இதைப் பற்றி பதிவு எழுதலாமா வேண்டாமான்னு யோசிச்சேன்.
இல்லை யாராவது இதைப் பத்தி சொல்லியே ஆகணும்னு
நினைச்சேன் எழுதிட்டேன்.
அதுக்கு முன்னாடி நீங்க எல்லோரும் ஒரு முறை
படிக்க வேண்டிய பதிவு இங்கே இருக்கு
இந்தப் பதிவுக்காக என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சஞ்சய்.
சரி நான் சொல்ல நினைச்ச பதிவுக்கு முன்னாடி
என்னுடைய சுயபுராணம் கொஞ்சம்.
திருமணத்திற்கு முன்பு வரை வீட்டில் பாவாடை,சட்டைதான்
அணிவேன். சில தினங்கள் தாவணி. தாவணி அணிந்திருந்தால்
மட்டுமே வீட்டு வாசல்படி தாண்டலாம்.
வீட்டிற்கு விருந்தினர் (அப்பாவைப் பார்க்க தினமும் யாரேனும்
வருவார்கள்) வந்தால் உடன் பாவாடை, சட்டையை மாற்றி
கொள்ள வேண்டும்.
மும்பையில் மாமாவீட்டிலும் இதேதான் நிலை.
அங்கேயும் பாவாடை சட்டைதான் வீட்டில்.
நைட்டி அணிந்தால் அதன் மேல் இன்னொரு சட்டை
அணிவேன். இந்த உடையுடன் வாசல்படி தாண்டினால்
மாமா கொன்றே விடுவார்.
திருமணத்திற்கு பிறகும் இந்தப் பழக்கம் தான் தொடர்கிறது.
தவிர வீட்டில் வேறு உடை அணிந்திருந்தால்
வெளியில் போகும் போது மாற்ற
வேண்டும் என்ற பிரச்சனையிலிருந்து தப்பிக்க
சுடிதார் மாத்திரமே அணிவேன்.
இதனாலேயே நைட்டி அணிவது அதிகம் பழக்கம்
இல்லாமலேயே போய்விட்டது.
என் புராணம் இத்தோடு முடிந்தது.
பெண்களிடம் ஒரு கேள்வி?
நைட்டி: இதன் பெயரே சொல்கிறது இது இரவு உடை
என்று. பிறகு இதை நாளெல்லாம் எப்படி போட்டுக்கொள்கிறார்கள்??!!!
மற்றவர்கள் பேசுவது இருக்கட்டும். நமக்கு நம் உடை கண்ணியமாக
இருக்க வேண்டாமா? வீட்டில் அண்ணனோ, கணவரோ
யாரேனும் ஒரு ஆண்மகன் இருக்கத்தானே செய்கிறார்கள்.
அவர்கள் எதிரில் நாளெல்லாம் இப்படி நைட்டியில் சுற்றுவது
நியாயமா?
இன்னும் சிலர் இந்த உடையுடன் வீதி வரை வருவார்கள்.
மேலே துப்பட்டா போட்டுக்கொண்டால் போதுமா???????
நம் வீட்டு வேலைக்காரர்கள், பிளம்பர், பேப்பர்காரர்
(கொரியர் பாய்) என யாரேனும் வீட்டிற்கு வந்து செல்வார்கள்.
இவர்கள் எதிரில் நைட்டியுடன் செல்வது நம்
மதிப்பை நாமே குறைத்துக்கொள்வது போல்.
(இரவின் தனிமையில் உங்கள் அறைக்குள்
ஸ்லீவ்லெஸ் கூட போட்டுக்கொள்ளுங்கள்) வெளியில்
நைட்டி வேண்டாமே!!
மிக உயர்ந்த உடையில் உலாவ வேண்டாம்.
குளித்து முடித்து, கொஞ்சம் நல்ல சுடிதாராக
(இப்போ எல்லோரும் போட்டுக்கொள்கிறார்கள்
என்பதால் சொல்கிறேன்) போட்டுக்கொண்டு
தலை வாரி, கொஞ்சம் பவுடர் போட்டு
ஃபரஷாக வளைய வாருங்கள். உங்களுக்கே
வித்தியாசம் தெரியும்.
(மேட்சிங் இல்லாமல் அணியவேண்டாம்.
சாயம் போனதையும் தவிருங்கள்)
வீட்டிற்கு வெளியே மட்டுமல்ல வீட்டிற்குள்ளும்
மனிதர்கள் இருக்கிறார்கள்.
**************************************************
இந்தக் கேள்வி ஆண்களிடம்?
ஏன் நண்பர்களே இப்படி மாறிட்டீங்க?!!!
ஸ்லிம்ரன் ரசிகர் ஒருவர் யாராவதுதான்
இதைக் கண்டுபிடித்திருக்க வேண்டும்.
உடை உடுப்பது அவரவர் விருப்பம்.
இதில் நாம் தலையிட முடியாது.
ஆனாலும் இந்த ஸ்டைல் கண்ணியமாக இல்லை. :(
பெண்கள் இவ்வாறு உடை உடுத்தியபோது
எழுந்த கண்டணங்கள் (ஆனாலும்
சிலம் மாறவேயில்லை ) எத்தனை.
இப்போ ஆண்கள் செய்வதால் யாரும்
எதுவும் கேட்பதே இல்லை.
எதைச் சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா?
DANGEROUS LOW HIP PANTS .
இதைத்தான் சொல்கிறேன். சுத்தமா நல்லா இல்லை.
சிறியவர், பெரியவர் என்று வயது
வித்தியாசமே இல்லாமல் இந்த வியாதி தொற்றிக்கொண்டு
ஆட்டுவிக்கிறது. கணுக்கால்களில் கேதரிங்
ஆக சேர்ந்து கொள்ளும் அளவிற்கு
வெரி வெரி லோ ஹிப்பாக போடுகிறீர்களே
இது நியாயாமா?
பல சமயங்களில் பேண்ட் கழன்று விழுந்து விடுமோ
என்று பயமாக இருக்கிறது. ஹிப் சைஸ்
எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பது ரொம்ப
டேஞ்சரான விடயம்.
உள்ளாடை தெரியும் அளவிற்கு உடை
அணிவது அழகல்ல.
இது ஆண்/பெண் இருவருக்கும் பொருந்தும்.
ஆள்பாதி ஆடைபாதி என்பார்கள். நாம்
உடுக்கும் ஆடையில், உடுக்கும் வகையில்
தான் நம் கண்ணியம், நம் மரியாதை
இருக்கிறது.
தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும்
தவறு தவறுதான்..
*********************************************************
எனது இரட்டைச் சத பதிவு இது.
எனது 200ஆவது பதிவிற்கு வந்திருந்த உங்களுக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
புதுகைத் தென்றல்
54 comments:
// எனது இரட்டைச் சத பதிவு இது //
இரட்டைச் சதத்துக்கு வாழ்த்துக்கள்!!!
200வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... கொஞ்சம் பிற்போக்குத் தனம் தெரிகிறது. உள்ளாடை தெரிவது போல் உடை அணிப்வது அழகல்ல என்பதில் உடன் படுகிறேன். அது மிகவும் ஆபத்தானது கூட.. ( ஆண் பெண் இருவருக்கும் தான்).. தவறு செய்ய தூண்டுவதே அது போன்று உடை அணிவது தான். பார்வை தவறு என்று பெண்ணியவாதிகள் வாதிடுவார்களோ? :))
எனகென்னவோ நைட்டி அணிவது நாகரிகக் குறைவாகவோ அல்லது ஆபாசமாகவோ தெரியவில்லை... வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அது சௌகரியமான உடை தான். அதுவும் இப்போதெல்லாம் அதிகாரப் பூர்வ மின் வெட்டு அறிவித்து இருக்கிறார்கள். சுடிதார் போன்ற சற்று இறுக்கமான உடை அல்லது சேலை மற்றும் இத்தியாதிகள் அணிந்து வீட்டில் இருபது கொஞ்சம் அசௌகரியமானது தான்.
ஆனால் நைட்டி அணிந்து கொண்டு வீதியில் நடமாடுவதை தவிர்க்கலாம்.
.... அய்யகோ இந்த பதிவு மங்களூர் மைனர் கண்ணில் படாமல் இருக்கனும்.. பாவம் நொந்து போய்டுவார் மனுஷன்.. :P
வாங்க விஜய்
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
200வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... //
நன்றி.
எனகென்னவோ நைட்டி அணிவது நாகரிகக் குறைவாகவோ அல்லது ஆபாசமாகவோ தெரியவில்லை//
ம்ம்ம் இது உங்கள் கருத்து. பலரின் கருத்தை பல வருடங்களாக கேட்டுத்தான் இந்தப் பதிவை எழுதினேன் சஞ்சய்.
சுடிதார் போன்ற சற்று இறுக்கமான உடை//
ஏன் இறுக்கமா தைக்கணும்?
நைட்டியில் பல வகைகள் இருப்பது போல் சுடிதாரிலும் பல மாடல்கள் இருக்கு சஞ்சய். :))
அல்லது சேலை மற்றும் இத்தியாதிகள் அணிந்து வீட்டில் இருபது கொஞ்சம் அசௌகரியமானது தான். /
சேலை அணிவது கஷ்டம் நான் இல்லை என்று சொல்லவில்லை.
200 வது பதிவுக்கு மட்டும் வாழ்த்துச் சொல்லிக்கிறேன்.
உடை விடயத்தைப் பற்றி பேசினால் - ஏதாவது ஒரு ஈயவாதியாக்கிடுவாங்க. ஆபாசம் உடைல இல்ல பாக்கறவங்க கண்ணுலன்னு வியாக்கினம் எல்லாம் வரும். எதுக்கு வம்பு.
கண்ணியமான உடை எதுவாய் இருந்தாலும் அது எல்லாருக்கும் நல்லதே. அதுக்காக பெட்ஷீட் எடுத்து உடம்பெல்லாம் போத்திக்கனும்னும் சொல்லல..
அய்யோ பேச மாட்டேன்னு சொல்லிட்டு பேசிட்டேனே... என்னை ஈயவாதியாக்கிடுவாங்களா ?
200 வது பதிவுக்கு மட்டும் வாழ்த்துச் சொல்லிக்கிறேன்.//
நன்றி.ஜீவ்ஸ்
உடை விடயத்தைப் பற்றி பேசினால் - ஏதாவது ஒரு ஈயவாதியாக்கிடுவாங்க. //
ஆஹா என்னியையும் ஈயவாதியாக்கிடுவாங்களோ. நடக்கட்டும்
கண்ணியமான உடை எதுவாய் இருந்தாலும் அது எல்லாருக்கும் நல்லதே. அதுக்காக பெட்ஷீட் எடுத்து உடம்பெல்லாம் போத்திக்கனும்னும் சொல்லல..
நானும் அதைத்தான் சொல்றேன்.
இரட்டை சதமடித்த அக்காவுக்கு வாழ்த்துக்கள். உங்களை என் பதிவுக்கு வாங்கன்னு சொல்றதுக்கு முன்னாடி வந்து பார்த்துட்டீங்க. நன்றி அக்கா.
//
ஆண்களின் லோஹிப் பேண்ட்ஸ் - தவறு//
என்னாது ஆண்களின் லோ ஹிப்பா? நாங்க எப்போ இதெல்லாம் போட்டோம்? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((
வாங்க ஜோசப்,
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
என்னாது ஆண்களின் லோ ஹிப்பா? நாங்க எப்போ இதெல்லாம் போட்டோம்? //
அட. நீங்க போடாட்டி என்ன சஞ்சய். மத்தவங்க போடறதை பாத்ததில்லையா.
(என்னது கண்கள் பெண்கள் இருக்கும் பக்கம் மாத்திரம் தான் போகுமா!! சரி சரி. :))) )
வாழ்த்துக்கள்!
200 வது பதிவுக்கு மட்டும் வாழ்த்து சொல்லிக்கிறேன்.
டபுள் செஞ்சுரி அடித்த பதிவுலக வீராங்கனைக்கு வாழ்த்துக்கள்
இரட்டைச் சதத்துக்கு வாழ்த்துக்கள்!!!
இரட்டை செஞ்சரிக்கு வாழ்த்துக்கள் கொழும்பு ஊடாக ஆந்திரா வரை போயாச்சு, 2000 ஆமவது பதிவு ஐ.நாவில் அமையட்டும், அட்லீஸ் அமைந்தகரையாவது ;-)
//
SanJai said...
.... அய்யகோ இந்த பதிவு மங்களூர் மைனர் கண்ணில் படாமல் இருக்கனும்.. பாவம் நொந்து போய்டுவார் மனுஷன்.. :P
//
ஏன்யா இந்த கொலவெறி????
நல்லா இருக்கு நல்ல முயற்சி இதுக்கெல்லாம் திருந்திட போறாங்களா என்ன
ம் நல்லா இருக்கு ஆனா இதையே ஆம்பளைங்க எழுதினா தாளிச்சிட மாட்டாங்க!?!?
வாங்க நிஜமா நல்லவன்,
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
பதிவுலக வீராங்கனைக்கு வாழ்த்துக்கள்//
200க்கே வீராங்கனையா. 600 போஸ்ட் போட்டவங்க இருக்காங்க சாமி.
நன்றி.
வாங்க சிவா,
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
வாங்க பிரபா,
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
2000 ஆமவது பதிவு ஐ.நாவில் அமையட்டும், அட்லீஸ் அமைந்தகரையாவது ;-)
ஐ.நா யோசிக்கலாம். அமைந்தகரை வேணாம். (அது சென்னையில இருக்கே) :)))))
இதுக்கெல்லாம் திருந்திட போறாங்களா என்ன//
நல்ல கேள்வி. தான் செய்வது தவறுன்னு உணர்ந்தால் திருத்திக்கொள்ளலாம்.
ஆம்பளைங்க எழுதினா தாளிச்சிட மாட்டாங்க!?!?//
கண்டிப்பா தாளிப்பு இருந்திருக்கும். :))))))
200க்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். 200 எழுத எனக்கெல்லாம் ஒரு 4 வருசமாவது ஆகும் என்பதால் இது ஒரு சாதனைதான். வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். உங்கள் ப்ளாகில் பின்னூட்டமிட முடியவில்லை. அதனால் இங்கே.
~ வெண்பூ
தங்களின் பாராட்டுக்கு நன்றி வெண்பூ.
200க்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். 200 எழுத எனக்கெல்லாம் ஒரு 4 வருசமாவது ஆகும் என்பதால் இது ஒரு சாதனைதான். வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.. புதுகைத்தென்றல்..
பட் நைட்டி பொருத்தவரை நான் உங்க கருத்துக்கு மாற்று கருத்து கொண்டவள்.
ரொம்ப காலமா நம்ம கிராமத்து சின்ன ஊரு பெண்களுக்கு கவலையில்லாத மாற்று உடையாக மாறீயிருப்பது இந்த நைட்டி.. அதை சிலர் பயன்படுத்த தெரியாம பயன்படுத்தறாங்க..
உள்ளே சேலையைப்போலவே உள்ளே உள்பாவடையும்.. மேலே ஸிலிப்ஸ் ம், போட்டு உபயோகப்படுத்துவது சேலையை விட சிறந்த் உடையே..
( நான் நைட்டி வாங்கியது 9 த் படிக்கும் போது அப்பவே இதான் பழக்கம் )
இன்னும் கிராமத்துல பெண்களை பார்த்தீங்கன்னா அழகா துண்டு ஒன்னை போட்டுட்டு தண்ணி எடுக்கலேர்ந்து அழகா சைக்கிள்ள கூட போயிட்டுவராங்க.. காசும் கம்மி அவங்களுக்கு ..
என்னமோ போங்க..
எங்க தில்லியில் சுடிதாரையே எத்தனை மோசமா போடறதுன்னு பெரிய போட்டி நடக்குது.. இதுல எந்த உடைன்னு இல்லைப்பா.. அதை எப்படி அணியுறோன்னு தான் பார்க்கனும்..
இப்ப அடுத்த தலைமுறைகளெல்லாம் நைட்டியை விட்டு காட்டன் ஸ்கர்ட் அண்ட் சர்ட் க்கு மாறிட்டாங்களே இலங்கைக்காரங்க மாதிரி.. கவலைய விடுங்க..
வாழ்த்துக்கள்.. //
வாங்க கயல்விழி,
நன்றி.
மாற்று கருத்து கொண்டவள்.//
தப்பில்லையே.
நைட்டி போட்ட போது அதற்கு மேல் சட்டை ஒன்று மாட்டிக்கொள்வேன்.//
உள்ளே உள்பாவடையும்.. மேலே ஸிலிப்ஸ் ம், போட்டு உபயோகப்படுத்துவது //
இதுதானே அங்கே மிஸ்ஸிங். புடவையையே அழகா கட்டலாம். செக்ஸியாவும் கட்டலாம் பாருங்க.
காட்டன் ஸ்கர்ட் அண்ட் சர்ட் க்கு மாறிட்டாங்களே//
இப்பத்தான் மாறினாங்களா? நான் ரொம்ப வருஷமா அப்படித்தான் இருக்கேன். எனக்கு மிகவும் பிடித்த உடை. பாவாடை சட்டை.
அக்காவின் இரட்டை சதத்துக்கு வாழ்த்துக்கள்!
(ஏற்கனவே வலைச்சரத்துலயும் சொல்லியாச்சு... ;) )
எடுத்துக் கொண்ட நல்ல தேவையான விஷ்யம் தான்... :)
அக்கா உங்க 200 ஆவது பதிவிற்கு வாழ்த்துகள். நான் எல்லாம் 200 வருவதற்கு இன்னும் 5 வருசம் ஆகும்னு நினைக்கிறேன்.:))
/எப்போதும் நைட்டி அணிவது சரியல்ல/
நான் வாக்களித்தது இதுக்கு தான். நைட்டி என்பது இரவு நேர ஆடை மட்டுமே என்ற நிலை மாறி வீட்டில் இருக்கும் போதெல்லாம் அணியலாம் என்ற நிலைக்கு பெண்கள் வந்து வெகுகாலம் ஆகிவிட்டது. இதில் உள்ள சௌகரியங்களால் அவர்கள் இந்த நிலைக்கு வந்திருக்கலாம். அதில் தவறேதும் இல்லை. ஆனால் வீட்டை விட்டு வெளியே வரும் போது நைட்டியை தவிர்ப்பதே நல்லது என்பது எனது எண்ணம்.
புதுகைத் தென்றல்
200 வது பதிவிற்கூ நல்வாழ்த்துகள்
அருமையான பதிவு - சிந்தனையைத் தூண்டும் பதிவு
என்னைப் பொறுத்தவரை - நைட்டி பகலில் வீட்டில் போடலாம் - வீட்டில் கூட இதர ஆண்கள் இருந்தாலும் போடலாம் = சிறு சிறு சில்லரை வியாபாரிகள் / நண்பர்கள் வீட்டிற்கு வந்து போனாலும் தவறல்ல
வெளியில் நைட்டியுடன் போவதைத் தவிர்க்கலாம்.
ஆண்கள் -அப்படி ஒன்றும் நடக்க வில்லை உலகத்தில்
வாழ்த்துக்கள். :-)
வாங்க தமிழ் ப்ரியன்,
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
நான் எல்லாம் 200 வருவதற்கு இன்னும் 5 வருசம் ஆகும்னு நினைக்கிறேன்.//
முயன்றால் முடியாதது இல்லை அப்துல்லா.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
வாங்க சீனா சார்,
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
ஆண்கள் -அப்படி ஒன்றும் நடக்க வில்லை உலகத்தில்//
சீனா சார்,
அபாண்டமாக பழிபோட எனக்கும் எண்ணம் இல்லை.
பெருநகரங்களில் பாருங்கள் நான் சொல்வதை விட மோசம் என்று தெரியும்.
வாங்க மை ஃபிரண்ட்,
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
ஹூம்.. எங்க ஊட்ல 24 hrs நைட்டிதான்.! அதுவும் போர்வை மாதிரி, எப்பிடிதான் போடுறாங்களோ, சொன்னா கேட்டாதானே.! (அப்புறம் 200க்கு சிறப்பு வாழ்த்துகள்.!)
எங்க ஊட்ல 24 hrs நைட்டிதான்.! அதுவும் போர்வை மாதிரி, எப்பிடிதான் போடுறாங்களோ, சொன்னா கேட்டாதானே//
வாங்க தாமிரா,
உங்களை மாதிரி பலரும் என்னிடம் சொல்லியிருக்காங்க. அதனால் தான் இந்தப் பதிவு
200க்கு சிறப்பு வாழ்த்துகள்.!)
சிறப்பு நன்றி.
எங்க ஊட்ல 24 hrs நைட்டிதான்.! அதுவும் போர்வை மாதிரி, எப்பிடிதான் போடுறாங்களோ, சொன்னா கேட்டாதானே//
repeattu
நீங்க சொல்ற லோ ஹிப் ஜீன்ஸ் ,எனக்கு தெரிந்து பெண்கள்தான் போடுகிறார்கள்
நீங்க சொல்ற லோ ஹிப் ஜீன்ஸ் ,எனக்கு தெரிந்து பெண்கள்தான் போடுகிறார்கள்//
அட ஆண்களும் போடறாங்கங்க அதனாலதான் சொல்றேன்.
தங்களின் முதல் வருகைக்கு நன்றி பாபு.
<==
புதுகைத் தென்றல் said...
நீங்க சொல்ற லோ ஹிப் ஜீன்ஸ் ,எனக்கு தெரிந்து பெண்கள்தான் போடுகிறார்கள்//
அட ஆண்களும் போடறாங்கங்க அதனாலதான் சொல்றேன்.
==>
பாருங்க யாருமே நம்ப மாட்டேங்கிறாங்க. ஒரு போட்டோ எங்கியிருந்தாவது காப்பி-பேஸ்ட் செய்திருக்கலாம்.
Post a Comment