Tuesday, November 25, 2008

கண்கள் இரண்டால்கண்கள் தான் நமக்கு பிரதானம்.

கண்களை விற்று சித்திரம் வாங்குவோர் உண்டோ.

தன் கண்களை இறைவனுக்கு வழங்கியதில் கண்ணப்பநாயனாரின்
சிவ பக்தி தெரிகிறது.

பார்த்ததை பார்த்தது போல் வரைவேன். நான் வரையும்
பொழுது கண்ணிலிருந்து துவங்குவேன். என் அம்மா
எப்போதும் சொல்வார், “கண்களை கடைசியில் வரை”.

ஏன் என்று கேள்வி கேட்காமல் இருப்பேனா!!??

“சிற்பக்கலையில் கடைசியில் தான் கண் திறப்பார்கள்.
கண் திறந்தால் சிலைக்கு உயிர் வந்தது போல்
அர்த்தம். சித்திரமும் அப்படியே. கடைசியில்
விழிகளை வரை” இது அம்மா சொல்லிக் கொடுத்தது.

கண்கள் வரைவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
மனிதனை வேற்று படுத்தி காட்டுவது கண்கள்
என்பது என் அபிப்ராயம்.

நான் அதிகம் வரைய விரும்புவது நடிகைகள்
ஸ்ரீதேவி், பானுப்ரியா, ஆகியோரின் கண்கள்.
நல்ல பெரிய கண்கள் பானுப்ரியாவிற்கு.(அதனால்தானே
ஐடெக்ஸ் கண்மை விளம்பரத்தில் நடித்தார்)

கண், புருவங்கள், மூக்கு, உதடு இவைகளை
மட்டும் வரைவது எனக்கு பிடிக்கும். கண்களை
மட்டும் விதம் வி்தமாக வரைந்தால் வித்தியாசம்
காட்டலாம்.


கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பது தவறு என்று
பெரியவர்கள் சொல்வார்கள். எத்தனை நிதர்சனமான உண்மை.

கண்களை வைத்து எத்தனை எத்தனை திரைப்படப் பாடல்கள்!!!!

காத்திருந்த கண்களே!

உன் கண் உன்னை ஏமாற்றினால்,

கண்கள் இரண்டும் என்று உம்மை கண்டு சேருமோ!

இவை அந்தக் காலப் பாடல்கள்.


இந்தப் படத்தில் கண்தானே மிக மிக முக்கியமான
அம்சம்.இன்றும் பலரது காலர் ட்யூன் சுப்ரமணிய புரத்தின்
கண்கள் இரண்டால்தானே!!!!

பார்வை ஒன்றே போதுமே இது உணமையான
காதல் இருந்தால் மட்டுமே சாத்தியமான ஒன்று.

சொல்லாமலே சொல்லும் விழி்யின் வார்த்தைகள்
ஏராளம்.

ஒருவரைச் சந்தி்த்து பேசும்போது அவரது
கண்களை நோக்கி பேசுவது தான் சிறப்பாம்.
பொதுவாகவே தைரியம் இருந்தால்தான்
இது சாத்தியம். பார்வையில் தவறு இருந்தால்
இவர் சரியான ஆளில்லை என்று
புரிந்துகொள்ளலாம்.


சிரிக்கும் போது கூட கண்களும் சேர்ந்து
சிரிக்கும் பொழுது முகத்தின் அழகே
கூடிப்போய் ஜொலிக்கும்.
கண்கள் இரண்டும் கலந்த நேரத்தைதான்
திருமண நேரமாக தெலுங்கு சம்பிரதாயத்தில்
கூறுகிறார்கள். (சூபுலு கலிசின சுப வேளா என்பார்கள்
தெலுங்கில். கண்கள் கலந்த/ சந்தி்த்துக்கொண்ட
பொன்னான நேரம் என்று பொருள்)

மணமகன், மணமகள் பார்த்துக்கொள்ளாமலேயே
மணமேடைக்கு வருவது அந்தக் காலமாக இருந்தாலும்
இன்றும் மணமேடையில் இருவருக்கும் இடையே
திரைப்பிடித்து தலையில் சீரக்ம்,வெல்லம் வைத்து
முதலில் பார்த்துக்கொள்வதுதான் மரபு.
கண்கள் கலக்கும் இந்தச் சடங்கு மிக முக்கியமானது.
இன்றளவும் எந்த தெலுங்கு, கன்னட சம்பிராதயங்களில்
பார்க்கலாம்.
கண்ணிர்க்கு மற்றொரு சிறப்பும் உண்டு.
நம் வாழ்விற்கு பிறகும் பிறரின் விழியாய் வாழமுடியுமே.

19 comments:

முத்துலெட்சுமி-கயல்விழி said...

மெஸேஜ் கடைசியில் வச்சிருக்கீங்க.. ம்.. :)

நாமக்கல் சிபி said...

நீங்கள் வரைந்த ஸ்ரீதேவி, பானுப்ரியா படங்கள் அருமை!

குறிப்பாக பானுப்ரியா படம் தத்ரூபமாக பானுப்ரியா மாதிரியே இருந்தது!

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு மிக்க நன்றி முத்துலெட்சுமி.

புதுகைத் தென்றல் said...

நீங்கள் வரைந்த ஸ்ரீதேவி, பானுப்ரியா படங்கள் அருமை!

குறிப்பாக பானுப்ரியா படம் தத்ரூபமாக பானுப்ரியா மாதிரியே இருந்தது!//

நடிப்பு டயால்க் டெலிவரி இதெல்லாம் இயல்பா இருக்கு உங்ககிட்ட சிபி.

கீப் இட் அப்.

:)))

அதிரை ஜமால் said...

உண்மையிலேயே நீங்கள் வரைந்தவற்றை பார்க்கும் ஆர்வம் வருகிறது.

கண் தானம் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கலாமோ ...

அதிரை ஜமால் said...

அப்புறம் சொல்ல மறந்துட்டேன்.

அந்த தலைப்பு புகைப்படம் மிக அருமை.

புதுகைத் தென்றல் said...

கண் தானம் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கலாமோ ...//

கண்களைப் பற்றிய என் எண்ணங்கள் தான் இந்தப் பதிவு.


கண் தானம் பற்றி தனிப்பதிவுதான் போடவேண்டும்.

புதுகைத் தென்றல் said...

அந்த தலைப்பு புகைப்படம் மிக அருமை.//

மிக்க நன்றி ஜமால்.

புதுகை.அப்துல்லா said...

அழகான ஃபிகரப் பார்த்த பீலிங் வந்துருச்சு உங்க கண்கள் பதிவப் படிச்சவுடனே :)

(அக்கா அடிக்காதீங்க,அடிக்காதீங்க)

புதுகைத் தென்றல் said...

அழகான ஃபிகரப் பார்த்த பீலிங் வந்துருச்சு உங்க கண்கள் பதிவப் படிச்சவுடனே :)//

டிசம்பர்ல இருக்குங்க உங்களுக்கு கச்சேரி.

:))))))))))

தமிழன்-கறுப்பி... said...

நாமக்கல் சிபி said...
\\
நீங்கள் வரைந்த ஸ்ரீதேவி, பானுப்ரியா படங்கள் அருமை!

குறிப்பாக பானுப்ரியா படம் தத்ரூபமாக பானுப்ரியா மாதிரியே இருந்தது!
\\


ரிப்பீட்டு...:)

தமிழன்-கறுப்பி... said...

ஆமா அந்த இரண்டு (நான்கு) கண்களும் அழகானவைதான்...;)

தமிழன்-கறுப்பி... said...

சொல்ல வந்ததை இப்படி அழகா சொல்லி பதியவைக்குற 'டெக்னிக்' நச்சுன்னுதான் இருக்கு...

தமிழன்-கறுப்பி... said...

அந்தப்பாட்டுலயும் சரி படத்துலயும் சரி கண்கள் முக்கியமாத்தான் இருந்திச்சு...:)

புதுகைத் தென்றல் said...

வருகைக்கும் கருத்திர்கும் மிக்க நன்றி தமிழன்

நானானி said...

//கண் தானம் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கலாமோ ...//
கடைசியில் நீங்க சொல்லியிருக்கிற விதமே...'நச்!'
அருமை..அருமை..!
ஈ.வி. சரோஜா..ஸ்ரீவித்யா கண்களையும் சேத்துக்கோங்க!
'கண்கள் இரண்டால்..' என் பேரனுக்கு மிகவும் பிடித்த பாடல். பாட்டு ஆரம்பித்தவுடனேயே எங்கிருந்தாலும் ஓடி வந்து விடுவான்.

புதுகைத் தென்றல் said...

ஈ.வி. சரோஜா..ஸ்ரீவித்யா கண்களையும் சேத்துக்கோங்க!//

ஆஹா, எனக்கு ஸ்ரீவித்யாவின் கூந்தல் ரொம்பப் பிடிக்கும் நானானி.

புதுகைத் தென்றல் said...

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நானானி

Anonymous said...

மெஸேஜ் கடைசியில் வச்சிருக்கீங்க. எல்லாருக்கும் போய்ச்சேரவேண்டிய மெஸேஜ்