அப்பா மகள் கூட்டணியும் அநாதை ஆகிப்போன தங்கமணியும்.
இதுதாங்க இன்றைய பாடம்.
அப்பாக்களுக்கு மகள் மேல் பாச மழைதான்.
"இந்தா! எம்பொண்ணை ஒண்ணும் சொல்லாத!"
" அம்மா கிடக்கறா! நீ வாடிச் செல்லம்"
" மாமியார் வீட்டுக்கு போகும்போது பாத்துக்கலாம்!
அதுவரைக்கும் என் பொண்ணை வேலை ஏவாத.
அவ என்ன வேலைக்காரியா?"
இப்படி தன் தங்கமணிக்கு லட்சார்ச்சனை செய்யும்
ரங்கமணிகள் தான் ஏராளம்.
தவறு செய்யும் மகளை அதட்டி சொல்லிக்கொடுக்க
முடியாம எத்தனை அம்மாக்கள் கஷ்டப்படுறாங்க!
திட்டினா மகள் அப்பாகிட்ட போட்டுக்கொடுத்திடுவா,
அதுக்கப்புறம் கேக்கவே வேணாம்!
ஆடுபகை குட்டி உறவு கதைதான். தங்கமணியை
ஒரு எதிரி மாதிரி நினைச்சு, அம்மா சொல்
கேக்கக்கூடாதுன்னே பால பாடம் சொல்லிக்கொடு்த்து,
செல்லம் கொ்டுத்து தலைக்கு மேலே ஏத்தி வைச்சுக்குவாங்க.
அப்பா செல்லமா மகளும் ஒரு வேலையும் செய்யாம
வேளா வேளைக்கு அம்மா சமைச்சதை குத்தம்
சொல்லிக்கிட்டே மூக்க பிடி்க்க சாப்பிட்டு அப்படியே
கல்யாணம் ஆகிப்போனதும் அங்க போய் ஒரு வேலையும்
செய்யத் தெரியாம திண்டாடுவாங்க.
ஆனா திட்டு விழுவது அம்மாவுக்குத்தான். "அம்மாக்காரி
பொண்ணை எப்படி வளர்த்து வெச்சிருக்கா பாரு" அப்படின்னுதான்
சொல்வாங்களேத் தவிர அப்பாவை எதுவும் சொல்ல மாட்டாங்க.
ஆகவே ரங்கமணிகளே உங்க தங்கஸ் சரியில்லைன்னா
அதுக்கு முழு பொறுப்பும் உங்களை மாதிரி ஒரு
ரங்கமணி(மாமனார்) தான். :)))
**********************************
அப்பா செல்லமான மகளுக்குத்தான் வீட்டில்
முக்கியத்துவம் கொடுப்பாங்க. அப்பாவுக்கும்
அம்மாவுக்கு இடையில் மகள் சர்வ சாதாரணமாக
புகுந்து இடைவெளியை ஏற்படுத்துகிறாள்.
காரணம் அப்பா!! (அன்புள்ள அப்பா சிவாஜி,
நதியா, சுரேஷ் நடித்த படம். அதில் வரு்ம்
அப்பா,மகள் பாசக் காட்சி டூ மச் அல்ல
அதையும் மிஞ்சும் அளவுக்கு பாசக் காட்சிகள்
இருக்கின்றன்.)
மகள் வீட்டில் இருக்கும் வரைக்கும் ரங்குவு்க்கு
பொண்டாட்டின்னு ஒருத்தி இருக்கறதே கண்ணுக்குத்
தெரியாது. 22,25 வருஷம் வரைக்கும் சுத்தி சுத்தி
வந்த மகள் திருமணம் செய்து கொண்டு போனதும்
மோட்டு வலையைப் பார்த்த படி உட்கார்ந்திருப்பார்
மிஸ்டர். ரங்கு. காரணம்??!! மகள் இருந்த வரை
மனைவியை மதித்ததிலை, அன்பாக நடத்தியதில்லை,
நட்பாக இருந்ததில்லை. அதே வீட்டிலேயே இருந்தாலும்
தங்மணி அந்நியமாக அநாதையாக அத்தனை நாள்
இருந்ததை உணர்ந்திருக்க வில்லை. அதனால்தான்
வயோதிக காலத்தில் வெறுமையாகி போகிறது
வாழ்க்கை.
எனது தோழி ஒருவர்
காதலித்து திருமணம் புரிந்து கொண்டவர்.
ஒரே ஒரு பெண். மகள் பிறந்த பின் கணவன் - மனைவிக்கு்ள்
இடையில் பெரிய இடைவெளி!!!!!மகள் எப்போதும்
அப்பாவுடனேயே இருப்பாள். காரில் போனால் கூட
அப்பா வண்டி ஓட்ட முன் சீட்டில் தான் தான் அமர்வேன்
என்று சண்டை போட்டு தான் எப்போதும் அப்பாவுடனேயே
இருப்பாள். மகள் வீட்டில் இருக்கும் நேரமெல்லாம்
அப்பாவுடன் பேசி, மகிழ்ந்து, கொஞ்சி கூத்தாடிக்கொண்டிருக்கிறாள்.
சமீபத்தில் சந்தித்தேன். தனது மன உளைச்சலை
சொல்லி அழுதார். காதல்
கணவரிடம் பேச வேண்டியதுதானே?என்று கேட்ட
பொழுது அவர் ரங்கமணி சொன்னது,
" எனக்கு என் மகள் தான்
முக்கியம்!!"
"இப்படியே இருந்தால் எப்படி?" என்றேன்.
"மகளுக்கு கல்யாணம் ஆகட்டும், அவருக்கு
வெச்சிருக்கேன் கச்சேரி!! அப்போ என்னை விட்டா
வேறு கதி இல்லேல்ல!! நான் யாருன்னு அப்ப
காட்டறேன்!!"
தேவையா ரங்கமணிகளுக்கே உங்களுக்கு இந்த
நிலமை???
14 comments:
ம்.. நானெல்லாமும் இப்படித்தான் .. எங்கப்பா காப்பாத்தி காப்பாத்தித்தான் ...கல்யாணத்துக்கப்பறம் வேலை செய்யறேன்.. :))
நல்லாதான் மிரட்டறீங்க..
ஆஹா வாங்க முத்துலெட்சுமி,
நல்லாதான் மிரட்டறீங்க.//
உண்மையைச் சொன்னா மிரட்டறேன்னு சொல்றீங்க.
அப்பனுக்கு தன் பொண்ணைத் தான் பிடிக்கும்.
300 க்கு இன்னும் 12 தான் பாக்கி.. ஹ்ம்ம்ம் .. சீக்கிறம் சீக்கிறம்.. :))
நானெல்லாம் சூப்பர் டிமிக்கி சுந்தரியாக்கும். அப்பா சப்போர்ட் இல்லாட்டி கூட கல்யாணயத்துக்கு முன்னாடி வீட்டு வேலை செஞ்சதில்லை :)
நல்லா ஜாலியா எழுதியிருக்கீங்க! அவள் விகடன் அல்லது மங்கையர் மலர் அல்லது குமுதம் சிநேகிதியில் வந்திருந்தால் இந்நேரம் வாசகியர் உங்களை சூழ்ந்திருப்பார்கள்.
ஹ்ம்ம்ம் .. சீக்கிறம் சீக்கிறம்.. :))//
அநேகமா புத்தாண்டுக்குள் 300 அடிச்சிடலாம்.
நானெல்லாம் சூப்பர் டிமிக்கி சுந்தரியாக்கும். //
கொடுத்து வெச்சவங்க. சொன்ன வேலையை செய்யாட்டி அப்பா அம்மா ரெண்டு பேரும் "நல்லா" கொஞ்சுவாங்க. அதுக்கு பயந்தே
செய்வேன்.
:(((((((((
வாங்க செல்வகுமார்,
தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி.
இதழ்களில் எழுதினாலும் கிடைக்காத நிறைவு இங்கே கிடைக்கிறது.
அப்பா மகள் கூட்டணிஓகே தான். கரெக்டாச் சொன்னீங்க.
அப்படியே அம்மா--மகன் கூட்டணிய பத்தி யாரவது சொன்ன நல்லா இருக்கும். என் வீட்டுல இந்த கூட்டணிதா கலக்கிட்டு இருக்கு... என்னத்த சொல்ல
அப்படியே அம்மா--மகன் கூட்டணிய பத்தி யாரவது சொன்ன நல்லா இருக்கும்//
பேரண்ட்ஸ் கிளப்பில் இன்றைக்கு பதிவு வருதுங்கோ!!
/
300 க்கு இன்னும் 12 தான் பாக்கி.. ஹ்ம்ம்ம் .. சீக்கிறம் சீக்கிறம்.. :))
/
ரிப்பீட்டு
/
r.selvakkumar said...
நல்லா ஜாலியா எழுதியிருக்கீங்க! அவள் விகடன் அல்லது மங்கையர் மலர் அல்லது குமுதம் சிநேகிதியில் வந்திருந்தால் இந்நேரம் வாசகியர் உங்களை சூழ்ந்திருப்பார்கள்.
/
ரிப்பீட்டு
Post a Comment