தண்ணீரை அதிகம் செலவழித்தால் வீட்டில்
செல்வம் தங்காது என்று பெரியவர்கள்
சொல்வார்கள். (காரணம் தெரிஞ்சவங்க
யாராவது சொல்லுங்க. நானும் தெரிஞ்சிக்கறேன்.)
தண்ணீரைப் பத்தி சொல்லத் தெரியலைன்னாலும்
மின்சாரத்திற்கு அந்த சொலவடை பொருந்தும்.
நாம எம்புட்டு பாவிக்கறோமோ அம்புட்டு
சல்லி கட்ட வேண்டியிருக்கே.
பரிசல்காரனி இந்த இரண்டு பதிவுகளையும்
படிங்க.
மின்சாரம் காண்டம் (1) காண்டம் (2)
பரிசல் மின்சாரத்தை எப்படி சேமிக்கலாம் என்று
பல கருத்துக்களை சொல்லியிருக்கிறார்.
என் பங்கிற்கு நானும் சில கருத்துக்களை
இங்கே சொல்கிறேன்.
(செய்வதைத்தான் சொல்கிறேன்.)
பரிசல் சொல்லியிருந்ததைப்போல செல்போனை
குறைவா பாவிக்கிறதனால இரண்டு பயன்
செல்போன் பில் கம்மியாகும், மின்சாரமும்
குறைவா செலவாகும்.
சர்வ சாதரணமாக நாம் பாவிக்கும் லிப்ட்களினால்
எவ்வளவு கரண்ட் செலவாகிறது?
கையில் பாரமில்லை என்றால் இறங்க/ஏற
மாடிப்படிகளை பாவிக்கலாமே!
(இதனால் ஏற்படும் பயன், உடலுக்கு பயிற்சி,
மின்சாரம் மிச்சம், ஆரோக்யம்)
அப்பாவின் சில பாலிசிகள் எங்களை இன்றும்
மின்சாரத்தை குறைவாகவே பாவிக்க
வைத்திருக்கிறது.
வெயில் காலமாகவே இருந்தாலும்
மின் விசிறி அதிக நேரம் பாவிக்கக்கூடாது.
மாலை 5 மணி வாக்கில் ஹால், வராந்தாக்களில்
தண்ணீர் தெளிக்க வேண்டும் (1 கப் போதும்)
அதனால் அந்த இடம் கொஞ்சம் குளிர்ச்சி
ஆகும். இரவு கொஞ்சம் நிம்மதியாகத்
தூங்கலாம்.
அப்படியும் வியர்க்கிறது என்றால்
சாயந்திரம் ஒரு ஜில் குளியல்தான்.
கதவைத் திற காற்றுவரட்டும். இங்கு
நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய
முக்கிய வாக்கியம் இது. ஜன்னல்களை
இறுக மூடி வைக்காமல் கொஞ்ச நேரமாவது
cross ventilationக்கு இடம் கொடுத்தால்
வீடு ஜில்லென்றாகும்.
டீவி. 24 மணி நேர ஒளிபரப்பு கிடையாது
அப்போது. அதிலும் குறைவாகத்தான்
டீவி பார்ப்போம். நான் நாடகங்கள் பார்த்ததே
கிடையாது. ஒரு நாளில் 2 மணி நேரம்
டீவி பார்த்திருந்தால் பெரிது.
ஞாயிற்றுக்கிழமைகளில் அருத பழசு,
படமோ அல்லது அறுவை படமோ
போட்டால் டீவி ஆஃப் செய்யப்பட்டுவிடும்.
எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலும்
கவலை இல்லை 9 மணிக்கு அனைவரும்
தூங்கப்போய்விட வேண்டும். அதற்கு மேல்
யாரும் டீவி பார்க்கவே முடியாது.
பெரிய பெரிய டேப்ரிகார்டர்கள் வந்த பின்னும்
அப்பா சின்ன ரேடியோவும், சின்ன டேப்ரிக்கார்டர்
மட்டுமே வைத்திருந்தார். அதில் மின்சாரத்திற்கு
பதில் பேட்டரிதான் பாவிப்போம்.
ரேடியோ பெட்டிக்கு அருகில் நாம் இருக்கத்
தேவையில்லை. நாம் செல்லும் இடமெல்லாம்
அதுவும் கூட வரும்.
(சின்ன ரேடியோவில் அனைவரும் சூழ
படுத்து நாடகவிழா நாடகங்கள் கேட்டது
மறக்க முடியுமா?)
சரி இனி அரசு நமக்கு செய்யக்கூடியது
என நான் நினைப்பது.
வீடுகளுக்கு சூரிய வெப்பத்தால்
சுடு நீர், வெளிச்சம் கிட்டக்கூடிய
உபகரணங்களை குறைந்த செலவில்
அரசே அளிகக் வேண்டும்.
(சோலார் வாட்டர் ஹீட்டர் விலை20,000
வரைப்போகிறது)
மழை நீர் சேகரிப்பு திட்டத்தை
கட்டாயமாக்கியது போல் சூரிய
ஒளி சேகரிப்பையும் கட்டாயமாக்கினால்
அனைவரும் சூரிய வெப்பத்தை
பாவித்து மகிழலாம்.
(மழைக் காலத்தில் சூரிய ஒளிக்கு
என்ன செய்ய? என்று கேட்பவர்களுக்கு.
நம் தமிழ்நாட்டைப் பொறுத்த வரை
365 நாட்களும் வெயில்தான்.
தப்பித்தவறி மழை பெய்தால்
கரண்ட் என்று வைத்துக்கொள்ளலாமே.
19 comments:
மீ 1ஸ்ட்
சிறு விளக்குகளுக்கான சோலார் பேனல்கள் இப்போதே இங்கு மங்களூரில் வழக்கத்தில் உள்ளது.
கர்நாடகாவின் பெரும்பாலானவர்கள் சோலார் ஹீட்டர் பயன்படுத்தியும் வருகின்றனர்.
டிவி 24 மணிநேரம் நானும் பார்ப்பதில்லை ஆனால் கம்ப்யூட்டர் , இணையம் அந்த இடத்தை ஆக்கிரமித்துவிட்டது விட முடியலை :((((
வாங்க சிவா,
மங்களூர், பெங்களூர் சங்கதி சரி.
தங்களூர் அதாங்க தமிழ் நாட்டிற்கு வரணும்.
வஞ்சிக்கொடி அங்கே வருவா.
நல்ல பதிவு போட்டு இருக்கீங்க....நன்றி!
/புதுகைத் தென்றல் said...
வஞ்சிக்கொடி அங்கே வருவா./
இதுக்கு அர்த்தம் என்ன?
பேரை மாத்தி சொல்லி இருக்கீங்களே ஏன்?
வாங்க நிஜமா நல்லவன்,
வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி.
வஞ்சிக்கொடி அங்கே வருவா./
இதுக்கு அர்த்தம் என்ன?
சிவாவுக்கு வார்னிங் கொடுத்தேன்.
:))))))))))))))))
பேரை மாத்தி சொல்லி இருக்கீங்களே ஏன்?
பேரைச் சொல்லவா? அது நியாயமாகுமா?
:)))))))))))))))))))))))))))))
செய்றதை சொல்லியிருக்கீங்க. பாராட்டுக்கள். நாங்களும் சொன்னதை செய்யறோம் தென்றல்.
சிவா சொன்ன மாதிரி, எனது 6வது தள பால்கனியில் இருந்து சுற்றி வரப் பார்த்தால் சோலார் ஹீட்டர் இல்லாத வீடுகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.
arumaiya ezhuthi irukeenga. vaazhthukkal.
I saw your reply for parisal in aviyal thread. So thought of posting this.
http://polambifying.blogspot.com/2008/09/blog-post.html
உங்கள் சமூக அக்கறைக்கு என் சல்யூட் !
நல்லா சொல்லியிருக்கீங்க!
உண்மைதான்
இன்று இருக்கும் நம் அன்றாட வாழ்க்கைமுறைதான்
பிரச்னைக்கு காரணம் என்றாலும்...
இதையெல்லாம் முன்னெச்சரிக்கையாக அணுகவேண்டியதுதானே
அரசாங்கத்தின் கடமை! அதை அவர்கள் செய்யாமல்
மழுப்பிக்கொண்டிருப்பதுதான் எரிச்சலூட்டுகிறது.
பின்னணியில் எத்தனை கொள்ளைகள் இருக்கின்றனவோ?
இந்த விவசாயத்துக்கு இலவச மின்சாரம் எப்படி
ஏமாற்றி வாங்கிக்கொள்ளப்படுகிறது என்று தெரியுமா?
நம்ம ஏரியாவில், ஒரு சாதாரண விவசாயிக்குக்கூட இந்த
சலுகை இல்லை! எல்லாம் மின்நிலையமே அமைக்கும்
வல்லமை படைத்த மக்களுக்குத்தான்!
//புதுகைத் தென்றல் said...
பேரை மாத்தி சொல்லி இருக்கீங்களே ஏன்?
பேரைச் சொல்லவா? அது நியாயமாகுமா?//
அந்தப் பேரை
சொல்லாமத்தானே
(நிஜமா ந்ல்லவன்)
மனசு தவிக்குது !
நாங்களும் சொன்னதை செய்யறோம் தென்றல்//
ஆஹா வாங்க
ராமலக்ஷ்மி. வாங்க
வாங்க எஸ்.கே,
வருகைக்கு நன்றி.
வாங்க சுரேகா,
வருகைக்கும் தங்களின் மேலான கருத்திற்கும் நன்றி.
அந்தப் பேரை
சொல்லாமத்தானே
(நிஜமா ந்ல்லவன்)
மனசு தவிக்குது !//
:)))))))))))))))))
Post a Comment