Wednesday, October 22, 2008

தீபாவளி நினைவுகள் (நிறைவுப்பகுதி)

இதுக்கு முந்தைய தீபாவளி கொசுவத்திகளுக்கு

கார்த்தி பய இரண்டு ரூபாய் பாட்டியை கேட்டதும்
பாட்டி,”எதுக்குடா? 2 ரூபாய்ல என்ன வெடி வாங்குவன்னு
கேட்டாங்க?”

பாட்டி அந்த ரெண்டு ரூபாய்ல வாசலல் நிக்கிற
ஜோஸ்யக் காரர் கிட்ட கொடுத்து பட்டாசு
எப்ப வரும்னு கேப்போம்! அப்படின்னு
சொல்ல ஜோஸ்யக்காரர் திட்டிகிட்டே போனாரு.

அப்பாக்கு இந்த விவரம் தெரிய,”தீபாவளிக்கு
முதல் நாள் வெடி வரும்”னு சொல்ல தீபாவளிக்கு
முதல் நாள் எப்பவரும்னு கவுண்டவுன் செய்ய ஆரம்பிப்போம்.


தீபாவளி பலகாரங்கள் வீட்டுலயே செய்வாங்க.
பாட்டி பெரிய ட்ரம் நிறைய மிக்ஸர், தேன்குழல்,
ரவா லட்டு, ஓமப்பொடி எல்லாம் செய்வாங்க.
அம்மாவும் ஒத்தாசையா இருப்பாங்க.

நான், அப்பா தம்பி 3 பேரும்கூட ரொம்ப
ஒத்தாசை செய்வோம். செய்ய்ற பலகாரத்தை
சாப்பிட ஆளு வேணும்ல :)

அப்பா செய்யற அன்னைக்கு மட்டும் தான்
சாப்பிடுவாரு. டேஸ்ட் பார்க்கறேன்னு சொல்லி
சொல்லியே பாதி காலி ஆகிடும்.

பாட்டி விவரமா கள்ளிப்பெட்டிக்குள்
1 டப்பா நிறைய ரவா லட்டு, பூந்தி லட்டு,
தேன்குழல் எடுத்து வெச்சிருப்பாங்க.
தீபாவளி முடிஞ்சதுக்கப்புறம் அதை ரிலீஸ்
செய்வாங்க.

அம்மா செய்யும் ஜாங்கரிக்கு நானும் தம்பியும்
அடிமை. அம்மம்மாவுக்கு அப்புறம் அதே
பக்குவத்தோட அம்மா செய்வாங்க.
அவங்க பேரை நிலை நாட்ட நானும்
செய்ய கத்துகிட்டேன். தலைமுறை
ஜாங்கிரி பக்குவம் எனக்கும் வந்திடுச்சே :)

தீபாவளி அன்னைக்கு காலைல எழுந்திருச்சு
மொத வெடி போட்டுட்டுத்தான் மத்த வேலையே.
எண்ணை தேச்சு குளிச்சு, தீபாவளி லேகியம்
சாப்பிட்டாத்தான் அம்மா காபியே தருவாங்க.

அந்த அதிகாலையில் நாங்க எண்ணைய் குளியல்,
செஞ்சு கஷ்டப்பட்டுகிட்டு இருப்போம் அப்பா
நல்லா தூங்கிகிட்டு இருப்பாரு.
அவர் தீபாவளி கொண்டாடவே மாட்டாரு,
புதுசு எடுத்தாலும் அன்றைக்கு உடுத்துவது
கிடையாது. பட்டாசு வெடிக்கும் போது
பாட்டியின் ஸ்டாண்டர்டு டயலாக்,”சீக்கிரம்
வெடிச்சிட்டு வாங்க”??!! :(

காலை 5.30 மணிக்கு மெல்ல வெளிச்சம்
பரவ ஆரம்பித்தாலே தீபாவளி முடிந்துவிட்டது
எங்களுக்கு. :)

அம்மா உறவினர்களுக்கு நண்பர்களுக்கு
பலகாரங்கள் எடுத்து வைத்திருப்பார்
கொண்டுபோய் கொடுத்து வாழ்த்துக்கள்
சொல்லி வருவோம்.

இப்போதெல்லாம் எல்லோரும் டீவி
முன் தான் இருப்பார்கள். முன்பு
தீபாவளி கொண்டாடிய சந்தோஷம்
இப்போது இல்லை. புத்தாடைக்கோ,
திண்பண்டங்களுக்கோ காத்திருப்பு
இல்லை. அதனால் தீபாவளிக்கு இருந்த
ஸ்பெஷல் மதிப்பு குறைந்ததாகவே
தோன்றுகிறது.

இதில் தொலைக்காட்சிகளின் சிறப்பு
நிகழ்ச்சிகளும் முக்கிய பங்குவகுக்கிறது.

மும்பையில் இருந்த போது தீபாவளி
இன்னும் சிறப்பாக இருக்கும். வீட்டிற்கு
முன் சீரியல் செட்கள் போட்டு ஒவ்வொரு
வீடும் பளிச்சென்று இருக்கும்.

நான் வேலைபார்த்த கம்பெனில் நாங்கள்
3 பேர்தான் பெண்கள். தீபாவளி ஷ்பெஷலாக
முப்பெருந்தேவியரும் ஜரிப்புடவை கட்டி
அசத்துவோம்.

தன் த்ரேயச் ( வட நாட்டு பழக்கமாக) தீபாவளிக்கு முதல் நாள்
வரும் த்ரயோதசி திதி அன்று அம்மம்மா
தங்க நகை வாங்குவார்கள். தங்கம்
முடியாவிட்டால் வெள்ளிக்காசு. கண்டிப்பாக
பால் காய்ச்சும் பாத்திரம் வாங்குவார்கள்.
அதில் பாயசம் செய்துதான் குபேரலட்சுமிக்கு
பூஜை செய்து படைப்பார்கள்.

இந்த இனிமையான நினைவுகளை அசைப்போட்டுக்கொண்டே
தீபாவளிக்கு ரெடியாகி கொண்டிருக்கிறேன்.

14 comments:

ராமலக்ஷ்மி said...

//அந்த ரெண்டு ரூபாய்ல வாசலல் நிக்கிற
ஜோஸ்யக் காரர் கிட்ட கொடுத்து பட்டாசு
எப்ப வரும்னு கேப்போம்!//

:))!

மலர்ந்த இல்லேயில்ல, வெடித்த நினைவுகள் அருமை தென்றல். உங்கள் எல்லோருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

புதுகை.அப்துல்லா said...

அக்கா நம்ம ஊருல தீபாவளி அன்று அருகில் இருக்கும் மாற்று மத சகோதாரர்களீடம் இருந்து கண்டிப்பா எங்களுக்கு பலகாரம் வந்துவிடும்.10 வீட்டில் இருந்து வரும் பலகாரத்தைத் திங்க நாங்க 4 பேரு மட்டுமே. அவங்க வீட்டையெல்லாம் விட நம்ம வீட்லதான்டா பண்டிகைப் பலகாரம் அதிகமா இருக்குன்னு எங்க அப்பா விளையாட்டா சொல்லுவாரு. :)

மங்களூர் சிவா said...

//அந்த ரெண்டு ரூபாய்ல வாசலல் நிக்கிற
ஜோஸ்யக் காரர் கிட்ட கொடுத்து பட்டாசு
எப்ப வரும்னு கேப்போம்!//


ஹாஹா

நல்ல அருமையா எழுதியிருந்தீங்க 3 பாகமும். சின்ன பையனா இருந்தப்ப அம்மா பலகாரம் எல்லாம் செய்வாங்க இப்பல்லாம் க்ருஷ்ணா ஸ்வீட் இல்லைனா அடையார் ஆனந்த பவன்ல சம்பிரதாயத்துக்கு வாங்கறதோட சரி.

எங்க வீட்டுக்கார அம்மிணி தீபாவளிக்கு எதோ கான்ப்ளேக்ஸ் செய்ய போறாங்களாம் :))

பாப்போம் :))))

ஆயில்யன் said...

புதுகை அப்துல்லா அண்ணா சொன்ன மாதிரி பலகாரம் அனுப்புற பழக்கம் எங்க அக்கம்பக்கதுலயும் உண்டு!

ஏன் தங்கச்சியக்கா நீயும் கூட ஆயில்யன் தம்பியண்ணனுக்கு பார்சல் பண்ணியே தீருவேன் பிடிவாதமா இருக்குறதா கேள்விப்பட்டேன்!

பரவாயில்லம்மா! பரவாயில்ல!
நான் ஊருக்கு வரும்போது பாத்துக்கிறேன் :)

pudugaithendral said...

வாங்க ராமலட்சுமி,

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

pudugaithendral said...

ஆமாம் அப்துல்லா,

பகிர்தல் நல்லதுதானே. அன்பையும் உறவையும் வளர்க்கத்தான் பண்டிகைகள் என்பதை மறந்து விட்டனர் இன்று.

pudugaithendral said...

தீபாவளி அன்னைக்கும் கான்ப்ளேக்ஸா.............!!!!!!!!!!!!!!!!!

என்ன கொடுமை இது சிவா?

pudugaithendral said...

வாங்க தம்பியண்ணா,

நீங்களே சொல்லிட்ட பிறகு பார்சல் அனுப்பறது நல்லா இருக்காது.

ஆனாலும் நீங்க என்னென்ன மிஸ் செஞ்சிருக்கீங்கன்னு மாத்திரம் சொல்றேன்.

pudugaithendral said...

முள்ளுமுறுக்கு, தேன்குழல், ட்ரைப்ரூட் லட்டு, மைசூர்பாகு, அசோகா அல்வா,பாதுஷா, கான்ப்ளேக்ஸ் மிக்ஸர்.:))))))))))))))))))))))(தீபாவளிக்கு மொதோ நாள் செய்யுற வாழைக்காய் பஜ்ஜி, கத்திர்க்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, உக்காரை இதெல்லாம் நான் சேர்க்கலை :) )

ஆயில்யன் said...

//புதுகைத் தென்றல் said...

முள்ளுமுறுக்கு, தேன்குழல், ட்ரைப்ரூட் லட்டு, மைசூர்பாகு, அசோகா அல்வா,பாதுஷா, கான்ப்ளேக்ஸ் மிக்ஸர்.:))))))))))))))))))))))(தீபாவளிக்கு மொதோ நாள் செய்யுற வாழைக்காய் பஜ்ஜி, கத்திர்க்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, உக்காரை இதெல்லாம் நான் சேர்க்கலை :) )//


அப்ப மாமா ஆபிஸுக்கு போகவே இல்லியா எத்தினி நாளு லீவு !
(பாவம் மாமா ஒரு காசித்துண்டு கொடுங்க கையிலா பாருங்க எம்புட்டு வேர்வையோட வராரு )

:)))))

ஆயில்யன் said...

//மங்களூர் சிவா said...

//அந்த ரெண்டு ரூபாய்ல வாசலல் நிக்கிற
ஜோஸ்யக் காரர் கிட்ட கொடுத்து பட்டாசு
எப்ப வரும்னு கேப்போம்!//


ஹாஹா

நல்ல அருமையா எழுதியிருந்தீங்க 3 பாகமும். சின்ன பையனா இருந்தப்ப அம்மா பலகாரம் எல்லாம் செய்வாங்க இப்பல்லாம் க்ருஷ்ணா ஸ்வீட் இல்லைனா அடையார் ஆனந்த பவன்ல சம்பிரதாயத்துக்கு வாங்கறதோட சரி.

எங்க வீட்டுக்கார அம்மிணி தீபாவளிக்கு எதோ கான்ப்ளேக்ஸ் செய்ய போறாங்களாம் :))

பாப்போம் :))))//


சிவா அண்ணே! அதெல்லாம் எதுக்கு அண்ணி நொம்ப கஷ்டப்பட்டு செய்ய சொல்றீங்க???? கடையில விக்கும் கான்ப்ளெக்ஸ் வாங்கி கொடுங்க :))))

cheena (சீனா) said...

புதுகைத் தென்றல் - நல்ல கொசுவத்து - புகைகிறது - இதுலே பகுதி1 பகுதி2 பகுதி 3 ....... வேற .

பழைய இளமைக்கால நினைவுகளை - நிகழ்வுகளை நினைப்பதே மகிழ்ச்சி தானெ - தீபாவளி நல்வாழ்த்துகள்

நேரமிருப்பின் படியுங்கள்

http://cheenakay.blogspot.com/2008/10/blog-post_26.html

http://cheenakay.blogspot.com/2008/10/blog-post_12.html

Hindu Marriages In India said...

மிகவும் அருமை

pudugaithendral said...

nandri hinu marriage