Wednesday, December 10, 2008

கறுப்பு கலர் பெயிண்ட் மற்றும் ஒரு ப்ரஷோட......

கறுப்பு கலர் பெயிண்ட் மற்றும் ஒரு ப்ரஷோட
சாயந்திரம் 7 மணிக்கு எங்க வீட்டுக்க்கு பக்கத்துல
இருக்கற வீதியில்
நிக்கலாம்னு முடிவு செஞ்சிருக்கேன். :)

நீங்களும் உங்க ஊர்ல இதை செய்வதா இருந்தாலும்
செய்யலாம்?

என்னாச்சு? ஏன் இப்படின்னு யோசிக்கறீங்களா?

நம்ம நாட்டுல ஒரு சட்டம் இருந்தாலும் நம்ம
மிஸ்டர்.பொதுஜனம் மதிக்கறதில்லை. சட்டத்தை
தான் நம்ம கையில எடுத்துக்ககூடாது. திட்டத்தை
எடுக்கலாம்ல அதான்!!!

டூ வீலர் மற்றும் 4 வீலர் வண்டிகளில்
இந்த ஹெட்லைட்டை ப்ராகசமா போட்டுகிட்டு
வண்டி ஓட்டினாத்தான் நம்மாளுங்களுக்குத் த்ருப்தியே!



நடுவில் ஒரு கறுப்பு புள்ளி அல்லது ஸ்டிக்கர்
பாதி அளவாவது மறைக்கும்படி இருக்கணும்
என்பது சட்டமாம். (என்னது பல பேருக்கு இது
தெரியாதா? அது சரி!!!)

அதனாலதான் நான் ஒவ்வொரு வண்டிக்கும்
ஹெட் லைட்டில் கறுப்பு பெயிண்ட் பாதிவரைக்கும்
அடிக்கும் முடிவுல இருக்கேன்.




NIGHT DRIVINGன் போது குறைந்த பட்சம்
டிம்,டிப்பாவது செய்யணும். அப்பத்தான்
எதிரில் வண்டி ஓட்டிகிட்டு வர்றவங்களுக்கு
இடைஞ்சல் இல்லாமல் இருக்கும். ஆனா
இதெல்லாம் செஞ்சுட்டா எங்கப்பன் வீட்டு
ரோடுன்னு சொல்லிக்க முடியாதுல்ல!!!

இந்த போட்டோக்களை பாருங்க. இதைப் பாத்ததுக்கே
கண்ணு கூசும் அப்ப ரோடுல வண்டி ஓட்டும்போது
நினைச்சு பாருங்க!!

பக்கத்துல உக்காந்து பயணிக்கும் பொழுதே
நமக்கே பயமா இருக்கு. ஓட்டறவங்க
நிலமையை யோசிச்சு பாருங்க.

நடுவுல மீடியேட்டர் இருக்கான்னு தெரியாது.
சின்னத்தம்பி கவுண்டமணி மாதிரி,"எதுத்தாப்ல
2 டீவீஎஸ் 50 வருது, நடுவுல போயிடலாம்னு
நினைச்சேன்னு" நாமளும் சொல்ற மாதிரி
எதிருல என்ன வண்டி வருதுன்னே தெரியாம
போகுது.




நம்ம ட்ராபிக் கான்ஸ்டபில்களும் கேக்கறதே இல்லை.

(ஒருவேளை இந்த ஹெட்லைட் அவங்க கண்ணுல
பட்டு கண்ணு தெரியாமலேயே போயிடுச்சு போல.)

அந்தக் ஹெட்லைட்டில் போட வேண்டிய பல்பு கூட
குறைந்த அளவு வாட்ஸ் பல்புதான் போடணும்னு இருக்காம்.
யாரு கேக்கறாங்க??
BREAK THE RULES தான் மிஸ்டர்.பொதுஜனத்தின்
பாலிஸி ஆச்சே!!!!

அரசாங்கம் போடும் சட்டங்களை
திட்டம்போட்டு மீறுவதுதான் நம்மா ஆளுங்க
ஷ்பாஷலிட்டி.

தனி மனித ஒழுக்கம் இருந்தா பல பிரச்ச்னைக்ளுக்கு
சட்டம் போடாமலேயே தீர்வு இருக்கும்.

இந்த அதிபயங்கர ஹெட்லைட்டால வண்டி
ஓட்டறவங்க 1 நிமிடம் தன் கண் பார்வையை
இழக்கறாங்கன்னு ஆராய்ச்சி சொல்லுது.


இதுக்கு நாம ஏதும் செய்ய முடியுமான்னு
வழி சொல்லுங்க.

இல்லாட்டி நான் மட்டும் என் திட்டத்தை
செயல் படுத்த ஆவன செய்யப்போறேன்!!!

(நானானி என் எதிர் பதிவு இதுதான்.நீங்க
உங்க பதிவுல சொல்லியிருந்த மாதிரி

ரெண்டு பக்கமும் விஷ்க்..விஷ்க் என்று பாயும்
இருசக்கர வாகனங்களும் ஆட்டோக்கள்
மட்டுமல்ல
இந்த இரவு நேரப்பயணமும் என்னிய பயமுறுத்துது)

********************************

இது எல்லோரும் படிக்க வேண்டிய பதிவுன்னு
நீங்க நினைச்சீங்கன்னா தமிழ்மணம்
வாசகர் பரிந்துரைக்கு
ஓட்டு போடுங்க.

35 comments:

நட்புடன் ஜமால் said...

\\கறுப்பு கலர் பெயிண்ட் மற்றும் ஒரு ப்ரஷோட
சாயந்திரம் 7 மணிக்கு எங்க வீட்டுக்க்கு பக்கத்துல
இருக்கற வீதியில்
நிக்கலாம்னு முடிவு செஞ்சிருக்கேன். :)\\

ஏன் ஏன்

நட்புடன் ஜமால் said...

\\தனி மனித ஒழுக்கம் இருந்தா பல பிரச்ச்னைக்ளுக்கு
சட்டம் போடாமலேயே தீர்வு இருக்கும்.\\

உண்மை

நட்புடன் ஜமால் said...

\\இது எல்லோரும் படிக்க வேண்டிய பதிவுன்னு
நீங்க நினைச்சீங்கன்னா தமிழ்மணம்
வாசகர் பரிந்துரைக்கு
ஓட்டு போடுங்க.\\

சர்வ நிச்சியமா.

நாகை சிவா said...

நியாயமான கவலை தான்.

ஒரு சில நாட்டில் டிம் லைட்ல தான் வண்டிய ஒட்டனும்.(சிட்டி உள்ள) அதை மீறினால் கடுமையான தண்டனை உண்டு. நம்ம ஊர்ல எதை வேணும்னாலும் பண்ணலாம்.

தட்டி கேட்க ஆள் இல்லேனா தம்பி சண்டை பிரப்பஞ்சம் தான் :)

இந்த அளவு வாட்ஸ் பல்ப் தான் உபயோகப்படுத்தனும் என்று நம் நாட்டிலும் சட்டம் உண்டு. ஆனால் அதை யாரும் கடைப்பிடிப்பது இல்லை. காரணம் 2. ஒன்னு சாலையில் போதுமான வெளிச்சம் இல்லை. அடுத்து எதிரில் வருகின்றது மிக அதிகமான வாட்ஸ் உள்ள பல்ப் உபயோகப்படுத்துகிறான்.

அதும் பிரைட் லைட் போட்டு வந்தா நீங்க கண்ணை மூடிய ஆகனும் அது போல இருக்கும் வெளிச்சம். அதில் சிலர் கலர் மாற்றி வேறு போட்டு இருப்பார்கள் (ப்ளூ)

இதுல கொடுமை என்னனா உயர்ந்த ரக கார்களில் இந்த பல்ப் கட் அவுட்டை மாற்ற முடியாது, அதனால் அந்த வண்டிகளில் இரவில் நெடும் தூரம் பயணம் செய்து மிக கொடுமையான விசயம். நிறுத்தி நிறுத்தி தான் செல்ல வேண்டும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம் ரொம்ப கொடுமைங்க இந்த லைட்ஸ்..அதும் எங்க ஊருல விண்டர் வந்தா கலர் கலரா லைட் மாட்டுவாங்க.முன்னாடி ஊருல இப்படி பள்ளிக்கூடப் பிள்ளைங்கள வச்சு பெட்ரோல் பங்கில் வரவங்க வண்டிக்கெல்லாம் பெயிண்ட் அடிப்பாங்க..

pudugaithendral said...

அதெப்படி ஜமால் சமீபகாலமா என் பதிவுகளுக்கு மீ த பர்ஸ்டுன்னு நீங்க தான் வர்றீங்க?

pudugaithendral said...

தட்டி கேட்க ஆள் இல்லேனா தம்பி சண்டை பிரப்பஞ்சம் தான் //

ஆஹா அருமையா சொல்லியிருக்கீங்க

pudugaithendral said...

ஒன்னு சாலையில் போதுமான வெளிச்சம் இல்லை.//

அதுக்காக இப்படியா?

pudugaithendral said...

எதிரில் வருகின்றது மிக அதிகமான வாட்ஸ் உள்ள பல்ப் உபயோகப்படுத்துகிறான். //

ஏட்டிக்கு போட்டி ரோட்டிலுமா???

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

pudugaithendral said...

ம் ரொம்ப கொடுமைங்க இந்த லைட்ஸ்..//
ஆமாம் முத்துலெட்சுமி.

Sanjai Gandhi said...

ரொம்ப நல்ல பதிவு தான்..

//BREAK THE RULES தான் மிஸ்டர்.பொதுஜனத்தின்
பாலிஸி ஆச்சே!!!!//

இதெல்லாம் நெம்ப ஓவருங்க :(

சென்ஷி said...

நல்ல கருத்துள்ள பதிவு.. ஊர்ல இதை சட்டமாக்கியிருந்தும் யாரும் மதிப்பதில்லை. :((

நானானி said...

'தனிமனித ஒழுக்கம்' அப்படின்னா என்னா? தென்றல்? நம்ம பொதுஜனத்துக்கு முதலில் அதை உங்க பக்கத்து வீதியில் நின்னு சொல்லிக் கொடுங்க. மத்ததெல்லாம் தானா வருதா பாருங்க!!என்ன நாஞ்சொல்றது? குறைந்த பட்சம் போக்குவரத்து விதிகளையாவது கடைப் பிடித்தால் எவ்வளவு உயிர், பொருட்சேதம் தவிர்க்கப் படும்.
ட்ராபிக்குடையின் கீழ் ஒரு வாசகம்...'நீ வேகமாக வீட்டுக்குப் போகணுமா..இல்லை மேலே போகணுமா?' என்ற ரீதியில் மெதுவாகப் போகச் சொல்லும்.
நச்சென்ற பதுவு!!!

pudugaithendral said...

இதெல்லாம் நெம்ப ஓவருங்க ://

Break the rules உங்க ப்ளாக் பேரு இல்ல. நான் உங்களைச் சொல்லலை சஞ்சய். :)

பொதுவா சொன்னேன்.

pudugaithendral said...

யாரும் மதிப்பதில்லை.//

அதானால்தானே ப்ரச்சனை. ஹெல்மெட் போடு, ஹெட்லைட்டை டிம் டிப் செய் இப்படி எத்தனை சொன்னாலும் கேக்க மாட்டாங்க.

எனக்கு நாக்கை புடுங்கிக்கற மாதிரி கேக்கணும்னு நல்லா வாயில வருது.

சபைக்காக அடங்கிக்கறேன்.

pudugaithendral said...

என்ன நாஞ்சொல்றது?//

நீங்க சொல்றது சரிதான். ஆனா நான் சொல்வதை காது கொடுத்து கேக்கணும்ல.

ஆனாலும் முடிஞ்சவரைக்கும் கண்ணெதிரில் தப்புநடந்தா விடறதில்லை.

pudugaithendral said...

'நீ வேகமாக வீட்டுக்குப் போகணுமா..இல்லை மேலே போகணுமா?' என்ற ரீதியில் மெதுவாகப் போகச் சொல்லும்.//

ஹாஹா இதுக்குமேல எல்லாம் இங்க ஹோர்டிங்க்ஸ் எல்லாம் வெச்சிருக்காங்க நானானி. ஆனா யாரும் படிச்சவங்க மாதிரி தெரியலை.:)

சமீபத்தில டீவி9ல் ஒரு நிகழ்ச்சி. ரொம்ப தூரம் போய் யு ட்ர்ன் எடுக்கணும்னு பலர் மீடியேட்டர் மேல வண்டி ஓட்டி ரோட்டை கிராஸ் செய்யறாங்க. எப்படியெல்லாம் சாலை விதிகளை மீறலாமோ அப்படி எல்லாம் நம்மாளுங்க மீறுராங்க.

pudugaithendral said...

நச்சென்ற பதுவு!!!///

நன்றி நானானி

நட்புடன் ஜமால் said...

\\புதுகைத் தென்றல் said...

அதெப்படி ஜமால் சமீபகாலமா என் பதிவுகளுக்கு மீ த பர்ஸ்டுன்னு நீங்க தான் வர்றீங்க?\\

அப்படியா ...

திட்டமிட்டெல்லாம் வருவதில்லீங்கோ.
(ஆனாலும் ஆசை உண்டுதான்)

தேவன் மாயம் said...

நல்ல முடிவு!
தண்ணி பார்டிகளை
தொட்டுராதிங்க!!!
தேவா.

ஜோசப் பால்ராஜ் said...

நான் கார் ஓட்ட ஆரம்பித்ததில் இருந்து இன்றளவும் முகப்பு விளக்கு விசயத்தில் மிக கவனமாக இருப்பேன். ஒரு சைக்கிள் எதிரில் வந்தாலும் உடனே ஒளி அளவை குறைத்துவிடுவேன், சைக்கிளுக்கு எல்லாம் டிம் பண்றாண்டான்னு என்னை கூட இருப்பவர்கள் கிண்டலடித்ததும் உண்டு, ஆனால் என் வாதம் என்னவென்றால் தற்போதெல்லாம் சைக்கிள்களில் வருவோர் டைனமோ பொருத்துவதில்லை. இருளில் தான் ஓட்டுகின்றார்கள். அப்படி இருளில் கண்களை பழக்கப்படுத்திக் கொண்டு ஓட்டுபவர்களுக்கு திடீரென்று பிரகாசமான ஒளி கண்ணில் பட்டால் அதன் பின் இருளில் பழக்கப்பட அவர்களுக்கு அதிக சிரமமாக இருக்கும்.
மாருதி கார்ல போறவன் லைட்ட டிம் பண்ணலன்னு சைக்கிள்காரன் திட்டுவான். அதே கார்காரன் லாரிக்காரனப்பாத்து திட்டுவான். இப்டி இவனுக்கு அவன் , அவனுக்கு இவன்னு எவனுமே லைட்ட டிம் பண்றது கிடையாது பாருங்க.

நெடுஞ்சாலைகள்ல வண்டி ஓட்டிப் பாருங்க அப்ப தெரியும். இதுக்குப் பயந்துகிட்டே நான் ராத்திரியில சென்னை திருச்சி சாலையில கார் போக கூட பயமா இருக்கு.

ஜோசப் பால்ராஜ் said...

தனி மனித ஒழுக்கம்கிறது தானா வரவேண்டியது. அத யாரும் கட்டாயப்படுத்தி வரவழைக்க முடியாது. வேணும்ணா ஒன்னு செய்யலாம், நீங்க கறுப்பு பெயிண்ட் எல்லாம் எடுத்துக்கிட்டு போக வேண்டாம், ரெண்டு உருட்டுக் கட்டைய எடுத்துக்கிட்டு போங்க, லைட்ட பிரகாசமா வைச்சுக்கிட்டு வர்றவன் கார்ல எல்லாம் முகப்பு விளக்க அடிச்சு ஒடைச்சுடுங்க.
திருச்சி சாலையில யாரோ ஒரு போலிஸ்காரர் இந்த வேலையத்தான் செஞ்சாரு 4 வருசத்துக்கு முன்னாடி. அப்றம் பாருங்க, எல்லாரும் தன் வண்டி விளக்க காப்பாத்திக்கவாது ஒழுங்க விதிகளை கடைப்பிடிப்பாய்ங்கள்ல. நம்மாட்களுக்கு இதமா பதமா எல்லாம் சொன்னா தெரியாதுக்கா. ஓங்கி தலையில அடிச்சாத்தான் இப்டி புரியிறமாதிரி சொல்லவேண்டியாதுதானேன்னு வடிவேலு பாணியில சொல்லுவானுங்க.

Itsdifferent said...

//தனி மனித ஒழுக்கம் இருந்தா பல பிரச்ச்னைக்ளுக்கு
சட்டம் போடாமலேயே தீர்வு இருக்கும்//

Absolutely right. I am not sure what is the reason. I have lived in India for 30 years, before moving to the US, I was like that in India, violating rules most of the time, but learnt from the culture here. And try to follow whenever I visit India.
To cite a situation, when my parents visited us here, one day, it was very late like past midnght, me and my dad were coming back in a car from a friend's home. The road is 3 lanes wide on each side with a left turn lane seperately. I was waiting for the left turn signal, for some time, and my father was insisting that I should just proceed, because, there was absolutely no one in the road at that time. Though my thoughts are to listen to him, my gut instinct said, no dont do that. We waited for close to 3 minutes, for our left turn signal to go green and proceed.
Would I have been that patient in India? What is the reason? How do we change it?
Educate people to follow simple rules first!!!!

Anonymous said...

எங்கப்பா எல்லாம் ராத்திரில ஓட்டும்போது இந்த மாதிரி வண்டி வந்தா ஒரு ஓரமா நிறுத்தி வண்டி போனப்பறம் தான் போவார். இதுக்காகவே இரவு வண்டி ஓட்டறத நிறுத்திட்டாரு.

pudugaithendral said...

(ஆனாலும் ஆசை உண்டுதான்)//

:)))

pudugaithendral said...

நல்ல முடிவு!
தண்ணி பார்டிகளை
தொட்டுராதிங்க!!!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

pudugaithendral said...

அருமையான கருத்துக்களை சொல்லியிருக்கீங்க ஜோசப். இரவு நேரத்தில் வண்டி ஓட்டுவது ரொம்பவே கடினாமா இருக்கு.

யாராவது ஏதாவது செய்யணும்ன் என்பதுதான் என் ஆதங்கம்

pudugaithendral said...

ரெண்டு உருட்டுக் கட்டைய எடுத்துக்கிட்டு போங்க, லைட்ட பிரகாசமா வைச்சுக்கிட்டு வர்றவன் கார்ல எல்லாம் முகப்பு விளக்க அடிச்சு ஒடைச்சுடுங்க.//

ஆஹா! ஏன் இந்த மர்ட்ர் வெறி.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நீங்க சொல்வது நியாயம்னாலும் நடைமுறையில் பெயிண்ட் அடிப்பது கூட சாத்தியமில்லை. என் மேலே காரை ஏத்திப்புட்டு போகவும் தயங்க மாட்டாங்க!!

வீட்டை விட்டு கிளம்பும்போதே அவசரமாத்தான் போகணும்னு கங்கணம் கட்டிகிட்டு வண்டியை வெளியே எடுப்பாக போல.

pudugaithendral said...

Would I have been that patient in India? What is the reason? How do we change it?
Educate people to follow simple rules first!!!!//

வாங்க டிஃபரண்ட்.

இதெல்லாம் தனிப் பதிவா போட்டுத்தான் பதில் தேடணும்.

நாளை இதைப் பத்தின பதிவு வரும். அப்ப வந்து உங்க கருத்தையும் சொல்லு்ங்க.

pudugaithendral said...

வாங்க சின்ன அம்மிணி,

எல்லோராலையும் இரவு நேரப் பயணத்தை தவிர்க்க முடியாதே. நான் சொல்வது நள்ளிரவுப் பயணம் அல்ல.

இருட்டிய பிறகு ரோடில் போவதைச் சொன்னேன்.

சந்தனமுல்லை said...

//\\தனி மனித ஒழுக்கம் இருந்தா பல பிரச்ச்னைக்ளுக்கு
சட்டம் போடாமலேயே தீர்வு இருக்கும்.\\

ர்ப்பீட்டு!

சந்தனமுல்லை said...

//அதனாலதான் நான் ஒவ்வொரு வண்டிக்கும்
ஹெட் லைட்டில் கறுப்பு பெயிண்ட் பாதிவரைக்கும்
அடிக்கும் முடிவுல இருக்கேன்.
//

சூப்பர்!

pudugaithendral said...

வாங்க சந்தனமுல்லை,

வருகைக்கு மிக்க நன்றி

மங்களூர் சிவா said...

//அதனாலதான் நான் ஒவ்வொரு வண்டிக்கும்
ஹெட் லைட்டில் கறுப்பு பெயிண்ட் பாதிவரைக்கும்
அடிக்கும் முடிவுல இருக்கேன்.
//

சூப்பர்!. நான் கார் வாங்கின உடனே உங்களுக்கு தகவல் சொல்லுறேன்.
:)))))))))

மங்களூர் சிவா said...

//
ஜோசப் பால்ராஜ் said...

தனி மனித ஒழுக்கம்கிறது தானா வரவேண்டியது. அத யாரும் கட்டாயப்படுத்தி வரவழைக்க முடியாது. வேணும்ணா ஒன்னு செய்யலாம், நீங்க கறுப்பு பெயிண்ட் எல்லாம் எடுத்துக்கிட்டு போக வேண்டாம், ரெண்டு உருட்டுக் கட்டைய எடுத்துக்கிட்டு போங்க, லைட்ட பிரகாசமா வைச்சுக்கிட்டு வர்றவன் கார்ல எல்லாம் முகப்பு விளக்க அடிச்சு ஒடைச்சுடுங்க.
திருச்சி சாலையில யாரோ ஒரு போலிஸ்காரர் இந்த வேலையத்தான் செஞ்சாரு 4 வருசத்துக்கு முன்னாடி. அப்றம் பாருங்க, எல்லாரும் தன் வண்டி விளக்க காப்பாத்திக்கவாது ஒழுங்க விதிகளை கடைப்பிடிப்பாய்ங்கள்ல. நம்மாட்களுக்கு இதமா பதமா எல்லாம் சொன்னா தெரியாதுக்கா. ஓங்கி தலையில அடிச்சாத்தான் இப்டி புரியிறமாதிரி சொல்லவேண்டியாதுதானேன்னு வடிவேலு பாணியில சொல்லுவானுங்க.
//

இது சூப்பரு!
அக்கா ட்ரை பண்ணலாமே!?