எப்படி குடி கொண்டார். புராண,வரலாற்று
கதைகள் சிலவற்றைப் பார்ப்போமா!
சுழித்துக்கொண்டு அமைதியாக ஓடும் கோதாவரி கூட
ராமா! ராமா! என்று சொல்லிக்கொண்டு ஓடுகிறதோ
என்று தோன்றுகிறது.
ஸ்ரீராம நவமி அன்று பத்ராசலத்தில் நடக்கும்
கல்யாண உற்சவத்தைக் காண வரும் கூட்டமும்
கோதாவரி அளவுக்கு பெரிது.
திருப்பதி,உப்பிலியப்பன் , ஸ்ரீரங்கம் ஆகிய
கோவில்களிலிருந்து கூட சீதா ராம கல்யாணத்திற்கு
புடவை, வேஷ்டி பத்ராசல ராமனுக்கு அனுப்பி
வைக்கப்படுகிறது.
பிரம்மானந்த புராணதில் கொளதமி மகாத்யமத்தில்
பத்ராசலத்தைப் பற்றியும் பத்ராசல ராமரைப் பற்றியும்
கூறப்பட்டுள்ளது.
ஆண் மகவை வேண்டி மேரு மலையும்
அவரின் மனைவி மேருதேவியும்
பலவருடம் தவம் இருந்தனர். அவர்களின்
மகன் தான் ”பத்ரா”.
அரக்கர்களிடமிருந்தும், வன விலங்குகளிடமிருந்தும்
தன்னைக் காத்துக்கொள்ள முனிவர்கள் தன்னை
உரு மாற்றிக்கொண்டு தவமிருப்பது வழக்கம்.
பத்ராவும் தன் இஷ்ட தெய்வமான ராமரை
நினைத்து தவம் புரிய ஆரம்பித்தான். பத்ரா
தன்னை ஒரு பெரிய பாறையாக மாற்றிக்கொண்டு
கோதாவரிக் கரையில் தண்டக
வனத்தில் தவமிருந்தார்.
வனவாசத்திற்காக தனது மனைவி மற்றும் தம்பி
லட்சுமணனுடன் தண்டக வனத்திற்கு வந்த
ஸ்ரீராமர் களைப்பாற ஒரு பாறையின் மீது
அமர்கிறார். அமர்ந்ததும் மனதுக்கு மிகவும்
மகிழ்ச்சியாக, தெய்வீகமாகவும் உணர்கிறார்.
ஞான திருஷ்டியின் பாறையாக இருப்பது
”பத்ரா” என்பதை உணர்ந்து அவரை
அழைக்கிறார்.
உண்மையான முனிவரான பத்ரா உடன்
ராமரின் பொற்பாதங்களை பணிகிறார். ராமர்
பத்ராவின் விருப்பத்தைக் கேட்கிறார்.
ராமர் தன் மேல் அமர்ந்து அனைவருக்கும்
தரிசனம் தந்து பக்தர்கள் செய்யும் அர்ச்சனையை
ஏற்று அவர்களுக்கு மோட்சம் அளிக்க
வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.
சந்தோஷமாக வரமளிக்கிறார் இறைவன்.
உடன் அந்தப் பாறையில் மடியில் சீதையை
இருத்தி நான்கு கரங்களுடன் கூடிய ராமரும்,
அண்ணலுக்கு துணையாக தம்பி லட்சுமணரும்
இருப்பது போல் சுயம்புவாக உருவாகிறது.

தண்டக வனத்தில் மற்றைய பகுதிகள்
காடாகவே இருக்கிறது. 1000 வருடங்களாக
இப்படி இருந்தது. தேவர்கள் வந்து பூஜித்து
சென்றனர்.
கோதாவரியில் குளித்து, விரதமிருந்து
ராம நவமி அன்று இறைவனுக்கு
அர்ச்சனை செய்து, ஏழைகளுக்கு அன்னமிட்டால்
போதும். சுலபமாக மோட்சம் அடைந்து
விடலாமாம்.
(இந்த தண்டக வனத்தில் தான் சீதையை
ராவணன் அபகரித்துச் சென்றது, ஜடாயு
போரிட்டு தனது உயிரைத் தியாகம் செய்தது,
சீதையை மீட்டுக்கொண்டு வந்த பிறகு
கடைசி 3 வருடங்கள் இங்கே தான் கழித்தார்களாம்.)

பத்ராசலம் உருவானது இப்படித்தான்.
மண்ணில் புதைந்து போன இறைவன்
எப்படி வெளியே வந்தான்? யார் கண்ணில் முதலில்
பட்டான்? அடுத்த பதிவுவரை காத்திருந்தால்
தெரிந்துகொள்ளலாமே!
7 comments:
Hai friend, see my blog..
next time i ll chat with in tamil...
http://jebamail.blogspot.com
இதிகாச விவரங்களை அழகுற அறியத் தந்திருப்பதற்கு நன்றி தென்றல்.
ஃப்ரண்டுன்னு சொல்லியிருக்கிற புது ஃபரண்டுக்கு பெரிய்ய ஹாய்.
கண்டிப்பா வந்து பாக்கறேன்.
வாங்க ராமலக்ஷ்மி,
தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
பயணக்கட்டுரையை நன்றாக ரசிக்கும்படி போரடிக்காமல் எழுதுகிறீர்கள் தென்றல். பாராட்டுக்கள். நீங்கள் பதிவு போடும் வேகத்துக்கு பின்னூட்டம் போட முடிவதில்லை, :)))
பயணக்கட்டுரையை நன்றாக ரசிக்கும்படி போரடிக்காமல் எழுதுகிறீர்கள் தென்றல். பாராட்டுக்கள்//
வருகைக்கும், பாரட்டிற்கும் நன்றி வெண்பூ.
நீங்கள் பதிவு போடும் வேகத்துக்கு பின்னூட்டம் போட முடிவதில்லை//
அது ஒன்னுமில்லீங்கோ,
மனசுல இருக்கறத ஃபரெஷ்ஷா வார்த்தையா வடிச்சிட்டா நல்லா வந்திடும். அதனாலதான் உடனுக்கு உடன் பதிவிடுவேன்.
நீங்க பொறுமையா படிச்சு பின்னூட்டுங்க.
வருகைக்கு மிக்க நன்றி
:)))
Post a Comment