தன்னலமற்ற அன்பு, பக்தி, நல்ல உள்ளம்
இவைகளுக்குச் சொந்தம் நம் இருதயம்.
அனஹாத சக்கரம் அமைந்திருப்பது
இதயத்தில்.
நாம் எடுக்கும் முடிவுகள் நம் இதயத்தை
தொடர்பு படுத்தியே இருக்கும்.
கேட்டதை கொடுக்கும் கற்பக விருட்சம்
வேறு எங்கோ இல்லை. நம் இதயத்தில்
தான் இருக்கிறது.
நல்லதை நினைத்து நல்லதே செய்தால்
நாம் கேட்டது கிடைக்கும்.
ஜீவாத்மா இருக்கும் இடம் இதயம்.
இதய சக்கரத்தில் மனதை ஒரு நிலை படுத்தி
தியானிக்கும் போது அன்பு நிறைந்த
மனத்தையும், நடப்பவை நம் நல்லதிற்கே
என்ற நம்பிக்கையையும், மனோ திடத்தையும்
பெறலாம்.
உடல் திடமாக இல்லாவிட்டாலும்
மனதிடம் மிக முக்கியம். மனம் திடமாக
இல்லாவிட்டால் வாழ்க்கை பிரச்சனையுடையதாக
ஆகிவிடும்.
இருதயத்தில் இறைவனை நிறுத்தி தியானித்து
மந்திரம் ஜபிக்கப்படும் பொழுது குண்டலினி
சக்தி உரம் ஏற்றப்படுகிறது.
லலிதா ஸகஸர்நாமத்தில் அனஹாத சக்கரம்
குறித்து சொல்லப்பட்டிருக்கும் ஸ்லோகங்கள்.
100, 101
அநாஹாதாப்ஜ நிலயா ச்யாமாபா வதனத்வயா
தம்ஷ்ட்ரோஜ்வலா க்ஷ்மாலாதி தரா ருதிரஸ்ம்ஸ்திதா.
Anaha tabjanilaya shyamabha vadanadvaya
Damshtrojvala kshamaladi dhara rudhira samsthita ..100
Anaha tabjanilaya: Who is in the form of
the Yogini called Rakini abiding in the Anahata Chakra.
Shyamabha: Who is of shining dark complexion.
Vadanadvaya: Who as Rakini has two faces.
Damshtrojvala: Who has shining face.
Kshamaladi dhara: Who wears a rosary etc.
Rudhira samsthita: Who presides over
blood in living beings
***************************************
காலராத்ர்யாதி சக்த்யொளக வ்ருதா ஸ்நிக்தொளதனப்ரியா
மஹா வீரேந்த்ர வரதா ராகிண்யம்பா ஸ்வரூபிணீ
Kalaratryadi shaktyaugha vruta snigdhau danapriya
Mahavirendra varada rakinyamba svarupini .. 101
Kalaratradi shaktyaugha vruta: Who is attended
by Kalaratri and eleven other Shaktis.
Snigdhau danapriya: Who loves offerings
of rice mixed with ghee.
Mahavirendra varada: Who grants
boons to great heroes.
Rakinyamba svarupini: Who is the Mother as Rakini.
அநஹாத சக்கரத்தில் அமர்ந்திருக்கும் அன்னை
காலராத்திரி போன்ற 11 இதர சக்திகளுடன்
சேர்ந்து ராகினி எனும் பெயரில் இரு பிரகாச மான
முகங்களுடன், உயிரினங்களின் உதிரமாக இருந்து
அருள் பாலிக்கிறாள்.
(இதயத்திலிருந்து தானே இரத்தம் சுத்தீகரிக்கப்படுகின்றது)
இதயகமலத்தில் அன்னையை இறுத்தி
இனிதான வாழ்வு காண்போம்.
3 comments:
நல்லாயிருக்கு. நீங்க எழுதுவது இன்னும் எளிமையா இருக்கு. நன்றிங்க..
நானும் கடைசி வெள்ளியன்று ஆராதாரங்களில் அம்பிகை அப்படின்னு ஒரு பதிவிட இருக்கிறேன். ஆறு ஆதாரங்களில் என்னவாக இருக்கிறாள் என்பதாக. நீங்க இங்கு சஹஸ்ரநாமத்தை சொல்லியதால் அதை சேர்க்க மாட்டேன்...ஓகே-வா?
வாங்க மதுரையம்பதி,
நன்றி எதுக்கு. அன்னையைப் பற்றி எழுத ஒரு வாய்ப்பு கிடைத்ததே.
தாராளமா எழுதுங்க.
நீங்க விசயம் தெரிஞ்சவர். நான் பாராயணம் செய்வது மட்டும் தான்.
என் ரெய்கி குரு குண்டலினி கற்று கொடுத்த போது இதைப் பற்றிச் சொல்லித்தான் தெரியும்.
தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்
உங்க பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
Post a Comment