அண்ணன் முந்தைய பதிவுக்கு.
நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு என்பார்கள்.
என் நம்பிக்கை வீணாகவில்லை. என் அண்ணன் வந்தார்.
தாய்வீடு சுஹாசினி போல் நான் அடைந்த ஆனந்தத்திற்கு
அளவேயில்லை. லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் என்பார்கள்.
ஆனால் நானோ முதலில் பார்த்தபோதே இவர்தான்
நான் தேடும் அண்ணன் என்பதை புரிந்துக்கொண்டேன்.
ஆனால் வாய் நிறைய அண்ணா என்றழைக்க முடியவில்லை.
அவர் வந்தது அயித்தானின் அதிகாரியாக. நான் அண்ணா
என்று அழைத்தால் பிரச்சனையாகி விடும்.
நாங்கள் இலங்கையில் இருந்தபோது அயித்தானின் உயர் அதிகாரி
அவர். பெரிய பதவியில் இருந்தாலும் ரொம்ப சிம்பிளாக
இருப்பார். வேலையில் எவ்வளவு கண்டிப்போ
சாய்ந்திரம் 6 மணிக்கு மேல் வேலைக்கு ”நோ”.
குடும்பத்திற்கும் நேரம் ஒதுக்க வேண்டுமென்று
அடிக்கடி சொல்வார்.
இலங்கை வந்த உடன் அன்று இரவு விருந்துக்கு
என் அண்ணா அழைத்துச்செல்வார். அவர் ஊர்
திரும்பும் அன்று காலையிலேயே ரூமை காலிச்செய்துவிட்டு
பெட்டியுடன் வந்துவிடுவார். இரவு என் கையால் விருந்து
உண்டபின் விமானம் ஏறுவார். இது எழுதப்படாத சட்டமாக
இருந்தது. (நான் செய்யும் பிசிபேளாபாத், ரசம், சாம்பார்
அண்ணாவின் ஹாட் பேவரிட்)
எனக்கு ஒரு அண்ணன் இருந்து அவர் என் வீட்டிற்கு
வந்தால் எப்படி நடந்து கொள்வாரோ அப்படியே இருக்கும்
அவரது நடவடிக்கைகள். பிள்ளைகளுடன் அளவளாவுவார்.
விளையாடுவார். என் குழந்தைகளுக்கு பிடித்தாமன அங்கிள் அவர்.
அன்பை சொல்லிக்கொள்ளத் தேவையில்லை. அது
உணரப்படவேண்டும். அயித்தான் கூட உன் அண்ணன்
போன் செய்தார், உன் அண்ணன் வரப்போகிறார் என்று
சொல்வார். அவர் அயித்தானின் அதிகாரி என்பதே மற்ந்து
விட்டது.
இம்புட்டு சொல்லி அவர் பெயர் சொல்லவில்லைஎன்றால்
எப்படி?
என் அண்ணனின் பெயர் அனில் சர்மா.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்று
வள்ளுவர் கூறியிருக்கிறார். வட மாநிலத்தைச் சேர்ந்தவர்
என்றால் என்ன? என் அண்ணன் அவர்தான்.
மும்பயிலிருந்து சிங்கப்பூர் சென்று தற்போது
அமெரிக்காவில் இருக்கிறார்.
அண்ணன் தனது குடும்பத்தினருடன் இலங்கை வந்திருந்த
போது முதலில் வீட்டிற்கு வந்து எங்களை சந்தித்துவிட்டு
பிறகுதான் ஹோட்டலுக்குச் சென்றார்.
அவரின் மனைவி,”உன்னைப் பற்றி அதிகம் சொல்லியிருக்கிறார்.
உன்னை நேராக சந்திக்க ஆவலுடன் காத்திருந்தேன்”
என்று சொன்னபோது அண்ணனின் பாசம் அதிகமாக
உணர்ந்தேன். அனில் அண்ணா மட்டுமல்ல அவரது
குடும்பத்தினரும் அதே அளவு பாசத்துடன் இருந்தார்கள்.
நாங்கள் அனைவரும் சேர்ந்து ஜூ, பீச் சென்றது
மறக்க முடியாத நினைவுகள்.
நாங்கள் சிங்கப்பூர் சென்றபோது அவர் அங்கேதான்
இருந்தார். நாங்கள் பேயிங் கெஸ்ட் ஹவுஸில் தங்கியதற்கு
சண்டை போட்டவர் நாங்கள் அங்கே இருந்த 4 நாளூம்
தனக்கு டூர் ஏதும் வராமல் பார்த்துக்கொண்டார்.
தனது காரிலேயே எங்களை அழைத்துச்சென்றார்.
தினமும் ஊர் சுற்றிவிட்டு இரவு உணவு அவரது
வீட்டில்தான். நாங்கள் மலேசியா புறப்பட்ட அன்று
ரயில்நிலையம் வரை குடும்பத்துடன் வந்து
வழியனுப்பினார். அனில் அண்ணாவின் மகள்
ரியா நாங்கள் புறப்படுவதால் அழுதது மனதை
என்னவோ செய்தது.
அக்டோபர் 6 அனில் அண்ணாவின் பிறந்தநாள்.
அவரது மனைவிக்கு அடுத்து எனது வாழ்த்துதான்
அவருக்கு முதல் வாழ்த்து. அனைவருக்கும் முன்
நான் வாழ்த்து சொல்வேன். உனது போனுக்குத்தான்
காத்திருந்தேன்”, என்பார். இதோ இந்த முறை
அமெரிக்காவில் இருக்கிறார் என்பதால் ஞாபகமாக
சாயந்திரம் 6 மணிக்கு மேல் போன் செய்தால்
வாய்ஸ் மெசெஜ் போனது. வாழ்த்துக்கள்
சொல்லிவிட்டு வைத்துவிட்டேன்.
”அதெப்படி எப்போதும் நீதான் முதலில் வாழ்த்து
சொல்கிறாய்,! என்று கேட்டு போன் செய்து
30 நிமிடம் பேசினார். நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது
அவரது கைப்பேசியில் அவரது அண்ணன் பேச
அவரிடம் நான் ஸ்ரீராம், கலாவுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.
நான் அப்புறம் பேசுறேன்!! என்றார். (அண்ணனுக்கு
எம்புட்டு பாசம்)
ரக்ஷாபந்தனுக்கு வாழ்த்து அனுப்புவேன்,இதுவரை
அவரை நான் அண்ணா என்று அழைத்ததில்லை.
அனில்ஜி என்றுதான் அழைப்பேன். ஆனால் இந்த
ஜென்மத்தில் நான் தேடிய அண்ணன் அவர்தான்.
எனக்கு என் அண்ணன் கிடைத்ததில் சந்தோசம்.
இன்றும் எங்கள் குடும்பத்தின் நலன்விரும்பியாக
இருப்பது அனில் அண்ணாதான்.
ஆரம்பத்தில் ஒரு முறை ஆஷிஷ் அனில்
அண்ணா எதிரில்,”அம்மா! உன் அண்ணா...
என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்க, யாரைச் சொல்கிறாய்
என்று கேட்டிருக்கிறார். ”உங்களை அம்மா அண்ணா
என்றுதான் சொல்வார்” என்று சொல்ல அவர் முகத்தில்
ஏற்பட்ட சந்தோசத்தை மறக்க முடியவில்லை.
ஆண்டவனுக்கு நன்றி. என் அண்ணனின் இந்த
உறவு இந்த ஜென்மத்து பந்தமல்ல என்று உண்ர்ந்தேன்.
அண்ணன் வந்தான்! இது ஆனந்த வீடு.
20 comments:
//அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்//
ரொம்பச் சரி. அண்ணன் தங்கை இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.
வாங்க ராமலக்ஷ்மி,
வாழ்த்துக்கு மிக்க நன்றி.
இனிமே அணில்ஜி எங்களுக்கும் அண்ணந்தான்!
புதுகைத் தென்றலுக்கு அண்ணன் னா, எனக்கு அண்ணன்! எனக்கு அண்ணன்னா நம்ம எல்லாருக்கும் அண்ணன்!
அண்ணன்டா!
இங்கேயும் கேம்ப் அடிக்கலாமா அக்கா?
வாங்க சிபி வாங்க,
இனி அனில்ஜி யுனிவர்சல் அண்ணா
சரியா.
கேம்ப் அடிக்கலாமா?
என்ன கேள்வி இது? கேள்வியெல்லாம் கேட்டுகிட்டு இருக்க்ப்டாது.
பாசக்கார தம்பியா போன பதிவுல அம்புட்டு பின்னூட்டம் போட்டியளே! அனில்ஜிக்கு தமிழ் படிக்கத்தெரியாம போயிடுச்சேன்னு வருத்தமா இருக்கு
:(
உங்களுக்கு உங்கள் மனம் போல் அண்ணா கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்.
ஒண்ணு புரியுது.. நீங்க பயங்கர ஃபீலிங்ஸ் பார்ட்டியா இருக்குறீங்க.. (இதை பாராட்டா எடுத்துக் கொள்ளவும்.. ஹி..ஹி..)
ஒரு நல்ல சென்டிமென்ட் காட்சியைப்பார்த்தது போல இருந்தது. வாழ்த்துகள்.!
அனில்ஜி இனி எனக்கும் அண்ணன்!
சரி தங்கச்சி நானும் ஊருக்கு வந்தா விதவிதமா எனக்கு வடிச்சு கொட்டுவீங்களா?
கொட்டித்தானே ஆகணும்! கொட்டிக்கத்தானே வரப்போறேன் :))))))
//நாமக்கல் சிபி said...
புதுகைத் தென்றலுக்கு அண்ணன் னா, எனக்கு அண்ணன்! எனக்கு அண்ணன்னா நம்ம எல்லாருக்கும் அண்ணன்!
அண்ணன்டா!
//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!
வாங்க வெண்பூ.
செண்டிமெண்ட்ஸும் ஃபீலிங்க்சும் இருப்பதனால்தான் நாம் மனிதர்களாக இருக்கிறோம்.
பாராட்டுக்கு நன்றி
வருகைக்கு மிக்க நன்றி தாமிரா
அண்ணனைப் பற்றி தெர்ந்துகொள்ள
தம்பியண்ணனும் வந்ததில் மகிழ்ச்சி.
:)
அண்ணனைப் பத்தி எழுதுனதெல்லாம் சரி...தம்பியப் பத்தி எப்ப எழுத போறீங்க???? என்னப் பற்றி தான் கேக்குறேன் ஹி...ஹி...ஹி..
:))))
அக்கா பதிவு எவ்வளவு அருமையோ அவ்வளவு அருமை சிபி அண்ணனின் பின்னூட்டங்கள் :)))))
அந்த அண்ணாவின் பாச உண்ர்வுகள் எனக்கு புரியும், எனக்கும் ஒரு தங்கை சொந்தம் சொல்லி வாழ்கிறாள்... அவள் இப்போ அருகில் இல்லை, அவள் உணர்வுகளை உண்ர்ந்தவன் தான், ஏனோ விழியோரம் நீர்க்கசிவு
தம்பியப் பத்தி எப்ப எழுத போறீங்க???? என்னப் பற்றி தான் கேக்குறேன் ஹி...ஹி...ஹி..//
3 வருஷம் கழிச்சு இப்பத்தான் இந்த கமெண்டை பாக்குறேன் அப்துல்லா.
:) போட்டுடலாம்.
வருகைக்கு நன்றி
வாங்க ரிஷி,
எனக்கும் இன்னொரு அண்ணனின் தேடுதல் இன்னமும் நடக்குது. அவனை நினைக்கும் பொழுதெல்லாம் உள்ளே பொங்கும். உங்க முதல் வருகைக்கு நன்றி
Post a Comment