நமது முதுகு தண்டுவடத்தில் (மூலாதாரத்தில்) சுருண்டு
பாம்பாக கிடப்பதுதான் குண்டலினி சக்தி.
சுருண்டு கிடக்கும் குண்டலினியை எழுப்பி
அந்த சக்தியை நமது உடலில் இருக்கும்
சக்கரங்களின் ஊடாக தியானம் செய்வது தான்
குண்டலினி யோகா.
இந்தத் தியானம் மிக சிறந்த சக்தியை தரவல்லது.
(தேக்கிவைக்கப்பட்டுள்ள சக்தியை நாம்
வெளிக்கொணர்வதுதான் இந்த் தியான நிலை)
இதோ இந்த படத்தில் காணப்படுவதுதான்
சக்கரங்கள். ஒவ்வொரு சக்கரத்திற்கும்
ஒவ்வொரு வேலை. நம் உடம்பின்
ஒவ்வொரு பாகத்தையும் கட்டுபடுத்துகிறது.
குண்டலினி பற்றிய மேலதிக விவரத்திற்கு.
குண்டலினி விக்கிப்பீடியா.
இத்தகைய சிறப்புமிக்க குண்டலினி சக்தியாக
அன்னை லலிதா ஆராதிக்கப்படுகிறாள்.
ஒவ்வொரு சக்கரமும் அதன் வேலைகளும்,
அன்னையின் ஸ்லோகங்களும் வரும் பதிவுகளில்.
9 comments:
அருமையான தகவல்..ஆனால் குரு இல்லாமல் குண்டலினியை மேல் எழுப்புவதோ,எழுப்பியபின் தொடராமல் இருப்பதோ தவறு என்று கேள்விப்பட்டேன்.உண்மையா?
வாங்க ரம்யா,
குரு இல்லாமல் எந்த வித்தையும்
பலன் தராது.
எழுப்பியபின் தொடரவேண்டும்.
குண்டலினியைப் பற்றிய பல்வேறு விதமான கருத்துக்கள் உலவுகின்றன.
அக்கா குண்டலிணி யோகம் செய்ய பதஞ்சலி சூத்திரம் துவங்கி அனைத்து யோக முறைகளும் பரிந்துரைக்கும் அமரும் முறை ஒன்று பத்மாசனம் அல்லது வஜ்ராசனம். இஸ்லாமியர்களான நாங்கள் தொழுகையின் போது அமரும் முறை வஜ்ராசனம். நின்று தொழுகையை துவங்கும் நாங்கள் இடையில் சில முறை நெற்றி தரையில் படும்படியாக வணங்குவதன் நோக்கம் மூலாதாரத்தில் இருக்கும் ஆற்றலை மூளை நோக்கி செலுத்துவது தான். பின்பு வஜ்ராசன நிலையில் அமர்ந்து தொழுகையை முடிப்போம். இங்கு இருந்த யோகிகளுக்கும்,அங்கிருந்த நபிகள் நாயகத்திற்கும் எந்த இ.மெயில் தொடர்போ இல்லை ஃபிளாக்கர் பிரண்ட்ஸிப்போ இருந்ததாக தெரியவில்லை. ஞானிகள் ஓரே போல்தான் சிந்திப்பார்கள் என்பதற்கு இதை விட எனக்கு உதாரணம் தெரியவில்லை. நாம் தான் உணர்வது இல்லை.
இங்கு இருந்த யோகிகளுக்கும்,அங்கிருந்த நபிகள் நாயகத்திற்கும் எந்த இ.மெயில் தொடர்போ இல்லை ஃபிளாக்கர் பிரண்ட்ஸிப்போ இருந்ததாக தெரியவில்லை. ஞானிகள் ஓரே போல்தான் சிந்திப்பார்கள் என்பதற்கு இதை விட எனக்கு உதாரணம் தெரியவில்லை. நாம் தான் உணர்வது இல்லை.//
மிகச் சரியாகச்சொன்னீர்கள் அப்துல்லா.
//
நமது முதுகு தண்டுவடத்தில் (மூலாதாரத்தில்) சுருண்டு
பாம்பாக கிடப்பதுதான் குண்டலினி சக்தி.
சுருண்டு கிடக்கும் குண்டலினியை எழுப்பி
அந்த சக்தியை நமது உடலில் இருக்கும்
சக்கரங்களின் ஊடாக தியானம் செய்வது தான்
குண்டலினி யோகா.
//
மனவளக்கலையில் நல்லா பயிற்சி கொடுக்குறாங்க.
ஆமாம் இதெல்லாம் வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை வகுப்புக்ளில் சொல்லித்தராங்க.எங்க குடும்பத்தில் பலரும் இதனால் நன்மை அடைஞ்சிருக்காங்க..
அருமையான தகவல்..
எளிமையா விளக்கியிருக்கீங்க.
வாங்க கயல்விழி,
வாழ்த்துக்கள்.
வாங்க சிவா,
வருகைக்கு நன்றி.
Post a Comment