Monday, December 01, 2008

GOOD BYE!!!

”கபி அல்விதா ந கஹனா!” என்று ஒரு
பழய ஹிந்திப் பாடல் உண்டு. ஆனால்

ஆட்டம் முடிஞ்சு போச்சு!
டாடா பைபை சொல்லவேண்டிய நேரமும் வந்தாச்சு!
மனசுக்கு கஷ்டமா இருந்தாலும் உண்மை அதுதான்.

என்ன நான் டாடா சொல்லப்போறேன்னு நினைச்சீங்களா?!!
அந்த சந்தோஷம் உங்களுக்கு கிடைக்காது. :)

எம்புட்டு அழகா வாழ்க்கைக்கு குட் பை சொல்லமுடியும்னு
ஒரு படம் பார்த்தேன். அதைச் சொல்லத்தான் இந்தப் பதிவு.


Dasvidanya இந்த
ஹிந்தி்ப் படம் “சிம்பிளி சூப்பர்ப்”.

To-do-list எழுதுவதைத் தவிர வேறு எந்த
எண்டடயர்மெண்டும் இல்லாத ஒரு அக்கவுண்டடிற்கு
வயிற்றில் கேன்சர் இருப்பது தெரிய வருகிறது.

37 வயதான அவருக்கு திருமணம் கூட
ஆகியிருக்கவில்லை. அலுவலகத்தில் அமரின்(அதான்
ஹீரோ பெயர்) பாஸ் Noukri.com விளம்பரத்தில் வரும்
”ஹரி சாடு” டைப். மொத்தத்தில் ஒரு சராசரி மனிதனின்
வெறுப்பும், வேதனையும் நிறைந்த ஒரு வாழ்க்கை.

வாழ்க்கை இன்னும் 3 மாதம் தான் என்று
புரிந்த பொழுது தான் இதுவரை எதுவுமே
செய்ததில்லையே? என்று புலம்புகிறார் ஹீரோ.

அவரது மனசாட்சி வந்து பேசும்பொழுது
தான் விழித்துக்கொண்டு சாவதற்கு முன்பு
செய்யவேண்டிய 10 To-do-list எழுதுகிறார்.
என்ன எழுதினார்?
எழுதியவற்றை அவர் இறப்பதற்குள் செய்து முடித்தாரா?
இதை வெள்ளித் திரையில் காணுங்கள்.


படாடோபமான மாளிகைகள் இல்லை, மரத்தைச்
சுற்றிப் பாடும் டூயட்டுக்கள் இல்லை.
நட்பு, காதல், பாசம், காமெடி,
சோகம் எல்லாம் கலந்த
படு யதார்த்தமான காட்சிகள்,
அருமையான கதை, அதை உணர்ந்து நடித்திருக்கும்
நடிகர்கள் இதுதான் இந்தப் படத்தின் பலம்.

அலுவலகத்தில் அமர் படும் பாடுகள் பலர்
தன் வாழ்வில் சந்தித்திருக்க்கூடிய சம்பவங்களே!

சாவதற்கு முன் செய்யவேண்டிய லிஸ்டில் ஒன்றாக
தான் கிடார் கற்று தன் அம்மாவிற்கு பாடும் இந்தப்
பாடல் நம் அம்மாவிற்கு நாம் பாடுவது போல்
இருக்கும்.(ஓடிப்போய் அம்மாவை கட்டிக்கொள்ள
வேண்டும், அவர் மடியில் தலை சாய்க்க வேண்டும்
என்றும் தோன்றும் அளவுக்கு சூப்பர் பாடல்)
தியேட்டரில் இருந்து வெளியே வந்த பிறகு கூட
சில படங்கள் நம்மை அசைப் போட வைக்கும்.
தாஸ்விதானியா(குட் பை- ரஷ்ய மொழியில்)
அந்த வகைப் படம்.

ஹீரோ வினய் பாதக்கின் அற்புதமான நடிப்பு,
அழகான கதையமைப்பு, காட்சிகள்
எல்லாம் சில சமயம் கண்ணில் கண்ணீரை
வரவழைக்கும்.
இந்தப் படத்தை
பார்க்கும் நேரமும், அதற்கு செல்வழித்த
காசும் வீணாகப் போகாது.

கசப்பும் இனிப்பும் நிறைந்த நினைவுகளை
நமக்குத் தரும் இந்தப் படம் கண்டிப்பாக
பார்க்கவேண்டியஒன்று.

அமர் தன் குட்பையை அழகாகச் சொல்லியிருக்கிறார்.
அவருக்கு தன் வாழ்வின் கடைசி தெரிந்ததால்
விழித்துக்கொண்டார்.

நமக்கு அது தெரியாது என்பதாலேயே நாம்
வி்ழித்துக்கொள்ளாமல் இருக்கக்கூடாது.
மனதுக்குள் ஆசைகளை புதைத்து
வைத்துக்கொண்டு, கால்போன போக்கில்
வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்
கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது.
இருக்கும் வரை ஆனந்தமாக இருந்துவிட்டு
அழகாக “தாஸ்விதானியா” சொல்வோமே!

25 comments:

கோவி.கண்ணன் said...

உங்கள் எழுத்தை வைத்துப் பார்தத்தால்ல் படம் உணர்வாக வந்திருக்கும் போல.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

அந்த அம்மா பாட்டு விளம்பரம் அடிக்கடி வருது..கேட்டு எனக்கும் ரொம்ப பிடிச்சிருச்சு.. என் பையன் கூட ஹம் செய்யரான்.. :)

ambi said...

//என்ன நான் டாடா சொல்லப்போறேன்னு நினைச்சீங்களா?!!
//

ஹிஹி, ஆமா, ஒரு நிமிசம் கூட சந்தோசபட விட மாட்டீங்களே (சும்மா லுலுவாயிக்கு) :))

உங்க பதிவை பாத்தா நல்ல படம் தான் போல.
தமிழ்ல ரீமேக் பண்ணா ப்ரகாஷ்ராஜ் கரக்ட் சாய்ஸா இருக்குமா?

புதுகைத் தென்றல் said...

வாங்க கோவி.கண்ணன்,

ஆமாம் மிக அருமையாக இருக்கிறது

புதுகைத் தென்றல் said...

ஆமாம் முத்துலெட்சுமி,

படத்துல 3 பாட்டுதான். அதுல மம்மா பாட்டு சூப்பர்

சின்ன அம்மிணி said...

Bucket List பாருங்க புதுகைத்தென்றல், அந்தக்கதையை அடிப்படையா வைச்சு தான் இந்தக்கதையை எடுத்திருக்காங்க.
மார்கன் பிரீமன், ஜாக் நிக்கல்சன் நடிச்சது.(என்னோட விமரிசனம் http://chinnaammini.blogspot.com/2008_06_01_archive.html)

புதுகைத் தென்றல் said...

ஹிஹி, ஆமா, ஒரு நிமிசம் கூட சந்தோசபட விட மாட்டீங்களே (சும்மா லுலுவாயிக்கு)


:))

புதுகைத் தென்றல் said...

தமிழ்ல ரீமேக் பண்ணா ப்ரகாஷ்ராஜ் கரக்ட் சாய்ஸா இருக்குமா?//

அவர்தான் சரியான சாய்ஸ்.

உங்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்பி

புதுகைத் தென்றல் said...

ஓ நான் அந்தப் படம் இன்னும் பார்க்கலை சின்ன அம்மிணி,

ஆயில்யன் said...

//ஆட்டம் முடிஞ்சு போச்சு!
டாடா பைபை சொல்லவேண்டிய நேரமும் வந்தாச்சு!
மனசுக்கு கஷ்டமா இருந்தாலும் உண்மை அதுதான்.///


வேணாம் பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

போகாதீங்க பாஸ் போகதீங்க!

ஆயில்யன் said...

//என்ன நான் டாடா சொல்லப்போறேன்னு நினைச்சீங்களா?!!
அந்த சந்தோஷம் உங்களுக்கு கிடைக்காது. :)///

ஆஹா பில்ட் - அப் கொடுத்த எக்ஸ்பிரெஸன் எல்லாம் வேஸ்டா ப்பூடுச்சே :(((((

புதுகைத் தென்றல் said...

வேணாம் பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

போகாதீங்க பாஸ் போகதீங்க!//

நானாவது போவதாவது.

ஆயில்யன் said...

//நமக்கு அது தெரியாது என்பதாலேயே நாம்
வி்ழித்துக்கொள்ளாமல் இருக்கக்கூடாது.
மனதுக்குள் ஆசைகளை புதைத்து
வைத்துக்கொண்டு, கால்போன போக்கில்
வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்
கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது.

///
அருமையான வார்த்தைகளின் வெளிப்பாடு !

புதுகைத் தென்றல் said...

ஆஹா பில்ட் - அப் கொடுத்த எக்ஸ்பிரெஸன் எல்லாம் வேஸ்டா ப்பூடுச்சே//

:))))))))))))

புதுகைத் தென்றல் said...

அருமையான வார்த்தைகளின் வெளிப்பாடு //

நன்றி ஆயில்யன்

கானா பிரபா said...

என்ன பாஸ் இது டெரரா டைட்டில் வைக்கிறீங்க

சரி நீங்க சொன்னதுக்காக பார்க்கிறேன்

புதுகைத் தென்றல் said...

என்ன பாஸ் இது டெரரா டைட்டில் வைக்கிறீங்க//

ஏதோ என்னால முடிஞ்சது பிரபா.

புதுகைத் தென்றல் said...

சரி நீங்க சொன்னதுக்காக பார்க்கிறேன்//

சரிங்க பாஸ்

தமிழ் பிரியன் said...

அப்ப வாய்ப்பு கிடைத்தலாம் பார்த்துடலாம்..:)

ராமலக்ஷ்மி said...

//அவரது மனசாட்சி வந்து பேசும்பொழுது
தான் விழித்துக்கொண்டு சாவதற்கு முன்பு
செய்யவேண்டிய 10 To-do-list எழுதுகிறார்.
என்ன எழுதினார்?
எழுதியவற்றை அவர் இறப்பதற்குள் செய்து முடித்தாரா?
இதை வெள்ளித் திரையில் காணுங்கள்.//

நீங்கள்தான் தயாரிப்பாளரின் கஷ்டம் புரிந்த நல்ல விமர்சகர்:)!

//இருக்கும் வரை ஆனந்தமாக இருந்துவிட்டு
அழகாக “தாஸ்விதானியா” சொல்வோமே!//

அருமையா சொல்லிட்டீங்க தென்றல்.

BARBIE GIRL said...

superb!Excellent movie

புதுகைத் தென்றல் said...

நீங்கள்தான் தயாரிப்பாளரின் கஷ்டம் புரிந்த நல்ல விமர்சகர்

:)

புதுகைத் தென்றல் said...

அருமையா சொல்லிட்டீங்க தென்றல்.//

nandri

தாமிரா said...

அவரது மனசாட்சி வந்து பேசும்பொழுது
தான் விழித்துக்கொண்டு சாவதற்கு முன்பு
செய்யவேண்டிய 10 To-do-list எழுதுகிறார்.
என்ன எழுதினார்?
எழுதியவற்றை அவர் இறப்பதற்குள் செய்து முடித்தாரா?///

மிக‌வும் ஆர்வ‌த்தை தூண்டிவிட்டீர்க‌ள் தென்ற‌ல்.!

புதுகைத் தென்றல் said...

மிக‌வும் ஆர்வ‌த்தை தூண்டிவிட்டீர்க‌ள் தென்ற‌ல்.!//


:))))))))))