தெலுங்கு திரையுலகில் நான் மிகவும் விரும்பும் நடிகர்
ராஜேந்திர பிரசாத். இவரது பலப்படங்கள் நகைச்சுவையுடன்
நல்ல மெசெஜ்களைத் தரும் திரைப்படங்கள். மனது
நிறைய வைக்கும் சினிமாக்கள் இவரது பிளஸ்.
லேடீஸ் டெய்லர், மேடம், மிஸ்டர்.பெல்லாம் போன்ற
200 திரைப்படங்கள் நடித்தவர் ராஜேந்திரபிரசாத்.
காமெடி கிங்காக அறியப்பட்ட இவர் நடித்த ஒரு
திரைப்படம் மிக வித்தியாசமானது.
2004ஆம் ஆண்டு வெளியான ஆ நலுகுரு (அந்த நால்வர்)
ஆந்திர அரசின் நந்தி விருது வென்ற திரைப்படம்.
சிறந்த நடிகருக்காக நந்தி விருதை ராஜேந்திர
பிராசாத்திற்கு பெற்றுத் தந்த திரைப்படம்.
தனது குடும்பத்தை நேசிக்கும் அதே அளவு தனது
தேசத்தையும், அதன் மக்களையும் நேசிக்கும் மனிதனாக
ராஜேந்திர பிரசாத். தனது சம்பாதியத்தின் சரி பாதியை
சமூகத்திற்காக செலவு செய்பவர்.
இறைவன் தந்திருக்கும் இன்னொரு நாளை கொண்டாடும்
ராஜேந்திரபிராசாத் காண இதோ வீடியோ.
தந்தையின் கருத்திற்கும் கொள்கைகளுக்கும் எதிர்
கருத்து கொண்ட பிள்ளைகளுக்காக கணவனை
பகைத்துக்கொள்ளும்
மனைவியாக ஆமனி.
உற்ற தோழனாகவும் மகனுக்காக சக்திக்கு மீறி செலவு
செய்யும் தகப்பானக சுபலேகா சுதாகர்.
அடகு இல்லாமல் சல்லிக்காசு கூடத் தராத,
பக்கத்து வீட்டில் எரிகிறது என்றால் தன் வீட்டில்
தண்ணீரை ஊற்றி பாதுகாத்துக்கொள்ளும்
பிசினாரியாக கோடா ஸ்ரீநிவாஸ்(கிளைமாக்ஸில்
கலக்கிவிட்டார் கோட்டா)
கோடாவின் கஞ்சத்தனத்திற்கு உதாரணமாக
ஒரு காமெடி சீன்.
தான் கடன் கொடுத்தது தன் வீட்டாருக்கு கூடத்
தெரியக்கூடாது என்று விரும்பு மஸ்தான்பாய்
கதாபாத்திரம், சந்திர சித்தார்த் அவர்களின் இயக்கத்தில்
ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக அருமை.
கதை இதுதான்.தன்னால் இயன்றவரை மக்களுக்கு
உதவுகிறார் ரகுராமய்யா (ராஜேந்திர பிரசாத்).
லஞ்சம் கொடுப்பதும் தவறு வாங்குவதும்
தவறு என நினைப்பவரின் பிள்ளைகள் (2 மகன்+1 மகள்)
உத்தியோகத்திற்காகவும், வெளிநாட்டிற்கு செல்வதற்காகவும்
தலா 5 லட்சம் பணம் கொடுக்கச் சொல்கிறார்கள்.
தரமறுக்கும் தந்தையை மரியாதை குறைவாக
நடத்துகிறார்கள். பிள்ளைகளுக்காக மனைவியும்
பரிந்து பேசி வேதனைப் படுத்துகிறாள்.
தனது கொள்கைகளை தள்ளி வைத்துவிட்டு
கோடய்யாவிடமும் (கோடா ஸ்ரீநீவாஸ்),
மஸ்தான் பாயிடமும், தவிர அலுவலகத்தில்
இருந்து கடன் பெற்று பிள்ளைகளுக்குத் தருகிறார்.
தனது கொள்கைகளை துறந்த துயர் தாங்காமல்,
தானும் கடன் காரனாகிவிட்டோமே என்று
வேதனையாலும் தற்கொலை செய்து கொள்கிறார்.
மனைவியும், பிள்ளைகளும் ரகுராமய்யாவை
பற்றி இறுதியில் எங்கனம் தெரிந்து கொள்கிறார்கள்
என்பதுதான் திரைப்படம்.
இறந்த பிறகு சுமக்க 4 பேர் வேண்டும். அவர்களையாவது
சம்பாதித்து வைத்துக்கொள் என்பார்கள் முன்னோர்கள்.
ரகுராமய்யாவுக்கு நால்வர் அல்ல 4000 பேர் வந்தது
மனதைத் தொட்டது.
இறந்து கிடக்கும் ரகுராமய்யாவை அழைத்துச் செல்ல
எமகிங்கரர்கள் வர அவர்களிடம் கெஞ்சி தனது
அந்திமக்கிரியைக் காணவேண்டும் என்று
கேட்டு அதை பார்த்துவிட்டு பிறகே மேலுலகம்
செல்வதாக கதையை அமைத்திருக்கும் பாங்கு
மிக அருமை.
இறந்த பிறகு அவரின் குரல் யாருக்கும் கேட்காது
எனினும், தனது மனதை அடுத்தவர்களுக்கு
தெரியப்படுத்த துடிக்கும் துடிப்பில் ராஜேந்திர
பிராசாத்தின் அருமையான நடிப்பு வெளிப்படுகிறது.
கிளைமாக்ஸ் பாடல் காட்சி.
கோடா ஸ்ரீநீவாஸின் அற்புதாமான நடிப்பில்
திரைப்படத்தின் கிளைமாக்ஸ். சிம்பிளி சூப்பர்ப்.
12 comments:
:)
வருகைக்கும் நன்றி.
:))
Manchi cinema andi! Baaga blog type secheru.
மங்களூர் சிவா, நிஜமா நல்லவன்,
ஸ்மைலிக்கு நன்றி.
ரண்டி ரண்டி தயசேயண்டி,
தமரி ராக சந்தோஷம் சுமண்டி.
வாங்க ராம்.
ஆ நலுகுரு சூப்பர் படம். இதுல மாற்று கருத்தே கிடையாதே.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
இந்தப் படத்தைப் பற்றி யாரோ முன்னர் வலைப்பதிவில் சொல்ல, நானும் வீடியோ கடைக்கு போய் படத்தலைப்பு மறந்து போய் போர் என்று ஆரம்பிக்கும்னு குழம்ப, போர் த பீப்பிள் படத்தைக் கொடுத்தான் கடைக்காரன். என்ன கொடும, செப்பண்டி ;-)
நல்ல பதிவு, நன்றி
படத்தலைப்பு மறந்து போய்//
அதாவது பிரபா சும்மா என்ன போட்டி வைக்கலாம்னே நீங்க யோசிப்பீங்களா? அதுனால எங்களுக்குத்தான் படத்தின் பெயர், இசையமைப்பாளர் பெயர், பாடியவர் பெயர் எல்லாம் ஞாபகம் இருக்கும்.
நல்ல பதிவு, நன்றி
இப்பயாவது சரியா பெயர் சொல்லி சீடி வாங்கி படத்தைப் பாருங்க
பிரபா.
ஆ நலுகுரு அருமையான படம். இதை பத்தி நான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எழுதியிருக்கேன். ராஜேந்திர பிரசாத் நடிப்பு அட்டகாசம்...
:-)))...
http://vettipaiyal.blogspot.com/2006/11/blog-post_16.html
Post a Comment