறையை உடைக்க முயற்ச்சி செய்கிறார்கள்ன்னு எழுய குறிப்பு வரலாற்றில் உள்ளது,

அதுபோல,பொழுதுபோக்குக்கு வேற இடம் இல்லாததால,பார்க் போல அமைஞ்சிருக்குற விமான நிலைய அருகில ,சிற்றுலா வர்ரவங்களை நாம அம்புட்டு முட்டாளா நெனைச்சிடப்டாதில்லையா?

சுரேகா.. said...

வாங்க வாங்க...

மே மாசம் லீவுக்கு பிறந்த வீட்டுப்பக்கம் வாங்க!

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,
நீங்கதான் பர்ச்டு...

pudugaithendral said...

கொடுமைதான் சிவா,
கும்ப மேளா மாதிரி வந்திருந்த மக்களை பாத்து பயந்துட்டேன்.

pudugaithendral said...

வாங்க பிரபா,
ஊர்காரங்கன்னு அடிக்கபோனதுதான் அப்படி வந்தாச்சு பிரபா.

pudugaithendral said...

வாங்க ரசிகன்,

ஆச்சரியம்தான்.

பாச மலர் / Paasa Malar said...

வாழ்த்துகள்

pudugaithendral said...

வாங்க பாசமலர்,

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.