பெருக்குறது ஒரு குத்தமா? அப்படின்னு எங்க பாட்டியைக் கேள்வி
கேட்கணும்னு நினைக்கிற மாதிரி இப்ப பெருக்காத. அப்ப பெருக்காதன்னு
சொல்லி சாவடிப்பாங்க.
ஏன் பாட்டி இப்படி படுத்துற? எனக்கு முடிஞ்ச போது பெருக்கறேனேன்னு
கேட்டா," நாம சொன்னதை எங்க கேக்கறாங்க? இந்த காலத்து பிள்ளைங்களே
இப்படிதான்ன்னு", புலம்புவாங்க.
பொழுது போகாத ஒருநாளில்," சரி. உன் பிரச்சினைதான் என்ன?
எப்ப பெருக்கணும்? எப்ப பெருக்கக்கூடாதுன்னு?" கேட்டதுக்கு
கிடைச்ச பதிலும் நியாயமா இருந்துச்சு.
எப்பப்ப பெருக்கணும், எப்பப்ப பெருக்கக்கூடாது? ஏன்?
1. ஆக்கி வெச்சு பெருக்கினா ஐசுவர்யம். தேச்சு வெச்சு
பெருக்கினா தரித்திரம்.
இதுக்கு என்ன அர்த்தம்னா? சமையல் செய்து முடித்துவிட்டு
சாப்பிடுமுன் அந்த இடத்தை பெருக்குவதனால் சுத்தமான
இடத்தில் சாப்பிடுகிறோமாம். அதனால் வைத்தியருக்கு
கொட்டி அழாமல் ஆரோக்கியமாக இருப்பது ஐச்வர்யத்தை
சேர்க்குமாம். சமைத்த இடத்தை உடன் சுத்தம் செய்வது
சுகாதாரமானது.
பாத்திரங்களை துலக்கி வைத்தபின் பெருக்குவதனால்,
(அந்தக் காலத்தில் பாத்திரக் கூடையும் கிடையாது,
சமையல் மேடையும் கிடையாது. கழுவப் பட்ட
பாத்திரங்கள் கீழே கவுத்துவாங்க.) பெருக்கும்போது
தூசிகள் ஈரமான பாத்திரத்தில் போய் ஒட்டிக்கொண்டு,
பார்க்காமல் நாம் அந்த பாத்திரத்தை பாவிக்க்
ரோகம் வரும்.
கரெக்டு தான்.
2. சாயந்திரம் விளக்கு வைத்தப் பிறகு பெருக்கக்கூடாது.
இப்ப மாதிரி கரண்ட், லைட்டு அப்ப ஏது.
லாந்தர் விளக்குதானே! போதுமான வெளிச்சம்
இல்லாத அந்தி நேரத்தில் பெருக்கி குப்பையைக்
கொட்டினா அதில் நமக்குத் தெரியாம தேவையான
பொரூளோ! முக்கியாமானதோ போய்விடும்.
அதனால அப்படி சொல்லியிருக்காங்க.
அதுவும் சரிதான்.( கைதவறி விழுந்த காது தோடு
திருகாணி அடுத்த நாள் காலையில் பெருக்கும்போது
நாற்காலியின் அடியில்ருந்து கிடைக்குதே! )
சரிதான். இப்ப தொடரும் போட்டுகிட்டு
மீண்டும் சந்திக்கிறேன்.
20 comments:
நீங்க சொல்லுறது எல்லாம் சரி தான். எங்க பாட்டி கூட இப்படி தான் சொல்லுவாங்க.
இப்பல்லாம் வேக்குவம் க்ளீனர்லதான் புடிக்கிறாங்க!!
பாட்டி நல்லா சொல்லியிருக்காங்க!
நல்ல பாட்டி.
/
சரிதான். இப்ப தொடரும் போட்டுகிட்டு
மீண்டும் சந்திக்கிறேன்.
/
இப்பிடி தொடரும் போடறதுக்கு முன்னாடி 10 லைனாவது எழுதனும் என் கவிதையவிட சின்ன போஸ்ட் போடறீங்களே எக்கா????
வாங்க நிஜமா நல்லவன்,
பாட்டி சொல்லைத் தட்டாதே பாட்டுதான்
ஞாபகத்துக்கு வருது.
//இப்பல்லாம் வேக்குவம் க்ளீனர்லதான் புடிக்கிறாங்க!!//
சிரிப்புதான் வருது. வேக்குவம் க்ளீனர் மேலையே தூசி இருக்குற வீடுகளையும் பாத்திருக்கிறேன்.
நமக்கு எப்பவும் துடைப்பம் தான்.
//பாட்டி நல்லா சொல்லியிருக்காங்க!
நல்ல பாட்டி.//
ஆமாம் பல நல்ல விடயங்கள் அவங்க கிட்டேர்ந்துதான் கத்துக்கிட்டேன்.
பாட்டி இப்ப இல்ல. 2 வருடங்களாச்சு. அவங்க நினைவுகளை அசைப் போட்டுக்குவேன். :(
இப்பிடி தொடரும் போடறதுக்கு முன்னாடி 10 லைனாவது எழுதனும் என் கவிதையவிட சின்ன போஸ்ட் போடறீங்களே//
ஐயோ சிவா,
என்னாச்சு. எண்ணிக்கை கூட மறந்து போன நிலையின் காரண்ம் தான் என்னவோ!!!!! :)))
பாட்டி சொல்லைத் தட்டாதே கலா
அப்ப பாட்டி சொன்னதுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம்.
இப்ப அந்தக் காரணங்களெல்லாம் இல்லையே அதனால் இரவில் பெருக்கலாம் தானே?
அப்ப பாட்டி சொன்னதுக்கு பல ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். இப்பல்லாம் அந்தக் காரணங்கள் இல்லையே அதனால் இரவில் பெருக்கலாம்தானே?
எதையெடுத்தாலும் இப்படி குதர்க்கமாவே பேசுறேன்னு நினைக்க வேண்டாம்.
இப்படியும் கருத்துக்கள் கூறத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால்தான்.
நான் பிளாக்கில் எழுத ஆரம்பித்ததே இப்படிப்பட்ட முரண் சிந்தனைகளுக்காகத்தான்.
pls visit my blog
http://manthodumanathai.blogspot.co
m/2008/03/blog-post_7590.html
படித்துவிட்டு கருத்துக்கள் சொல்லுங்கள்.
வாங்க சீனா சார்,
பாட்டிசொல்லை பலவிதங்களில் ஞாபகம் வைத்து பின் பற்றுகிறேன்.
வருகைக்கு நன்றி.
எதையெடுத்தாலும் இப்படி குதர்க்கமாவே பேசுறேன்னு நினைக்க வேண்டாம்.
இப்படியும் கருத்துக்கள் கூறத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால்தான்.
நான் பிளாக்கில் எழுத ஆரம்பித்ததே இப்படிப்பட்ட முரண் சிந்தனைகளுக்காகத்தான்//
வாங்க புகழன்,
வாதம் என்று இருந்தால் பிரதிவாதம் என்று ஒன்று இருந்தால் தான் சுவாரசியம். அனைத்து கோணங்களிலுரிந்தும் நாம் அலசி பார்த்து கருத்துக்களை தெரிந்து கொள்ளலாம்.
உங்க பிளாக்கையும் வந்து பார்க்கிறேன்.
நல்லதொரு பதிவு தென்றல். பாட்டி சொன்னது இன்னொன்று வாசலில் நிற்காதே. வாசல்படியில் உட்காராதே. இதுக்கும் பொருள் என்னன்னு என் பாட்டியைக் கேட்க விட்டுப் போச்சு.:)
புதுக்கோட்டையா நீங்க. நானும் புதுக்குடித்தனம் அறந்தாங்கி ரோடு, மார்த்தாண்டபுரத்தில தான் ஆரம்பித்தேன்.
வாங்க வல்லிசிம்ஹன்,
நான் புதுகைதான். உங்க லைஃப் அங்கதான் ஆரம்பித்தது என்பது சந்தோஷம்.
The age when people like your grandma lived, is long past.
All those dos and donts were always with reasons.
Now, the same dos and donts are not good to practise. In many cases, they may even spell inconvenience; or just plain superstitions, as for e.g, the sweeping you have taken up for examination here.
People believe, a belief that has been handed down to them from the earlier generations, that the housewife should not sweep the house immediately after her husband leaves the home for office or his workplace. He wont return home safe and sound, will he? Or, it is like giving him up for ever, isnt?
Plain superstitition! What else?
Karikkulam
Plain superstitition! //
Thanks for your comment.
every body has their own views.
It may differ. That does't matter.
But one thing i would like to clear here is I am not saying that what ever i have said here is correct and i am not asking anybody to support my views.
As you see from differ point of view, i too.
Any way thank you for your comments.
I wrote in English only because I am yet to know Tamil typing. From Tamil, you have moved to English. I can understand Tamil. I would have liked to see a Tamil reply.
You are 100 per cent correct: neither you nor your readers are trying to force their views on one another.
I had referred to the act of sweeping the house by the housewife before her husband leaves for office. I thought you would say something on it, like the reasons therefor; or, is it a mere superstition?
Be assured Sir, When it comes to our loved ones (parents, sons, daughters, siblings etc.), all of us will go to any length, never mind whether it is a superstition or a reasonable act.
If I dont know the reasons for the wife sweeping the house in time, I will still defend her on the grounds of her love for her husband and going any length for him. However, after I have defended thus, I will leave it unsaid, it is just superstition! There I am, with a malicious glee!
You have said nothing on it! ???
If I dont know the reasons for the wife sweeping the house in time, I will still defend her on the grounds of her love for her husband and going any length for him. However, after I have defended thus, I will leave it unsaid, it is just superstition! There I am, with a malicious glee!
You have said nothing on it! ???//
இதைப்பத்தி நான் சொல்லாமல் இருந்ததற்கான காரணம் எனக்குத்தெரியாது.
மத்தவங்களைக் கேட்ட போது கிடைத்த விடயம் என் மனதுக்கு பெரிதாக ஒப்பவில்லை.
நீங்கள் ரொம்ப விரும்பி கேட்டதனால் கிடைத்த விட்யத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
இறந்த வீட்டில் தான் பூத உடலை எடுத்துச் சென்ற உடன் அந்த வீட்டை சுத்தப் படுத்துவார்களாம்.
அதனால் சாதாரண நாட்களில் யாரும் கிளம்பிய உடன், பெருக்கவோ, குளிக்கவோ கூடாது என்கிறார்களாம்.
(இதுக்கு என்ன சொல்லப் போறீங்களோ :)))) )
Very good, Sir, you have managed a reply although cleverly soft-pedelling it, I mean, not committing yourself to it.
No matter.
Even if you don't, I do, using your own words on other donts. (or taboos, which is the correct word for traditional don'ts)
You have given reasons for other taboos which you have been told by the elders in your family like your amma, paatti, etc.
Such reasons are scientific; and that was why, you are proudly sharing them with your captive audience here. Further, the taboos became attractive to you; and you still practice some of them, like using the ladle properly in handling different food items.
In the present case of sweeping the floor by the housewife, cited by me, you are non-committal. Because, the reason is plain superstition. Am I correct?
But still, my dear, I feel, there must be something substantial behind this act too.
Go on & find it out; and, as and when you do succeed, share it in this same thread.
Till then, good bye!
வாங்க கரிக்குளம்,
என் மனதுக்கு ஒப்பினதை மட்டும்தான் பகிர்ந்துகொள்வேன். பதிவுகளும் என்னை பாதித்தது அல்லது நான் விரும்பியது.
பொதுவாகவே நான் நல்லதை மட்டுமே பார்ப்பேன். பெரியவர்கள் சொல்லிய கருத்துக்கள் அனைத்திலும் எனக்கு உடன் பாடு இல்லை. நீங்கள் கூறியது போல் அவர்களின் கருத்தில் எனக்கு பிடிததை, நான் நடைமுறைப்படுத்துவதை மட்டும் எழுதிகிறேன்.
கரிக்குளம் அவர்களே இந்த லிங்கில்
உங்களுக்காக ஒரு பதிவே போட்டிருகேன் பாருங்கள்.
http://pudugaithendral.blogspot.com/2008/05/blog-post_31.html//
Post a Comment