எல்லோரும் விரும்புறது ஒண்ணுதானுங்க.
ஸ்லிம்ரன் மாதிரி இல்லாட்டி ஓவர்
வெயிட்டா இல்லாம அழகா இருக்கணும்.
உடல் பருமன் அதிகமானா பிரச்சனை.
அது எதனால் அதிகமாகுதுன்னு முதல்ல
கண்டுபிடிச்சுக்கணும். உடல் பருமனாவதற்கு
பல காரணங்கள் இருக்கு.
உடம்பு குண்டா இருக்குறவங்களைப் பார்த்து
ரொம்ப சாப்பிடுவாங்கப்போலன்னு பலர்
கமெண்ட் அடிப்பாங்க. சினிமாக்களில் பிந்துகோஷ்,
குண்டு கல்யாணம் மாதிரி ஆளுங்க
பெரிய கேரியர்ல சாப்பாடு கொண்டுவந்து
சாப்பிடற மாதிரி காட்டுவாங்க.
அதுக்காக ஒல்லியா இருக்குறவங்க
சாப்பிடவே மாட்டாங்கன்னு அர்த்தம்.
எனக்குத் தெரிஞ்சு ஒருத்தர் எலும்புக்கூட்டுக்கு
2 மீட்டர் தோல் வைச்ச மாதிரி இருப்பாரு.
ஆனா சாப்பாடு ஃபுல் கட்டு தான்.
அதிகமா சாப்பிடாதவங்க கூட குண்டாவங்க.
அதுக்கு பல காரண்ங்கள் இருக்கிறது.
மனக்கவலை, மனச்சோர்வு, (அதாங்க
ஸ்ட்ரெஸ்)தைராய்டு பிரச்சனைகள்
இப்படி ஒரு பெரிய லிஸ்டே இருக்கு.
உடல்பருமன் வந்திருச்சுன்னா மத்த நோய்கள்
எல்லாம் வெத்தலை பாக்குவெச்சு அழைக்காமலேயே
வந்துடும்.
சின்னப் பசங்களுக்கும் ஒபிசிட்டி இருக்கும். அதற்கு
காரணம் அதிக சாப்பாடு, உடல் உழைப்பு குறைவு
(படிக்கவே நேரம் போதலை, இதுல விளையாட்டு
எங்க?) அதனால சின்னப் பசங்களுக்கு கூட
சர்க்கரை வியாதி வருதாம்.
உடல் பருமன் பத்திய விக்கிபீடியாவிற்கு இங்கே.
சரி இதெல்லாம் எங்களுக்கும் தெரியும்னு சொல்றீங்களா?
ஆமாங்க. ஏறிய உடல் பருமனை குறைப்பது
எப்படின்னு தெரியுமா? அதைத்தான் சொல்லப்போறேன்.
நல்லாத்தான் இருந்தேன். இரண்டு குழந்தைகளுக்குத்
தாயானதால் கூட அதிகம் வெயிட் போடாமல்
இருந்தேன். சந்தோஷமா இருந்த எனக்கு வந்தது
தைராய்டு. MADE FOR EACH OTHER னு சொல்லுவாங்கள்ல.
நானும் அயித்தானும் அது மாதிரிதான். :)
ரெண்டு பேருக்குமே தைராய்டு பிரச்சனை வந்திருச்சு.
டாக்டர் கொடுக்கும் மருந்துக்கு அகோர பசி
எடுக்கும். சாப்பிட்டா உடம்பு வெயிட் போடும்.
எங்க டாக்டர் எங்களுகு மருந்தோட நல்ல
டயட் சார்டும் கொடுத்திருந்தார். அதனால
கொஞ்சம் ஓவர் வெயிட்டா இருந்தாலும்
கண்னாபின்னான்னு ஏறாம கண்ட்ரோலா இருந்துச்சு.
இந்தக் கொடுமையோட பெண்களுக்கே உண்டான
வேறு சில கொடுமைகளும் சேர கட்டுக் கடங்காமல்
வெயிட் ஏறிடுச்சு. :(
ரொம்ப கஷ்டமாகிப் போக என் கைனகாலஜிஸ்ட்
உடம்பைக் குறைக்க சில கிளீ்னுக்குகள் இருக்கு
அங்க போங்கன்னு பொதுவா நான் யாருக்கும்
சொல்றதில்லை. நீ ரொம்ப குண்டாகிடேன்னு
ஃபீல் செய்யறதால போய் பாருன்னு
சொன்னாங்க.
அந்த அனுபவம்.......
அடுத்த பதிவுல சொல்றேன்.
10 comments:
mee the barshttuuuuuu???
என்னைத்தான் சொல்றீங்கன்னு பயந்துக்கிட்டே உள்ளே வந்தேன்.
முந்தி 37 இப்போ....... ஊஹூம்.... சொல்லமாட்டேன்:-)
உண்மையில் கொடுமையான விடயம் தான்...அடுத்த பதிவுக்கு காத்திருக்கேன்
வாங்க அப்துல்லா,
வருகைக்கு மிக்க நன்றி.
வாங்க டீச்சர்,
எதனால வெயிட் ஏறுதுன்னு தெரியாமலேயே ஏறிடு்வது தான் கொடுமை.
வாங்க தூயா,
அடுத்த பதிவு நாளைக்கு போடவா?’
இல்லை இன்னைக்கே போடவே?
உங்கள் சாய்ஸ்.
:)
துளசி கோபால் said...
என்னைத்தான் சொல்றீங்கன்னு பயந்துக்கிட்டே உள்ளே வந்தேன்///
.>>
நானும்:):)
முந்தி 37 இப்போ....... ஊஹூம்.... சொல்லமாட்டேன்:-)
>>>
நானும்ப்பா>>>>>>
அடுத்தபதிவு போடுங்க..குஷ்பூக்கள் ஸ்லிம்ரன்ஸ் ஆகணுமில்லயா?:)
13 November
கண்டிப்பா பதிவு போடறேன் ஷைலஜா.
உங்களுக்கு ஹைப்பர் தைராய்டா? எனக்கு ஹைப்போ தைராய்ட், 17 வருஷமா. அடுத்த பதிவுக்கு இதோ வர்றேன்.
:-))..அப்புறம் என்னாச்சி?
Post a Comment