Monday, May 12, 2008

பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி - 4

நம்மளை டிரில் வாங்கும் "எம்டனை" திட்டவும் வீட்டில் ஆளு இருக்காங்கங்கற
நினைப்பே சந்தோஷமா இருக்கும். :)

கல்யாணமாகி,பிள்ளை பெத்தாலும் அம்மாவுக்கு மகன் தானே!!!

"சனிக்கிழமை எண்ணைய் தேச்சுக்குளிடான்னா கேக்கறதே இல்லை"
அப்படின்னு பாட்டி திட்ட, "இந்த எண்ணைய் தேச்சு குளிக்கிற
வேலையெல்லாம் வேணாம். தேச்சுகுளிச்சாத்தான் எண்ணைய்
உடம்புல போகுமா? அப்பளமா, பக்கோடாவா பொறிச்சு
கொடு, அப்ப கண்டிப்பா உள்ள போகும்", அப்படின்னு
அப்பா எகிற தமாஷா இருக்கும்.

உடனே பாட்டி வைத்தியனுக்கு கொடுக்கறதை வாணிகனுக்கு கொடுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. இப்ப நம்ம பேச்சை கேக்கறது
யாருன்னு", அங்கலாய்ப்பாங்க.

அது என்னது இது புதுபழமொழின்னு கேக்க பாட்டி சொன்னது.
சிந்திக்க கூடியதா இருந்தது.

உடம்பை குளிர்ச்சி ஆக்க எண்ணைய் குளியல் மிக அவசியமாம்.
இப்ப மருத்துவர்கள் எண்ணைய் குளியல் அறவே கூடாதுன்னு
சொல்றாங்க. இப்ப அந்தப் பழக்கமே இல்லாம போயிடுச்சு.

என் உறவினர் ஒருவர், சனிக்கிழமைகளில் நல்ல எண்ணைய்
தேச்சு ஊறிக்குளிச்சு, நல்ல பூண்டு, மிளகு சீரகம் நிறைய
போட்ட சூப் மாத்திரம் சோத்துல கலந்து சாப்பிட்டு, வெளிக்கதவை
வெளிப்புறமா பூட்டிகிட்டு தூங்கி ரெஸ்ட் எடுப்பார்.

வெளிப்பக்கமா ஏன் பூட்டிக்கணும்னு கேக்கறீங்களா?
அப்பத்தானா வீட்டுக்கு வர்றவங்க கதவு பூட்டிருக்குன்னு
கதவை தட்டாம போயிடுவாங்க. இவரும் நல்லா
ரெஸ்ட் எடுக்கலாம்.

தலைவலின்னா பால்மிளகு அரைச்சுபோடுறது,
வாரத்துக்கு ஒருமுறை வேப்பிலை அரைச்சுக்கொடுக்கிறது,
(வேப்பிலையை ஓமம் வெச்சு அரைச்சு, கல் உப்பை
தொட்டுகிட்டு சாப்பிடணும். வயத்துல பூச்சி அண்டாது
அப்படின்னு சொல்ல தம்பி "நானும் தான் அண்ட
மாட்டேன்னு" தப்பிக்க பாப்பான். வேப்பிலை
கசப்பு அப்படி இல்ல.)

மஞ்சள் காமாலைக்கு "கீழாநெல்லி" சாறு
வாய்ப்புண்ணுக்கு "மணத்தக்காளி" சாறு,
தடுமல், இருமலுக்கு "அதிமதுரம்" கசாயம்,
உடம்பு வலியோட கூடின ஜுரத்துக்கு
"மிளகு கசாயம்". இப்படி நம்ம வீட்டுல
இல்லாத மருந்தா!!

இப்பல்லாம் "அஞ்சரப்பெட்டி"ன்னா என்னன்னு?
கேப்பாக!!

இந்த மாதிரி சாமான்களை விக்கிறவங்களை வாணிகன்னு
சொல்வாங்க. அவருக்கு காசுகொடுத்து வாங்கி
நம்மை உடம்பை பாதுகாக்கறத விட்டுட்டு

வைத்தியன் அதாவது டாக்டருக்கு கொடுப்பானேன்.
அவங்க கொடுக்கற மருந்துல வர்ற "சைட்எஃபக்ட்"
ஜாஸ்தியாச்சே, அப்படிங்கறது பாட்டியோட வாதம்.

அதென்னவோ சரிதான்னு படுது.

(நம்ம நாட்டுமருந்தைப் பத்தி ஒரு தொடர்பதிவு
யாராவது போட்டா நல்லது)

சரி இப்பதைக்கு தொடரும் போட்டுக்கறேன்......

17 comments:

துளசி கோபால் said...

ஊரிக்குளிச்சு = ஊறிக்குளிச்சு

சாரு = சாறு

இதுவும் பெருமாள் சொல்றதுதான்:-))))

pudugaithendral said...

தலைப்பை நியாயப் படுத்திட்டீங்க
துளசி அக்கா.

தவறை திருத்திவிட்டேன்.

pudugaithendral said...

அது ஒண்ணும் இல்ல,

தொண்டை சரியில்லைன்னு இப்பத்தான்
"சாரு மம்மு" சாப்பிட்டு விட்டு வந்தேன். அதே ஞாபகத்தில் சாறு - சாரு ஆகிவிட்டது :)

மெளலி (மதுரையம்பதி) said...

யக்கா, எல்லாம் நல்லாத்தான் இருக்கு, சனி-ஞாயிறு-ல தான் மத்த நாள் எல்லாம் விட ரொம்ப பிஸியாகிடுது, நீங்க என்னடான்னா எண்ணை, ஊறல் அது இதுன்னுட்டு :)

pudugaithendral said...

வாங்க மதுரையம்பதி,

நம்ம 365 நாளும்தான் பிஸி. அதுக்கு என்ன செய்யறது :)

pudugaithendral said...

நாள் முழுக்க ஊறாட்டிப்போனாலும்

30 நிமிடமாவது ஊறி குளிச்சாப் போதும்.

நிஜமா நல்லவன் said...

எங்க தாத்தா ஒரு சித்த மருத்துவர் மாதிரி. ஊருல உள்ள வாய்ல பேரு நுழையாத செடி எல்லாம் கொண்டு வந்து காயவச்சி பொடி பண்ணி சாப்பிட சொல்லுவார். தினமும் காலைல வேப்பிலைய பறிச்சி உரல்ல இடிச்சி ஆளுக்கு ஒரு டம்ளர் சாறு வெறும் வயித்துல குடிக்க சொல்லுவாரு. குடிக்கலைன்னா அடி பின்னிடுவார். அப்ப கசந்தாலும் இப்போ அதோட அருமை புரியுது.

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்

அப்ப அவங்க செஞ்சது இப்பத்தான் நமக்குத்தெரியுது.

மங்களூர் சிவா said...

ம் அருமையான தொடர்.

நிறைய நல்ல விசயங்கள் தெரிஞ்சிக்க முடியுது. தொடர்ந்து எழுதுங்க.

Anonymous said...

எனக்கெல்லாம் எண்ணெய் தேய்ச்சுக்குளிச்சா உடனே சளி பிடிக்கும். அதனால நாம குளிச்சாலே பெரிய விஷயம் வெறுமனே குளிக்கறது மட்டும் தான். எண்ணெய்க்குளியல் இல்லை

நெல்லை கண்ணன் said...

அடேயப்பா..இவ்வளவு வைத்தியத்தை கையில வச்சுக்கிட்டு..? நீங்களே தொடர்பதிவு போட்டா நல்லா இருக்குமே!

உங்க தம்பிக்கு குசும்பு உங்க அப்பாக்கிட்டேருந்துதான் வந்திருக்கு! :)

சுரேகா.. said...

அட..இவ்வளவு வைத்தியம் சொல்றீங்க! நீங்களே தொடர் எழுதலாமே!

ஆனாலும், உங்க அப்பாவுக்கும், தம்பிக்கும் குசும்பு ஜாஸ்திதான்.!

:)

http://nejamanallavan.blogspot.com/2008/05/blog-post_02.html இதப்பாருங்க..!
ஆச்சர்யம் காத்திருக்கு!

வாழ்த்துக்கள்!

pudugaithendral said...

வாங்க சிவா,

தொடர்ந்து எழுத ரொம்ப விடயங்கள் தேடி அலசிக்கிட்டு இருக்கேன்.

pudugaithendral said...

வாங்க சின்ன் அம்மிணி,

நானும் அதே கேஸ்தான். ஆனா தலை குளிக்குமுன் 30 நிமிடம் எண்ணைய் தடவி ஊறுவேன். அம்புட்டுதான்.

pudugaithendral said...

வாங்க நெல்லைக்கண்ணன்,

எனக்கு தெரிஞ்சது கொஞ்சம் தான்.

நம் நாட்டு மருத்துவம் அள்ளக் அள்ளக் குறையாத சுரங்கமாச்சே!!!

pudugaithendral said...

வாங்க சுரேகா,

அது பழைய நியூஸ் ஆச்சே!!

karu said...

பால்மிளகு ஆங்கிலயெர்..?