Tuesday, August 19, 2008

சபாஷ் சண்டிகர்


பொதுவாக பாடநூல்களில் எழுத்துக்கள் சிறியதாகவே இருக்கும்.
பார்வை குறைபாடுள்ள பிள்ளைகள் மிகவும் கஷ்டபட்டே
படிப்பார்கள். சிறிய எழுத்துக்களை படிக்க சிரமப்படுவதனால்
அவர்கள் படிப்பிலிருந்து விலகிப்போகும் அபாயம் உண்டு.

தலைவலி, கண்ணில் நீர் வடிதல் போன்றவை
சிறிய எழுத்துக்களால் வரும் மேலதிகத் தொல்லைகள்.

சண்டிகரின் கல்வித்துறை இதற்கு ஒரு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
NATIONAL COUNCIL OF EDUCATIONAL RESEARCH AND TRAINING கமிட்டியிடம்
கலந்து பேசி சிலபஸ்களை பெற்றுக்கொண்டு சண்டிகர்
கல்வித்துறையினரே பெரிய எழுத்துக்களில் பாடநூலை
பார்வைக் குறைபாடுள்ள குழந்தைகளுக்காக தயாரிக்கப்
போகிறார்கள். இதனால் கல்வித்துறைக்கு அதிக
செலவு ஏற்பட்டாலும் சர்வ சிக்ஷ அப்யான் திட்டத்தில்
பெரிய எழுத்துக்கள் கொண்ட பாடநூலை
தயாரிக்கப் போகிறார்கள்.

பொதுவாக 12/14 சைஸில் தான் எழுத்துக்கள் இருக்கும்.
48 சைஸில் புத்தகம் வெளியிடப் போகிறார்கள்.
இதனால் ஒரு பக்கத்திர்க்கு 15 ரூபாய் செலவாகும்.

இவர்கள் NCERT யிடம் பார்வை குறைபாடுள்ள
பிள்ளைகளுக்காக தனியே இத்தகைய புத்தகங்களை
வெளியிட கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

பிற மாநிலங்களும் இதை பின்பற்றலாமே!
3000த்திற்கும் மேற்பட்ட
பிள்ளைகள் பார்வை குறைபாடுகள்
உடையவர்களாக இருக்கிறார்கள்,
அல்லது மிகக் குறைந்த பார்வையுடன்
இருக்கிறார்கள் என்று ஒரு சர்வேயில்
கண்டுபிடித்திருக்கிறார்கள்.

6 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) நல்ல செய்தி தான்.\O-O/

pudugaithendral said...

வாங்க கயல்விழி,

வருகைக்கு நன்றி.

புதுகை.அப்துல்லா said...

there are some people in government who knows to think.weel done keep it up chandigar

pudugaithendral said...

வாங்க அப்துல்லா,

கவர்ன்மெண்டிலயும் சில நல்ல உள்ளங்கள் இருக்காங்க. தப்பித்தவறி வந்துட்டாங்களோ என்னவோ.

புதுகை.அப்துல்லா said...

தப்பித்தவறி வந்துட்டாங்களோ என்னவோ.
//

:))

ராமலக்ஷ்மி said...

ஆமாம் தென்றல், "சபாஷ்" என பாராட்டுதலுக்குரிய விஷயம். சண்டிகர் மற்ற அரசுகளுக்கு முன் மாதிரியாக திகழட்டும்.