எல்லோரும் நலமா? புத்தாண்டு கொண்டாட்டமெல்லாம் முடிஞ்சிருச்சா?
குடகுமலைக்கு ஒரு விசிட் அடிச்சேன்.
அந்த அனுபவங்கள்தான் இந்தப் பதிவு.
பெங்களூருக்கு போய் சேர்ந்த பொழுது காலை 10.30.
அங்கிருந்து அயித்தானின் நண்பர் வீட்டிற்குச் சென்று
ஃப்ரெஷ்ஷாகி, சாப்பிட்டுவிட்டு தம்பி ஜீவ்ஸ்
வீட்டிற்கு சென்றோம். சாப்பாட்டிற்கு வரவேண்டுமென்று
ஜீவ்ஸ் தம்பி சொல்லிகீட்டு இருந்தாக. ஆனா
அயித்தான் அவங்க ஃப்ரெண்ட் வீட்டுக்கு வர்றதா
சொல்லிட்டாங்க அதனால ஃப்ளையிங் விசிட் மாதிரி
தான் இந்தப் பதிவர் சந்திப்பு நடந்துச்சு.
ஜீவ்ஸின் மனைவியோடு பேசினேன்.
மிக அன்போடு உபசரித்தார்கள்.
பிள்ளைகள் ஜீவ்ஸின் மகளோடு விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
தம்பி ஜீவ்ஸ் கேமிராக் கலைஞர் ஆச்சே!!
புகைப்படங்களாக எடுத்து தள்ளிவிட்டார்.
பரஸ்பரம் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.
குடகு மலைக்கு(அதாங்க கூர்க்) செல்ல
பெங்களூரிலிருந்து பயண நேரம் அதிகம்
என்பதால் 30 நிமிடத்தில் அங்கிருந்து புறப்பட்டு
விட்டோம். ஜீவ்ஸ் தம்பியின் உதவிகளுக்கு
மனமார்ந்த நன்றிகள்.(ஜீவ்ஸ் இதற்காக என்னை
போன் போட்டு திட்டுவார் :) )
குடகுமலையில் என்னென்ன பார்க்கவேண்டும்
என்ற விவரங்களை ஜீவ்ஸ் சொன்னார்.
சில புகைப்படங்களையும் காட்டினார்.
எல்லாவற்றையும் குறித்துக்கொண்டு
கிளம்பினேன்.
தோழி ராமலக்ஷ்மி ஊரில் இல்லாததால்
அவரை சந்திக்க இயலவில்லை. :(
போனில் பேசினேன். மிக நட்புடன்
பேசியது மகிழ்ச்சியாக இருந்தது.
அங்கிருந்து புறப்பட்டு மைசூரில்
இருக்கும் ஸ்ரீரங்கபட்டணா சென்றோம்.
நிமிஷாம்பா அம்மன் கோவிலுக்குச்
சென்றோம்.
அடுத்து ரங்கநாதர் சாமி கோவில்.
திப்பு சுல்தானின் கோட்டை இது.
("ஒருவன் ஒருவன் முதலாளி!!!"
அப்படின்னு முத்து படத்தில் ரஜினி
பாடிக்கிட்டு வருவாரே அது இங்கதான்)
அந்தக் கோட்டைக்குள் சென்றால் ரங்கநாதர் பள்ளிக்
கொண்டிருக்கும் கோவில். காவேரி நதிக்கரையில்
அமைந்திருக்கும் பஞ்சரங்க கோவில்களில் இதுவும்
ஒன்று. உள்ளே சென்று இறைவனை தரிசித்தோம்.
ஆதிசேஷன் மேல் பெருமாள் படுத்திருக்கும் கோலம்,
காலடியில் லக்ஷ்மி தேவி அமர்ந்திருக்கிறாள்.
.
அங்கிருந்து கூர்கிற்கு புறப்பட்டோம்.
சனிக்கிழமை, விடுமுறை காலம் ஆதலால் கிருஷ்ணராஜசாகர்
அணைக்கட்டைப்பார்க்க பெருமளவில்
மக்கள் கூடியிருந்ததால் சாலையில்
ட்ராபிக் ஜாம் ஆகிவிட்டிருந்தது.
(அன்று அங்கே 4000 கார்கள் நிறுத்தப்பட்டிருந்ததாக
மற்றொரு டிரைவர் சொன்னார்)
நாங்கள் மடிக்கேரி சென்றடைந்தபொழுது
இரவு 10மணி. குஷால் நகர் வரை
சாலை மிக அழகாக இருந்தது.
வெகு நாட்களுக்கு பிறகு (அதான்
இலங்கையை விட்டு வந்தாச்சே :( )
கண்ணுக்கு குளிர்ச்சியாக பசுமை
இடங்களுக்கு நடுவில் பயணித்தது
பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது
ஜீவ்ஸ் பலமுறை என்னிடம் கூறியது இதுதான்.
"எதைப்பார்க்க மறந்தாலும் 5.45 மணியளவில்
ராஜாஸ்சீட் எனும் இடத்தைப் பார்க்க மறக்காதீர்கள்!
மேகம் அழகாக இருக்கும். பனியுடன் சேர்ந்து
திட்டு திட்டாக இருக்கும் என்றார்". அவர் காட்டியிருந்த
புகைபப்டத்தை பார்த்து ஆவலுடன் நானும் அடுத்த
நாள் அதிகாலைக்காக காத்திருந்தேன்.
சாப்பிட்டுவிட்டு படுக்க 11 மணி ஆகியிருந்தாலும்
அலாரம் வைத்து எழுந்திருந்து அந்தக் குளிரில்
பிள்ளைகளுடன் நானும் அயித்தானும்
ராஜாஸ்சீட் எனும் இடத்திற்கு சென்றோம்.
சில்.......லென்ற காற்று வீசிக்கொண்டிருந்தது.
அந்த குளிரிலும் அந்த பூங்காவில் சிலர்
நடந்துக்கொண்டிருந்தனர். ஒரு முறை
வண்டியைவிட்டு இறங்கி குளிருக்கு
பயந்து திரும்ப வண்டிக்குள் போய் ஹீட்டர்
போட்டு அமர்ந்தோம்.
ஜீவ்ஸ் காட்டியிருந்த புகைப்படக்காட்சியை
தவறவிட்டுவிடக்கூடாது என்பதற்காக
நான் இறங்கி வாக்கிங் போகிறேன் என்று
நடந்து கொண்டிருந்தேன்.
அந்தக் காட்சி இப்பவருமா?!! எப்பவருமோ!!ன்னு
காத்துகிடக்க குட் மார்னிங் சொல்ல வந்தது
சூரியன் தான். :(
சூரியன் வர ஆரம்பிச்சிட்டா பனி எங்க? அந்த மேக
மூட்டம் எங்க வரப்போகுதுன்னு யோசனையோட
நடந்துக்கிட்டு இருந்தேன். பசங்களும், அயித்தானும்
குளிர் தாங்கலை வா போகலாம்னா மனசு கேக்கல!
6.30 மணி வரை பார்த்துட்டு கிளம்பிட்டோம்.
நேரேபோய் சூடா காபி குடிச்சிட்டு படுத்ததுதான்
தெரியும். கண்முழிச்சு பார்த்தா மணி 8.
அதற்கப்புரம் குளிச்சு ரெடியாகி, டிபன்
சாப்பிட்டு கிளம்பினோம்.
எங்க போனோம்?
அடுத்த பதிவுல சொல்றேன்.
*************************************
இது என்னுடைய 301ஆவது பதிவு.
28 comments:
அடுத்த பகுதி இன்றே வருமா? ;)
301-க்கு வாழ்த்துக்கள்!
திரும்பி வரும் வழியில் என் வீட்டுக்கு வர இயலாது போய் விட்டதே. பயணக் களைப்பு, உடல் நலக் குறைவு என அறிந்தேன். இப்போது சரியாகி விட்டதை உற்சாகமான இந்தப் பதிவே சொல்கிறதே:)! தொடரட்டும் பயணக் கட்டுரை.
தலைவர் எண்ட்ரீயாகற இடம் + கோவில் எல்லாம் போய் பார்த்து வந்தாச்சா!
சூப்பரான டிரிப் போல தெரியுது!
ஜீவ்ஸ் அண்ணாச்சி எப்படி இருக்காரு ?
:)
அண்ணி விதவிதமா சமைச்சு,பதிவுல மட்டும் சமைக்கிற உங்களை அசத்தியிருப்பாங்க! பட் நீங்க மிஸ் பண்ணிட்டீங்களே பாஸ் :(
ஆஹா வாங்க தூயா,
இன்னமும் பயணக்களைப்புத் தீரவில்லை. உடல்நிலை கொஞ்சம் சரியில்லை. அதனால் நாளை கண்டிபபாய் அடுத்தபகுதி வரும்.
வாழ்த்திற்கு நன்றி ராமலக்ஷ்மி,
எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதுடன் என் கணவரின் அண்ணனுக்கும் பெங்களூரில் இருக்கிறார்)உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள்.
அதன் பிறகு அம்மாவீட்டிற்கு சென்றும் பயணங்கள் தொடர்ந்ததால் இன்னமும் களைப்புபோகவில்லை.
எல்லோரையும் சந்தித்து வெகு நாளாகிவிட்டதே என்று இன்று வந்துவிட்டேன்.
:)
301 க்கு வாழ்த்துகள்
அக்கா உடல் நிலை இப்ப எப்படி இருக்கு???
ஊரில் நீங்க வந்த போது நானும் தங்கமணியும் இல்லாமல் போன வருத்தம் எனக்கு இன்னும் தீரவில்லை. :(
\\"குடகு மலைகாற்றும்.. தென்றலும்"\\
குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேட்குதா ...
வாங்க புதுகை தென்றல் நலமா .
குழந்தைகள் நலமா...
அக்கா உடல் நிலை இப்ப எப்படி இருக்கு???
ஊரில் நீங்க வந்த போது நானும் தங்கமணியும் இல்லாமல் போன வருத்தம் எனக்கு இன்னும் தீரவில்லை. //
உடம்பு நல்லா இருக்கு.
எனக்கும் வருத்தம்தான். நம்ம தானைத்தலைவருக்கு கூட போன் போட்டேன் எடுக்கவேயில்லை.:(
ஆஹா புது வருஷம் பிறந்த பிறகாவது மாறுங்க தம்பி நிஜமா நல்லவன்.
(தங்கமணிதான் ஊருல இல்லையே இப்பவும் ஸ்மைலி மட்டும் ஏன்?)
:)
வாங்க ஜமால்,
நானும் என் குடும்பத்தினரும் மிக்க நலம்.
ஆமாம் ஆயில்யன்,
சூப்பர் ட்ரிப்.
ஜீவ்ஸ் நல்லா இருக்காரு.
அருணாவின் சமயலை சாப்பிட முடியாமல் போனதில் எனக்கும் வருத்தம்தான்.
:(
பதிவுல மட்டும் சமைக்கிற உங்களை //
பாஸ் இன்னைக்கு உங்களுக்கு பிறந்தநாள் என்பதால் பொழைச்சு போகட்டும்னு விடறேன்.
:)))))))
ஜீவ்ஸ் அண்ணாச்சியின் கைப்பக்குவத்தை ஒரு கை பார்த்திருக்கலாமே?
301 கண்ட புதுகைக்கு வாழ்த்துக்கள்
நேரம் பற்றி குறிப்பிடும்போது காலை/மாலை போட்டால் சிறப்பாக இருக்கும்.
அடுத்த பதிவுக்கு வெயிட்டிங் ;)
ஜீவ்ஸ் அண்ணாச்சியின் கைப்பக்குவத்தை கை நழுவ விட்டுட்டீங்களே?
301 கண்ட புதுகைக்கு வாழ்த்துக்கள் ;)
பதிவில் நேரம் குறிப்பிடும் போது காலை/மாலை போட்டால் நன்று
அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்
301 மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்...
:-))
ஜீவ்ஸ் அண்ணாச்சியின் கைப்பக்குவத்தை கை நழுவ விட்டுட்டீங்களே?//
ஆஹா....
301 கண்ட புதுகைக்கு வாழ்த்துக்கள் ;)
//
நன்றி பிரபா
வாங்க விக்கி,
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
வாங்க கும்க்கி
/ புதுகைத் தென்றல் said...
ஆஹா புது வருஷம் பிறந்த பிறகாவது மாறுங்க தம்பி நிஜமா நல்லவன்.
(தங்கமணிதான் ஊருல இல்லையே இப்பவும் ஸ்மைலி மட்டும் ஏன்?)
:)/
:))
நல்ல ஜாலியா, நண்பர்கள், குடும்பத்தோடு பிக்னிக்/டூர் போவது எவ்வளவு இனிமையான அனுபவம்.. ஏக்கத்தை கிளப்புகிறீர்கள். ரொம்ப நாளாச்சு, நாமும் கிளம்பிட வேண்டியதுதான்.!
வாங்க தாமிரா,
கொஞ்சம் ரிலாக்ஸாகி பணிக்குத் திரும்பும் பொழுது மேலும் ஊக்கத்துடன் வேலை செய்ய முடியும் என்பதால் முடிந்தபொழுதெல்லாம் புறப்பட்டுவிடுவோம்.
301க்கு வாழ்த்துக்கள் அக்கா..
நீங்க பெங்களூர் வந்தது தெரியாம போச்சு, மீட் பண்ணியிருக்கலாம்.
ஆஹா நீங்க அங்க இருப்பது
மறந்திட்டேன் மதுரையம்பதி.
அதுக்கென்ன நீங்க ஹைதை வரும்பொழுது சந்திச்சிடலாம்.
வாழ்த்துக்கள்... :)
நன்றி முத்துலெட்சுமி
யக்கோவ்..
நீங்க வந்து உடனே கிளம்பிட்டீங்க. திட்டு வாங்க்குனது நானாக்கும். வர்ரவங்களை சாப்பாட்டுக்கு வரசொல்லாம என்ன இது அப்படி இப்படின்னு. நீங்க கிளம்பினப்பறம் ஜெயஸ்ரீ கொஞ்சநேரம் டல்லா இருந்தா.
மத்தபடி கானா அண்ணன் பேங்களூர் வந்தா "நானே" சமைச்சு சாப்பாடு போட்டுடறேன். கிண்டலார்களுக்கு அதுவே சரியான தண்டனையாக இருக்கும்.
ஆயில் இந்தியா வந்தா நம்மூட்டு விசிட் வச்சிருக்காருன்னு தெரியும். ஆனா எப்பன்னு தான் இன்னும் சொல்லவே இல்லை
திட்டு வாங்க்குனது நானாக்கும். வர்ரவங்களை சாப்பாட்டுக்கு வரசொல்லாம என்ன இது அப்படி இப்படின்னு.//
நீங்க கூப்பிட்டீங்க. ஸ்டேஷன்லேர்ந்து நேரா வீட்டுக்கு வரணும்னு சொன்னீங்க. அயித்தான் அவங்க ப்ரெண்ட் வீட்டுகு வர்றதா முன்னாடியே சொல்லிட்டாரு.
அருணாகிட்ட நான் பேசறேன். பசங்க கூட ஜெயஸ்ரீ பாப்பாவைப்பத்தி பேசிகிட்டேதான் வந்தாங்க.
நேரமின்மைதான் காரணம்
Post a Comment