Monday, November 17, 2008

அதிர்ச்சி தராத டய்ட்.

உங்கவீட்டு பசங்க, இல்ல தெரிஞ்சவங்க
பசங்க யாராவது நான் டய்டுல இருக்கேன்னு
சொல்லி சாப்பிடாம இருந்தா நல்லா நாலு்
சாத்து சாத்துங்க.

டயட்னா என்னங்க? சரிவிகித உணவு.
இதை சரியா எடுத்துக்கிட்டாலே போதும்.
டயட் பத்திய விக்கிப்பீடியா தகவலுக்கு
இங்கே கிளிக்குங்க.

இப்பத்த பிள்ளைங்க ஒல்லிப்பிச்சான்களா
இருப்பதுதான் அழகுன்னு நினைச்சு வயத்த
காயப்போடறாங்க. அதனால அனிமிக்,
அல்சர்னு பெரிய லிஸ்ட் வியாதிகளோட
இருக்காங்க.

இப்பத்தான் புக்ல படிச்சேன். அதென்னவோ
”அரெக்சினாவாம்” சாப்டா குண்டாகிடுவோம்னு
சாப்பிடாம இருக்கறது, சாப்பிட்ட பின்னாடி
வாந்தி வரவெச்சுக்கறதுன்னு இருப்பாங்களாம்.

“ஜீரோ ஃபிகர்” தெரியுமா? நடிகைகள்
கரி்னா கபூர், சில்பா ஷெட்டி இவங்கலாம்
இப்ப ஜீரோ ஃபிகராம். அது என்னன்னா?
8 வயசு குழந்தையின் சைஸ், 22 வயசு
குமரியின் உருவத்தில் வரவைக்கிறதாம்.
இதுனால அவங்க உயிருக்கே ஆபத்து
வரலாமாம். என்ன கொடுமையோ?!!

அதெல்லாம் விடுங்க. நாம நல்லா
அதே சமயம் ஆரோக்கிய்மா சாப்பிடலாம்
வாங்க.

டயட் சார்ட் கொடுக்கறதுக்கு முன்னாடி
சொல்ல வேண்டிய முக்கியமான விசயம்
உணவில் சோற்றின் அளவைக் குறைச்சு்க்கோங்க.

கிராமத்து ஆளுங்க நிறைய சோறு சாப்பிடுவாங்க.
ஆனா அதுக்கு தகுந்த உடல் உழைப்பு இருக்கும்.
நாம அம்புட்டு உடல் உழைப்பு செய்யாத போது
சோறு அதிகமா சாப்பிட்டா என்னாகும்?
எரிக்கப்படாத சக்தி கொழுப்பா மாறும்.


சுருக்கமா சொல்லணும்னா சாப்பிடும் தட்டில்
சோறு இருக்கும் இடத்தில்
காய்கறி, கீரை வகைகளும், காய்கறி வைக்கும்
இடத்தில் சோறும் வைத்து சாப்பிடணும்.
(அளவுக்காக ஒரு உதாரணம்)ஒரு மாடல் டயட் சார்ட் பார்க்கலாம்.

1. எழுந்ததும் பல்துலக்கி 2 கிளாஸ் தண்ணீர்
குடிக்கவும்.

2. 30 நிமிடம் கழித்து காபி/டீ உங்கள்
விருப்பம் போல். 1 ஸ்பூன் சர்க்கரை
சேர்க்கலாம்.

நடைப்பயிற்சி, யோகா 1 மணி நேரம்
கட்டாயம் செய்யணும்.

காலை ஊணவு:
இவற்றில் ஏதேனும் ஒன்று மட்டும்.

அ, பாலுடன் கார்ன்ஃபிளேக்ஸ் - 1 கப்
ஆ, 2 இட்லி, 1 கப்சாம்பார், அல்லது வெங்காயச் சட்னி.
இ, 1 கப் உப்புமா
ஈ. அவல் உப்புமா 1 கப்
உ. 1 ப்ரட் டோஸ்ட், 1 அவித்த முட்டை/ அல்லது
ஒரு ப்ரட் ஆம்லெட்.
ஊ. எண்ணெயில்லாத பரத்தா
(முள்ளங்கி, வெந்தயக்கீரை பராத்தா) 1 + 1 கப் தயிர்.

எ. 1 கப் ஓட்ஸ் பாலுடன்.
ஏ. மீடியம் சைஸ் தோசை - 3
ஐ. வெஜிடபிள் சாண்ட்விச் - 1
ஒ. ஊத்தப்பம்- 1/ மசாலா தோசை - 1

அத்துடன் 1 கப் டீ/1 கப் காபி

11 மணியளவில் : மோர் 1 டம்பளர்.ஏதாவது
ஒரு பழவை(வாழைப்பழம், உலர்ந்த திராட்சை,
சப்போட்டா தவரிக்கவும்)


மதிய உணவு:
ஏதாவது ஒன்று மட்டும்.

அ. 1-1/2 ரொட்டி (புல்கா)+ ரசம் (சூப் போல் குடிக்க) +
2 கப் காய்கறிகள் + 1 கப் சாலட்/ரய்தா
+கப் பருப்பு.
ஆ. 1-1/2 கப் பொங்கல்/கிச்சடி+1 கப் கடி +
2 கப் காய்கறிகள்+2 சுட்ட அப்பளம்.
இ. 1 ஸ்டஃப் பராத்தா+ 1 கப் வெஜிடபிள் ரய்தா +1/2 கப் சன்னா

ஈ. 1-1/2 கப் மீன் கறி(தேங்காய் நோ)+ 1 கப் சாதம்,
1 கப் காய்கறி சாலட்/ரய்தா, 1 கப் கீரை.

உ. 1 கப் சிக்கன் கறி + 1 கப் சாதம் + 1-1/2 கப் காய்கறி சாலட்/
ரய்தா+ 1 கீரை வகை.

ஊ. சப்வே கடையில் கிடைக்கும் டயட் சாண்ட்விச் + 1 டயட் கோக்.

எ. 3 கோதுமை பிரட் + 1 பிளேட் பாஜி ( பட்டர் வேண்டாம்)

ஏ. 1 தந்தூரி ரொட்டி + 1 தால்+ 1 சாலட் + 1 கப் எண்ணெயில்லாத
வெஜிடபிள் கிரேவி.

ஐ. கிரில்ட் மீன்/கி்ரில்ட் சிக்கன் + 1 கப் வெந்த காய்கறிகள் & சாலட்.


மாலை உணவு:
(ஏதேனு்ம் ஒன்று)

1 கப் டீ/காபியுடன் 2 டைஜச்டிவ் மாரி அல்லது
மாரி பிஸ்கட்.


இரவு உணவு:
காலை உணவில்அல்லது மதிய உணவில்
ஏதோ ஒன்று.

அல்லது சூப் + சாலட்/ பழவகைகள்.

இப்படி 6 நாள் சாப்பிடலாம். வாரத்துக்கு
ஒருநாள் நல்லா உங்க இஷ்டம் போல
சாப்பிட்டு எஞ்சாய் செய்யலாம்.


கல்யாணம், விருந்து
எதுவும் விடாம சாப்பிடலாம்.அடுத்த நாள் டயட்டை லைட்டா
எடுத்துக்கோங்க அம்புட்டுதான்.நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
குறைந்தது 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

மிக முக்கியமாக ஒவ்வொரு முறையும்
சாப்பிடுவதற்கு முன் 1 கிளாஸ் தண்ணீர் குடிக்க
வேண்டும்.

உங்களுக்கு உபயோகமா இருந்ததான்னு சொல்லுங்க.

17 comments:

புகழன் said...

//காலை ஊணவு:
இவற்றில் ஏதேனும் ஒன்று மட்டும்.

அ, பாலுடன் கார்ன்ஃபிளேக்ஸ் - 1 கப்
ஆ, 2 இட்லி, 1 கப்சாம்பார், அல்லது வெங்காயச் சட்னி.
இ, 1 கப் உப்புமா
ஈ. அவல் உப்புமா 1 கப்
உ. 1 ப்ரட் டோஸ்ட், 1 அவித்த முட்டை/ அல்லது
ஒரு ப்ரட் ஆம்லெட்.
ஊ. எண்ணெயில்லாத பரத்தா
(முள்ளங்கி, வெந்தயக்கீரை பராத்தா) 1 + 1 கப் தயிர்.

எ. 1 கப் ஓட்ஸ் பாலுடன்.
ஏ. மீடியம் சைஸ் தோசை - 3
ஐ. வெஜிடபிள் சாண்ட்விச் - 1
ஒ. ஊத்தப்பம்- 1/ மசாலா தோசை - 1

அத்துடன் 1 கப் டீ/1 கப் காபி
//


இதில் ஏதாவது ஒன்று என்று குறிப்பிட்டுள்ளீர்கள்
ஆனால் சிலநேரம் இவை எல்லாமே (ஒரு வேளைக்கு மட்டும்) தேவைப்படுகிறதே.....

புகழன் said...

மிகவும் பயனுள்ள பதிவு

இது போன்ற டிப்ஸ் அடிக்கடி தரவும்...


(என்னமோ எல்லா டிப்ஸையும் அப்படியே கடைப்பிடிக்கிற மாதிரி அக்கறையா கமென்போடுறேன்னு திட்டாதீங்க)

ஆயில்யன் said...

//இப்பத்த பிள்ளைங்க ஒல்லிப்பிச்சான்களா
இருப்பதுதான் அழகுன்னு நினைச்சு வயத்த
காயப்போடறாங்க. //


ச்சே!ச்சே நானெல்லாம் அப்படியில்ல நல்லா சாப்பிடுவேனாக்கும் :)))

புதுகைத் தென்றல் said...

வாங்க புகழ்ன்,

//இதில் ஏதாவது ஒன்று என்று குறிப்பிட்டுள்ளீர்கள்
ஆனால் சிலநேரம் இவை எல்லாமே (ஒரு வேளைக்கு மட்டும்) தேவைப்படுகிறதே.....//

உண்டிச்சுருங்குதல் பெண்டிருக்கு மட்டுமல்ல ஆடவர்க்கு கூட அழகு + ஆரோக்யம்.

புதுகைத் தென்றல் said...

மிகவும் பயனுள்ள பதிவு

இது போன்ற டிப்ஸ் அடிக்கடி தரவும்..//

எனக்குத் தெரிஞ்சத கண்டிப்பா பகிர்ந்து கொள்வேன்.

புதுகைத் தென்றல் said...

(என்னமோ எல்லா டிப்ஸையும் அப்படியே கடைப்பிடிக்கிற மாதிரி //

புகழன்
இப்ப இல்லாட்டியும் எப்பாவாவது தேவைப்படும்போது எதுவும் உதவும்.

தெரிஞ்சு வெச்சுக்கறது நல்லதுதானே.

புதுகைத் தென்றல் said...

ச்சே!ச்சே நானெல்லாம் அப்படியில்ல நல்லா சாப்பிடுவேனாக்கும் :)))//

நல்லது பாஸ். இப்படித்தான் இருக்கணும்.

ராமலக்ஷ்மி said...

அத்தனை அதிர்ச்சி இல்லை இந்த டயட்டில்:). முயற்சிக்கிறேன்.

தண்ணீர் தண்ணீர். நிறைய குடிக்கணும்னு நினைக்கிறதுதான். செய்யறதில்ல. அதையும் செய்திடறேன்:))!

புதுகை.அப்துல்லா said...

அக்கா படிச்சு முடிச்சவுடனேயே பத்துகிலோ குறைஞ்ச மாதிரி இருக்கு :))))

தாமிரா said...

ஒழுங்கா சாப்பிடணும்னு ஆரம்பிச்ச பதிவு.. கடைசியில.. ஒரு இட்லி, ஒரு தோசைனு..... அவ்வ்வ்வ்வ்...

புதுகைத் தென்றல் said...

அத்தனை அதிர்ச்சி இல்லை இந்த டயட்டில்:). முயற்சிக்கிறேன்.//

என் பசங்க சொல்ற (நான் சொல்லிக்கொடுத்தது தான்) மாதிரி
c M W

I can do

I must do

I will do

சொல்லுங்க. எதுவும் சாத்தியம்.

புதுகைத் தென்றல் said...

அப்துல்லா அவ்வளவு ஷாக்கிங்கா இருக்கா?!!!

புதுகைத் தென்றல் said...

தாமிரா வாங்க,

1 தோசை,1 இட்லின்னாலும் அதோட சாலட், பழவகைகள்னு ஹெல்த்தியா சாப்பிடறோம்ல, அதுதானே முக்கியம்.

உண்ணும் உணவு ஆரோக்கியமா இருக்கணும்.

Anonymous said...

//இல்ல தெரிஞ்சவங்க
பசங்க யாராவது நான் டய்டுல இருக்கேன்னு
சொல்லி சாப்பிடாம இருந்தா நல்லா நாலு்
சாத்து சாத்துங்க.
///
aiyo naan illai :D
naan nalla saapiduren akka.athuvum 4 times.

கானா பிரபா said...

நீங்களும் டெரரா தான் டயட் அது இதுன்னு போட்டிருக்கீங்க ;)

புதுகைத் தென்றல் said...

iyo naan illai :D
naan nalla saapiduren akka.athuvum 4 times.//

நீங்க பொய்சொல்றதா சொல்றாங்கப்பா.
அதாவது 6 நேரம் சாப்பிடுவீங்களாமே!!!!


:))))))))))))

புதுகைத் தென்றல் said...

நீங்களும் டெரரா தான் டயட் அது இதுன்னு போட்டிருக்கீங்க //

நீங்க இந்த மாதிரி பதிவெல்லாம் படிப்பீங்களான்னு சந்தனமுல்லை
கேட்டதுக்காக படிச்சீங்களா?

வருகைக்கு நன்றி.;)