Monday, November 03, 2008

உங்களிடம் ஒரு பேட்டி

எஸ்.வி.சேகரின் காட்டுல மழை நாடகத்தில் ஒரு
டயலாக்,”ஆச்சுடா! பட்டாபி, “ என்று ஆரம்பித்து
தான் பாட்டுக்கச்சேரி செய்து பலவருடங்கள்
ஆகிவிட்டது என்பார்.

அந்த டயலாக்கை கொஞ்சம் மாத்தி நான் சொல்வது

“என் வலைப்பூ துவங்கி ஒரு வருசம் ஆச்சுங்க,”

ரெய்கி கற்று தியானம் செய்வது பழக்கமான பிறகு
சில சமயம் கண்ணுல டீவி மாதிரி ஓடும். (அதாங்க
இந்த ஞானதிருஷ்டின்னு சொல்வாங்கல்ல அதுமாதிரி)

வலைப்பூ துவங்குவதற்கு 4 மாசம் முன்னாடியிலிரிந்து
அதிகாலையில் மானிட்டரில் தமிழ் எழுத்துக்கள் ஓடும்.

என்னதிதுன்னு யோசிச்சுகிட்டு இருந்தேன். நமக்கு
கவிதை, கதை எல்லாம் எழுத வராதே? பின்ன எதுக்கு
இப்படி ஒரு காட்சியை ஆண்டவன் கண்ணுல காட்டுகிறாருன்னு
எங்கப்பன் கந்தப்பன் கிட்ட கேட்டேன்.

அதுக்கு விடை ஒரு ஆனந்தவிகடனில் கிடைச்சது.
இம்சைஅரசியின் வலைப்பூ பத்தி வந்திருந்தது.
நல்லா இருக்கு, நாமும் செய்யலாம்னு பாத்தா
எப்படி செய்யணும்னு தெரியல.சொல்லிகொடுக்க ஆளில்லை.

ஒரு இமெயில் ஐடி ஓபன் செஞ்சுட்டு
இம்சை அரசி பிளாக்
மூலமா பா.பா. சங்கத்துக்கு போய் அங்கேருந்து
மைஃபிரண்ட் மெயில் ஐடி பிடிச்சு அவங்களுக்கு மடல்
எழுதி அவங்க உதவியோடத்தான் வலைப்பூ அரம்பிச்சேன்.

சும்மா படிச்சுகிட்டு இருந்த என்னை எழுத தூண்டியது
ஃபைபாலஜி தான். தங்கமணிகளை தாக்கும் ரங்கமணிகளின்
கூட்டத்திற்கு பதில் சொல்லியே ஆகவேண்டுமுன்னு
ஹஸ்பண்டாலஜி ஆரம்பிச்சேன். ரங்கமணிகளின்
வயிற்றில் புளி, காரம் எல்லாம் கரைத்தமாதிரி
ஆகிவிட்டது.
உருப்படியா ஏதோ சாதித்த சந்தோஷம் எனக்கு.

பினாத்தல் சுரேஷ் அவர்களின் இந்த வலைப்பூவில்
இல்லறத்தியலைக்கிளிக்கினால் ஃபைபாலஜி.நல்லா பேசிகிட்டு இருக்கும் சில தம்பிகள் அவங்க
மனைவிகிட்ட பேச போனைக்கொடுக்க ரெம்பவே
யோசிப்பாங்க. எங்க ஹஸ்பண்டாலஜி பத்தி ஏதும்
சொல்லிப்புடுவேனோன்னு அவங்க் படற டென்ஷன்
சும்மா சொல்லக்கூடாது:) சொந்த செலவுல சூனியம் வெச்சுக்க
யார் தான் விரும்புவாங்க.

சரி உங்க கிட்ட ஒரு பேட்டின்னு சொல்லிட்டு
நானே பேசிகிட்டு இருக்கேனேன்னு கோபப்படாதிங்க.
நவம்பரில் வலைப்பூ துவங்கினேன்னு ஞாபகம் இருக்கு.
என்னைக்கு துவங்கினேன்னு ஞாபகம் இல்லை. முதல்
பதிவு போட்டது நவம்பர் 11.

240 பதிவு போட்டிருக்கேன். இதில் உங்களுக்குப் பிடித்த
பதிவு எது? அது ஏன் பிடிச்சிருக்குன்னு ஒரு வார்த்தை
சொல்லுங்க.பின்னூட்டமா சொல்லிட்டு போங்க
அம்புட்டுதான்.

***********************************************

எழுதினதெல்லாமே பிடிச்சிருக்கு, அப்படின்னு
பின்னூட்டம் வந்ததாலே இந்த டிஸ்கி.

என்னை பரிசீலித்துக்கொள்ள, உங்களின் ரசனைகளைத்
தெரிந்துக்கொள்ள எனக்கு இது உதவியாய் இருக்கும்.

தவிரவும் பெஸ்ட் ஆப்ஃ புதுகைத்தென்றல்
அப்படின்னு உங்களின் விருப்பத்தையும் சேர்த்து
ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன்.
ஆகவே தயவுசெஞ்சு சரியா பதில் சொல்லுங்க ப்ளீஸ்.

40 comments:

VIKNESHWARAN said...

ஹம்ம்ம்ம் என்னா ஒரு வில்லத்தனம்...

நான் படித்த உங்களின் முதல் பதிவு விசு படம் சம்பந்தமாக போடபட்ட பதிவு. அதன் தலைப்பு ஞாபகத்தில் இல்லை.

VIKNESHWARAN said...

ஐம் தீ பஸ்ட்டுடுடுடுடுடுடுடு....

புதுகைத் தென்றல் said...

வாங்க விக்னேஸ்வரன் வாங்க.

வருகைக்கு மிக்க நன்றி.

புதுகைத் தென்றல் said...

என்னுடைய பதிவுகளில் நீங்கள் படித்ததில் பிடித்ததுன்னு எதுன்னு சொல்லுங்கன்னு கேட்டேன்.

ஐ மீன் பெஸ்ட் ஆப்ஃ புதுகைத்தென்றல்னு நீங்க நினைக்கிற பதிவு எது.

சுரேகா.. said...

போட்டிங்கிற பேரில்
பேட்டி கேக்குறீங்க!

இதோ பதில்..!

உங்க பதிவுகள்ல
எல்லாமே
சூப்பர்தானே!
எதைச்சொல்வது?

இரு கண்களில்
எந்தக்கண்
பிடிச்ச கண்ணுன்னா
என்ன சொல்லுவேன்......!???

:)

புதுகைத் தென்றல் said...

புதுகை பிளாக்கர்களின் தானைத்தலைவர் வருக வருக.

ஐயா எஸ்கேப்பிஸமான பின்னூட்டமெல்லாம், வேண்டாம்.

உங்களுக்கு பிடிச்ச பதிவு என்னன்னு சரியா சொல்லுங்க.

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் தங்கச்சியக்கா!

(வரேன்! ஆபிஸ்ல அண்ணன் பிசி கொஞ்சம் நேரம் கழிச்சு :)))

Anonymous said...

//உங்க பதிவுகள்ல
எல்லாமே
சூப்பர்தானே!
எதைச்சொல்வது?

இரு கண்களில்
எந்தக்கண்
பிடிச்ச கண்ணுன்னா
என்ன சொல்லுவேன்......!???..//

ithaiye naanum solli es aaguren

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<== உருப்படியா ஏதோ சாதித்த சந்தோஷம் எனக்கு ===>

!!!!

பொடியன்-|-SanJai said...

போட்டிங்கிற பேரில்
பேட்டி கேக்குறீங்க!

இதோ பதில்..!

உங்க பதிவுகள்ல
எல்லாமே
சூப்பர்தானே!
எதைச்சொல்வது?

இரு கண்களில்
எந்தக்கண்
பிடிச்ச கண்ணுன்னா
என்ன சொல்லுவேன்......!???

:)

சந்தனமுல்லை said...

வாழ்த்துக்கள்!
எனக்கு உங்க பதிவுகள் எல்லாமே பிடிக்கும். எனக்கு உபயோகமாயிருந்த பதிவுகள் மாண்டிசோரி பதிவுகள்!!

ராமலக்ஷ்மி said...

பிடித்தவை பல எனினும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் http://pudugaithendral.blogspot.com/2008/09/blog-post_26.html
"எனக்கு மட்டும் எப்படி சாத்தியம்"தான். நம்பினால் நம்புங்கள், தினம் உங்களை நினைக்கிறேன் 'தென்றல் போல எனக்கும் சாத்தியம்தான்' என. தேங்கி நின்றிருந்த பல வேலைகளை முடித்தும் விட்டிருக்கிறேன், நன்றி.

புதுகைத் தென்றல் said...

சந்தனமுல்லை சூப்பர்.

இப்படி ஒரு பின்னூட்டத்தைத்தான் எதிர்பார்த்தேன். படித்ததில் பிடித்ததை சொல்லத்தயக்கம் எதுக்கு?

மிக்க நன்றி.

புதுகைத் தென்றல் said...

ராமலட்சுமி,

தினமும் புரைக்கேறுகிறதே! அயித்தான் இங்கே இருக்கும்போது புரைக்கேறினா நம்மை அப்படி தினமும் நினைக்கிறது யாருன்னு குழம்பிக்கினு இருந்தேன்.

அது நீங்கதானா!!!!

கிடைக்கும் நேரத்தில் எழுதுவது யாருக்காவது உபயோகமாக இருக்கவேண்டும். உங்களுக்கு உபயோகமாக இருந்ததில் சந்தோஷம்தான்.

வெண்பூ said...

ஒரு வருடத்தில் 240 பதிவுகளா? அடேயப்பா.. பாராட்டுக்கள்.. பாராட்டுக்கள்..

நான் சில மாதங்களாகத்தான் படித்து வருகிறேன். படித்தவரை எனக்கு மிகவும் பிடித்தது "எனக்கு மட்டும் எப்படி சாத்தியம்" பதிவுதான். அதற்கு அடுத்து உங்கள் பத்ராச்சலம் பயணக்கட்டுரை.. நன்றாக இருந்தது. இன்னும் நிறைய பயண அனுபவங்களை நீங்கள் எழுதலாம்..

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ரங்கமணிகளின்
வயிற்றில் புளி, காரம் எல்லாம் கரைத்தமாதிரி
ஆகிவிட்டது.
உருப்படியா ஏதோ சாதித்த சந்தோஷம் எனக்கு//

ஹா ஹா ஹா
என்னா ஒரு வில்லத்தனமான சந்தோஷம்-க்கா உங்களுக்கு? :))

ஓராண்டுச் சாதனைக்கு
உளமார்ந்த வாழ்த்துக்கள்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

யக்கா
நான் மிகவும் விரும்பிப் படிச்சது
கோதாவரிப் பயணம் பற்றிய தொடர் பதிவுகள் + பத்ராச்சலம் இராமதாசர்!

cheena (சீனா) said...

ஏறத்தாழ 240 பதிவுகள் போட்டு விட்டு எது சிறந்தது எனக் கேட்டால் நாங்கள் என்ன சொல்வது. நான் படித்தவை கொஞ்சம் தான் - மீத எல்லாம் படிக்க வேண்டும். பார்ப்ப்போம் - சற்றே நேரம் தேவை

நாமக்கல் சிபி said...

நான் படித்த உங்கள் பதிவுகளிலேயே இந்தப் பதிவுதான் எனக்கு ரொம்ப பிடித்தது!

(ஈஸியா தப்பிக்க இப்படி ஒரு பதிவைப் போட்டு நீங்களே வழி பண்ணி விட்டுட்டீங்களே அக்கா)

விலெகா said...

அக்காவிற்கு, நானும் உங்கள் ஊருதான்.
எந்த பதிவு உங்களுக்கு புடிச்சிருக்குன்னு கேட்டிருக்கீங்க நம்மா புதுக்கோட்டையை பற்றின பதிவு அருமை .

விலெகா said...

அப்புறம் ஒரு வருடம் முடிந்ததற்கான வாழ்த்தக்கள்!

விலெகா said...

அப்புறம் உங்களை பார்த்துதான் நானும் வலைப்பதிவு தொடங்கியுள்ளேன். வாழ்த்தக்கள்! தொடரட்டும் உங்கள் பணி!!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

250 & ஒரு வருடம் இரண்டிற்கும் வாழ்த்துக்கள்.. மாண்டிஸொரி ஸ்கூல் பற்றி ய விளக்கம் தந்த பதிவு தான் எனக்கு உங்களை நினைச்சதும் ஞாபகம் வருவது.

பாச மலர் said...

வாழ்த்துகள்..மாண்டிசோரி விளக்கங்கள் பற்றிய பதிவுகள்..

புதுகைத் தென்றல் said...

பாராட்டுக்கள்.. பாராட்டுக்கள்..//

நன்றி வெண்பூ.

புதுகைத் தென்றல் said...

ஹா ஹா ஹா
என்னா ஒரு வில்லத்தனமான சந்தோஷம்-க்கா உங்களுக்கு?

:))

ஓராண்டுச் சாதனைக்கு
உளமார்ந்த வாழ்த்துக்கள்!

மிக்க நன்றி.

புதுகைத் தென்றல் said...

கோதாவரிப் பயணம் பற்றிய தொடர் பதிவுகள் + பத்ராச்சலம் இராமதாசர்!//

ஆஹா, அது நான் ரசித்து எழுதியது்

புதுகைத் தென்றல் said...

மீத எல்லாம் படிக்க வேண்டும். பார்ப்ப்போம் - சற்றே நேரம் தேவை//

டேக் யுவர் ஓன் டைம் சார்.

புதுகைத் தென்றல் said...

(ஈஸியா தப்பிக்க இப்படி ஒரு பதிவைப் போட்டு நீங்களே வழி பண்ணி விட்டுட்டீங்களே அக்கா)//

அக்கா அக்கான்னு கூப்பிடறீங்க. ஆனா சரியா பதில் சொல்லாம எஸ் ஆகுறீங்க. இது நியாயமா :(

புதுகைத் தென்றல் said...

ஆஹா தானைத்தலைவர் சுரேகா மாதிரி விலேகாவா.

சரி சரி. மு்தல் வருகைக்கு் மிக்க நன்றி.
புதுக்கோட்டை காரவுங்க கூட்டணி ஜாஸ்தி ஆகிகிட்டே போகுதே.

தம்பி அப்துல்லா ஒரு தனிக்கட்சி் ஆரபிச்சிரலாமா? தானைத்தலைவர் எங்கிருந்தாலும் உடனே வரவும்

புதுகைத் தென்றல் said...

அப்புறம் உங்களை பார்த்துதான் நானும் வலைப்பதிவு தொடங்கியுள்ளேன். //

நீங்களுமா விலேகா!!!!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

புதுகைத் தென்றல் said...

ஆஹா மாண்டிசோரி்க்கு ஓட்டு ஜாஸ்தியா விழுகுதே.

பாராட்டுக்கு நன்றி முத்துலட்சுமி.

புதுகைத் தென்றல் said...

வாங்க பாசமலர்,

ரெம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க.

நல்லா இருக்கீங்களா?

அமுதா said...

வாழ்த்துக்கள். நீங்கள் பல விஷயங்களில் எழுதுவது ரொம்ப பிடிக்கும். சாக்ஸ் மடிப்பது போன்ற சின்ன விஷயம் கூட "இதில் இவ்ளோ விஷயமா" என்று எண்ணும் அளவு இருக்கும் நுணுக்கங்கள் பிடிக்கும். "எனக்கு மட்டும் எப்படி சாத்தியம்" என்ற பதிவும், ஹஸ்பண்டாலஜியும் மிகவும் பிடித்தது.

மங்களூர் சிவா said...

மீ தி முப்பத்தி அஞ்சு

மங்களூர் சிவா said...

//உங்க பதிவுகள்ல
எல்லாமே
சூப்பர்தானே!
எதைச்சொல்வது?

இரு கண்களில்
எந்தக்கண்
பிடிச்ச கண்ணுன்னா
என்ன சொல்லுவேன்......!???..//

கண்ணா பின்னானு ரிப்பீட்டிக்கிறேன்
:)

மங்களூர் சிவா said...

250 & ஒரு வருடம் இரண்டிற்கும் வாழ்த்துக்கள்..

மங்களூர் சிவா said...

எனக்கு ரொம்ப பிடிச்சது ஹஸ்பண்டாலஜி சீரீஸ்!

(நல்ல காமெடி தொடர்......)

மங்களூர் சிவா said...

39

மங்களூர் சிவா said...

40