நானானி உங்கள் பிறந்த நாளுக்கு வித்தியாசமான( சற்று
தாமதமான) விருந்து
இது. வடை, பாயசத்தோடு கொடுதால் தான் விருந்தா.
எனக்கு மிகவும் பிடித்ததை(உங்களுக்கு நிச்சயம்
பிடிக்கும்) விருந்தாக கொடுக்கிறேன்.
மோர்க்களி:
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 3/4 கப்,
புளித்த மோர் - 1 கப்
உப்பு, தேவையான அளவு.
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்க.
மோர் மிளகாய் - 4.
எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை:
அரிசிமாவை, மோரில் உப்பு போட்டு கரைத்து
வைத்துக்கொள்ளவும். (கொஞ்சம் நீர்க்க
இருக்க வேண்டும்)
வாணலியில் எண்ணெய் விட்டு மோர்மிளகாயை
வறுத்துக்கொண்டு, கடுகு, உளுத்தம்பருப்பு,
கறிவேப்பிலை தாளித்து, கரைத்து
வைத்திருக்கும் மாவை ஊற்றி நன்றாக
கிளறவும். பக்கங்களில் ஒட்டாமல் வந்ததும்
தட்டில் ஊற்றி வெட்டி கொள்ளலாம்.
( நான் தட்டி ஊற்று ஆறும் வரையெல்லாம்
வெயிட்ட மாட்டேன். கொதிக்க கொதிக்க
தட்டில் போட்டுக்கொண்டு ஒற்றை விரலால்
எடுத்து சாப்பிடாவிட்டால் மோர்க்களி
சாப்பிட்டதுமாதிரி இருக்காது)
மோர்க்களிக்கு சிறந்த காம்பினேஷன்
வெந்தயக் குழம்பு.
புளி - 1 சிறிய எலுமிச்சம்பழ அளவு
உப்பு - 1 1/2 ஸ்பூன்.
சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
கடுகு - கால் ஸ்பூன்
வற்றல் மிளகாய் - 4
பெருங்காயம் - 1 துண்டு
உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை, தாளிக்க
உளுந்து அப்பளம் 6
எண்ணெய் தேவையான அளவு (ந.எண்ணெய்
வாசனை ஊரைத்தூக்கும்)
செய்முறை:
புளியை ஊறவைத்து
(2 டம்பளர் அளவு தண்ணீர் வருமாறு)
புளிக்கரைசல் தயாரித்துக்
கொள்ளவும்.
அப்பளத்தை மடித்து வெட்டிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி
அப்பளத்தை பொறித்துவைத்துக்கொள்ளவும்.
மீதி இருக்கும் எண்ணெயில்
கடுகு, உளுத்தம் பருப்பு,
துவரம் பருப்பு, கறிவேப்பிலை
பெருங்காயம் தாளித்து சாம்பார்பொடி
உப்பு சேர்த்து பிரட்டவும்.
கரைத்து வைத்திருக்கும் புளிகரைசலை
ஊற்றி 10 நிமிடங்கள் கொதிக்க
விடவும்.
இறக்கி வைத்து பொறித்து
வைத்துள்ள அப்பளத்தை போட்டால்
சுவையான அப்பள வெந்தயக் குழம்பு ரெடி.
தாமதமான) விருந்து
இது. வடை, பாயசத்தோடு கொடுதால் தான் விருந்தா.
எனக்கு மிகவும் பிடித்ததை(உங்களுக்கு நிச்சயம்
பிடிக்கும்) விருந்தாக கொடுக்கிறேன்.
மோர்க்களி:
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 3/4 கப்,
புளித்த மோர் - 1 கப்
உப்பு, தேவையான அளவு.
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்க.
மோர் மிளகாய் - 4.
எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை:
அரிசிமாவை, மோரில் உப்பு போட்டு கரைத்து
வைத்துக்கொள்ளவும். (கொஞ்சம் நீர்க்க
இருக்க வேண்டும்)
வாணலியில் எண்ணெய் விட்டு மோர்மிளகாயை
வறுத்துக்கொண்டு, கடுகு, உளுத்தம்பருப்பு,
கறிவேப்பிலை தாளித்து, கரைத்து
வைத்திருக்கும் மாவை ஊற்றி நன்றாக
கிளறவும். பக்கங்களில் ஒட்டாமல் வந்ததும்
தட்டில் ஊற்றி வெட்டி கொள்ளலாம்.
( நான் தட்டி ஊற்று ஆறும் வரையெல்லாம்
வெயிட்ட மாட்டேன். கொதிக்க கொதிக்க
தட்டில் போட்டுக்கொண்டு ஒற்றை விரலால்
எடுத்து சாப்பிடாவிட்டால் மோர்க்களி
சாப்பிட்டதுமாதிரி இருக்காது)
மோர்க்களிக்கு சிறந்த காம்பினேஷன்
வெந்தயக் குழம்பு.
புளி - 1 சிறிய எலுமிச்சம்பழ அளவு
உப்பு - 1 1/2 ஸ்பூன்.
சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
கடுகு - கால் ஸ்பூன்
வற்றல் மிளகாய் - 4
பெருங்காயம் - 1 துண்டு
உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை, தாளிக்க
உளுந்து அப்பளம் 6
எண்ணெய் தேவையான அளவு (ந.எண்ணெய்
வாசனை ஊரைத்தூக்கும்)
செய்முறை:
புளியை ஊறவைத்து
(2 டம்பளர் அளவு தண்ணீர் வருமாறு)
புளிக்கரைசல் தயாரித்துக்
கொள்ளவும்.
அப்பளத்தை மடித்து வெட்டிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி
அப்பளத்தை பொறித்துவைத்துக்கொள்ளவும்.
மீதி இருக்கும் எண்ணெயில்
கடுகு, உளுத்தம் பருப்பு,
துவரம் பருப்பு, கறிவேப்பிலை
பெருங்காயம் தாளித்து சாம்பார்பொடி
உப்பு சேர்த்து பிரட்டவும்.
கரைத்து வைத்திருக்கும் புளிகரைசலை
ஊற்றி 10 நிமிடங்கள் கொதிக்க
விடவும்.
இறக்கி வைத்து பொறித்து
வைத்துள்ள அப்பளத்தை போட்டால்
சுவையான அப்பள வெந்தயக் குழம்பு ரெடி.
13 comments:
"நானானிக்காக ஒரு விருந்து" என்றால் முதலில் உரிமையோடு வந்து
முதல் பீஸை எடுத்துக் கொள்கிறேன். வெந்தயக் குழம்பு காம்பினேஷனுடன் சூப்பர். நானும் செய்து பார்க்கிறேன் கண்டிப்பாக.
எனக்கும் ஒரு பகுதி பார்சல்... பதிவைப் படிக்கலை... நமக்கு இதெல்லாம் தேவையில்லாததாச்சே
உங்களுக்கு இல்லாத உரிமையா.
செஞ்சு பாத்துட்டு சொல்லுங்க.
மழைக்காலத்துக்கு சூப்பரா இருக்கும்.
இப்பிடி வெரைட்டி வெரைட்டியா சமையல் பதிவு எழுதி வயித்த எரிச்சலை கிளப்பாதீங்க
:((
காய்ஞ்சு போய் இருக்கோம்
:((
சூப்பரா இருக்குதுங்க. நானும் செஞ்சு பார்க்கிறேன்.
அழகு முதல் படம்..
ரெசிப்பி எல்லாம் குறிப்பெடுத்து வெச்சுக்கோங்க சிவா,
பிற்காலத்துக்கு உபயோகமா இருக்கும்.
:)
செஞ்சு பாருங்க தெய்வ சுகந்தி.
வருகைக்கு நன்றி.
வாங்க தூயா,
வருகைக்கு நன்றி.
எனக்கும் ஒரு பகுதி பார்சல்...//
பார்சல் அனுப்பறதை பத்தி பிரச்சனையில்லை.//
பதிவைப் படிக்கலை... நமக்கு இதெல்லாம் தேவையில்லாததாச்சே//
இப்படி சொன்னது மனசுக்கு கஷ்டமா இருக்கு. :(
///புதுகைத் தென்றல் said...
இப்படி சொன்னது மனசுக்கு கஷ்டமா இருக்கு. :(///
அக்கா ஃபீல் பண்ணாதீங்க,... என்ன சமையல் பண்ணி இருக்கீங்க என்று பார்த்து விட்டேன். செய்முறைகளைப் படிக்கவில்லை என்று சொன்னேன். சமைக்கத் தெரியாததால் படித்தும் வீண் தான். அதனால் தான் சொன்னேன்.
அரிசி மாவை மோரில் உப்பு போட்டு கரைத்து பண்ணுவதற்கு பதில்
புழுங்கலரிசியை நான்கு மணிநேரம் ஊறவைத்து மையாக அரைத்து (நீர்க்க அரைக்க வேண்டும்)
மற்றது நீங்கள் கூறியது போல செய்தால் இன்னும் சுவை அதிகமாக இருகும்
புதுகைத் தென்றல்!!
எனக்காக செய்த விருந்து மணக்குது.
உடம்பு சரியில்லாத்தால் தாமதமான வருகை. பொறுக்க வேண்டும். நானும் விரைவில் கலந்து கொள்வேன்.
மோர்கழி என் மாமியார் செய்வார்கள். நீங்கள் சொன்னது போல் விரலால் வழித்து உண்பது சுவைதான்.நன்றி!!
Post a Comment