எங்கள் புதுகை சின்ன ஊர்தான்.
காலை 5 மணி, 9 மணி, பகல் 12 மணி, சாயந்திரம் 5 மணி,
மற்றும் இரவு 8 மணிக்கு சாந்தாரம்மன் கோவில் அருகில்
இருக்கும் மார்க்கெட்டிலிருந்து சங்கு ஒலி கேட்கும்.
(இன்றும் இப்பழக்கம் இருக்கிறது)
இதை வைத்தே நேரத்தை கணக்கிட்டுக்கொள்வோம்.
(அதற்கு முன்னரே பக்கத்துவீட்டில் மாடு கறக்க
கோனார் வந்துவிடுவார்.)
பால் கறந்த கையோடு(3 மணிக்கு) முதல் பால் டெலிவரி
எங்கள் வீட்டிற்குத்தான்.
பால் சொம்போடு வந்து என்னைத்தான் எழுப்புவார்
மோகனம்மா. (மோகன் அவர்களின் பையன்)
அப்போது எழுந்து (சமையற்கட்டு மேடை மீது
அமர்ந்து (சிம்மாசனம் :) ) படித்துவிட்டு 5 மணி சங்கு
ஊதியதும் வந்து படுத்துக்கொண்டு
அதிகாலையை ரசிப்பேன்.
அதிகாலை 5 மணி சங்கு ஒலிக்கேட்ட கொஞ்ச நேரத்தில்
பள்ளிவாசலின் பாங்கு ஒலி கேட்கும்.
10 நிமிட கழித்து வீட்டுக்கருகில்
(வடக்கு 4ல் எங்கள் வீடு)இருக்கும்
சர்ச்சில் ஜபம் தொடங்கும்.
இன்று என்ன பாடல் போடுவார்கள் என்று
காத்திருப்பேன்.
யேசு ராஜா முன்னே செல்கிறாரா..
இல்லை வேறு எந்தப் பாட்டு என்று
என் மனதும் நானும் பந்தயம் கட்டிக்கொள்வோம்.
வாசல் பெருக்கும் சத்தம், பால்வண்டி மணி,
இவைகளுடனே துவங்கும் நாள்.
மார்கழி மாதக் குளிருக்கு பயந்து மஃப்ளர்
கட்டிக்கொண்டு ரோடை அடைக்க கோலம்
போடுவது தனி சுகம்..
அந்த நேரத்தில் சைக்கிள் எடுத்துக்கொண்டு
கீழராஜவீதியில் போவது ஒரு சுகம்.:)
6.30 மணிவாக்கில் கீரை, பூசணிக்காய்,
உப்பு விற்பவர்கள்,
ஒரு நாள் விட்டு ஒருநாள் வரும்
தண்ணீரை பிடித்து வைக்க
குடம் தூக்கிப்போகும் பெண்கள்.
“எனக்கும் ரெண்டு குடம் தண்ணிக்கா”
என்று சைக்களில் குடம் கட்டி வரும்
பையன்கள்,
குழாயடி சண்டை.
வாகனங்கள் அதிகம் போகத் துவங்கியிருக்காத
என வீதியே அழகாய் இருக்கும்
அந்தக் காலை நேரத்தில்.
பல்துலக்கி,குளித்து கல்லூரிக்கு ரெடியாகும் வரை
தோழி ஒலித்துக்கொண்டிருப்பாள்.
( ரேடியோவில் பக்திமாலை,
செய்திகள்.. எக்ஸ்ட்டரா...)
நான் மிகவும் ரசித்த தருணங்கள்
இந்தப் பாடல் கேட்டுத்தான் சின்னச்சின்ன
சந்தோஷங்களை ரசிக்க கற்றது.
நானும் வானம் தரும் சேதிக்காக காத்திருந்ததுண்டு.
அலைலையாகப் போகும் மேகங்களில் சில நொடிகளில்
ஒரு பிம்பம் காணும். அதை வரைய ஆசைப்பட்டதுண்டு.
அதிகாலையின் ஆனந்தத்தைச் சொல்லும் இப்பாடல்
நாளின் துவக்கத்தை ஆராதிக்கிறது
17 comments:
நான் தான் பர்ஸ்ட்டு....
தென்றல் அக்கா இப்பல்லாம் நம்ம புதுகை ரொம்ம்ம்ம்ம்ப மாறுதல்/.........................
வாங்க தமிழகத்தின் தலைவன்,
நாங்க வடக்கு 4ஐ விட்டு செல்லப்பன் நகர் போனப்பவே மாற்ப்போச்சு.
இப்ப கேக்கனுமா?
நம்ம ஊரு டிராபிக்குக்கு சிக்ன்ல். டிவைடர் எல்லாம் வெச்சுக் கலக்கறாங்க.
:)
ஆகா ஆகா - மலரும் நினைவுகளா - காலையில் இவ்வளவு மகிழ்வான பொழுதுகளா ? அனுபவிச்சிருக்கீங்க போல - ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள்
ஆகா ஆகா - மலரும் நினைவுகளா - காலையில் இவ்வளவு மகிழ்வான பொழுதுகளா ? அனுபவிச்சிருக்கீங்க போல - ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள்
வாங்க சீனா சார்,
நாளின் துவக்கம் இனிதா இருந்தா நாளெல்லாம் அந்த இனிமை இருக்கும்.
அதான் சின்ன்சின்ன விஷயத்தில கூட சந்தோஷப்பட்டு நாளை ஆரம்பிப்பேன்.
வாழ்த்துக்கு நன்றி.
முன்னாள்''தமிழகத்தின் தலைவன்''
இப்போது "புதுகைச் சாரல் "
நம்பளும் .......வந்துட்டோம்ல
//நானும் வானம் தரும் சேதிக்காக காத்திருந்ததுண்டு.
அலைலையாகப் போகும் மேகங்களில் சில நொடிகளில்
ஒரு பிம்பம் காணும். அதை வரைய ஆசைப்பட்டதுண்டு.//
மனத்தை வசப்படுத்தி ஏங்கச் செய்யும் அருமையான வருணனை..
வாழ்த்துக்கள்..
முதல் பாடல் ரெம்ப சூப்பர்
அதிகாலை சப்தங்கள் ரசிக்கக் கூடியவைதான்.ஊர் விழிக்கும் முன் விழித்து,அன்றைய தினத்தின் விடியல் ஆயத்தங்களையும்,சப்தங்களையும் ரசிப்பதே ஒரு தனி சுகம் தான். என்ன செய்ய,இரவு தாமதமாய் உறங்கி, இப்போல்லாம் லேட்டா எழுந்தே பழக்கிட்டதே:)
முன்னாள்''தமிழகத்தின் தலைவன்''
இப்போது "புதுகைச் சாரல் "
நம்பளும் .......வந்துட்டோம்ல
அப்படிப்போடு..
புதுகைச் சாரலாக புது அவதாரம் எடுத்து மண்ணிற்கு பெருமை சேர்க்க புறப்பட்டுள்ள முன்னாள் த.தலைவனுக்கு வாழ்த்துக்கள்.
வாங்க ஜீவி,
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
வாங்க புகழன்,
மறக்க கூடிய பாடலா அது.
வருகைக்கு மிக்க நன்றி.
என்ன செய்ய,இரவு தாமதமாய் உறங்கி, இப்போல்லாம் லேட்டா எழுந்தே பழக்கிட்டதே:)
இதுவும் ஒரு சுகம் தான்.
இரவை ரசிக்கலாமே.
Night is so young என்று சொல்லி இரவையும் ரசிக்கலாம்.
நானும் புதுகைதான் ஆன புதுகுளத்து ஆளு.
ஆஹா வாங்க சக்தி,
புதுக்குளமா? நம்ம ஊருக் கூட்டணி ஜாஸ்தி ஆகிகிட்டே போகுது.
சந்தோஷம்தான்.
அப்பப்ப வாங்க
3 மணிக்கு எந்திரிச்சிப்படிப்பீங்களோ அய்யோ நினைச்சுக்கூட பார்க்கமுடியல.. 6 மணிக்கு எழுப்பினாலே நாங்க என்ன அதிகாலைன்னு சொல்வோமே.. :(
Post a Comment