முதலில் பார்த்தது பழ்ம்பெரும் வாய்ந்த
பிலோமினா சர்ச். பிள்ளைகள் மிகவும்
விரும்பினர்.
அதிலும் சுரங்கப்பாதை போன்ற
அமைப்பில் வெளியே வரும் பாதை இருவருக்கும்
மிகவும் பிடித்திருந்தது. தனியாக ஒருமுறை
அண்ணனும் தங்கையும் மட்டும் சென்று
ப்ரார்த்தித்துவிட்டு அந்தப் பாதை வழியாக
வெளியே வந்தனர்.
அதன்பிறகு அம்ருதாவின் பிறந்த நாள்
வரவிறுப்பதால் மைசூர் சில்க்கில்
பாவாடை வாங்கச் சொன்னார் அயித்தான்.
வெள்ளையில் மெரூன் பார்டர் போட்ட
பாவாடையை செல்க்ட் செய்து கொண்டாள்
அம்ருதா. அண்ணனுக்கு அங்கே ஏதும்
சரியாக அமையவில்லை. எனவே
தனக்கு பிறகு வாங்கித் தரும்படி சொல்லிவிட்டார்
ஆஷிஷ் அண்ணன்.
அதற்கடுத்து சாமுண்டிகோவில் சென்றோம்,
வரும் வழியில் நந்திதேவரைப் பார்த்துவிட்டு
லலிதமஹால் அரண்மணைக்கு சென்றோம்.
நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறது இந்த
அரண்மனை. (குரு சிஷ்யன், ஒரு ஊரில்
ஒரு ராஜகுமாரி... என் பெரிய லிஸ்ட் போடலாம்)
அங்கே புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
(அங்கே சாப்பிட்டால் நம் சொத்தை எழுதிக்க்
கொடுக்க நேரும் என்பதால்(!!) சாப்பிடவில்லை.)
மைசூர் அரண்மனைக்கு சென்று உள்ளே எல்லாம்
பார்த்துவிட்டு பாலமுரி நீர்வீழ்ச்சி பார்க்கச் சென்றோம்.
நீர்வீழ்ச்சி என்று சொன்னாலும் அந்த இடத்தில் நாம்
நிற்கலாம் என்பது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
மனதார காலார நடந்தோம். தண்ணீரில்
வேகம் அதிகம் இருந்ததால் கால்கள்
மிக சுத்தமானது. ஆஷிஷ்,"இதுதான் நேச்சுரல்
பெடிக்யூர்" என்று கமெண்ட் அடித்தான்.
அங்கிருந்து கிளம்ப பிள்ளைகளுக்கு
மனமே இல்லை.
இங்கேயே இருந்தால் எப்படி? இதற்கடுத்து
போகப்போர இடம் ஒரு அணைக்கட்டு.
அங்கேயும் ஃபொண்டைன்ஸ் இருக்கு"
என்றதும் தான் வந்தார்கள்.
கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கட்டிற்குச்
சென்றோம். பிருந்தாவன் கார்டன்ஸ்
அழகை பார்த்து வியந்தார்கள்.
ஃபொண்டைன்ஸ், பசுமை மிகு
தோட்டம் என அழகாக இருந்தது.
அணைக்கட்டில் அனுமதி மறுக்கப்பட்டது தெரியாமல்
அங்கே வரைச் சென்று மேலே ஏறி பார்க்கமுடியாமல்
திரும ம்யூசிகல் ஃபொண்டைன் ஷோ இருக்கும்
இடம் வரை நடந்தோம். "பெரிய வாக்கிங்
செஞ்சிருக்கோம்" என்றபடி பிள்ளைகள்
வந்தார்கள். அங்கே என்ன ஷோ என்பதைச்
பிள்ளைகளுக்குச் சொல்லவில்லை. :)
ஆரம்பித்ததும் "வாவ்!!" என இருவரும்
கத்திவிட்டார்கள். அதன்பிறகு மிக மிக
ரசித்தனர்.
"ரியலி சூப்பர் நாநா," என்று மகிழ்ந்தனர்.
6.30 ஷோ முடித்து நாங்கள் வெளியே
வந்துவிட்டோம். 7.25 ஷோக்கு போன
கூட்டத்தை பார்த்து,"நல்லவேளை!
தப்பித்தோம். இல்லாவிட்டால் நின்று
பார்க்கக்கூட இடம் இருந்திருக்காது என்று"
நினைத்துக்கொண்டோம்.
அங்கிருந்து பெங்களூ்ருக்கு பயணம்.
வழியில் எம்.டீ.ஆர் ரெஸ்டாரண்டில்
சாப்பிட்டோம். (அனில் கும்ப்ளே
இங்கே அடிக்கடி வருவார் என்று
டிரைவர் மேலதிக தகவல் தந்தார்).
பெங்களூரில் அயித்தானின் அண்ணன்
வீட்டிற்குச் சென்ற பொழுது இரவு மணி
11.
அடுத்தநாள் இரவு ட்ரையினில் திருச்சிக்கு
கிளம்பி, அங்கிருந்து புதுகைப் பயணம்.
புதுகை போகிறேன் என்றதும் ஆயில்யன்
சில இடங்களுக்குச் சென்று புகைப்படம்
போட வேண்டுமென்று அன்பு கட்டளை
இட்டு இருந்தார்.
"தம்பியண்ணன் + பாஸ்" கேட்டதற்கப்புறம்
இல்லையென்று சொல்ல முடியுமா?
அவர் கேட்ட இடம் + கேட்காத சில
இடங்களின் புகைப்படங்களுடன் அடுத்த
பதிவில் சந்திக்கிறேன்
10 comments:
ஜூ பார்க்காட்டாலும் பரவாயில்லை. அதற்குப் பக்கத்திலே ஒரு அருமையான பூங்கா உண்டே. போட்டிங்கும் உண்டு. மிஸ் பண்ணிட்டீங்களா:(?
/அதன்பிறகு அம்ருதாவின் பிறந்த நாள்
வரவிறுப்பதால்/
ஹை...அப்படியா...நான் இப்பவே அட்வான்ஸா வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்....!
/"தம்பியண்ணன் + பாஸ்" கேட்டதற்கப்புறம்
இல்லையென்று சொல்ல முடியுமா?
அவர் கேட்ட இடம் + கேட்காத சில
இடங்களின் புகைப்படங்களுடன் அடுத்த
பதிவில் சந்திக்கிறேன்/
அடுத்த பதிவு எப்ப????எப்ப????எப்ப????? எங்க பாஸ் க்கு பிடிச்ச இடங்களை நான் இப்பவே பார்க்கணும்....:)
//வெள்ளையில் மெரூன் பார்டர் போட்ட
பாவாடையை செல்க்ட் செய்து கொண்டாள்
அம்ருதா//
சூப்பர் செலக்ஷன்!
மெரூன் எனக்கும் ரொம்ப புடிச்ச கலர்!
ஆக்சுவலி அதை லைக் பண்றவங்க ரொம்ப பொறுமை குணமும், மனம் நிறைந்த அன்பும் கொண்டிருப்பாங்கன்னு
யாரோ சொல்லி கேள்விப்பட்டிருக்கேன் :))))
//தம்பியண்ணன் + பாஸ்" கேட்டதற்கப்புறம்
இல்லையென்று சொல்ல முடியுமா?
அவர் கேட்ட இடம் + கேட்காத சில
இடங்களின் புகைப்படங்களுடன் அடுத்த
பதிவில் சந்திக்கிறேன்/
மீ த வெயிட்டிங்க் பாஸ் :))))
ஜூ நிறைய பாத்தாசு என்பதால் சாய்ஸில் விட்டோம். அதனால் பூங்காவும் கட்டாகிடுச்சு
ரொம்பவே அட்வான்சா வாழ்த்து சொன்ன மாமா மேல கோபமாம் அம்ருதாவுக்கு.
பாஸ் ஷ்பெஷல் பதிவு 2 பதிவுகு அப்பால வரும்.
ஆக்சுவலி அதை லைக் பண்றவங்க ரொம்ப பொறுமை குணமும், மனம் நிறைந்த அன்பும் கொண்டிருப்பாங்கன்னு
யாரோ சொல்லி கேள்விப்பட்டிருக்கேன் //
:)))))))))))))))))
மீ த வெயிட்டிங்க் பாஸ் :))))//
அந்தப்புகைப் படங்களை அயித்தான் இன்னமும் கணிணியில் ஏற்றவில்லை.
எப்படியும் நாளை ஏற்றிவிடுவார்.
அதற்கப்புறம் அந்தப் பதிவுகள் வரும் பாஸ்
Post a Comment