மடிக்கேரியில் இருக்கும் ஓம்காரேஷ்வரர் கோவிலுக்குச் சென்றோம்.
அருமையான தரிசனம் முடித்துக்கொண்டு
தலைக்காவேரிக்கு பயணமானோம்.
பச்சை பசேலென்ற காபித்தோட்டங்களுக்கிடையேயான
பயணம் மிக அருமையாக இருந்தது.
அது வரை தேயிலை தோட்டங்களுக்கு இடையே
மட்டுமே பயணித்திருந்தோம். ஆஷிஷும் அம்ருதாவும்
இந்த மலைப்பகுதி எவ்வளவு உயரம்? இது நம்ம(!!??)
நுவரேலியா மாதிரியா இல்ல கண்டி மாதிரியா?
என்று கேட்டுக்கொண்டும் அதைப் பற்றி பேசிக்கொண்டும்
வந்தார்கள்.
"அழகாத்தான் இருக்கு. ஆனா அங்கே இன்னமும்
பசுமையா இருக்கும்ல அம்மா"? என்றான் ஆஷிஷ்.
ம்ம்ம். பெருமூச்சுவிட்டுக்கொண்டேன்.
பிள்ளைகள் முதலில் பார்த்த மலைப்பகுதி
இலங்கையின் நுவரேலியா மற்றும் கண்டிதான்.
தலைக்காவேரி இங்குதான் காவேரி ஆறு
உற்பத்தி ஆகிறது. மடிக்கேரியிலிருந்து
48 கி.மீ தொலைவில் இருக்கிறது.
இதுதான் காவேரி உற்பத்தி ஆகும் இடம்.
இங்கு அமர்ந்து காவேரித் தாய்க்கு பூஜை
செய்கிறார்கள்.
இங்கு இருக்கும் கோவில் அகஸ்திய முனிவருக்கானது.
அங்கிருந்து பாகமண்டலா சென்றோம்.
தலைக்காவேரியிலிருந்து 8 கிமீட்டர்
தொலைவில் இருக்கிறது.
பாகமண்டலா காவேரி, கன்னிகே,
மற்றும் ஒரு நதி் இவை மூன்றும் கலக்கும்
திரிவேணி சங்கம நதிக்கரையில் அமைந்திருக்கிறது.
இங்கே உறையும் இறைவன் பாகநந்தேஸ்வரர்.
நாங்கள் சென்ற பொழுது இறைவனுக்கு
தீபாரதனை நடந்துகொண்டிருந்தது.
கேரள் பாணியில் இருக்கும் கோவிலில்
கேரளத்து கொட்டுடன் தீபாராதனை
நடந்தது. அங்கிருந்து துபரே காட்டிற்குச்
சென்றோம்.
அருமையான இடம். பசுமையுடன் காவேரி நதிக்
கைகோர்த்து மிக ரம்மியமாக இருந்தது.
யானைகளின் பயிற்சி இடம் ஒன்று கரைக்கு அந்தப்
பக்கம் இருந்தது. யானைகள் அதிகம் பார்த்துவிட்டோம்,
ராஃப்டிங் போகலாம் என்று பிள்ளைகள் சொன்னார்கள்.
அம்ருதாவும் ஆமாம் போட்டது ஆச்சரியமாக இருந்தது!
ஹிக்கடுவவில் கோரல்ஸ் பார்க்கச் சென்றபொழுது
அம்ருதாவின் அழுகையால பாதியிலேயே வந்துவிட்டோம்.
அழுகாமல் பயணித்தது சிங்கப்பூர் நதியில் மட்டும்தான்.
கோதாவ்ரியில் பயணித்த பொழுதுகூட "போட் க்ளோஸ்டாதானே
இருக்கும்?" என்று ஆயிரம் முறை கேள்வி கேட்டாள்.
பயந்து கொண்டே டிக்கெட் வாங்கினோம். லைஃப்
ஜாக்கெட்டெல்லாம் போட்டு ரெடியானோம்.
நாங்கள் நால்வர் + பள்ளிச்சிறுமி இருவர்
எங்களுடன் பயணித்தனர். ஆளுக்கொரு
துடுப்புக் கொடுத்து அதை எப்படி உபயோகிப்பது
என கைடு சொல்லிக்கொடுத்தார்.
அம்ருதா சிறியவள் என்பதால் நடுவில்
உட்காரவைத்து நாங்கள் ஓரத்தில்
உட்கார்ந்தோம்.
ஆரம்பமானது பயணம்.
ஏலேலோ ஐலசா! என துடுப்பு போட்டுக்கொண்டே
போனோம். அந்த பள்ளி சிறுமிகள் இருவரும்
கன்னடத்தில் பேசிக்கொண்டே வந்தார்கள்.
ஒரு இடத்தில் தண்ணீரின் நடுவில் மரக்கிளை
வர அதை கொஞ்சம் பிடித்துக்கொள்ளுமாரு
அந்தப் பெண்களிடம் கைடு சொல்ல, அவர்களும்
பிடித்துக்கொண்டு தொங்கினார்கள். அவர்களை
அப்படியே விட்டுவிட்டு கொஞ்சம் தள்ளி வந்துவிட்டார்
கைடு!!
நாங்கள் டாடா காட்டினோம். வேகமாக துடுப்பு
போட்டு ஒரு ரவுண்ட் அடித்தார் பாருங்கள்.
திரும்பச் சென்று அந்தப் பிள்ளைகளையும்
ஏற்றிக்கொண்டு அவர்களுக்காக மீண்டும் 4
தடவை வட்டம் அடித்தார்.
கரைக்குத் திரும்ப துவங்கினோம். இந்த முறை
தானும் துடுப்பு போட விரும்புவதாகச் சொல்லி
அம்ருதா கேட்க, அவளை என் அருகில் இறுத்தி
என் துடுப்பை அவளிடம்
கொடுத்தேன். முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்.
இந்தப் பயணம் மிகவும் பிடித்திருந்ததாக
பிள்ளைகள் சொன்னார்கள்.
அங்கிருந்து சென்றது ஒரு அருமையான
இடத்திற்கு. அங்கே இருக்கும் கடவுளின்
பெயர் சொன்னதில் பிள்ளைகள் "அவரா!
பாத்து ரொம்ப நாளாச்சே!" என்று துள்ளிக்
குதித்தனர்.
போன பிறகு அம்ருதா அடித்த கமெண்தான்
ஹைலைட்டே!
எந்த இடம்?
அடுத்த பதிவுல தெரிஞ்சுக்கலாம்.
**********************************
நாங்கள் எடுத்த படங்களை ப்ளாக்கர் ஏனோ
ஏற்றுக்கொள்ளவில்லை! :(
இங்கே இருக்கும் படங்கள் நெட்டில் சுட்டாது.
10 comments:
மீ த ஃபர்ஷ்ட்டா??
//இலங்கையின் நுவரேலியா
//
அங்கதான் நானும் தங்ஸும் ஹனிமூன் போனோம். அருமையான இடம். ஹ்ஹீம் அது ஒரு பொற்காலம் :)))
யூ த பர்ஸ்டு அப்துல்லா.
எங்களுக்கும் அது ஒரு பொற்காலம் தான்.
:)))))))))))))))))
நன்றாக உள்ளது...
நான் சென்றபோது எடுத்த படங்கள் இங்கே... http://www.saravanakumaran.com/2008/07/blog-post_3227.html
படங்களெல்லாம் கொஞ்சம் கிளாஸா இருக்கும் போதே மைல்டா டவுட் வந்தது. மற்ற படி அனுபவங்கள் பொறாமையை தூண்டுகின்றன..
இதோ வந்து பாக்கறேன் சரவணகுமார்
படங்களெல்லாம் கொஞ்சம் கிளாஸா இருக்கும் போதே மைல்டா டவுட் வந்தது.//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
மற்ற படி அனுபவங்கள் பொறாமையை தூண்டுகின்றன..//
அதுக்குத்தானே இப்படிப் பதிவு எழுதறது.
:)))))))))
மிக அருமையான பயணக்கட்டுரை....
மிக்க நன்றி மதுரையம்பதி.
படங்களைப் பாராட்டலாம்னு பார்த்தால் கடைசில இப்படி சொல்லிட்டீங்களே:)!
Post a Comment