Thursday, October 30, 2008
பாய் தூஜ் - வாழ்த்துக்கள்
இன்று ஐந்தாம் நாள் தீபாவளி பாய்தூஜ் என்ற பெயரில்
கொண்டாடப்படுகிறது. உடன்பிறந்தவர்களின் அன்பை
கொண்டாடும் ஒரு பண்டிகை.
இந்த நந்நாளில் அண்ணன் தம்பிகள் தனது தங்கை/அக்கா
வீட்டிற்குச் செல்வர். அக்கா/தங்கை ஆரத்தி எடுத்து, திலகம்
வைத்து தித்திப்பு ஊட்டுவர். அண்ணன் தம்பிக்காக விருந்து
சமைத்து கொடுப்பார்கள்.
எமதர்மராஜன் இன்றைய தினம் தனது தங்கை யாமினியின் வீட்டிற்கு
செல்கிறார். உடன் பிறந்தவரைப் பார்த்து மகிழ்ந்த யாமினி பொட்டிட்டு
ஆரத்தி எடுத்து வரவேற்று விருந்து படைக்கிறார்.
மிக்க மகிழ்ச்சி அடைந்த யமதர்மராஜன் எவனொருவன்
பாய்தூஜ் நந்நாளில் தனது சகோதரியின் கையால் திலகம்
அணிகிறானோ அவனுக்கு நரகமென்பது கிடையாது என்றும்
சகோதரிகையால் சமைத்த உணவை இன்று உண்டவனுக்கு
நல்ல சந்தோஷமான வாழ்க்கையும் அமையும் என்று
வாழ்த்தி வரமளிக்கிறார்.
தம்பி கார்த்தி, அனில் அண்ணாவுடன் இந்த வலையுலக
உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் நல்ல மகிழ்வான
வாழ்வை ஆண்டவன் அருள வேண்டுகிறேன்.
(உங்கள் அனைவரின் சார்பாக இன்று தம்பி அப்துல்லா
இங்கே வந்திருந்து உணவருந்தினார்)
அனைவருக்கும் பாய்தூஜ் நல்வாழ்த்துக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
மீ த பர்ஸ்ட்டு வாழ்த்துக்களுடன்..!
ஹை தம்பியண்ணாதான் ஃபர்ஸ்டு.
வாங்க வாங்க.
சகோதரிகையால் சமைத்த உணவை இன்று உண்டவனுக்கு
நல்ல சந்தோஷமான வாழ்க்கையும் அமையும் என்று
வாழ்த்தி வரமளிக்கிறார்.
//
ஹையா! எனக்கு நல்ல சந்தோஷமான வாழ்க்கை அமையப் போகுதே :)
அக்கா சாப்பாடு உண்மையிலேயே சூப்பர்க்கா... அந்த சட்னி டேஸ்ட் இன்னும் நாவில் இருந்து மாறவேயில்லை.( வெண்பூவுக்கும்,ஜோசப் அண்ணனுக்கும் வயித்தெரிச்சலா இருக்குமே இப்ப :)))
வாங்க அப்துல்லா,
இன்று தாங்கள் வீட்டிற்கு வந்தது மிக மிக சந்தோஷம்.
ஒரு நல்லநாளில் தம்பி வீட்டிற்கு வந்தது தற்செயலாக நிகழ்ந்தாலும் ஆண்டவன் அருள் என்றுதான் சொல்வேன்.
தம்பிகள் அனைவருக்கும் எல்லா வளமும் வழங்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
எனக்காக என் அன்பு அண்ணண் அப்துல்லா அக்கா வீட்டில் சாப்பிட்டமையால் எனக்கும் சந்தோஷ வாழ்க்கை அமையும் என உறுதியாக நம்புகிறேன்.
அக்கா எங்களுக்கு வலை மூலமா ஆரத்தி எடுத்திட்டீங்க.
(நல்லா அக்கா வீட்ல சாப்பிட்டுட்டு என்னையும், வெண்பூவையும் வம்பிழுக்கிற அப்துல்லா அண்ணண், இன்னைக்கு வலைச்சரத்துல ஒழுங்கா பதிவப் போடாம மீள்பதிவிட்டமைக்காக அவரை வன்மையாகக் கண்டிக்கிறேன்.)
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு ஜோசப்.
வாழ்த்துக்கள். வருகைக்கு மிக்க நன்றி
அக்கா! நான் உங்க வீட்டுக்கு வந்து சாப்பிட்டத்தை சொல்லாம விட்டுட்டீங்களே... ;) நன்றிகளும் வாழ்த்துக்கள்!
ஜோசப் அப்துல்லாவுக்கு பெரிய விருந்து ஏதும் கொடுக்கவில்லை.
ஜஸ்ட் குழிப்பணியாரம், தேங்காய்ச் சட்னி, கறிவேப்பிலை குழம்பு, மசாலா டீ. அம்புட்டுதான். (1 மணி நேரம் தான் இருந்தார்.)
நன்றி! வாழ்த்துக்கள்!
பதிவை தமிழ்மணத்துக்கு அனுப்ப்பலையா????
நானே அனுப்பிட்டேன்...:)
உங்களுக்கும் வாழ்த்துக்கள் தென்றல்.. தற்செயலாக அப்துல்லா அதே நாளில் அங்கு வந்ததும் ஆச்சர்யமான விசயம்..
இந்த வார ஆனந்த விகடனில் சந்திராயன் பற்றிய மதனின் பதில் பொருத்தமாக இருக்கும்..
//
எந்த நாட்டால் சரியாக தீபாவளி நேரத்தில் நிலாவுக்கு ராக்கெட் விட முடியும்..
//
:)))
//
அக்கா சாப்பாடு உண்மையிலேயே சூப்பர்க்கா... அந்த சட்னி டேஸ்ட் இன்னும் நாவில் இருந்து மாறவேயில்லை.( வெண்பூவுக்கும்,ஜோசப் அண்ணனுக்கும் வயித்தெரிச்சலா இருக்குமே இப்ப
//
நற..நற..நற...
//
ஜோசப் பால்ராஜ் said...
எனக்காக என் அன்பு அண்ணண் அப்துல்லா அக்கா வீட்டில் சாப்பிட்டமையால் எனக்கும் சந்தோஷ வாழ்க்கை அமையும் என உறுதியாக நம்புகிறேன்.
//
ரிப்பீட்டு
என்னங்க!
கலக்குறீங்க!
அப்ப எனக்கும்
நல்லதுதான் நடக்கும்கிறீங்க!
அப்துல்லா சாப்பிட்டா
அகிலமே சாப்பிட்டமாதிரிதானே
நாங்க புதுகை சார்பாத்தான்
அவரை அனுப்பிவச்சோம்..!
அப்புறம்
பதிவுலகம் சார்பாகவும்!
அன்பின் புதுகைத்தென்றல்
இன்று சகோதரர் அப்துல்லா உங்கள் வீட்டிற்கு வந்து விருந்து சாப்பிட்டது உண்மையிலேயே பாராட்டத் தக்க செயல் - சென்னையில் இருக்கும் அவர் டில்லி ஹைதராபாத் என அலுவல் காரணமாக வந்து - சரியாக குறிப்பிட்ட தினத்தில் அங்கு இருந்தது மகிழ்வினைத் தருகிறது.
நல்வாழ்த்துகள்
Post a Comment