கல்லூரியில் படிக்கும்போது சமஸ்கிருதத்தை
பாடமாக எடுத்து படிக்க வாய்ப்பு கிடைத்தது.
எங்க மேஜர் அக்காக்கள் எல்லோரும் அதைத்தான்
பாடமா எடுத்திருந்தாங்க என்பதாலும், தமிழை விட
அங்கு சிலபஸ் குறைவு என்பதாலும் நானும்
சமஸ்கிருதம் எடுத்துபடித்தேன். (பிரச்சார சபாவில்
ஹிந்தி படித்திருந்த தைரியம் தான்.)
முதல் நாள் வகுப்பு. சமஸ்கிருத ஆசிரியை
பெயர் சந்திரிகா. கேரளத்து மங்கை. அவரது
துல்லியமான ஆங்கில உச்சரிப்பு என்னை மிகவும்
கவர்ந்தது. சமஸ்கிருதத்தை ஆங்கிலத்தில்
மொழி பெயர்த்து எழுதினால் போதும் என்பது
கூடுதல் கவர்ச்சி.
சந்திரிகா மேடம் பாடம் எடுத்த அழகில்
படிக்காமலையே மனதுக்குள் பாடம் சம்மணம்
போட்டு அமர்ந்து விட்டது.
மொழியாக்கத்திற்காக மேடம் சொல்லிக்கொடுத்த
பாடங்களில் 3 மாத்திரம் ஞாபகம் இருக்கிறது.
(காலேஜ் முடிச்சு 16 வருடம் ஆச்சு. )
சித சிந்தா தயோஹ மாத்யே.
சிதா ஏவ கரியஷி,
சிதா தகித் நிர்ஜீவம்
சிந்தா ஜீவந்தம் அபி யஹோ!
அர்த்தம்:
சிதா- சிதையில் வைக்கும் நெருப்பு
சிந்தா- கோபம், மனக்கொந்தளிப்பு
இரண்டுமே நெருப்பு என்றாலும்
சிதையில் வைக்கும் நெருப்பு பரவாயில்லை.
ஏனெனில் அது உயிரற்ற உடலைத்தான்
எரிக்கிறது.
ஆனால் கோபம் எனும் நெருப்போ
உயிருள்ள் உடம்பை தகிக்கிறது.
எவ்வளவு அழகான வார்த்தைகளை உள்ளடக்கிய
செய்யுள். சினம் எனும் சேர்ந்தாரைக்கொல்லி
என்று நம் அழகு தமிழிலும் சினத்தை நெருப்பாகத்
தானே சொல்லியிருக்கிறார்கள்.
"வரம் யேகோ குனி புத்ரஹ" என்று
துவங்கும் செய்யுள் மறந்து விட்டது.
ஆனால் அதன் பொருள் மூடர்களாக 100
பிள்ளைகள் பெறுவதை விட,
புத்திசாலியாக ஒரு குழந்தை இருந்தாலும்
போதும் என்பதாகும்.
மஹாபாரதத்தில் கொளரவர்கள் 1000 பேர்
இருந்தாலும், பாண்டவர்களின் சிறப்பே
சிறப்பல்லவா.
நாம் எப்படி இருக்க வேண்டும்?
இந்தச்செய்யுள் முற்றிலும் மறந்தே விட்டது.
ஆனால் அதன் அர்த்தம் மாத்திரம் ஞாபகம்
இருக்கிறது.
சல்லடையில் சல்லிக்கும்போது மாவு
கீழே விழும், சக்கைகள் சல்லடையில்
தங்கிவிடும்.
முறத்தில் புடைக்கும்போது சக்கை
கீழே விழுந்து விடும். அரிசி முறத்தில்
தங்கி விடும்.
நாம் சல்லடை போல் தேவையற்றவைகளை
வைத்துக்கொள்ளாமல், முறம் போல்
நல்லதை மட்டும் வைத்துக்கொண்டு
தேவை இல்லாதவகைகளை விட்டு விட
வேண்டும் என்பதாகும்.
தங்களுடன் பகிர்ந்து கொண்டதில்
சந்தோஷம்.
12 comments:
//நாம் சல்லடை போல் தேவையற்றவைகளை
வைத்துக்கொள்ளாமல், முறம் போல்
நல்லதை மட்டும் வைத்துக்கொண்டு
தேவை இல்லாதவகைகளை விட்டு விட
வேண்டும் என்பதாகும்///
நல்லா இருக்கு :)
வாங்க ஆயில்யன்,
நீங்கதான் ஃபர்ஸ்டு
சல்லடையில் சல்லிக்கும்போது மாவு
கீழே விழும், சக்கைகள் சல்லடையில்
தங்கிவிடும்.
முறத்தில் புடைக்கும்போது சக்கை
கீழே விழுந்து விடும். அரிசி முறத்தில்
தங்கி விடும்.
நாம் சல்லடை போல் தேவையற்றவைகளை
வைத்துக்கொள்ளாமல், முறம் போல்
நல்லதை மட்டும் வைத்துக்கொண்டு
தேவை இல்லாதவகைகளை விட்டு விட
வேண்டும் என்பதாகும்.
nalla message. naan siruvayathil neethikadhaigal ketkkum pothu kettirukkiren marubadium nabagapaduththiyamaikku nanri.
வாங்க மதுமதி,
முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
//சல்லடையில் சல்லிக்கும்போது மாவு
கீழே விழும், சக்கைகள் சல்லடையில்
தங்கிவிடும்.
முறத்தில் புடைக்கும்போது சக்கை
கீழே விழுந்து விடும். அரிசி முறத்தில்
தங்கி விடும்.
நாம் சல்லடை போல் தேவையற்றவைகளை
வைத்துக்கொள்ளாமல், முறம் போல்
நல்லதை மட்டும் வைத்துக்கொண்டு
தேவை இல்லாதவகைகளை விட்டு விட
வேண்டும் என்பதாகும்.
//
நல்லதொரு கருத்து. செய்யுளையும் தந்திருந்தால் எனக்கு உதவியாக இருக்கும். எனக்குத் தெரிந்தவர்களுக்கு சொல்லி கலக்கியிருக்கலாமில்ல!!!
ஆயில்யன் & மதுமதி சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டு
நல்லா எழுதிருக்கீங்க!!
வாங்க நிர்ஷான்,
அந்த செய்யுள் தான் மறந்து போச்சே.
வாங்க சிவா
வருகைக்கு நன்றி.
அக்கா நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க. ரொம்ப நன்றி.
பின்றீங்க!...நல்லா இருக்கு!
//மஹாபாரதத்தில் கொளரவர்கள் 1000 பேர்
இருந்தாலும், பாண்டவர்களின் சிறப்பே
சிறப்பல்லவா.//
கௌரவர்கள் 100 பேர்தானே?
:)
வாங்க சுரேகா,
தட்டச்சும்போது ஒரு ஜீரோ அதிகம்
வந்துடுச்சு போல.
:))))
A shortest feedback from me this time.
When lines from a poem are quoted, meaning explained and wondered at, the credit should have gone to the poet. Here, you are enthralled and you desire to share your enthusiasm with us. But, where is the credit to the poets? Why didn't you even mention their names?
The poets must be very distinguished. Who are they?
In my opinion, young boys in a Sanskrit class, who are more interested in watching the curves of the female class teacher (keralaththu mangkai), should be prescribed, as a part of the sanskrit syllabus, some salacious extracts from the world famous Sanskirt author, Vaatsaayana.
In order to make the subject appealing to young boys, it appears to me, the female teacher must have everything extraordinary in her exterior!
Post a Comment