எல்லோரும் நலமா? இதோ என் பயண அனுபவங்களை
பகிர்ந்துக்க வந்துட்டேன். என்ன பயணம்னு கேக்கறவங்களுக்கு
இங்க.
வெள்ளி 26.09.08 அன்று இரவு மச்சிலி பட்டணம் எக்ஸ்பிரஸ்ஸில்
பத்ராசலத்திற்கு கிளம்பினோம்.டோர்னகல்லில் சில பெட்டிகள்
மனூகூர் செல்லும் பேசஞ்சரில் இணைத்து விடப்படும்.
அவைதான் பத்ராசலம் ரோட் செல்லும் ஒரே டிரையின்.
இரவு 10.45க்கு கிளம்பிய வண்டி மிகச் சரியாக அதிகாலை
4.40ற்கு பத்ராசலம் ரோடை அடைந்தது.
வெளியே வந்த பிறகு ஒரு ஆட்டோ ஏற்பாடு செய்துக்கொண்டு
பத்ராசலம் சென்றோம். (பத்ராசலம் ரோடு என்ற ஸ்டேஷனில்
வண்டி நின்றாலும் அந்த ஊரின் பெயர் கொத்தகூடம். இங்கும்
தங்கிக் கொள்ளலாம். இங்கிருந்து பத்ராசலத்திற்கு ஒரு மணி
நேரப் பயணம்.)
6 மணி வாக்கில் கோயிலுக்கு மிக அருகில் இருந்த
தேவஸ்தானத்தைச் சேர்ந்த கெஸ்ட் ஹவுஸில்
ரூம் எடுத்துக்கொண்டோம். (ஏஸி ரூம் தான்
450 ரூபாய்க்கு 2 ரூம் அதில் இருந்தது. 1 ரூம்
ஏஸி. இரவு தூங்கத்தானே என்று அதுவே
எடுத்துக்கொண்டோம்.) மெயின் ரோட்டில் வேறு
சில ஹோட்டல்களும் உள்ளன.
அருகிலேயே கோவில், படிக்கட்டு ஏறினால்
கோதாவரி என்பதற்காக இந்த ரூம் எடுத்துக்கொண்டோம்.
உடன் குளித்து ரெடியாகி அதே ஆட்டோவில்
ராமகிரிக்கு பயணமானோம். அங்கிருந்து தான்
”பாப்பி கொண்ட” செல்ல கோதாவரி
ஆற்றில் படகுப் பயணம் செய்ய வேண்டும்.
பத்ராசலத்திலிருந்து ராமகிரியை அடைய
2 மணி நேரம் ஆகிறது. பாதை சரியில்லை.
அடர்ந்த காடுகள், ஆரஸ்பதிக்காடு, விளைநிலங்களைத்
தாண்டி செல்லும் பயணம் அலுக்கவில்லை.
ராமகிரி- இங்கு ராமருக்கு கோயில் இருக்கிறது. இங்கு
ராமர் யோகராமர் என்றழைக்கப்படுகிறார். படகிற்காக
முன்பே இடம் ரிசர்வ் செய்திருந்தோம்.
படகுப் ப்ராயணத்திற்கு செல்லும் வழி.
கோதாவரி எம்புட்டு அழகா இருக்குல்ல!!!
வராங்கல்லிருந்து கல்லூரி மாணவ, மாணவியர்
110 பேர் புக் செய்திருந்தார்கள். அந்தக் கூட்டம்
வருவதற்கு முன் நீங்கள் உள்ளே அமர்ந்து
கொள்ளுங்கள் என்று படகுக்காரர் சொன்னதால்
ராமரை சாயந்திரம் தரிசித்துக்கொள்ளலாம்
என்று படகில் ஏறி உட்கார்ந்தோம்.
(நாங்கள் கோதாவரி படம் பார்த்துதான் இப்படி
ஒரு பயணம் போக வேண்டும் என்று ஆசைப்பட்டது.
அந்தப் படத்தில் படகு பல செட்டிங்குகளுடன் இருக்கும்.
இங்கே நாங்கள் பயணித்த படகு இதுதான். இந்தப்
படகின் பெயர் கோதாவரி. :)) )
10 நிமிடத்தில் மாணவ, மாணவியர் வந்தனர்.
நாங்கள் 5 பேரும் (நான், அயித்தான், பிள்ளைகள் மற்றும் என்
தங்கை) உள்ளே அமர்ந்திருந்தோம்.
வந்த கூட்டம் மொத்தமும் படகின் மேல் புறம்
இருக்கும் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டனர்.
நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்கு சற்று தள்ளி
ஒரு அடைப்பு இருந்தது. அதன் பின்னால் தான்
சமையல் நடந்து கொண்டிருந்தது. :)
போண்டா தெரியுதா!!! :)))) நான் போட்டோ
எடுக்கறேன்னு கேட்டதும் அந்தக்கா முகமெல்லாம்
துடைச்சுகிட்டு போஸ் தந்தாங்க. அவங்களை
போட்டோ எடுத்ததற்காக எனக்கு மட்டும்
ஸ்பெஷல் கவனிப்புத்தான். :)))
காலை டிபன் ரவா வெஜிடபிள் கிச்சடி, தேங்காய்ச்
சட்னி, போண்டா 2 கொடுத்தார்கள். சுடச்சுட
கிச்சடி சூப்பராக இருந்தது. யாரோ செய்து
எனக்கு பரிமாறியதில் சுவை சூப்பராக இருந்தது :).
(நானே சமைத்து நானே சாப்பிட்டு அலுத்து
போச்சு :( )
10 மணிக்கு படகு புறப்பட்டது.
படகு பிராயணம் ஆரம்பித்த
கொஞ்ச நேரத்தில் டீ வந்தது.
அடர்த்தியான மரங்கள் நிறைந்த மலைகள்,
அகண்டு விரிந்திருக்கும் கோதாவரி,
ஆஹா..... என்ன ஒரு பயணம்.
சூடா டீ குடிங்க.
டீ குடிச்சு முடிங்க. மீதி கதையை அடுத்த பதிவுல
சொல்றேன்.
41 comments:
சூப்பர்ப்பா.. அப்பறம் மேல சொல்லுங்க...
கோதாவரி கொள்ளை அழகு.
//காலை டிபன் ரவா வெஜிடபிள் கிச்சடி, தேங்காய்ச்
சட்னி, போண்டா 2 கொடுத்தார்கள். சுடச்சுட
கிச்சடி சூப்பராக இருந்தது. //
இப்படியெல்லாம் சொல்லிட்டு எங்களுக்கு டீ மட்டும்தானா :((!
அட இந்த முறை முத்துலெட்சுமி தான்
மீ த பர்ஸ்டா!!!
வாங்க வாங்க.
//காலை டிபன் ரவா வெஜிடபிள் கிச்சடி, தேங்காய்ச்
சட்னி, போண்டா 2 கொடுத்தார்கள். சுடச்சுட
கிச்சடி சூப்பராக இருந்தது. //
இப்படியெல்லாம் சொல்லிட்டு எங்களுக்கு டீ மட்டும்தானா :((!
ஆஹா ராமலக்ஷ்மி,
டிபனை போட்டோ எடுக்க மறந்துட்டோம். டிரையினிலிருந்து ஆட்டோவில் ஒரு மணி நேரப் பயணம், ரெடியாகி திரும்ப 2 மணி நேரப்பயணம் எல்லாம் சேத்து செம பசி. :))
அதனால தான் டீயையாவது மறக்காம போட்டோ எடுப்போம்னு எடுத்தேன்.
(போண்டா சூடா போட்டுகிட்டு இருக்காங்களே பார்க்கலையா!!)
அடா அடா அடா
இந்தக் கோதாவரிக்குப் போகனும்... படகுப் பயணம் போகனும்னு எனக்குந்தான் ரொம்ப நாள் ஆசை. பாப்பம். எப்ப நிறைவேறுதுன்னு.
படமெல்லாம் நல்லா வந்துருக்கு. தொடர்ந்து எழுதுங்க.
நோன்பு நேரத்தில பசியோட போண்டாவ பார்க்க வச்சுட்டீங்க :))
ரொம்ப அழகான போண்டா டீ யை காட்டி விட்டீர்கள் ;-)
நன்றி.
இயற்கை கொஞ்சும் இடங்களில் தண்டகாரண்யத்திற்கு முக்கிய இடம் உண்டு.
அடுத்த பகுதியை சீக்கிரம் எழுதுங்க.
வாங்க ஜி.ரா,
வருகைக்கு நன்றி.
தொடரும் போட்டு அடுத்த பதிவும் போட்டாச்சே.
வாங்க அப்துல்லா,
நோன்பு நேரத்தில் நம்ம ஊர் ஸ்வீட் கடைகளும் சட்டை போட்டுகிட்டு இருக்கும். (அதை பார்த்து நோன்பிருக்கும் அன்பர்களுக்கும் உண்ண வேண்டும் என்ற எண்ணம் வந்து விடக்கூடாதே என்பதற்காக.)
மன்னிச்சிடுங்க. அப்துல்லா.
ரொம்ப அழகான போண்டா டீ யை காட்டி விட்டீர்கள் ;-)
நன்றி.
வாங்க இளைய பல்லவன்,
வருகைக்கு நன்றி.
இயற்கை கொஞ்சும் இடங்களில் தண்டகாரண்யத்திற்கு முக்கிய இடம் உண்டு//
ஆமாம் இளையபல்லவன்,
//அடுத்த பகுதியை சீக்கிரம் எழுதுங்க//
போட்டாச்சே.
சூப்பரா சுத்திட்டு வந்திருக்கீங்க!
அங்கெல்லாம் போகணும்னா
உங்க வழிகாட்டுதல் கண்டிப்பா வேணும்.
அசத்துங்க!
அப்பன்னா அயித்தான், புள்ளைங்களுக்கு எப்புடி இருக்கும்?
:)))))))))
//(நானே சமைத்து நானே சாப்பிட்டு அலுத்துபோச்சு :()//
அப்பன்னா அயித்தான், புள்ளைங்களுக்கு எப்புடி இருக்கும்?
:)))))))))
படகுப் பயணம் போகனும்னு எனக்குந்தான் ரொம்ப நாள் ஆசை. பாப்பம். எப்ப நிறைவேறுதுன்னு.//
ஜி.ரா,
ஒரு முக்கியமான தகவல். 2012க்குள் போயிட்டு வந்திடுங்க. அப்புறம் அணைக்கட்டு வரப்போகுதாம். அப்புறம் இப்படி ஒரு பயணம் போக வாய்ப்பே இருக்காது.
நிஜமா நல்லவன் said...
:)
ஆஹா ஆரம்பிச்சிட்டாருய்யா நிஜமா நல்லவன் ஸ்மைலிப் போட.
வாங்க சுரேகா,
//சூப்பரா சுத்திட்டு வந்திருக்கீங்க!//
யெஸ்ஸு :)
அங்கெல்லாம் போகணும்னா
உங்க வழிகாட்டுதல் கண்டிப்பா வேணும்.//
போயிட்டு வந்தவங்க தன்னோட அனுபவத்தைப் பகிர்வது அடுத்தவங்களுக்கு உபயோகமா இருக்கும்னு தானே! நானும் இன்டர் நெட்டில் சில விடயங்கள், போன் நம்பர் கண்டு பிடிச்சுத்தான் பயண ஏற்பாட்டைச் செஞ்சது.
அது மாதிரி இதுவும் சிலருக்கு உபயோகமா இருக்குமேன்னு தான் இந்தப் பதிவே.
//(நானே சமைத்து நானே சாப்பிட்டு அலுத்துபோச்சு :()//
அப்பன்னா அயித்தான், புள்ளைங்களுக்கு எப்புடி இருக்கும்?//
பெண்களுக்கு இது ஒரு சாபம் மாதிரி. நாமே சமைத்து நாமே சாப்பிடும் எதுவும் நமக்க்குச் சுவைக்காது.
வேணும்னா இன்னைக்கு நைட் டிபன் உங்க கையால நீங்களே செஞ்சு சாப்பிட்டு பாருங்க தல..
(அப்புறம் நாளைக்கு என்னைவிட பெரிய புலம்பலா பதிவு போடுவீங்க. :)) )
//எல்லோரும் நலமா? இதோ என் பயண அனுபவங்களை
பகிர்ந்துக்க வந்துட்டேன்.//
ம்ஹுக்கும்!
நல்லா புல்லா கட்டிட்டு போயிட்டு ஃபுல் கட்டு கட்டிப்புட்டு பகிர்ந்துக்கவந்துட்டாங்கப்பா!
நல்லா இருங்க!
(திங்கறதுக்கு எதுனாச்சும் வாங்கி வந்திருப்பாங்கன்னு எதிர்பார்த்து ஏமாந்த ஆயில்யன்!)
//இங்க.//
திங்க????????
/பாதை சரியில்லை.
அடர்ந்த காடுகள், ஆரஸ்பதிக்காடு,//
ஆரஸ்பதின்னு சொன்னதும் ஞாபகத்துக்கு வருது!
நம்ம புதுகை காமராஜர் வீதி முடிஞ்சு பிறகு ஒரு ஆரஸ்பதி காடு ஆரம்பிக்குமே அது இப்ப எப்படி இருக்கு???
//கோதாவரி எம்புட்டு அழகா இருக்குல்ல!!!//
அட பயப்படாம இன்னும் கொஞ்சம் கிட்டத்துல போங்கக்கா!
//நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்கு சற்று தள்ளி
ஒரு அடைப்பு இருந்தது. அதன் பின்னால் தான்
சமையல் நடந்து கொண்டிருந்தது. :)
//
அதானே!
சமையலும் சமையல் சார்ந்த இடத்தில்தானே புதுகை அக்காவின் வாசம் இருக்கும்ல!
//சூடா டீ குடிங்க.//
டீ கொடுத்துட்டு ஒரு சஸ்பென்ஸா!
சரிதான் இன்னும் எத்தனை ஐட்டம் இருக்கு????
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
சூப்பர்ப்பா.. அப்பறம் மேல சொல்லுங்க...
//
ம்ம் டீ குடிச்சதுமே இம்புட்டு ஆர்வமா??
நடத்துங்க அக்காக்களே நடத்துங்க! :))
திங்கறதுக்கு எதுனாச்சும் வாங்கி வந்திருப்பாங்கன்னு எதிர்பார்த்து ஏமாந்த ஆயில்யன்!)//
அது சரி. நதியில் பயணம் போனா என்ன வாங்கி வர முடியும். கரைக்கு வந்து கோயிலுக்கு போனால் தானே பிரசாதம் கிடைக்கும் ஆயில்யன். :))
பெரிய வலைப் போட்டு மீன் பிடிக்க பார்த்தாங்க சிக்கினது ஒரு மீன் தான். இல்லாட்டி அதையாவது வாங்கி உங்களுக்கு அனுப்பி வெச்சிருப்பேன்.
:))))
நம்ம புதுகை காமராஜர் வீதி முடிஞ்சு பிறகு ஒரு ஆரஸ்பதி காடு ஆரம்பிக்குமே அது இப்ப எப்படி இருக்கு???//
எனக்கும் தெரியாதே! கேட்டுச் சொல்றேன்.
அட பயப்படாம இன்னும் கொஞ்சம் கிட்டத்துல போங்கக்கா!//
பயமா எனக்கா? அது சரி.
சமையலும் சமையல் சார்ந்த இடத்தில்தானே புதுகை அக்காவின் வாசம் இருக்கும்ல!
கிளம்பிட்டாருய்யா! ஆயில்யன் கிளம்பிட்டாருய்யா!
டீ கொடுத்துட்டு ஒரு சஸ்பென்ஸா!//
ஆபிஸிலிருந்து வந்து சூடா டீ குடிச்சிட்டு தானே கும்ம ஆரம்பிச்சிருக்கீங்க. நடத்துங்க. :)))
//மன்னிச்சிடுங்க. அப்துல்லா.
//
அக்கா நான் விளையாட்டுக்குச் சொன்னா நீங்க சீரியசா ஆயிட்டீங்க :))
அந்த போண்டாவை சாய்ந்தரம் சாப்பிட்டேன் :))))
பத்ராசலம் போய் வந்தீங்களா..
மகா புண்ணீயம்.
உங்க மூலமா நானும் கொஞ்சம் எடுத்துக்கிறேன் பா.
இந்தக் கோதாவரி தெலுங்குப் படம் எல்லாத்திலியும் வந்துடுமே.
வெகுநாள் ஆசை:))
அந்தப் போண்டா பார்க்கவே ருசியா இர்ருக்கு.. இன்னும் எழுதுங்க .அமர்ந்த ராமன் படம் கிடைத்தால்போடுங்கள்.
அக்கா நான் விளையாட்டுக்குச் சொன்னா நீங்க சீரியசா ஆயிட்டீங்க //
நீங்க விளையாட்டுக்குத்தான் சொன்னீங்கன்னு தெரியும். ஆனா நம்ம ஊரு கடையில பாத்திருப்பீங்களே துணியைப் போட்டு மூடி வெச்சிருப்பாங்க. அது ஞாபகம் வந்து கொஞ்சம் ஃபீலிங்கா போயிடுச்சு. :)
வாங்க வல்லி சிம்ஹன் அம்மா,
பத்ராசலம் போய் வந்தீங்களா..
மகா புண்ணீயம்.//
எல்லாம் பெரியவங்க ஆசிர்வாதம்.
உங்க மூலமா நானும் கொஞ்சம் எடுத்துக்கிறேன் பா.//
உங்களுக்கு இல்லாததா?
இந்தக் கோதாவரி தெலுங்குப் படம் எல்லாத்திலியும் வந்துடுமே//
ஆமாம் கோதாவரி இல்லாத படமே இல்லைன்னு சொல்லலாம். :)
இன்னும் எழுதுங்க .அமர்ந்த ராமன் படம் கிடைத்தால்போடுங்கள்.//
கண்டிப்பாய் ராமன் படம் போடுவேன்.
ராமனின் கதையைச் சொல்ல வேண்டாமா! அப்போ கண்டிப்பா படம் வரும்.
//
யாரோ செய்து
எனக்கு பரிமாறியதில் சுவை சூப்பராக இருந்தது :).
//
வேலையே செய்யாம உக்காந்து சாப்பிடறதுல ஒரு சொகம் இருக்கே !! நானே ஒரு பதிவு அத பத்தி போடணும்னு நினைச்சிகிட்டிருக்கேன்!!
:)))))))))))))
//
சுரேகா.. said...
//(நானே சமைத்து நானே சாப்பிட்டு அலுத்துபோச்சு :()//
அப்பன்னா அயித்தான், புள்ளைங்களுக்கு எப்புடி இருக்கும்?
:)))))))))
//
ரிப்ப்ப்ப்ப்பீட்டு
வேலையே செய்யாம உக்காந்து சாப்பிடறதுல ஒரு சொகம் இருக்கே !! நானே ஒரு பதிவு அத பத்தி போடணும்னு நினைச்சிகிட்டிருக்கேன்!!//
வாங்க சிவா,
இதுக்கு நான் என் பாணியில பதில் சொல்வேன். ஹஸ்பண்டாலஜின்னு சொல்வீங்க. தனியா சாட்டிங்கில் சொல்றேன்.
:)))))))))))))
//(போண்டா சூடா போட்டுகிட்டு இருக்காங்களே பார்க்கலையா!!)//
பார்த்தேன்தான். திரும்பவும் இப்படி வேற சொல்லிட்டீங்களா? சரின்னு அந்தப் பக்கமா போய் நின்னேன். இப்ப உங்களை படம் எடுத்தாங்களே அவங்க ஃப்ரன்ட்னேன். சந்தோஷமா ஒன்றுக்கு இரண்டா கொடுத்துட்டாங்க. போண்டா சூப்பர்:))!
Post a Comment