இதை வாங்கினேன் உங்க கிட்ட காட்டவே இல்லையே!
ராமகிருஷ்ணா ஆச்ரமத்தினரால் பராமரிக்கப்படும்
சிவன் கோவில் போகும் வழியில் இந்த மூங்கில்
பூங்கொத்துக்கள் விற்றார்கள். அழகாக இருந்தது
2 வாங்கிக்கொண்டேன்.
இதற்கு முந்தயப் பதிவிற்கு
திரும்பிய படகு வேறெங்கும் போகவில்லை. சாப்பிட
அழைத்துச் சென்றார்கள். கரையோரம் போல் அழகாக
இருந்த திட்டிற்கு அழைத்துச் சென்றாலும், வெயில்
அதிகமாக இருந்ததால் படகிலேயே உணவு
பரிமாறினார்கள்.
ஆஹோ, ஓஹோ ரகம் இல்லாவிட்டாலும் அந்த
வேளையில் பசிக்கு ருசியாகவே இருந்தது.
பிரிஞ்சி ரைஸ், சாதம், உருளைக்கிழங்கு மசாலா,
காலிஃபிளவர் மஞ்சூரியன், ஆந்திரா பருப்பு,
தயிர் இதுதான் மதிய உணவு.
(படகு புக் செய்யும் போதே அசைவ உணவு
வேண்டும் என்று சொன்னால் அதற்குத் தகுந்த
படகில் உங்களை பயணிக்க வைப்பார்கள்.)
உண்ட மயக்கம் தொண்டனுக்கே உண்டு. நாமெல்லாம்
எம்மாத்திரம். சாப்பாட்டிற்கு பிறகு படகு
அழகான இயற்கை வளம் நிறைந்த இடத்தில்
ரவுண்ட் அடித்தாலும் அனைவருக்கும் செம
தூக்கம்.
எதிர் வரும் தண்ணீரை கிழித்துக்கொண்டு படகு
செல்வது சவாலே. அதனால் வேகம் கொஞ்சம்
குறைந்து (படகில் வேறு 100ற்கும் மேற்பட்டவர்கள்
இருந்தோம், பாரம் அதிகம்) படகு 3 மணி நேரத்தில்
ராமகிரியை அடைந்தது.
நடுவில் மிக்ஸர் கொடுத்து சூடாக டீ மறுபடி கொடுத்தார்கள்
டீ குடித்ததும் தான் அனைவருக்கும் சுறுசுறுப்பு வந்தது.
படகில் இருந்து இறங்கி யோகராமரை தரிசிக்க
ஓடினோம். பாதி படி ஏறியதும் தான் கோவில்
மூடியிருப்பது தெரிந்தது. :( இறங்கும் போது
”அம்மா! இங்கே வந்து பாருங்க!” என்று
ஆஷிஷ் காட்டிய இடத்தில் பாம்பு சட்டை இருந்தது.
6 மணிக்கே இருட்டிக்கொண்டு பயமுறுத்தியது காடு.
ஊய் என்று காற்றின் சத்தம். ரோடில் விளக்கே
இல்லை. மரங்களின் வாசம் என்று திகில் பயணமாகவே
இருந்தது. இருட்டை படமாக்கி இருக்கேன் பாருங்கள்.
எங்கும் கும்மிருட்டு.
வழியில் இருக்கும் கிராமத்துக்காரர்கள் என்ன செய்வார்கள்?
எப்படி வாழ்கிறார்கள்? என்று பேசிக்கொண்டே, பிள்ளைகள்
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டு வந்தோம்.
(பத்ராசலம் - ராமகிரி போக வர வண்டி பேசிக்கொள்வது
நல்லது.ராமகிரியில் வண்டி ஏதும் கிடையாது. பத்ராசலத்திலிருந்தே
டாக்சி அல்லது ஆடோ பேசிக்கொள்ள வேண்டும்.
ஆடோ போக வர 300 ரூபாய் ஆகிறது.
எங்கள் ஆட்டோக்காரர் ரெஹ்மத் காலையில் எங்களை
இறக்கி விட்டுவிட்டு சரியாக 5 மணிக்கு அழைத்துச்
செல்ல வந்துவிட்டார்.)
சுழித்துக்கொண்டு ஓடும் கோதாவரியை நான் எனது
N73 மொபைலில் படம் பிடித்தது இங்கே
யூ ட்யூபில்.
கோதாவரியில் ஜொலிக்கும் அந்தி நேரச் சூரியன்.
படகு சவாரிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி
எண்:
உமா மகேஷ்வர் (இவரை அனைவரும் ஓமர் என்று அழைக்கிறார்கள்0
094411 32744,098662 05766,099856 99249,
098483 17897.
காலை உணவு, மதியச் சாப்பாடு, டீ எல்லாம் சேர்த்த
பயணத்திற்கு தலா 250/- ரூபாய் ஆகிறது.
குழந்தைகளுக்கு 150 ரூபாய்.
சரியாக மாலை 7.30 மணிக்கு பத்ராசலம் வந்தடைந்தோம்.
பயங்கர களைப்பாக இருந்தது. மெயின் ரோடில் ஒரு
ஹோட்டலில் சாப்பிட்டோம். (நோன்பு துறக்கும் நேரமாக
இருந்ததால் ஆட்டோ தம்பி ரெஹ்மத்தையும் உடன்
சாப்பிட அழைத்தோம் அவரும் வந்து உணவருந்தினார்.)
சாப்பிட்டு முடித்ததும் எங்களை கெஸ்ட் ஹவுஸில்
இறக்கிவிட்டார். அடுத்த நாள் பயணத்திற்கும் அவரையே
வரச்சொல்லிவிட்டு போய் படுத்ததுதான் தெரியும்.
அடித்து போட்டாற்போல் தூங்கினோம். அடுத்து நாங்கள்
எங்கெல்லாம் சென்றோம்? அங்கே என்னவெல்லாம்
சிறப்பு? தொடரும் போட்டுகிட்டு அடுத்த பதிவில்
எல்லாம் விவரமா சொல்றேன்.
6 comments:
சுவாரசியம்...:-)
(நோன்பு துறக்கும் நேரமாக
இருந்ததால் ஆட்டோ தம்பி ரெஹ்மத்தையும் உடன்
சாப்பிட அழைத்தோம் அவரும் வந்து உணவருந்தினார்.)
//
அக்கா உங்கள் பதிவுகளை ஆரம்பத்தில் இருந்தே படிப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும்....வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உங்க பதிவுகளை மத நல்லிணக்க பதிவாக்கி விடுகின்றீர்கள்
:)
வாங்க சந்தனமுல்லை.
வருகைக்கு மிக்க நன்றி.
....வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உங்க பதிவுகளை மத நல்லிணக்க பதிவாக்கி விடுகின்றீர்கள்//
அப்துல்லா,
நம்ம ஊருல எல்லோரும் தாயா பிள்ளையா பழகினவங்கதானே. ரத்தத்தில் ஊறியது மாத்த முடியுமா!
இந்த விதத்தில் நம் ஊரு சற்று வித்தியாசமானது என்பதில் எனக்கு எப்போதும் பெருமை உண்டு.
அனுபவங்களை அழகாகப் பதிந்திருக்கிறீர்கள். படங்கள் அருமை, குறிப்பாக //கோதாவரியில் ஜொலிக்கும் அந்திச் சூரியன்//.
வாங்க ராமலக்ஷ்மி,
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
Post a Comment