Wednesday, October 15, 2008

ஹிம்ச ராஜூ :))))))

அயித்தானின் பழைய கம்பெனியில் அவருக்கு
ஒரு பாஸு இருந்தாரு. ஆளு சரியான
திமிர் பிடிச்சவர். அவருக்கு பிடிச்சவங்களை
மட்டும் முன்னுக்கு கொண்டுவருவாரு.
அவங்க சரியா வேலை செய்யாட்டிக்கூட
பரவாயில்லை.

அயித்தான் அவர்கிட்ட மாட்டிகிட்டு
கஷ்டபட்டுகிட்டு இருந்தாரு. அயித்தானுக்கு
மட்டுமா கஷ்டம். :( அவரால நானும்
ரெம்பவே நொந்து வெந்து போயிருந்தேன்.

என் வாழ்வில் அயித்தானை விட்டு 1 1/2 வருடம்
தனியாக இருக்க நேர்ந்தது இந்த ஹிம்ஸ ராஜுவால்தான்.

இலங்கையில் பிரச்ச்னை இருப்பதால்
ஃபமலி ஸ்டேடஸ் தரமாட்டேன் என்று
சொல்லி பிரித்து வைத்துவிட்டார்.
(பிரச்சனை இருக்கற ஊருல அயித்தான்
மட்டும் இருக்கலாமா?!!)


ஒரு முறை வீட்டுக்கு வந்திருந்தார் அந்த
அதிகாரி. அடுத்தமுறை சாப்பிட
வாங்கன்னு அழைக்க, முகத்தில் அடித்தாற்
போல் அவர் சொன்ன சொற்கள் இன்றும்
என் காதில் ரீங்காரமிட்டுக்கொண்டுள்ளது.



மார்கெட் வொர்க்(!!??) செய்ய ஊருக்கு
வ்ந்தாருன்னா அயித்தான் அவரோடத்தான்
இருக்கணும்னு சொல்வார்.

“நான் எப்பவோதானே (ஒவ்வொரு மாசமும் வருவாரு)
வர்றேன். நான் வரும்போது வீட்டுக்கு போகணும்னு
நினைப்பே வெச்சுக்காதன்னு”, சொல்வாரம்.

இதைக் கேள்வி பட்டு நான் அவருக்கு வெச்சப்
பேரு “சவுத்தி” (தமிழில் சக்களத்தி)


அயித்தான் டூருக்கு போனாலும் நான்
பாட்டுக்கு இருப்பேன். (வேறவழி:( )

ஆனா அந்த அதிகாரி விட மாட்டாரு.

“எப்ப வர்ற?ன்னு போன் போட்டு
வர வெச்சிடுவாரு. :)

பாதி ராத்திரிக்கு போன் செஞ்சு டீடெயில்ஸ் கேப்பாரு.

போன் சத்தத்துக்கு எழுந்த பிள்ளைங்களை
தூங்க வைக்கறதுக்குள்ள உயிரே போயிடும்.

இப்படி நேரம் காலம் , வகை தொகை இல்லாமல்
சதாய்த்து கொண்டிருந்தார் அந்த அதிகாரி.


என் வாழ்வில் ஒரு வில்லனாகவே ஆகிவிட்டார்
அவர். என்ன கொடுமைடா சாமின்னு நான்
இருந்தப்போ நாங்க ”சந்தோஷம்” தெலுங்குப்படம்
பார்த்தோம்.

அதில் ஒரு சீன் வரும்.
நியூஸிலாந்தில் ஒரு கம்பெனியில் வேலை
பார்த்துகொண்டிருப்பார் நாகார்ஜுனா.
ஒருநாள் அவர் அலுவலகத்திற்கு
போனால் எதில் ஒரு ஸ்டாஃப் அழுதுகொண்டு
எதிர் வருவார்.

என்ன ஆச்சு”, என்று கேட்பார் நாகார்ஜுனா.

“ஹிம்ச ராஜூ ஹேஸ் கம்” என்பார் அவர்.

ஐயோ என்று அதிர்ச்சி அடைவார் நாகார்ஜுனா.

இதைப் பார்த்தும் நானும் அயித்தானும் விழுந்து
விழுந்து சிரித்தோம்.

அன்றிலிருந்து சக்களத்தி என்று நான் வைத்தப்பெயர்
மாற்றப்பட்டு அந்த அதிகாரி ”ஹிம்ஸ ராஜூ”
என்று நாமகரணம் ஆனது.

ஹிம்ஸ்- இம்சை ராஜூ- அரசன்.

எல்லோருக்கும் இப்படி ஒரு பாஸ் இருந்திருப்பாருதான்.




இப்படி அராஜகம் செய்து கிட்டு இருந்தவர் வேலையை
விட்டுவிட்டு துபாயில் ஒரு கம்பெனியில் வேலைக்கு
சேர்ந்தார்.

அவர் மனைவி தணியாக தனது மகளுடன்
மும்பையில் இருக்க நேர்ந்தது விதிவசம் என்று
சொல்லவா!

தனிமை கொடுமை தாங்க முடியாமல்
மனைவி கொடுத்த டார்ச்சரில் ஐயா
1 வருடத்தில் வேலையை விட்டுவிட்டு
மும்பை வந்து பழைய கம்பெனியில்
குறைந்த சம்பளத்துக்கு ஆலோசகராக
சேர நேர்ந்ததை என்னவென்று சொல்வது??

அவர் இலங்கைக்கு வரும்போதெல்லாம்
அயித்தானை மட்டும்தான் அழைத்து
பேசுவார்.

இவர் மாறிவிட்டார் என்ற செய்தி எனக்கு
பெரிய அதிர்ச்சி செய்தி.

அயித்தானிடம் தனக்கு ஒரு நல்ல வேலை
பார்த்து கொடுக்கச்சொல்லி பயோடேட்டா
அனுப்பியது எங்கள் இருவருக்கும்
அதிர்ச்சியோ அதிர்ச்சி!!!!!


சூப்பர் ஹைலட் என்ன தெரியுமா? நாங்கள்
இலங்கையை விட்டு கிளம்பும் முன்
வீட்டிற்கு வந்து சாப்பிட்டார்!!!!
ரொம்ப சிம்பிளாக அவர் நடந்து கொண்டது
“அவரா!இவர்?” என்று கேட்க வைத்தது.


நாங்கள் இங்கு வந்த பிறகு ஒரு நாள்
போன் செய்து,” நான் ஹோட்டல்
மாரியட்டில் தங்கி இருக்கேன்! வீட்டில்
எல்லோரையும் அழைச்சுகிட்டு வாப்பா!
சேர்ந்து வெளியே போய் சாப்பிடலாம்”,!!!!???!!
என்று சொன்ன போது நான் மயக்கமடைந்து
கீழே விழுந்தேன்.

இது என்ன ரிவர்ஸபுல்லா?

புகழனின் பதிவு படித்ததும் எனக்கு இதெல்லாம்தான்
ஞாபகம் வந்துச்சு.

19 comments:

புகழன் said...

//
ஹிம்ஸ்- இம்சை ராஜூ- அரசன்.

எல்லோருக்கும் இப்படி ஒரு பாஸ் இருந்திருப்பாருதான்.




இப்படி அராஜகம் செய்து கிட்டு இருந்தவர் வேலையை
விட்டுவிட்டு துபாயில் ஒரு கம்பெனியில் வேலைக்கு
சேர்ந்தார்.

அவர் மனைவி தணியாக தனது மகளுடன்
மும்பையில் இருக்க நேர்ந்தது விதிவசம் என்று
சொல்லவா!

தனிமை கொடுமை தாங்க முடியாமல்
மனைவி கொடுத்த டார்ச்சரில் ஐயா
1 வருடத்தில் வேலையை விட்டுவிட்டு
மும்பை வந்து பழைய கம்பெனியில்
குறைந்த சம்பளத்துக்கு ஆலோசகராக
சேர நேர்ந்ததை என்னவென்று சொல்வது??

அவர் இலங்கைக்கு வரும்போதெல்லாம்
அயித்தானை மட்டும்தான் அழைத்து
பேசுவார்.

இவர் மாறிவிட்டார் என்ற செய்தி எனக்கு
பெரிய அதிர்ச்சி செய்தி.

அயித்தானிடம் தனக்கு ஒரு நல்ல வேலை
பார்த்து கொடுக்கச்சொல்லி பயோடேட்டா
அனுப்பியது எங்கள் இருவருக்கும்
அதிர்ச்சியோ அதிர்ச்சி!!!!!


சூப்பர் ஹைலட் என்ன தெரியுமா? நாங்கள்
இலங்கையை விட்டு கிளம்பும் முன்
வீட்டிற்கு வந்து சாப்பிட்டார்!!!!
ரொம்ப சிம்பிளாக அவர் நடந்து கொண்டது
“அவரா!இவர்?” என்று கேட்க வைத்தது.


நாங்கள் இங்கு வந்த பிறகு ஒரு நாள்
போன் செய்து,” நான் ஹோட்டல்
மாரியட்டில் தங்கி இருக்கேன்! வீட்டில்
எல்லோரையும் அழைச்சுகிட்டு வாப்பா!
சேர்ந்து வெளியே போய் சாப்பிடலாம்”,!!!!???!!
என்று சொன்ன போது நான் மயக்கமடைந்து
கீழே விழுந்தேன்.

//

இந்தப் பதிவில் மேலே குறிப்பிட்டது மட்டும் ரிவர்ஸபுல் ஆக தெரிகிறது.

rapp said...

me the first?

rapp said...

//அவர் மனைவி தணியாக தனது மகளுடன்
மும்பையில் இருக்க நேர்ந்தது விதிவசம் என்று
சொல்லவா//

ம்ஹூம், மேடம், அவங்க நிம்மதியா ஓவர் சந்தோஷமா இருந்திருப்பாங்க, அது பொறுக்க முடியாம திரும்பி வந்திருப்பாரு.

ஆயில்யன் said...

//அயித்தானின் பழைய கம்பெனியில் அவருக்கு
ஒரு பாஸு இருந்தாரு//

ஹய்ய்ய் மாமா இப்ப புது கம்பெனி!
:))

(இதுக்கெல்லாம் இனிப்பு கேட்டா அப்படியே கொடுத்திடவா போறாங்க!?)

ஆயில்யன் said...

//ஒரு பாஸு இருந்தாரு. ஆளு சரியான
திமிர் பிடிச்சவர். அவருக்கு பிடிச்சவங்களை
மட்டும் முன்னுக்கு கொண்டுவருவாரு.
அவங்க சரியா வேலை செய்யாட்டிக்கூட
பரவாயில்லை.//

அட அவுருதான் மன்னார் & கம்பெனி முதலாளியா இருக்கும் :)

ஆயில்யன் said...

//அயித்தான் அவர்கிட்ட மாட்டிகிட்டு
கஷ்டபட்டுகிட்டு இருந்தாரு. அயித்தானுக்கு
மட்டுமா கஷ்டம். :( அவரால நானும்
ரெம்பவே நொந்து வெந்து போயிருந்தேன்.
//

ஆமாம் ஆமாம்!

டெய்லி ஆபிஸ்லேர்ந்து அவுக வந்து சமைச்சுப்போட்டு நீங்க எப்ப சாப்பிட்டு பாவம் தான் :(

ஆயில்யன் said...

//என் வாழ்வில் அயித்தானை விட்டு 1 1/2 வருடம்
தனியாக இருக்க நேர்ந்தது//


பின்னாடி பாருங்க! மாமா சிரிக்கிறாரு!

(அதெல்லாம் ஒரு காலம்ன்னு நினைச்சு சிரிக்கிறாருபோல...!!!)

:)))

ஆயில்யன் said...

//(பிரச்சனை இருக்கற ஊருல அயித்தான்
மட்டும் இருக்கலாமா?!!)///

இருக்ககூடாது!

ஆயில்யன் said...

//அவர் சொன்ன சொற்கள் இன்றும்
என் காதில் ரீங்காரமிட்டுக்கொண்டுள்ளது.
///

கானகந்தர்வன் பாட்டுக்கு எந்த காது யூஸ் பண்றீங்க ????

ஆயில்யன் said...

//போன் சத்தத்துக்கு எழுந்த பிள்ளைங்களை
தூங்க வைக்கறதுக்குள்ள உயிரே போயிடும்.
///

ஆனாலும் நீங்க மாமாவை ரொம்பத்தான் கஷ்டபடுத்தியிருக்கீங்களோன்னு யோசிக்க வைக்கிது!(அட நீங்களே ஒரு பாட்டு பாடிகூட தூங்க வைச்சிருக்கலாம் அதுக்கு கூட மாமா வர்ணுமா?)

ஆயில்யன் said...

//படித்ததும் எனக்கு இதெல்லாம்தான்
ஞாபகம் வந்துச்சு.
//


பதிவை படிச்சதும் கும்மிதான் என் நியாபகத்துக்கு வந்திடுச்சு என்னிய மன்னிச்சிட்டேன் ஒரு வார்தை நீங்கள் செப்பணும் !

Thamiz Priyan said...

எக்கா! எவ்வளவு கஷ்டப்பட்டு ஆயில்யன் பெயரில் கமெண்ட் போட்டேன். கமெண்ட்களை எல்லாம் ரிலீஸ் பண்ணுங்க.. இல்லைன்னா ஹைதராபாத் வந்து தர்ணா பண்ணுவோம்.

புதுகை.அப்துல்லா said...

அக்கா உலகம் ஓரு வட்டம்க்கா :)

pudugaithendral said...

ellorukum vanakkam

konjam illa rombave busyya irunthen

tanglishil typevutharku mannikavum

pudugaithendral said...

vaanga pugalan,

eppadiyo pathivula reversable irunthuche athu pothum :)

pudugaithendral said...

thangachi rap,

just missed. me d firstuku sonnen

pudugaithendral said...

madamlam vendam rapp,

ellorum alaipathupol thendral pothume!

pudugaithendral said...

ayilyan,

timely song onnu solren.

ENGALUKUM KALAM VARUM, KALAM VANTHA PATHIVU VARUM. APPA PATHUKAROM


:)))))))))))))))))))))))))))))

மங்களூர் சிவா said...

என்னெத்த சொல்ல
:(((((((((