சஸ்பென்ஸ் தாளாமல் எல்லோரும் நகத்தைக் கடிச்சிகிட்டு
உக்காந்திருக்கீங்களா?
முந்தைய பதிவுக்கு இங்கே:
மருத்துவர் பல விதம் ஒவ்வொருவரும் ஒரு விதம்.
பெண்களின் ப்ரச்சனைக்கு மகப்பேறு மருத்துவர்தான்
வைத்தியம் பார்க்க முடியும். வெறும் ப்ரசவம்
மட்டும் பார்ப்பது மகப்பேறு மருத்துவரின் வேலை இல்லை.
ஆனாலும் எனக்கு இந்த ப்ரஃபொஷனல்ஸ் மேல்
கொஞ்சம் வருத்தம் தான். ஏதோ அவர்களால் மட்டுமே
இந்தப் படிப்பை படிக்க முடிந்து என்ற நினைப்பில் சற்று
கர்வமாகவே இருப்பார்கள். அதிலும் மருத்துவர்கள்
கேக்கவே வேண்டாம். பொறுமையாக பேசி, நிலையை
புரியவைப்பது போன்றது நான் மிக மதிக்கும்
டாக்டர். வந்தனா பன்சால் போன்றோருக்குத்தான்
சாத்தியம். (பேஷண்டுகளிடம் பேசினால் தனது
நிலை குறைந்துவிடும் என்று நினைப்பார்கள்.
உயிர் காக்கும் மருத்துவரை தெய்வமாக
நினைக்கிறோம். தெய்வம் கூட மனித உருவி்ல்
வரும் என்பார்கள். ஆனால் மருத்துவர்கள்???!
ம்ம்ம்)
என்ன பிரச்சனை என்று?" கேட்ட மருத்துவருக்கு
நான் என் நிலையை எடுத்துச் சொன்னேன்.
அமைதியாக கேட்டுக்கொண்டார்.
அதே அமைதியுடன் பேசினார்.
"பல பெண்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்கிறது
என்பதே தெரியவில்லை. I am talking to so many ladies
and trying create an awarenes about this.
என்ன தான் நடக்கிறது இந்த சமயத்தில்? என்பதை
நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.
மாதவிடாய்க்கு முன்பு உடலில் ப்ரோஷ்ட்ரோஜோன்
சுரக்கும். அது சிலருக்கு ஒவ்வாத்தன்மையை
கொடுக்கிறது. மூளைக்கு இடப்படும் கட்டளை
மாறி அதன் விளைவுகள் தான் நீ பட்டுக்கொண்டிருக்கும்
அடையாள உபாதைகள். எப்படி காற்றில் மாசு இருந்தாலும்
சிலருக்கு மட்டுமே ஒவ்வாத்தனமை ஏற்பட்டு
ஜலதோஷம், சளி தும்மல் வருகிறதோ அது போல்
இது" என்றார்
நடிக்கிறாய் என்று கூறிய மருத்துவரைப் பார்த்திருந்த
எனக்கு என் பிரச்சினையை உடனே நூல் பிடித்துவிட்ட
இந்த மருத்துவர் மேல் நம்பிக்கை மெல்ல வந்தது.
அவர் மேலும் சொன்னது இது," நான் U.Kவில்
P.M.Sற்கு என்று இருக்கும் ஷ்பெஷல் கீளினிக்கில்
பயிற்சி பெற்றிருக்கிறேன். பல பேஷண்டுகளைப்
பார்த்திருக்கிறேன். அந்த நேரத்தில் மனநிலை
பாதிக்கப்பட்டவர்கள் போல் கூட நடந்து கொள்பவர்கள்
இருக்கிறார்கள். நான் அதிகமாக கூறுவதாக நினைக்காமல்
இருந்தால் சொல்கிறேன். இந்த நேரத்தில் பல
பெண்கள் தான் அனாதை, தனக்கு யாருமே இல்லை
போன்ற எண்ணங்கள் தலை தூக்கும் என்று கூறினார்.
பக்கத்திலிருந்த அயித்தானும்," படும் அவஸ்தைகளை
காண முடியவில்லை" நடிக்கிறாள் என்று அந்த
டாக்டர் சொன்னார்" என்று சொல்ல
சிரித்துக்கொண்டே அவர்," அந்த சமயத்தில் தற்கொலைக்கு
கூட முயற்சிப்பார்கள்!!!" மேலை நாடுகளில் அதிகம்
காணப்படும் இந்த நிலை இன்று நம் நாட்டிலும்
வந்து விட்டது என்றார்.
கருப்பை சரியாக இருக்கிறதா என்று ஸ்கேன்
செய்து பார்த்தார். ஹார்மோன்கள் சரியாக
இருக்கிறதா என்று ரத்த பரிசோதனை செய்தார்.
எல்லாம் நார்மலாக இருந்தது.
நீ எடுத்துக்கொண்டிருக்கும் மருந்துகள்
விட்டமின் மாத்திரைகள் தான். அவற்றால்
பெரும் மாற்றம் ஏதும் வராது. இதற்கென
சில ட்ரீட்மெண்டுகள் இருக்கிறது.
(சில கேஸ்களில் மனதை அமைதிப்படுத்த
மனநோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மாத்திரை
தரும் அளவுக்கு இருக்குமாம். மனநோயாக
சிலர் நினைத்து அந்த மருந்து எடுத்துக்கொள்ள
மாட்டார்கள் என்று வருத்தப்பட்டார்.)
மாதவிடாயின் சுழற்சியை தற்காலிகமாக
நிறுத்தி(மாத்திரையின் உதவியால்)
செய்யக்கூடிய வகை மருத்துவத்தை
எனக்கு ஆரம்பிப்பதாகச் சொல்லி மருந்து
கொடுத்தார். 3 மாதங்கள் தொடர்ச்சியாக
அந்த மருந்து எடுத்துக்கொண்டு பிறகு
வந்து பார்க்குமாறு சொன்னார்.
நிறைந்த கண்களுடன் நன்றி கூறினேன்.
"நியூட்ரிஷியனை" சந்திப்பது மிக
அவசியம். இங்கேயே இருக்கிறார்.
அவரையும் பார்த்துவிட்டு செல்லுங்கள்"
என்றார்.
இதுக்கும் சாப்பாட்டிற்கு என்ன சம்பந்தம்?
வெறும் மருந்து மட்டும் போதாதாமா?
அடுத்த பதிவுல சொல்லட்டுமா????
:)))))))))))))))
20 comments:
\\சஸ்பென்ஸ் தாளாமல் எல்லோரும் நகத்தைக் கடிச்சிகிட்டு
உக்காந்திருக்கீங்களா?\\
நகம் வெட்டும் வேலை மிச்சம் ...
\\ஏதோ அவர்களால் மட்டுமே
இந்தப் படிப்பை படிக்க முடிந்து என்ற நினைப்பில் சற்று
கர்வமாகவே இருப்பார்கள்\\
:(
நல்ல விடயங்கள் நடப்பதே அரிது
அதை பகிர்தல் அரிதோ அரிது
அழகாக பகிர்தல் அரிதல்ல தாங்கள் பதிவுகளை கண்டால் உணரமுடியும்.
வாழ்த்துக்களும், நன்றியும் சகோதரி ...
நகம் வெட்டும் வேலை மிச்சம் ...//
:)))))))))))
வாழ்த்திற்கும், நன்றிக்கு நன்றி ஜமால்
கோர்வையாகவும் புரியும் விதமாகவும் சொல்லியிருக்கீங்க.....
இருங்க இங்க ஒரு மண்டூகம் இருக்கு படிக்க சொல்றேன்.ஏதாச்சும் வெளங்குதான்னு பாப்பம்.
இது போன்ற விஷயங்களைப் பகிர்ந்ததற்கு நன்றி தென்றல். அடுத்த பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
கும்க்கி என்னதிது!!!!
கோர்வையா இருக்கீங்கறீக்க. யாருக்கோ விளங்குதான்னு பாப்போம்கறீங்க!! பிரியலையே!!!
அவ்வ்வ்வ்வ்வ்
இது போன்ற விஷயங்களைப் பகிர்ந்தத//
ஆமாங்க இப்படி எல்லாம் இருக்குன்னு பலருக்குத் தெரியாம போகுது. ரங்குகளும் பிசியா இரு்ப்பாங்க. தங்கமணிகளுக்கு என்ன நடக்குத்துன்னு புரியாம பிரச்சனைதான் வரும்.
அதனாலத்தான் இந்தப் பதிவு.
அடுத்த பதிவு வரும்
வீட்டுல இருக்கற பெண்கள்னா எல்லோருக்கும் இளக்காரம்தான். :(
இந்த நோய்க்கு கூட இளக்காரமா போச்சு. அதனாலத்தான் வீட்டுல இருக்கற பெண்களுக்கு( ஒரே மாதிரியான அவகளின் வாழ்க்கை முறையால்) இதன் பாதிப்பு அதிகமா இருக்காம்.
ஹி..ஹி அக்கா எங்க எஜமானியம்மாவ சொன்னேன்.
(பின்னூட்டம் போட்டதெல்லாம் காமிக்கமாட்டமில்ல)
எஜமானியம்மாவை மண்டூகம்னு சொ்ல்லியிருக்கீங்க. அதுவும் ஹஸ்பண்டாலஜி பேராசிரியர் கிட்ட.
தெகிரியம் தான்.
(கும்க்கி வீட்டு போன் நம்பரைகண்டுபிடிக்க ரங்கமணிகளின் சங்கத்திற்கு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது)
:)))))))
ஆனாலும் எனக்கு இந்த ப்ரஃபொஷனல்ஸ் மேல்
கொஞ்சம் வருத்தம் தான். ஏதோ அவர்களால் மட்டுமே
இந்தப் படிப்பை படிக்க முடிந்து என்ற நினைப்பில் சற்று
கர்வமாகவே இருப்பார்கள். அதிலும் மருத்துவர்கள்
கேக்கவே வேண்டாம். ///
இப்பிடி
சொல்லி சொல்லி
மருத்துவர்களை
தள்ளி
வச்சுராதீங்கம்மா!
தேவா...
சிரித்துக்கொண்டே அவர்," அந்த சமயத்தில் தற்கொலைக்கு
கூட முயற்சிப்பார்கள்!!!" மேலை நாடுகளில் அதிகம்
காணப்படும் இந்த நிலை இன்று நம் நாட்டிலும்
வந்து விட்டது என்றார்.///
மேல்நாட்டு கலாச்சாரம்
வரும்போது
இது வராதா?
தேவா....
இப்பிடி
சொல்லி சொல்லி
மருத்துவர்களை
தள்ளி
வச்சுராதீங்கம்மா!//
தள்ளி வைக்கத் தேவையில்லை.
அவங்களே அவங்களைச் சுத்தி ஒரு வட்டம் போட்டுகிட்டு வாழ்றாங்க. யாரை வேணும்னா கேட்டு பாருங்க.
அன்பின் புதுகைத் தென்றல்
நலமா ? உடல் நலம் சரியில்லையா ? கொஞ்ச நாளா நான் இந்தப்பக்கம் வரலே !
பல மருத்துவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் - சில மருத்துவர்கள் தான் வந்தனா மாதிரி இருக்கிறார்கள். நோயாளியின் மனநிலை உடல்நிலை இவற்றை அறிந்து அவரின் மனம் மகிழும் படி மருத்துவம் செய்து ஒரு மதிப்பினைப் பெறும் மருத்துவர்கள் எண்னீக்கை மிகவும் குறைவே ! நாம் அடிக்கடி பல ஊர்களுக்குச் செல்வதினால் பல புதிய மருத்துவர்களைச் சந்திக்கும் போது அவர்கள் நம்மைச் சோதித்து விடுகிறார்கள். என்ன செய்வது.
எல்லாப்பதிவுகளையும் படித்து விட்டு மறு மொழி போடுகிறேன்
வாங்க சீனா சார்,
நல்லாத்தான் இருக்கேன் ஆனா நல்லா இல்லைங்கற மாதிரி ஒரு நிலை. :)
கவலைப்படற மாதிரி ஏதும் இல்லை. வளமைப்போல் வலையுலகைல் வலம் வருவேன்.
நீங்க மருத்துவர்களைப்பற்றி சொல்லியிருக்கும் கருத்துக்கு மிக்க நன்றி
பகிர்தலுக்கு ரொம்ப நன்றி அக்கா..!
/ புதுகைத் தென்றல் said...
எஜமானியம்மாவை மண்டூகம்னு சொ்ல்லியிருக்கீங்க. அதுவும் ஹஸ்பண்டாலஜி பேராசிரியர் கிட்ட.
தெகிரியம் தான்./
ஆஹா...ஆரம்பிச்சிட்டாங்கையா....:)
அறிந்த விஷயங்களை எல்லோருக்கும் அறியத் தந்திருக்கிறீர்கள், எப்போதும் போலவே. நன்றி தென்றல். அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறோம்.
Post a Comment