Tuesday, May 06, 2008

பெரியவங்க சொன்னா, பெருமாள் சொன்னா மாதிரி.

பள்ளியில் படிக்கும்போது தமிழ் வகுப்பு எப்போதும் சுவாரசியமா இருக்கும்.
"தமிழ் அம்மாக்கள் " வகுப்பை கலகலப்பா வச்சிருபாங்க. இலக்கணத்திற்கு இடையே "பொன்னியின் செல்வன் " கதை சொல்வாங்க. பல பயனுள்ள குறிப்புகளை சொல்லுவாங்க, ஒரு தோழியா, அம்மாவா அவங்களுடைய பங்களிப்பு மறக்க முடியாத ஒன்று.

அப்படித்தான் அன்றும் என் தமிழ் ஆசிரியர் வகுப்பில் இடையில் ஒரு கேள்வி
கேட்டார். "பிராமண வீடுகளில் தண்ணீர் கேட்டால் குடித்த பிறகு அந்த கிளாசை கழுவ போடுவார்கள், அல்லது நீர் தெளித்து எடுப்பார்கள். இது சரியா?"
ஆசிரியை இப்படி கேட்டதும் தான் தாமதம் எல்லோரும் பொங்கி தீர்த்தோம்.
தீண்டாமையின் உச்சகட்டம் அது இது என்று குரல் கொடுத்தோம்.

மவுனப் புன்னகையுடன் கேட்டுகொண்டிருந்த ஆசிரியர்,"நான் பிராமண வகுப்பை சாரதவள், ஆனால், என் வீட்டில் யார் தண்ணீர் அருந்தினாலும் அந்த கிளாஸ் கழுவப்போகும். கையால் தொட மாட்டேன் !". ஆச்சரியமாக பார்த்த எங்களை,
"உண்மையில் அப்படித்தான் செய்ய வேண்டும்' என்று சொன்னா போது
வியப்போடு அவர் சொல்ல போகும் காரணத்திற்காக காத்திருந்தோம்.

தமிழஅம்மாவும் " நண்பர் சுரேகா "
மாதிரி தொடரும் போட்டு விட்டு போய்விட்டார். :)))))
அடுத்த நாள் வரை காத்திருந்தோம். முதல் பீரியடே தமிழ்.
பாடம் எடுக்க விடவில்லை அவரை. நேற்றைய வாதம் தொடர்ந்தது.

சிரித்த முகத்துடன் அப்படிச் செய்வது தான் சாலச் சிறந்தது.
அவ்வாறு செய்வது சுகாதாரம் என்ர போது புரியவில்லை.
நம் கைகளில் கண்ணுக்கு தெரியாத் பலவகை கிருமிகள்
இருக்கின்றன. அவை தோற்றும் என்பதனால் அவ்வாறு செய்வது
சரியென்று எனக்கு பட்டது. என் வீட்டிலும் நடைமுறையில் இருக்கிறது
என்றார்.

இப்படி நம் நன்மைகாக சொல்லப்பட்ட பல நல்ல விடயங்கள்,
சொல்லப்பட்ட விதத்தில் நாம் தவறாக புரிந்து கொண்டு
சில சமயங்களில் அவதிக்கு ஆளாகிறோம்.
அப்படி சில பெரியவர்கள் சொன்னா கருத்துக்களும்,
அவைகளின் உண்மையான அர்த்தங்களையும் இனி
பார்க்கபோகிறோம்.

தொடரும்......

19 comments:

TBCD said...

சரி, அப்ப பிராமனர்களுக்குள் கொடுத்து வாங்கினால், செய்வதில்லையே..

அவர்களுக்குள் இருக்கும் வியாதி ஒட்டினால் பரவாயில்லையாமா..


புதசெவி

புகழன் said...

உங்கள் பதிவைப் பார்வையிடுவது இதுவே முதல் முறை
ரெம்பவே யதார்த்தமான நடையில் பதிவிடுகின்றீர்கள். நன்றி
//
"பிராமண வீடுகளில் தண்ணீர் கேட்டால் குடித்த பிறகு அந்த கிளாசை கழுவ போடுவார்கள், அல்லது நீர் தெளித்து எடுப்பார்கள். இது சரியா?"
//
இது உங்கள் தமிழாசிரியையின் கருத்துப்படி சரியா இருக்கலாம். ஆனால் பிராமணர்கள் செய்வது சுத்தத்திற்காகவோ சுகாதாரத்திற்காகவோ அல்ல.
தீண்டாமையின் உச்சகட்டத்தினாலேதான்.
யார் குடித்தாலும் கிளாசைக் கழுவி அல்லது தண்ணீர் தெளித்து எடுப்பார்களா?
(தங்கள் சாதியினர் குடித்தாலும்)? இல்லையே!
தன் அல்லாத பிற சாதியினர் தண்ணீர் கேட்டால் மட்டும்தான் குடித்த பின் கிளாசைக் கழுவப் போடுவார்கள்.
எனவே
பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்னா மாதிரின்னு சொல்லி அந்தப் பெருமாள் பிராமணியத்தை நுழைக்காதீர்கள்!

புதுகைத் தென்றல் said...

ஆஹா வாங்க,

பிராமனர்களுக்குள் மட்டுமல்ல நாம் நமக்குள்ளும் கொடுத்து கையில் வாங்குவது கிருமி தோற்றும் என்பதே என் ஆசிரியரின் கருத்து.

புதுகைத் தென்றல் said...

முதல் வருகைக்கு நன்றி புகழான்,
பிராமணியாத்தை மட்டுமல்ல எந்த ஈயத்தையும் நான் புகுத்தவில்லை.
படிப்பவர்கள் பொருள் தவறாக புரிந்து கொள்ளலாம். அதற்கு நான் பொறுப்பல்ல.
பெருமாள் சொன்னா மாதிரி என்பது சாதரனாமாக வழக்கில் இருக்கும் ஒரு சொலவடை. அதைத்தவிர என் பதிவின் தலைப்புக்கும் பெருமாளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லீங்கோ!!!!!!!!! :)))))))

துளசி கோபால் said...

நேக்கு என்ன சொல்றதுன்னே தெரிலை:-)

புதுகைத் தென்றல் said...

வாங்க துளசி அக்கா,
அடிக்கடி என் பிளாக் பக்கம் வர்றீங்க. அதுக்கே ஸ்பெஷல் நன்றி. :)

கோபிநாத் said...

\\அப்படி சில பெரியவர்கள் சொன்னா கருத்துக்களும்,
அவைகளின் உண்மையான அர்த்தங்களையும் இனி
பார்க்கபோகிறோம்.\\

வெயிட்டிங்...;)

நிஜமா நல்லவன் said...

///" நண்பர் சுரேகா "
மாதிரி தொடரும் போட்டு விட்டு போய்விட்டார். :)))))///சுரேகா இனிமேலாவது தொடரும் போடாம எழுதுங்க:)

புதுகைத் தென்றல் said...

வாங்க கோபிநாத்,

வருகைக்கு நன்றி. அதிகம் வெயிட்ட வேண்டாம். உடன் பதிவு போட்டு விடுகிறேன்.

புதுகைத் தென்றல் said...

வாங்க நிஜமா நல்லவன்,
வருகைக்கு நன்றி.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

.

மங்களூர் சிவா said...

ஏங்க இந்தமாதிரி பதிவெல்லாம் எழுதறீங்க!

நீங்க சொன்ன விசயம் வேற என்றாலும் தமிழ்மணத்துல ஒரு க்ரூப்பே திராவிடம் பிராமணிய எதிர்ப்பு, வெங்காயம்னு சுத்திகிட்டு இருக்கப்ப தேவையா??

மங்களூர் சிவா said...

/
TBCD said...

சரி, அப்ப பிராமனர்களுக்குள் கொடுத்து வாங்கினால், செய்வதில்லையே..

அவர்களுக்குள் இருக்கும் வியாதி ஒட்டினால் பரவாயில்லையாமா..


புதசெவி
/

டிபிசிடி இதுக்கு சூப்பரான ஒரு விளக்கம் இருக்கு அது இங்க சொன்னா ரொம்ப ஆபாசமா இருக்கும் தனியா உங்களுக்கு சாட் பண்றேன்.

புதுகைத் தென்றல் said...

யார் வேணா சுத்தட்டும் சிவா,

நான் சொல்ல வந்த விடயமே வேற..


அது புரியறவங்களுக்கு புரிஞ்சா சரி.

மத்தவங்க பேசறது பத்தி எனக்கு கவலையில்லை.:)

TBCD said...

எயிட்ஸ் நோய் பிரச்சாரமே தொட்டால் வராது என்பது தான்.

தடுமன் பிடித்தால் காற்றில் கூட கிருமிகள்
பரவும்.

உங்கள் தமிழாசிரியர் ஒரு மொக்கை உதாரணம் சொன்னார் என்பதற்காக இதை (பிராமனர்கள் தண்ணீர் தெளிப்பதை) நியாப்படுத்த வேண்டாம்.

ஆசிரியர்களும் தப்பு செய்வார்கள்.


மனிதனை மனிதன் இழிவு செய்வதை கண்டும் காணாமல் இருக்க, சிவாவைப் போல், உணர்ச்சி மரத்துப் போகனும் என்று வேண்டாலாம் என்றால் வரம் கொடுப்பவர்களும் இல்லை.

இதுக்கு மேலே நான் ஏதாச்சும் சொன்னா, சிவா, வெங்காயம் என்றுச் சொல்லுவார். என்பதால் நிறுத்திக்கிறேன்.

///
புதுகைத் தென்றல் said...

ஆஹா வாங்க,

பிராமனர்களுக்குள் மட்டுமல்ல நாம் நமக்குள்ளும் கொடுத்து கையில் வாங்குவது கிருமி தோற்றும் என்பதே என் ஆசிரியரின் கருத்து
///

***********
சிவா,
ஆபாசம் என்று எல்லாம் நீங்களாகவே நினைப்பது தான்..அதுக்கு இப்படி ஒரு விளக்கம் கொடுத்து நியாப்படுத்த முடியும்..இருந்தாலும்...நீங்க உரையாடியிலே சொல்லுங்க... :)))

TBCD said...
This comment has been removed by the author.
புதுகைத் தென்றல் said...

புதசெவி

கருத்துச் சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கு.

தங்களது கருத்தைச் சொல்லியிருக்கீங்க.

நானும் என் பதிவில் என் கருத்தை சொல்லியிருக்கிறேன்.

நியாயப் படுத்துதல் என்பது கிடயவே கிடையாது.

எனது வலைப்பூவில் எனக்கு பிடித்த என் கருத்தை சொல்லும் சுதந்திரம் எனக்கு இருக்கிறது.

அவரவர் கருத்து, அவரவர் நியாயம்.

:)))))))))))))

karikkulam said...

You have taken one of most detestable forms of untouchability and is justifying it on the grounds of hygenics.

If hygenics is the only reason, then, Mr PT, it is not possible for us to live with people who are condemnded to a lower level of life - the slum dwellers, the domestic helps, the carpenters, the construction labourers, the artisans, the cleaners, the sweepers, and the sundry people, without whose services you cant live! Your so-called perumaal need to be kept in three-tier security and a temple, thanks to these people. The toilet you rush to in emergencies, while you hear the kalaasebam in your perumal temple, need to be cleaned by these people. Your perumal and his abode will stink of your urine without their services. It is they who protect perumal from you!! Bear it in mind!! How dare you are to accept the form of untouchability on the grounds of hygenics, after receiving all help from these people! You should forego them all, shouldnt you?

To be clean is good. To be a human is better. You sacrifice the noble virtue of treating the people less privileged and are lower to you, not for any fault of their own, but out of crual fate, with respect.

I say, you sacrifice. Because, your only consideration seems to be that you are a cleaner person and must keep clean at all events.

The teacher said a justification and you have blindly accepted it. I say, blindly, because, the form of untouchability under discussion, is not simply a question of cleanliness; but a question of treating lesser people with respect and giving them dignity.

Every human being, unless he or she forfeits it through a wilful malafide act, is entitled to basic human dignity. Your teacher need to be taught a lesson on such living.

Teachers, Mr PT, are the products of the self-same society to which they have come to teach. They bring to classrooms all the vices they have received blindly. Such teachers are vermins of society!!

Your teacher indirectly tried to sow the seeds of untouchability. Alas, it is sad to see you have fallen victim to it.

Please change your mindset.

(I am very new to blogosphere, and your blog. I am browing your past postings; and recording my reactions! Late, I know, but need to be told!)

புதுகைத் தென்றல் said...

and recording my reactions! Late, I know, but need to be told!)//

அதே தான். பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு. அதுக்கப்புறம் வேறு பதிவுகள் போட்டுவிட்டேன். அதனால
அந்த தீமில் இருந்து வெளியே வந்துவிட்டேன்.

மற்றொன்று நீங்க தேடித்தேடிப் படிச்சு பின்னூட்டமிடறீங்க.

நான் பின்னூட்டத்தை தேடறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது.

அதனால நீங்க படிங்க.

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் என்பது மாதிரி பதில் சொல்லித்தான் ஆகணும்னு அடம் பிடிக்கப்டாது.

:))))))))))))))))))))))))))))