Saturday, August 30, 2008

கால ஓட்டத்தில் காணாமல் போனது...

கால ஓட்டத்தில் காணாமல் போனவற்றில் ஏதாவது ஒன்றைப்பற்றி
பதிவிடுங்களேன். அப்படின்னு சுரேகா கூப்பிட்டிருக்காரு.
தலைவர் சொல்லி கேக்காம இருக்க முடியுமா!! :)

இதோ என் பதிவு.

அம்மாவுடன் பிறந்தவர்கள் 2 தம்பி, 1 தங்கை.
இதைத் தவிர அம்மாவின் பெரியம்மா பிள்ளைகள்
என்று மொத்தம் 4 மாமா, 3 சித்தி. இவர்கள்
அனைவரும் சேர்ந்தாலே வீடு திருவிழாக்கோலம்
கொண்டுவிடும்.


இந்த 8 பேருக்குள்ளும் அப்படி
ஒரு பாசம். இவர்கள் அடித்த லூட்டிகள்,
வாங்கிய அடிகள் என இவர்களின் கதைகள் தான்
சோறு சாப்பிடும் நேரக் கதைகள்.


வெகு நாட்களுக்கு அம்மாவின் உடன் பிறந்தவர்கள்
தான் அனைவரும் என்றே நினைத்திருந்தேன். எந்த
வித்தியாசமும் இருந்ததில்லை.

இப்படி ஒரு பெரிய குடும்பமாக பெரியம்மா, பெரியப்பா,
சித்தி, அத்தை போன்ற உறவுகள் தரும் இதம்,
சுகம் சுகம்.

ஆனால் இன்று இந்த உறவுகள் எல்லாம் டிக்‌ஷனரியில்
மட்டும்தான் காணலாம் போல.

நாம் இருவர் நமக்கிருவர் என்றார்கள்.

வீட்டிற்கு ஒரு மரம் போல் வீட்டிற்கு ஒரு பிள்ளை
என்றார்கள்.

இப்போது பாதி பேர் நமக்கு நாமே திட்டத்தில்தான்
இருக்கிறார்கள்.


இதனால் உறவுகள் தொலைந்து போயின.
பெரியப்பா என்றால் யார்? என்றோ மச்சினன் என்றால்
யாரு என்றோ பிள்ளைகள் கேட்கும் காலம் வெகு
தூரத்தில் இல்லை.



திருமணம் செய்து கொடுத்துவிட்டதனால் பெண்ணிற்கு
பிறந்த வீட்டிலிருந்து தொடர்பு அறுந்து விடாமல் இருக்க
தான் சீர் கொடுக்கும் பழக்கம் வைத்தார்கள்.
ஒய்யாரமாக மேள வாத்தியத்துடன் கர்வமாக
மாமன் சீர் செய்து கொண்டு வருவது இனி இருக்குமா?


அத்தைமடி மெத்தையடி எனும் சுகங்கள் பிள்ளைக்கு
கிடைக்குமா?

காலப்போக்கில் மாறிப்போன லிஸ்டில் உறவுகளும்
இருப்பது சோகம்.


லீவுக்கு அத்தை வீட்டிற்கு சென்று அவர்கள்
பிள்ளைகளுடன் விளையாடுவது என்றால்
இந்தக் கால பிள்ளைகளுக்கு தெரியாதே!


யாரும் யார் வீட்டிற்கும் போவதும் இல்லை
வருவதும் இல்லை.
யாரும் இருக்கும் இடத்தில்
இருந்துவிட்டால் எல்லாம் சொளக்யமே
என்பதை
தவறாக புரிந்து கொண்டுவிட்டார்களோ!


விருந்தினர் போற்றுதலும் இல்லை.
உறவை வளர்ப்போமும் இல்லை.
யந்திரமயமாகிப்போனது இந்த வாழ்க்கை.

இந்தப் பாட்டைக் கேட்டுட்டு போங்க.

மானூத்த மந்தையில மான் குட்டி பெத்த மயிலே
பொட்ட புள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில்
கூவும் குயிலே
தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி- அவன்
தங்க கொலுசு கொண்டு தாராண்டி...
சீர் சொமந்த சாதி சனமே
ஆறு கடந்தா ஊரு வருமே...

மாமன் பாட்டு:


எழுத நான் அழைப்பது 2 பேரை:

1. பரிசல்காரன்
2. கானா பிரபா.

15 comments:

மங்களூர் சிவா said...

வந்துகிட்டே இருக்கேன் ஹைதராபாத்-க்கு என் மருமவன், மருமவகிட்ட சொல்லுங்க!!

Aruna said...

அத்தி அத்திக்காய் அத்தை மடி மேல
ஆடிக் கிடந்தால் சுகமல்லோ....
தத்தி தத்திக்காய் தத்தை மொழி பேசும் தங்கக் கிளிகள் நாமல்லோ...
நாங்களெல்லாம் ஓருயிர்கள் நடந்து வந்தால் ஓர் நிழல்தான்....... ம்ம்ம்ம்ம் இதெல்லாம் யாருக்கு புரியப் போகுது????
அன்புடன் அருணா

pudugaithendral said...

இப்ப வர்றது சரி சிவா,

சில வருடங்கள் கழித்து அம்ருதா கல்யாணத்தின் போது கண்டிப்பா வந்திடுங்க.

மாமன் சீருக்காக கூப்பிடவில்லை. எங்கள் வழக்கத்தில் தாய்மாமன்கள் மணமகளை தூக்கி வந்து மணமேடையில் உட்கார வைக்க வேண்டும். அதுக்கு அம்புட்டு மாமன் களும் ஆஜர் ஆகிப்புடணும். சொல்லிட்டேன்.

pudugaithendral said...

வாங்க அருணா,

....... ம்ம்ம்ம்ம் இதெல்லாம் யாருக்கு புரியப் போகுது//

ஆமாங்க அதுதான் எனக்கும் வருத்தம்.

கானா பிரபா said...

அவ்வ்வ் நானுமா, ஏற்கனவே 3 சங்கிலித் தொடர் பாக்கி, பார்க்கலாம்
;)

சுரேகா.. said...

http://surekaa.blogspot.com/2007/12/blog-post_12.html

இதை அப்பவே சொல்லிப்புட்டோமுல்ல!

அதுக்கும் வந்து பின்னூட்டமெல்லாம் போட்டிருக்கீங்க!

கரெக்டா சொல்லியிருக்கீங்க!

இந்த நூலை வச்சு...அடுத்த 2 பேரைக்கட்டிப்புட்டீங்க!

பரிசல்காரன் said...

//எங்கள் வழக்கத்தில் தாய்மாமன்கள் மணமகளை தூக்கி வந்து மணமேடையில் உட்கார வைக்க வேண்டும். அதுக்கு அம்புட்டு மாமன் களும் ஆஜர் ஆகிப்புடணும். சொல்லிட்டேன்.//

கண்டிப்பா வருவோம்!
ஆனா யார் இந்த சீர் செய்றதுங்கறதுல வெட்டுகுத்துல்ல நடக்கும்?

பரிசல்காரன் said...

உங்கள் ஆணைக்கு கட்டுப்படுகிறேன்.

இந்த வாரம் ஒரு நாளுக்கான மேட்டர் தயார்...!

புதுகை.அப்துல்லா said...

அக்கா எம் புள்ளைகளுக்கு இந்தப் பாசம் விட்டு போய்டக்கூடாதுன்னு தான் நானும் என் மனைவியும் முடிவு செய்து நான் மாதம் 6 இலக்கத்தில் சம்பளம் வாங்கியும் கூட அவள் ஊரிலும் நான் சென்னையிலுமாய் இருக்கிறோம். :(

pudugaithendral said...

அவ்வ்வ் நானுமா,//

நீங்களும் தான் பிரபா

எப்பப்பாரு போட்டி வெச்சுகிட்டே இருக்கீங்க. ஒரு மாறுதலா இந்தப் பதிவை போடுங்க.

pudugaithendral said...

கரெக்டா சொல்லியிருக்கீங்க!


நன்றி சுரேகா.

pudugaithendral said...

ஆனா யார் இந்த சீர் செய்றதுங்கறதுல வெட்டுகுத்துல்ல நடக்கும்?//

வெட்டுக்குத்து ஆகாது பரிசல்காரன்.

கூடையைத் தூக்கிகிட்டு வர்றதுதானே. ஆளுக்கு ஒரு கை பிடிச்சா போச்சு!

:))))))))))))))))))

pudugaithendral said...

இந்த வாரம் ஒரு நாளுக்கான மேட்டர் தயார்...!

நன்றி.

பதிவு போட்டுட்டு சொல்லுங்க.

pudugaithendral said...

வாங்க அப்துல்லா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

//
கண்டிப்பா வருவோம்!
ஆனா யார் இந்த சீர் செய்றதுங்கறதுல வெட்டுகுத்துல்ல நடக்கும்?//
ஆகா அருமை அண்ணா...:)
புதுகைத்தென்றல் பாத்துக்கிட்டீங்கள்ள.. பத்திரம் இது ரத்தபூமி .. தெரியாம காலைவச்சிட்டீங்க..