அலுவலகம் சென்றுவிடும் அப்பா இந்த நாளன்று
மட்டும் பர்மிஷன் போட்டு விட்டு டீவி முன்
அமர்ந்திருப்பார்.
அது புஷ்ய பகுள பஞ்சமி தினம். இந்த
தினத்தில் தான் திருவையாற்றில் தியாகராஜ
ஆராதனை நடக்கும். பஞ்ச ரத்ன கீர்த்தனைகள்
இசைப்பதை மனம் லயித்து கேட்பது அப்பாவின்
வழக்கம்.
“இதெல்லாம் பாக்கணும்! அனுபவிக்கணும்!
சும்மா சினிமா பாட்டு மட்டும் பார்க்க கூடாது”
என்று சொல்லி என்னையையும் பார்க்க
வைத்துவிடுவார்.
இலங்கையில் இருந்த பொழுது கூட இந்த
நாளில் எஸ்.எம்.எஸ் அடித்து ப்ரொக்ராம்
ஆரம்பமாகிவிட்டது என்று ஞாபகப்படுத்துவார்
அப்பா. இன்றும் காலையில் போன் செய்து
நேஷனல் டீடி சேனலில் வருது. பாரு!
என்றார். பார்த்துக்கொண்டிருக்கிறேன் அப்பா
என்றதும் பெருமையாக சந்தோஷமாக
“அதானே பார்த்தேன்! என் பெண் ஆச்சே!”
என்றார்.
பஞ்சரத்ன கீர்த்தனைகள் ஒவ்வொன்றும்
அருமையாக அனைத்து கலைஞர்களும்
ஒரே சுருதியில், லயத்தில் இணைந்து
இசைத்த பிறகு இறுதியில் தியாகய்யருக்கு
கற்பூராத்தி காட்டுவார்கள்.
புஷ்ய பகுளபஞ்சமி தியாகய்யரின் நினைவுநாள்.
(குரல் வளம் நன்றாகவே இருக்கு. எல்லோரும்
பாடினால் ரசிக்க ஆள் வேண்டாமா? அதனால்
ரசித்து மகிழலாம் என பாட்டு வகுப்புக்கு
போவதை நிறுத்திவிட்டேன். :) )
நான் சங்கீதம் கற்றுக் கொண்ட போது
சீனு சார் என் சங்கீத குரு. தனது
வீட்டில் தியாகய்யருக்காக திதி கொடுப்பார்.
அதன் பிறகு சாயந்திரம் பஞ்ச ரத்ன
கீர்த்தனை இசைக்கப்படும். அம்மாவும்
அவரது சிஷ்யை என்பதால் இருவரும்
செல்வோம்.
பஞ்ச ரத்னம்- ஐந்து ரத்னங்களின்.
தியாகய்யரின் எத்தனையோ பாடல்கள்
பிரசித்தி பெற்றாலும் இந்த 5 கீர்த்தனைகள்
பரமானந்தம். கடைசி பாட்டாகிய
எந்தரோ மஹானுபாவுலுவின் முதல்
வரி பலருக்கும் தெரிந்திருக்கும்.
எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி
வந்தனமுலு.
(எத்தனையோ மஹான்கள். அனைவருக்கும்
என் வணக்கங்கள் இது தான் அர்த்தம்)
பெரிய பொட்டுடன் குன்னக்குடி அவர்கள்
இல்லாமல் இந்த முறை ஆராதனை
நடந்தது. (நேரிடையாக் சொர்க்கத்தில்
தியாகய்யருக்கு ஆராதனை செய்திருக்கலாம்)
யார் இந்த தியாகராஜர்?
சங்கீத உலகில் 3 பிரம்மாக்களில் தியாக்ய்யரும் ஒருவர்.
தெலுகு ப்ராம்மண பிரிவில் முலகநாட்டு உபபிரிவைச்
சார்ந்தவர் தியாகய்யர். ஆந்திர மாநிலத்தின் விஜயநகர
சாம்ராஜ்யத்திற்கு உட்பட்ட பகுதியிலிருந்து வந்து
தஞ்சாவூர் மாவட்டதிலிருக்கு திருவாரூரில்
வாழ்ந்து வந்த காகர்ல ராமப்ரம்மம்- சீதம்மாவின்
மகனாக பிறந்தவர்.
தனது ஒவ்வொரு பாடலிலும் “தியாகராஜ”
என தனது பெயர் வரும்படி அமைத்திருப்பார்.
”துளசி தல முலச்சே”
“நீ தய ராதா?”
“நிதி சால சுகமா?” இந்த 3 பாடல்கள்
எனக்கு மிகவும் பிடிததது.
ஜகதானந்த காரக
|
கனகனருசிரா:
|
எந்தரோ மஹானுபாவுலு பாடல்:
|
பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் அனைத்தும்
இங்கேயும் இருக்கிறது.
பக்தி செய்வதில் பலவகை இருக்கிறது.
இசையால் பக்தி செய்வது அதில் ஒரு வகை.
ராமபக்திக்கு தியாகய்யர் மிகச்சிறந்த
உதாரணம். அதனால் தான் இறைவன்
அவருக்கு தரிசனம் தந்ததாக சொல்வார்கள்.
ராமனை மனதில் வைத்து சங்கீதம்
எனும் மலரால் துதித்திருக்கிறார்.
அந்த ராம பக்தனுக்கு மனமார்ந்த
அஞ்சலிகள்.
8 comments:
அத்தனை பேர் ஒன்றாக சேர்ந்து பாடுவது மற்றும் இசைக் கருவிகல் வாசிப்பதைக் காண்பதும், கேட்பதும் புது அனுபவம்தான்.
இன்று எந்தரோ மஹானுபாவலு நாங்களும் குடும்பத்துடன் பார்த்து ரசித்தோம்-பொதிகையில்
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை அடி பிறழாமல் கடைப்பிடிக்கும் நல்ல குணத்திற்கு பாராட்டுகள்.
தாயும் மகளுமாக கற்றது - கற்றதை நிஅனிவில் வைத்துக் கடைப்பிடிப்பது - நல்ல குணங்கள் நிறையவே இருக்கின்றன.
//“அதானே பார்த்தேன்! என் பெண் ஆச்சே!”//
மகள்தந்தைக்கு ஆற்றும் உதவி இவள்தந்தை என்நோற்றான் கொல் எனுஞ்சொல் -பெயரைக் காப்பாற்றுகிறீர்கள்
நல்ல பதிவு - நல்வாழ்த்துகள்
வாங்க சங்கர்,
அத்தனை பேர் ஒன்றாக சேர்ந்து பாடுவது மற்றும் இசைக் கருவிகல் வாசிப்பதைக் காண்பதும், கேட்பதும் புது அனுபவம்தான்.//
ஆமாம்.
வாங்க சீனா சார்,
தங்களின் வருகைக்கும், மேலான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்.
ஒரு பக்கம் பாடுபவர்களாகவும் ஒரு பக்கம் வயலின்களாகவும் மற்றொரு பக்கம் வீணைகளாகவும் மிருதங்கங்களாகவும் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரே சுதியில் தாளம் தப்பாமல் பாடும் அழகை பார்க்கவும் கேட்கவும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஒரு முறை எங்க ஊர் பிள்ளையார் கோவிலில் நடந்த ஆராதனை விழாவில் வீணை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிகம் வாசிக்கப்படாத, 'சக்கனிராஜ...நின்னுவினா...'ஆகிய கீர்த்தனைகளை வாசித்து பெரும் அப்ளாஸ் வாங்கியது நினைவுக்கு வருகிறது....தென்றல்!
the songs are niceee
"thulasi thala" my ever green keerthanam :)
( i spoke with karthik today, covy my regards to amritha)
Post a Comment