Thursday, August 21, 2008

எலிவலை தனிவலை- ஆனந்தம் தரும் வலை.

தனக்குன்னு தலை சாய்க்க ஒரு இடம் வேண்டும்
என்று எத்தனை பேரின் கனவு.அதனாலதானே
கஷ்டப்பட்டு வீடு கட்டுகிறோம். அப்படி கஷ்டப்பட்டு
கட்டிய வீடே காலகாலத்திற்கும் சோறுபோடுமாம்.

ஆமாம் வீடு ஒரு மூலதனம், இதில் நமக்கு
பயன் இருக்கு எங்களுக்குத் தெரியாதான்னு
சண்டைக்கு வராதீங்க. :) நான் படித்த
தகவலை தங்களுடன் பகிர்ந்துக்கொள்ள போகிறேன்.


எத்தனையோ திரைப்படங்களில் பார்த்திருப்போம்.
எத்தனையோ கஷ்டங்களுக்கு இடையே
பிள்ளைகளைப் படிக்க வைத்து, ஆளாக்கி,
அதற்கிடையில் 700 சதுரடியாவது
வீடு வாங்கிவைத்திருப்பார்கள் பெற்றோர்.
ரிடையர் ஆனதும் பணம், வீடு எல்லாம்
பிள்ளைகளிடம் இழந்துவிட்டு கடைசியில்
முதியோர் இல்லத்தில் அந்திம காலத்தைக்
கழிக்கின்றனர் பெற்றோர்.

சில வங்கிகளில் (ஏன் தற்போது அரசாங்க
வேலையிலும் கூட) ஓய்வுகாலத்திற்கு
பின் ஓய்வூதியம் கிடையாது. வேலை
பார்த்தகாலத்தில் வாங்கிய சம்பளம்
கைக்கும், வாயக்கும் சரியாக இருந்திருக்கும்.
வீட்டைத் தவிர எந்த சேமிப்பும் செய்ய
இயலாது போயிருக்கும். பீ.எப், கிராஜுவிட்டி
எல்லாம் மகள் திருமணத்திற்கோ, மகன்
படிப்பிற்கோ செலவு செய்துவிட்டு
கடைசிகாலத்தில் என்ன செய்ய?
என்று கையை பிசைந்து கொண்டிருக்கும்
அபலைகளுக்கு ஒரு வரப்பிராசதமாக
யூனியன் பாங்க் ஆப்ஃ இந்தியாவில்
ஒரு திட்டம் இருக்கிறதாம்.

இந்தத் திட்டத்திற்கு “ரிவர்ஸ் மார்ட்கேஸ்”
என்று பெயர். 60 வயதுக்கு மேற்பட்ட
சீனியர் சிட்டிசன்கள் யார் கையையும்
எதிர் பார்க்காமல் தன் சொந்த வீட்டில்
இருந்துகொண்டு ஆனந்தமாக வாழலாம்.

வீட்டுப்பத்திரத்தை வங்கி வாங்கிக்கொண்டு,
மொத்தமாக ஒரு தொகையை கடனாகத்
தருவார்கள். குறிப்பிட்ட கடன் காலம்
முடிந்த பின்பும் தம்பதியினர் தங்களின்
கடைசிக் காலம் வரை அந்த வீட்டிலேயே
தங்கலாம். அவர்களில் ஒருவர் இறந்து-
விட்டாலும், மற்றவர் தன் ஆயுள் வரைக்கும்
அந்த வீட்டில் இருக்கலாம்.

இருவரின் மறைவுக்குப் பிறகு, வீட்டை
கடன் வழங்கிய நிறுவன எடுத்துக்கொள்ளும்.
கடன் மற்றும் அதற்கான வட்டி போக
மீதித் தொகை இருந்தால் சட்டப்படியான
வாரிசுகளுக்கு தொகையை கொடுத்துவிடுவார்கள்.

வாரிசு விரும்பினால் கடன் மற்றும்,
வட்டியைக் கட்டி வீட்டையே மீட்டுக்கொள்ளலாம்.

ஓய்வூதியம் இல்லாமல் அவதியுறும்
பெரியவர்களுக்கு இது தேனான செய்தி.

(தகவல் உதவி ஆனந்த விகடன் 20.8.08)

30 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குடுகுடுப்பைக்காரன் மாதிரி நல்ல சேதியா சொல்லிட்டிருகீங்க..:)

pudugaithendral said...

வாங்க கயல்விழி,

எப்பவும் ஏதாவது படிச்சிகிட்டே இருப்பேன். 3 நாளா பீபி கொஞ்சம் லோவாகி ஃபீஸ் பிடுங்கின பல்பு மாதிரி கிடந்தாலும் பொழுது போக
அதிகமா வாசிக்க முடிந்தது.

படித்ததில் கிடைத்ததை பகிர்ந்துக்க தான் குடுகுடுப்பைக்காரியா மாறிட்டேன்.

(2 நாள் முன்னாடி கையில் குடுகுடுப்பை இல்லாமலே கை ஆடிக் கொண்டிருந்தது )

ambi said...

//வீட்டுப்பத்திரத்தை வங்கி வாங்கிக்கொண்டு,
மொத்தமாக ஒரு தொகையை கடனாகத்
தருவார்கள்.//

இங்க தான் உதைக்குது. அப்படி வந்த பணத்தையும் நைசா அபேஸ் பண்ணீட்டு போற பசங்க இருக்காங்களே! பெத்த மனம் பித்தாச்சே! :(

என்னை கேட்டா பணமா குடுக்காம, அத ஒரு வைப்பு நிதியா போட்டு, வர வட்டியை மட்டும் மாதா மாதம் அந்த பெற்றோருக்கு கிடைக்க செய்யலாம். அசல் அப்படியே இருக்கும். :)

ராமலக்ஷ்மி said...

ரொம்ப நல்ல பதிவு. பலருக்கும் பயனாகக் கூடியது.

நீங்கள் எங்களுக்கு இப்படி நல்ல பல விஷயங்களைச் சொல்லும் போது மட்டும் கை குடுகுடுப்பையுடன் ஆடட்டும். மற்ற நேரங்களில் ஆடாதிருக்க ஆண்டவன் அருளட்டும். உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் தென்றல்!

pudugaithendral said...

அப்படி வந்த பணத்தையும் நைசா அபேஸ் பண்ணீட்டு போற பசங்க இருக்காங்களே! பெத்த மனம் பித்தாச்சே! :(

மறுக்க முடியாத உண்மை அம்பி.

புதுகை.அப்துல்லா said...

நான் மாசாமாசம் வங்கியில் பணம் போடுவதைப் பார்த்த எங்க அம்மா பரவயில்லையே ஓன்னோட பொண்ணுக்கு இப்பவே சேர்க்க ஆரமிச்சிட்டியா? என்றார். நான் சொன்னேன் அது என் பிள்ளைகளுக்கு அல்ல எனக்கும் தங்ஸ்சுக்கும், பின்னாடி முதியோர் இல்ல பீஸ்க்குன்னு சொன்னேன்:))

pudugaithendral said...

என்னை கேட்டா பணமா குடுக்காம, அத ஒரு வைப்பு நிதியா போட்டு, வர வட்டியை மட்டும் மாதா மாதம் அந்த பெற்றோருக்கு கிடைக்க செய்யலாம். அசல் அப்படியே இருக்கும். :)//

நல்ல ஐடியா.

pudugaithendral said...

வாங்க ராமலக்ஷ்மி,

தங்களின் பிரார்த்தனைக்கு நன்றி.

லோ பீபிக்கு மருந்து கிடையாது. ரெஸ்ட், மல்ட்டி விடமின்ஸ், லிக்வட் டயட் அதிகம். எடுத்துக்கொள்ளுதல் தான் மருந்து.

pudugaithendral said...

நான் சொன்னேன் அது என் பிள்ளைகளுக்கு அல்ல எனக்கும் தங்ஸ்சுக்கும், பின்னாடி முதியோர் இல்ல பீஸ்க்குன்னு சொன்னேன்:))//

நமக்கு நாமே தான்.

pudugaithendral said...

தாசரி நாராயண ராவ் அவர்களின் தெலுங்குப்படம் ஒன்று முன்பு எப்போதோ பார்த்தது தந்தது.

பணம் வீடு எல்லாம் பிள்ளைகள் எடுத்துக்கொண்டு விடுவார்கள். தான் சம்பாதித்த பணத்தில் எதையும் அனுபவிக்காமல் எல்லாம் பிள்ளைகளுக்காக என்று சேர்த்துவைத்துவிடுவார் தந்தை.

பிள்ளைகள் நிர்க்கதியாக தவிக்க விட்டு போய்விடுவார்கள். இதைப் பார்த்து எங்களுக்குள் ஞானதோயம்

அன்றிலிருந்து கணவரின் வருமானம் 3 பங்காக பிரித்து சேமிக்கிறோம்.

1 பங்கு- இன்றைய தேவைகளுக்கு.

2ஆவது பங்கு- நாம் சம்பாதிக்கும்
பணத்தில் நாமே அனுபவித்துவிட மற்றும் வயதான காலத்திற்கு.

3ஆவது பங்கு பிள்ளைகளின் கல்வி/திருமணத்திற்கு.

(படிப்பை விட பெரிய சொத்து ஏதும் கிடையாதே.)

மங்களூர் சிவா said...

30 வயசுல ஒருத்தன் வீடு ஹவுஸிங் லோன் போட்டு வாங்குறான்னு வெச்சிக்கங்க 25 லட்ச ரூபா வீட்ட 20 வருஷம் tenure கட்டி முடிக்கிறப்ப தோரயமா குறைந்த பட்சம் 40 லட்சம் கட்டியிருப்பாங்க டாக்ஸ் பெனிபிட் அந்த 20 வருசம் அந்த வீட்டுல இருந்ததுக்கு ஒரு 10 லட்ச ரூபா என கணக்கு வைத்தாலும் 30 லட்சம் நம்ம பணம் கட்டியிருக்கோம்.

50 வயசு பசங்கள படிக்க வெச்சி செட்டில் பண்றதுக்கு டைம் இருக்காது 60 வயசாகீடும்

வாங்கின வீட்டை ரிவர்ஸ் மார்ட்கேஜ் ல பாங்குக்கு திரும்ப குடுத்திட்டா கட்டின டவுன் பேமெண்ட் ஈமெஐ பணம் அளவுக்கு ரிவர்ஸ் மார்ட்கேஜ்ல பணம் கிடைக்குமா??? (20 வருட பழைய வீடு இப்ப அது)

இல்ல இதுவும் எதாவது அல்வா குடுக்கற திட்டமா??

நான் சொன்னது உதாரணத்துக்கு ஹைதராபாத்ல, பெங்களூர்ல எல்லாம் 20 லட்சத்துக்கு வீடு கிடைக்குதா????

அப்பார்ட்மெண்டுக்கும் ரிவர்ஸ் மார்ட்கேஜ் உண்டா??? ஏன்னா அதுலதான் தரையும் சொந்தம் கிடையாது கூரையும் சொந்தம் கிடையாதே 20 வருச் பழைய அப்பார்ட்மெண்டுக்கு எத்தனை சதவீதம் தருவாங்களோ!?!?

வெளிநாடுகள்ல ரொம்ப நாளா இந்த ரிவர்ஸ் மார்ட்கேஜ் இருக்குதாம் கேள்விப்பட்டிருக்கேன்.

pudugaithendral said...

வாங்க சிவா வாங்க,

உங்களுடைய கேள்விக்கு பதில் வேணும்னா பக்கத்தாப்ல பேங்க் ஏதும் இருந்துச்சுன்னா, டெலிபோனில் பேசி, ஆனலைனில் சாட்டி போக மீதி நேரம் இருந்தால் ஒரு எட்டு போய் கேட்டு வந்து சொல்லுங்க. எல்லோருக்கும் உபயோகமா இருக்கும்.

ராமலக்ஷ்மி said...

ம.சிவா,
பெங்களூரில் 20 லட்சத்துக்கு வீடெல்லாம் இப்போ நினைத்தும் பார்க்க முடியாது.

//அப்பார்ட்மெண்டுக்கும் ரிவர்ஸ் மார்ட்கேஜ் உண்டா??? ஏன்னா அதுலதான் தரையும் சொந்தம் கிடையாது கூரையும் சொந்தம் கிடையாதே 20 வருச் பழைய அப்பார்ட்மெண்டுக்கு எத்தனை சதவீதம் தருவாங்களோ!?!?//

நல்ல கேள்வி. தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க.

ராமலக்ஷ்மி said...

ambi said...
//என்னை கேட்டா பணமா குடுக்காம, அத ஒரு வைப்பு நிதியா போட்டு, வர வட்டியை மட்டும் மாதா மாதம் அந்த பெற்றோருக்கு கிடைக்க செய்யலாம். அசல் அப்படியே இருக்கும். :)//

சரியான சஜஷன். இதுதான் அவர்களுக்கு உண்மையான உதவியா போய் சேரும். ஆனால் அவ்வப்போது இன்சுரன்சையும் மீறி ஆகும் மருத்துவச் செலவுகளுக்கு விதிவிலக்காக அசலில் இருந்து எடுத்துக் கொள்ள ஒரு வழிவகையும் இருந்தால் நல்லது.

pudugaithendral said...

ஹைதையில் சிகிந்த்ராபாத் ஸ்டேஷனிலிருந்து 15 கிமீட்டர் தொலைவில் 2 பெட்ரூம் அபார்ட்மெண்ட் 28 லட்சம் சிவா.

20 எல்லாம் இப்போ சான்ஸே இல்லை.

மங்களூர் சிவா said...

//
ராமலக்ஷ்மி said...
ம.சிவா,
பெங்களூரில் 20 லட்சத்துக்கு வீடெல்லாம் இப்போ நினைத்தும் பார்க்க முடியாது.

//அப்பார்ட்மெண்டுக்கும் ரிவர்ஸ் மார்ட்கேஜ் உண்டா??? ஏன்னா அதுலதான் தரையும் சொந்தம் கிடையாது கூரையும் சொந்தம் கிடையாதே 20 வருச் பழைய அப்பார்ட்மெண்டுக்கு எத்தனை சதவீதம் தருவாங்களோ!?!?//

நல்ல கேள்வி. தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க.
//

//
புதுகைத் தென்றல் said...
ஹைதையில் சிகிந்த்ராபாத் ஸ்டேஷனிலிருந்து 15 கிமீட்டர் தொலைவில் 2 பெட்ரூம் அபார்ட்மெண்ட் 28 லட்சம் சிவா.

20 எல்லாம் இப்போ சான்ஸே இல்லை.
//

அதனாலதான் வீடு வாங்கறதபத்தி யோசிச்சு யோசிச்சு யோசிச்சுகிட்டே இருக்கேன்!

:)))))))))))

Kamala said...

இந்தத்திட்டம் 2007-08 ஆண்டு பட்ஜெட்டிலேயே அறிவிக்கப்பட்டு, தோல்வியடைந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. நிறைய வங்கிகள் "பின் அடமானம்" (ரிவர்ஸ் மார்ட்கேஜ்) கொடுக்கின்றன. ஆனால், இதுவரை சில நூறுபேர்கள்தான் விண்ணப்பித்திருக்கிறார்கள். வட இந்திய மானிலங்களில் விண்ணப்பித்துள்ளோர் வெறும் 7 பேர்தான்.

காரணம், இந்த திட்டத்தின் செயற்பாடுகள் தெளிவாக இல்லை. மேலும் வீட்டின் அன்றைய மதிப்பை, வங்கிகளே நிர்ணயித்து, அதில் 40 முதல் 60% வரைதான் கடனாகக் கொடுக்கிறார்கள். அதுவும் 15 வருடங்களுக்குத்தான். அதற்கும் 10% முதல் வங்கி நிர்ணயிக்கும் வட்டியையும் கணக்கிடுகிறார்கள்.

இந்தத்தொகையையும், வருடம் ஒரு முறையோ அல்லது பல நிலைகளிலோதான் கொடுக்கிறார்கள். மாதாமாதம் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். 15 வருடங்களுக்கு பிறகு,என்ன செய்வார்கள் என்பதற்கு விளக்கம் இல்லை.

மேலும், அடமானம் வைத்தப்பின், அந்த வீட்டில் ந்மக்கு என்ன உரிமை இருக்கிறது. சொந்தவீடு என்று என்ன சொந்தம் கொண்டாட முடியும். மற்றவர்கள் முன்பாக சொந்த வீட்டில் வாழ்வதாகக் காட்டிக் கொள்ளலாம்.

எலிவளை தனி வளையாக இருந்தால் மட்டும் போதாது. அது சொந்த வளையாகவும் இருக்கு வேண்டும்.

ambi said...

//அது என் பிள்ளைகளுக்கு அல்ல எனக்கும் தங்ஸ்சுக்கும், பின்னாடி முதியோர் இல்ல பீஸ்க்குன்னு சொன்னேன்//

இதுக்கு தான் பேரண்டல் கேர் படிக்கனும்ங்கிறது. நம்ம குழந்தைகளை நல்ல படியா வளர்த்தோம்னா நாம எதுக்கு முதியோர் இல்லம் போகனும்?

@புதுவை அக்கா, அப்துல்லா அண்ணாச்சிக்கு நீங்க இப்படி பதில் குடுப்பீங்கனு பாத்தேன். அப்படியே பே-கேருக்கு ஒரு விளம்பரமும் பண்ண மாதிரி ஆச்சு. :))

ambi said...

பங்கு வர்த்தக புலி சிவாவின் பதில் யோசிக்க வேண்டிய விசயம். :))

pudugaithendral said...

வாங்க கமலா,

தங்களின் கருத்திற்கு நன்றி.

நகைக்கடன் அனைத்து வங்கிகளில் வழங்கப்பட்டாலும் யாருக்குத் தேவையோ அவங்கதானே நகைக்கடன் வாங்குவாங்க.

நகை இருக்கும் எல்லோரும் நகைக்கடன் வாங்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. அதுமாதிரி இந்த கடனும் இருக்கலாமே என்பது என் கருத்து.

pudugaithendral said...

மேலும், அடமானம் வைத்தப்பின், அந்த வீட்டில் ந்மக்கு என்ன உரிமை இருக்கிறது. சொந்தவீடு என்று என்ன சொந்தம் கொண்டாட முடியும். மற்றவர்கள் முன்பாக சொந்த வீட்டில் வாழ்வதாகக் காட்டிக் கொள்ளலாம்.

எலிவளை தனி வளையாக இருந்தால் மட்டும் போதாது. அது சொந்த வளையாகவும் இருக்கு வேண்டும்.//

நியாயம்தான். ஆனால் கையில் காசு இல்லை. மகன் அனுப்பித்தான் சாப்பாடு என்று இருக்கும் நிலையில், மகன் பணம் அனுப்புவதை நிறுத்திவிட்டால் பெற்றோர் என்ன செய்வார்கள்?

அப்படி ஒரு சூழலில் சொந்த வீட்டிலேயே இருப்பதனால் வாடகை தர அவசியமில்லை. மத்த செலவுகளுக்கு வீட்டை அடமானம் வைத்த தொகை என்று இருப்பது கொஞ்சம் மேலானதே.

pudugaithendral said...

15 வருடங்களுக்குத்தான். அதற்கும் 10% முதல் வங்கி நிர்ணயிக்கும் வட்டியையும் கணக்கிடுகிறார்கள்.//

60 வயதிற்கு மேற்பட்ட குடிமகன்களுக்குத்தான் இந்தத் திட்டம். 60+15 75 வயது வரை இப்பணம் கிடைக்கும். வேண்டுமானால் இன்னும் 5 வருடம் கூட்டிக்கொள்ளலாமாம்.

pudugaithendral said...

இந்த்திட்டம் அனைவருக்கும் அவசியம் இராது. இப்போது ரிடையர்மெண்ட் பெனிபிட் பாலிசிகள் இருக்கின்றன. அவைகளில் நாம் டெபாசிட் செய்து வைத்துக்கொள்ளலாம்.

முந்தைய தலைமுறையினருக்கு அத்தகைய வசதிகளும் இல்லை, வருமானமும் அவ்வளவு இல்லை.

அப்படி பட்டவர்களுக்கு இத்தகைய திட்டம் இனிப்பான செய்திதானே.

pudugaithendral said...

@புதுவை அக்கா//

அம்பித்தம்பி நான் புதுகை. புதுவை அல்ல. புதுவை புதுச்சேரியை குறிக்கும்.


புதுகை என்பது புதுக்கோட்டை. :)

pudugaithendral said...

நம்ம குழந்தைகளை நல்ல படியா வளர்த்தோம்னா நாம எதுக்கு முதியோர் இல்லம் போகனும்?//

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு இதுக்கும் அப்ளிக் ஆகணும்.

நம்பிக்கைதான் வாழ்க்கை. நம்புவோம்.

pudugaithendral said...

அப்துல்லா அண்ணாச்சிக்கு நீங்க இப்படி பதில் குடுப்பீங்கனு பாத்தேன். அப்படியே பே-கேருக்கு ஒரு விளம்பரமும் பண்ண மாதிரி ஆச்சு. :))//

அப்துல்லா தம்பியும் பேரண்ட்ஸ் கிளப்பில் உறுப்பினர் அம்பி.

புதுகை.அப்துல்லா said...

தொழுகை முடிந்து இப்பொழுதுதான் வந்தேன். தங்களின் உடல்நிலை பூரண குணமடைய வேண்டுகிறேன்.

pudugaithendral said...

அப்துல்லா

இப்ப சூப்பரா இருக்கேன். அது பழசு மெசெஜ்.:))))))))))))))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ராமலக்ஷ்மி said...

நீங்கள் எங்களுக்கு இப்படி நல்ல பல விஷயங்களைச் சொல்லும் போது மட்டும் கை குடுகுடுப்பையுடன் ஆடட்டும். மற்ற நேரங்களில் ஆடாதிருக்க ஆண்டவன் அருளட்டும். உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் தென்றல்!//

மறுக்கா சொல்லிக்கறேன்ப்பா..

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

ம.சிவா,கமலாவுக்கு நன்றி.

ம.சிவா, இது தகவலுக்கான(வயசான காலத்துல துட்டு இல்லைன்னா பூவாவுக்கு ...) பதிவு. ரிசர்ச் ரிப்போர்ட் இல்லை.கீழே அவருடைய பதிலைப்பார்க்கவும்.

<==
புதுகைத் தென்றல் said...
வாங்க சிவா வாங்க,

உங்களுடைய கேள்விக்கு பதில் வேணும்னா பக்கத்தாப்ல பேங்க் ஏதும் இருந்துச்சுன்னா, டெலிபோனில் பேசி, ஆனலைனில் சாட்டி போக மீதி நேரம் இருந்தால் ஒரு எட்டு போய் கேட்டு வந்து சொல்லுங்க. எல்லோருக்கும் உபயோகமா இருக்கும்

==>
டிபிஆர் ஜோசப் இது சம்பந்தமா ஏதாவது பதிவு போட்டாத்தான் உண்டு.