தூக்கம் உங்களுக்கு பிடிக்குமான்னு? பரிசல்காரன்
கேட்டிருக்காரு.
டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு தூக்கம் எம்புட்டு முக்கியம்னு
ஒரு நண்பர் பதிவு போட்டிருக்கார்.
தூக்கம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். திருமணத்திற்கு
முன்பு வரை ஞாயிற்றுக்கிழமைகளில்
மாமாவுடன் போட்டி போட்டுக்கொண்டு
தூங்குவேன். அதெல்லாம் அந்தக்காலம்....
யாராவது தூங்குன்னு சொல்ல மாட்டாங்களான்னு
தோணுது. எனக்கு மட்டுமல்ல பல இல்லத்தரசிகளின்
நிலை இதுதான்.
படுப்பது தான் தெரியும் அதுக்குள்ள காலேல மணி 5 ஆயிடுதேன்னு
இருக்கு. :( எழுந்தா ஓட்டம் தான்.
வார நாட்கள் தான் இப்படி ஓடுது, வார இறுதியாவது
தூங்கலாம்னா எங்க? ஞாயிற்றுக்கிழமை தூக்கம்பத்தி இப்படி ஒரு பதிவு போட்டிருந்தேன்.
நிலமை இப்போ பழைய குருடி கதவைத் திறடின்னு
ஆகிப்போச்சு.
வார இறுதி நாட்கள்தான் இன்னமும் வேகமா
ஓடுது. வந்ததும் தெரியல போனதும் தெரியல.
அந்தப் பதிவுல எப்படி இருக்குமோன்னு? போட்டிருந்தேன்.
ஞாயிற்றுக்கிழமையும் செம பிஸியா ஓடுது.
தூக்கம் என் கண்களை தழுவட்டுமே.....
இந்தப்பாட்டை பாடிக்கிட்டே கண்ண முழிச்சு
கிட்டு இருக்க வேண்டியதுதான்.
4 comments:
நானும் பரிசலுக்கு ஓரு பதிவு போட்டுருக்கேன்.பாருங்க
புதுகைத்தென்றல்..
நிஜமாகவே தூக்கத்தைப் பற்றி உமா அடிக்கடி என்னிடம் புலம்பியிருக்கிறார். உங்கள் பதிவைப் படிக்கும்போதுதான் தூக்கத்தை இல்லத்தரசிகளின் பார்வையில் பார்க்கத்தவறியது புரிந்தது. ப்ச்!
சரி... அதைத் தனிப்பதிவாவே போட்டுட்டா போச்சு!
படிச்சேன் அப்துல்லா. அந்தக் கொடுமையை படிச்சேன்
ஆமாம் பரிசல்,
அது ஒரு கொடுமையான புலம்பல்.
தனிப்பதிவு போட்டுடீங்களானு வந்து பார்க்கறேன்.
Post a Comment