இந்தக் கேள்வியை என்னிடம் கேட்காதவர்களே
இல்லை என்று சொல்லலாம். தோழிகள், அறிந்தவர்கள்
இப்படி பலரும் என்னைக் கேட்கும் கேள்வி,”உன்னால்
மட்டும் எப்படி இது சாத்தியம்”? என்பது தான்.
எது சாத்தியம்?
அனைத்திற்கும் எனக்கு மட்டும் நேரம் எப்படி இருக்கிறது?
ஹோம் மேக்கராக இருந்துக்கொண்டு கற்றுக்கொள்ள
எப்படி நேரம் இருக்கிறது?
இப்படி பலக் கேள்விகள்.
இவை எல்லாவற்றிற்கும் என் பதில் ஒன்றுதான்.
நான் நானக இருக்கிறேன். மகள், அக்கா, மனைவி,
தாய், ஆசிரியை இப்படி பல பதவிகள் வகித்தாலும்
என்னை நான் மறந்து விடவில்லை. எப்படி மேற்சொன்ன
பதிவிகளை சரியாக நான் வகிக்க தவறக்கூடாதோ
அதேபோல் நான் நானாக இருப்பதும் மிக அவசியம்
என்பது என் கொள்கை. (நான் மாண்டிசோரி
டிரையினிங் எடுத்துக்கொண்ட பொழுது மகள்
அம்ருதாவிற்கு 4 வயது. எப்படி சமாளிக்கிறாய்?
என்ற கேள்விக்கணை அனைவரிடமிருந்தும்
வந்தது)
நாளின் ஒவ்வொரு நிமிடத்தையும் திட்ட மிட்டுக்கொள்வேன்.
நாளை செய்யலாம் என்று தள்ளிவைப்பது என்பது
கிடையவே கிடையாது. (அதனால் தான் ஒரே நாளில்
4 பதிவு கூட போட்டு உங்களை கஷ்டப்படுத்துவேன் :) )
நேரத்தை திட்டமிட்டுக்கொண்டாலும்
அதை சரியாக நிறைவேற்றிக்கொள்ள குடும்பத்தவர்களின்
உதவி மிக மிக அவசியமாயிற்றே!
அலுவலகமோ, வீடோ நிர்வாகம் செய்வதில்
திறமை வேண்டும். அனைத்து வேலைகளையும்
நாமே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து முடிப்பது
நிர்வாகத்திறன் ஆகாது என்று எங்கோ படித்திருக்கிறேன்.
அயித்தானின் குணம் தன் வேலையை தானே செய்து
கொள்வது. அடிக்கடி அலுவலக டூர் போகும் அவர்
தனது பெட்டியைத் தானேதான் தயார் செய்து கொள்வார்.
துணிமணிகள் துவைத்து, உலர்த்தி இஸ்திரி போட்டு
வைப்பது வரை மட்டும் தான் என் வேலை. தான்
சாப்பிட்ட தட்டைக் கழுவி வைத்துவிடுவார்.
இதே குணத்தையும் பிள்ளைகளிடமும் வளர்த்தேன்.
பள்ளிக்கு தயாராவது, 6 வயது
முதல் தானே குளிப்பது,(மகளுக்கு மட்டும்
வாரத்தில் ஒரு நாள் தலைக்கு குளிப்பாட்டுவேன்),
வீட்டில் சின்னச் சின்ன வேலைகள்
செய்வது, டைம் டேபிள் படி புத்தகங்களை அடுக்குதல்,
மடித்து வைத்திருக்கும் துணிமணிகளை அலமாரியில்
வைத்தல், வாரம் ஒருமுறை தனது அலமாரியை
சரி செய்து வைத்தல் என்று ஒரு டைம் டேபிள்
போட்டு கொடுத்து விட்டேன். அதை அவர்கள்
சரிவர செய்ய டிரையினிங் கொடுப்பது மட்டும்
தான் ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்து.
பிள்ளைகளுக்கான டைம்டேபிள் குறித்த என்
பதிவு பேரண்ட்ஸ்கிளப்பில்.
அவரவர் வேலையை அவரவர் செய்வது
என்பது இப்போது பழக்கமாகிவிட்டது.தவிர
இருக்கும் நேரத்தில் சின்னச் சின்ன வீட்டு
வேலைகள் செய்து கொடுப்பார்கள்.
சமையற் வேலையை ஒரு சுமையாக நினைக்காமல்
வாரத்திற்கு தேவையான சமையலை முன்பே
திட்டமிட்டு (ஒரு முறை சமைத்த உணவு அந்த
வாரத்தில் மறுமுறை வராமல் திட்டமிட்டுக்கொள்வேன்)
அதை செயலாற்றுவதால் எனக்கு கணிசமான
நேரம் மிச்சம். என்ன சமைக்க?!! என்று குழம்ப
அவசியமே இல்லை. இதனால் நான் அதிக
நேரம் சமையற்கட்டிலேயே இருக்கவும் மாட்டேன்.
எனக்கான நேரம் ஒதுக்கி என்னை ரெஃபிரஷ்
செய்து கொள்வது மிக அவசியம் எனக்கு.
காபி/தேநீர் அருந்தும் நிமிடங்கள் என் பொன்னான
தருணங்களாக நினைத்து மெல்ல ருசித்து பருகுவேன்.
பாடல் கேட்பேன், புத்தகம் வாசிப்பேன்.
டென்ஷனைக் குறைக்க காலையில் எழுந்த உடன்
சீடி போட்டு பக்தி பாடல்கள் கேட்பதால், வீட்டில்
இருப்பவர்கள் கூட டென்ஷன் இல்லாமல், வாக்குவாதம்
செய்து கொள்ளாமல் தயராகிறார்கள்.
இப்படி சின்னச் சின்ன திட்டமிடல் தான்
எனக்கு அதிக நேரம் கிடைத்தது போல் இருக்கிறது.
வலைப்பூவில் எழுத ஆரம்பித்த பின் அதுவும்
என் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறாக இல்லாமல்,
எந்த வேலையும் இதனால் நின்று விடாமல்
திட்டமிட்டு எழுதுகிறேன்.
மிக முக்கியமாக எனக்கு ரேடியோ கேட்பது
பிடிக்கும். டீவி பார்க்க பிடிக்காது. அதாவது
நோ சீரியல்ஸ். சனிக்கிழமை இரவுகளில்
அல்லது அதிகமாக நேரம் இருக்கும் நாட்களில்
அபிமான்,ஆ நலுகுரு, பார்த்திபன் கனவு போன்ற
திரைப்படங்களை பார்ப்பேன்.
டீவி முன் அமராததால் பிள்ளைகளுடன்
நேரம் செலவிட முடிகிறது. வலைப்பூ
போரடித்தால், புத்தகம், பாட்டு, க்ரோஷா
பின்னுதல் என்று வைத்துக்கொள்வேன்.
10 நாட்கள் கணிணி சரியில்லாமல் இருந்ததால்
2 செல்போன் பேக் பின்னிவிட்டேன். :)
ஹைதராபாத் வந்த பின்னர் மெஹந்தி
போடக் கற்று கொண்டேன். அது முடிந்து
அடுத்த வாரம் முதல்
ம்யூரல் பெயின்டிங் கிளாஸ் போகப்போகிறேன்.
என்னைவிடவும் மிக அழகாக திட்டமிட்டு
செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.
இதை நான் பகிர்வது சிலருக்கு கூடுதலாக
ஒரு ஐடியா கொடுத்தது போலிருக்குமே!
உங்களிடம் ஏதும் ஐடியா இருந்தா பின்னூட்டிட்டு
போங்க. எனக்கும் உதவியாய் இருக்கும்
அடுத்த செல்போன் பேக் ரெடி செஞ்சுகிட்டு
இருக்கேன். இப்போதைக்கு டாடா.
33 comments:
//அனைத்து வேலைகளையும்
நாமே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து முடிப்பது
நிர்வாகத்திறன் ஆகாது//
இதை நூறு சதவிகிதம் ஆமோதிக்கிறேன்.
//என்னைவிடவும் மிக அழகாக திட்டமிட்டு
செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.//
இருப்பார்கள் என எனக்குத் தோன்றவில்லை. வாழ்த்துக்கள் தென்றல் இந்த அருமையா பகிர்தலுக்கு.
ஆஹா வாங்க ராம்லக்ஷ்மி,
நீங்கதான் பர்ஸ்டு.
பதிவு போட்ட உடனே பின்னூட்டம் பார்த்து ஆச்சரியாமாகிவிட்டது.
வாழ்த்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.
அதே அதே அதே
டிவி பார்க்காம இருந்தாவே கையில் நேரம் எக்கச்சக்கம்.
வாங்க டீச்சர்.
//டிவி பார்க்காம இருந்தாவே கையில் நேரம் எக்கச்சக்கம்.//
ரொம்ப சரியா சொன்னீங்க. பலபேருக்கு இது தெரியறதில்லை.
\\இருப்பார்கள் என எனக்குத் தோன்றவில்லை. வாழ்த்துக்கள் தென்றல் இந்த அருமையா பகிர்தலுக்கு//
ராமலக்ஷ்மிக்கு ஒரு ரிப்பீட்டேய்... :)
வாங்க முத்துலெட்சுமி,
வருகைக்கும் வாழ்த்து ரிப்பீட்டிற்கும் நன்றி.
அக்கா , மெயில் ஐடி அனுப்புங்க, என் வீட்டு முகவரி அனுப்புறேன்.
( பின்ன, செல்போன் பேக் செஞ்சத எப்டி எனக்கு அனுப்புறதுன்னு நீங்க முழிக்க கூடாதுல்ல)
நானும் உங்கள் மாதிரித்தான், திட்டம் போட்டு எல்லாம் செய்யனும்னு .......
நினைப்பேன், அத்தோட சரி. திட்டம் மட்டும் போட்டுட்டு விட்ருவேன். இனியாவது செயல்படுத்த முயற்சிக்கிறேன்.
ரொம்ப நல்ல பதிவுக்கா.
பின்ன, செல்போன் பேக் செஞ்சத எப்டி எனக்கு அனுப்புறதுன்னு நீங்க முழிக்க கூடாதுல்ல)//
அக்கா கவலைப்படக்கூடாதுன்னு தம்பிங்கள்லாம் எம்புட்டு தெளிவா யோசிக்கறாங்க :)))
, திட்டம் போட்டு எல்லாம் செய்யனும்னு .......
நினைப்பேன், அத்தோட சரி. திட்டம் மட்டும் போட்டுட்டு விட்ருவேன். //
இது தான் பலரின் பிரச்சனை ஜோசப்.
திட்டமிட்ட வாழ்வு தெவிட்டாத இன்பம்னு சும்மாவா சொன்னாங்க.
இது மாதிரி மாதச் செலவுக்கான பட்ஜெட் போடறேன்னு ஆரம்பிச்சு பாதில விட்டவங்க பல பேரை பாத்திருக்கிறேன். எதையும் செயல் படுத்தணும் அதுதான் முக்கியம்.
ரொம்ப நல்ல பதிவுக்கா.//
வருகைக்கும் ஊக்கமிகு வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி.
அக்கா....கலக்குறிங்க ;)
பதிவுக்கு ரொம்ப நன்றி..
சுவாரசியம்!!
கொஞ்சம் திட்டமிடல் + குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருந்தால் போதும்...
மேனேஜ் செய்து விடலாம் இல்லையா :-))!!
உங்க வருகைக்கும் நன்றி கோபிநாத்.
கொஞ்சம் திட்டமிடல் + குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருந்தால் போதும்...
மேனேஜ் செய்து விடலாம் இல்லையா :-))!!//
கண்டிப்பாக மேனேஜ் செய்யலாம். அதில சந்தேகமே இல்லை.
குடும்பத்தினரின் ஒத்துழைப்பு - இது தான் மிக முக்கியம்.
//
என்னைவிடவும் மிக அழகாக திட்டமிட்டு
செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.
//
ரொம்ப புகழாதீங்க என்னைய எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு!!
அவ்வ்வ்வ்வ்
:)))))))))))))))))))))
டிவி பார்க்காம இருந்தாவே கையில் நேரம் எக்கச்சக்கம்.
இன்னாமா டைம மேனேஜ் பண்றீங்கோ.கலக்கலாகீது உங்க ஐடியா
:)
//அடுத்த செல்போன் பேக் ரெடி செஞ்சுகிட்டு
இருக்கேன்.
//
அக்கா என் அட்ரஸ் தெரியுமுல்ல உங்களுக்கு?? :))
இப்படில்லாம் சொல்லிக்கணும்னு எங்களுக்கும் ஆசையாத் தான் இருக்கு. ம்!
அடுத்த ஜென்மம்னு ஒண்னு இருந்தா அதுல பார்த்துக்கலாம்.
அருமை புதுகைத் தென்றல். உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது :)))
சூப்பருங்க!
ஸாரி.. சொல்ல மறந்துட்டேன்...
சூப்பர்ங்க அக்கா!.
(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
வாங்க சிவா,
//ரொம்ப புகழாதீங்க என்னைய எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு!!//
அவ்வ்வ்வ்வ்
:)))))))))))))))))))))
இன்னாமா டைம மேனேஜ் பண்றீங்கோ.கலக்கலாகீது உங்க ஐடியா
:)
நன்றி அப்துல்லா.
அக்கா என் அட்ரஸ் தெரியுமுல்ல உங்களுக்கு?? :))
அட்ரஸ் தெரியாது. போன் நம்பர் தான் தெரியும். ஆனா கவலைப்படாதீங்க புதுகை வரும்போது உங்க தங்கஸைப் பாத்து செல்போன் பேக்கை கொடுத்து, சொல்ல வேண்டியதையும் சொல்லிடறேன்.
சந்தோஷமா??? :))))
இப்படில்லாம் சொல்லிக்கணும்னு எங்களுக்கும் ஆசையாத் தான் இருக்கு. ம்!
அடுத்த ஜென்மம்னு ஒண்னு இருந்தா அதுல பார்த்துக்கலாம்.
ஆஹா வாங்க ரத்னேஷ்,
ரொம்ப நாளா ஆளையே காணோமேன்னு நினைச்சுகிட்டிருந்தேன்.
அடுத ஜென்மம் வரைக்கும் ஏன் வெயிட்டணும். முயன்றால் முடியாததில்லையே. (உங்க பிளாக் பேரே சூப்பரா வெச்சிருக்கீங்க )
அருமை புதுகைத் தென்றல். உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது :)))//
வாங்க வெண்பூ,
பாராட்டுக்கு நன்றி. மும்பையிலிருக்கும் தோழிகள் செய்வதைப் பார்க்கும் போது நான் செய்வதெல்லாம் ஒன்றுமே இல்லை.
ஓடும் ரயிலில் காய்கறி நறுக்கி வெச்சுகிட்டு வீட்டுக்கு போய் சமைப்பாங்க. ஓடும் ரயிலில் ஸ்வெட்டர் பின்னுறதைப் ஆச்சரியமா பார்த்திருக்கிறேன்.
நான் அவங்க கிட்டேயிருந்துதான் கத்துகிட்டேன்.
சூப்பருங்க!//
நன்றி பரிசல்.
ஸாரி.. சொல்ல மறந்துட்டேன்...
(நீங்க மறந்திருக்கலாம் :):(
சூப்பர்ங்க அக்கா!.//
(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
சரி சரி. அழப்படாது. அண்ணான்னு கூப்பிடற பொன்னான வாய்ப்பு கைவிட்டு போச்சேன்னு நான் நினைச்சுகிட்டு இருக்கேன்.
சாப்பாட்டுத்தட்டை அலாம்பி வைக்கிறபுரூஹனும், ப்பிள்ளைங்களைஇ நல்ல பழக்கங்கள் அறியக் கொடுத்த
அம்மாவுக்க்கும் வாழ்த்துகள்.
வாங்க வல்லிசிம்ஹன் அம்மா,
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
காபி/தேநீர் அருந்தும் நிமிடங்கள் என் பொன்னான
தருணங்களாக நினைத்து மெல்ல ருசித்து பருகுவேன்.
பாடல் கேட்பேன், புத்தகம் வாசிப்பேன்.
டென்ஷனைக் குறைக்க காலையில் எழுந்த உடன்
சீடி போட்டு பக்தி பாடல்கள்
YES. THE SAME ARE MY FAVORITES TOO.
நோ TV. Only I POD. (Radio வீட்டிலுள்ளவர்களுக்கு இடையூராக இருப்பதால்)
ஒப்புக்கொள்கிறேன்
திட்டமிடல் அவசியம். நானும் திட்டமிட்டுதான் வேலைகளை செய்கிறேன்.
இந்த உங்களின் பதிவு இன்னும் கொஞ்சம் கற்றுத்தந்தது.
இந்த உங்களின் பதிவு இன்னும் கொஞ்சம் கற்றுத்தந்தது.//
தங்களுக்கு உதவியாய் இருந்ததில் மிக்க மகிழ்ச்சி.
உங்கள் பதிவுகளை ரசித்து படிக்கிறேன்.
உங்களுடைய ஒரு பதிவைப்பற்றி என் வலைத்தளத்தில் http://swamysmusing.blogspot.com
ஒரு பதிவு போட்டிருக்கிறேன். முடிந்தால் பார்க்கவும்.
நன்றி.
ப.கந்தசாமி
தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கந்தசாமி அவர்களே,
//உங்களுடைய ஒரு பதிவைப்பற்றி என் வலைத்தளத்தில் http://swamysmusing.blogspot.com
ஒரு பதிவு போட்டிருக்கிறேன். முடிந்தால் பார்க்கவும்.//
உங்கள் வலைப்பூவில் தேடினேன். கிடைக்கவில்லை. லிங்காக அனுப்பிவைக்க முடியுமா??
Post a Comment